Posts

Showing posts with the label Dasa Veeratana Sthalam

Temple info -2981. Kailasa Nathar Temple, Singikulam, Thirunelveli கைலாசநாதர் கோயில்,சிங்கிகுளம் ,திருநெல்வேலி

  தச வீரட்டானம் 04 : சிங்கிகுளம் கைலாசநாதர் ஆலயம். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே அமைந்துள்ள்ளது இந்த சிங்கிகுளம் கைலாசநாதர் ஆலயம். பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம்  தச வீரட்டன தலங்களில் இது நான்காவது ஆலயம். சிங்கிகுளம் என்பது மிக மிக தொன்மையான வரலாற்றை கொண்ட ஊர். மிக மிக பழமையான வரலாறு அதற்கு உண்டு. எவ்வளவு பழமையானது என்றால் தீராக் குறை இருந்த பெரும் சக்திகளெல்லாம் தவம் இருந்த ஆலயம் இது. மகேந்திரகிரி மலையில் வசித்த இரண்யவான் எனும் முனிவரால் உருவான பஞ்ச லிங்க ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இரண்யவானின் மகள் ஆருத்ரா என்பவளைச் சிவன் தன்னோடு ஏற்று பச்சையாறாக ஓட வைத்தார். அந்தப் பச்சையாற்றின் கரையில் உருவான பஞ்சலிங்க தலங்களில் இந்த கைலாச நாதர் ஆலயமும் ஒன்று. மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தில் தசரதன் பிள்ளை வரம் வேண்டி வழிபட்டிருக்கின்றான். தன் கர்மவினையின் கொடுமை முடிந்து நல்ல புத்திர பாக்கியத்துக்காக அவன் வழிபட்டிருக்கின்றான். இராமபிரான் இங்கு வழிபட்டிருக்கின்றார், இலங்கைக்கு செல்லுமுன் இங்கு வழிபட்டு தன் கர்மத்தினைச் சுமக்கும் பலத்தினைப் பெற்றிருக்கின்றார். அப்படியே காமத...

Temple info -2982. Vazhudur Agneeswarar Temple

  தச வீரட்டானம் 02 : வழுதூர் அக்னீஸ்வரர் . தச வீரட்டான ஆலயங்கள் வரிசையில் இரண்டவாதாக வரும் ஆலயம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் இருக்கும் வழுதூர் அக்னீஸ்வரர் ஆலயம். இது மகா பழமையான ஆலயம். அக்னிபகவனால் ஸ்தாபிக்கப்பட்டு சித்தர்களால் உருவான ஆலயம் இது. இந்த ஆலயத்தின் வரலாறு முருகப்பெருமான் காலத்துக்கும் முந்தையது, அவ்வளவு பழமையானது. அதாவது தட்சன் செய்த யாகத்தின் காட்சியில் இருந்து இது தொடங்குகின்றது. தட்சன் அந்த யாகத்தில் சிவனை அழைக்காமல் அவமானப்படுத்தினான், சிவபெருமான் செல்லாத யாகத்துக்கு அவரை மீறி தேவர்களெல்லாம் சென்றார்கள். பின் தட்சன் அந்த யாகத்தால் அழிக்கப்பட்ட போது சிவனின் சக்தி அறிந்து தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கோரி சிவனை நோக்கி தவமிருந்தார்கள். அப்படி ஒவ்வொரு தேவரும் தவமிருந்து சிவனிடம் மன்னிப்புக் கேட்டு சாபம் போக்கிய தலங்கள்   அவரவர் பெயரில் அழைக்கப்படுகிறது. பிரம்மன் தவமிருந்த இடம் பிரம்மபுரீஸ்வர் தலம், சந்திரன் வழிபட்ட இடம் சந்திரசேகர தலம், சூரியன் வழிபட்ட இடம் சூரியஸ்தலம், அக்னி வழிபட்டு அதற்கு சிவன் அருள் செய்த இடம் அக்னீஸ்வரர் தலம். ஆம். இது அக்...

Temple info -2980 Agneeswarar Temple, Melnatham

  தச வீரட்டானம் 05 : மேலநத்தம் அக்னீஸ்வரர் ஆலயம். தச வீரட்டானத் தலங்களில் ஐந்தாம் ஆலயமான இந்த ஆலயம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.  அங்கு சிவன் அக்னீஸ்வரராக அருள்பாலிக்கின்றார், அன்னை கோமதி தேவி. இந்த ஆலயத்தின் தோற்றம் மிகத் தொன்மையானது. அகத்தியர் அத்ரி காலத்தில் உருவான ஆலயம் அது. மேற்கு பார்த்த லிங்கம் அப்போதே உருவாகியிருந்தது. அவ்வளவு பழமையானது. இந்த ஆலயத்தின் தலவரலாறு கோரக்க முனிவரிடம் இருந்து தொடங்குகின்றது. கோரக்க முனிவர் சிவனை நினைந்து அத்ரி மலையில் தவமிருந்தார். அவருக்கு முழு நினைவும் சிவனாக இருந்தது. சிவனின் ஒவ்வொரு அசைவையும் அவரின் ஒவ்வொரு காட்சியும் தியானித்துக் கொண்டிருந்தார். அகத்திய முனி சிவனின் கல்யாண கோலத்தை காண விரும்பியது போல் கோரக்கருக்கும் ஒரு ஆசை இருந்தது. அது தட்சனின் யாகத்தில் சிவன் நின்ற அந்த உக்கிரமான வடிவம். தன்னை மதிக்காமல் தட்சன் செய்த யாகத்தில் சிவன் எவ்வளவு ஆவேச கோலத்தில் நின்றிருப்பார் என்பதை காண விரும்பினார். சிவன் அவரின் நோக்கம் கண்டு புன்னகைத்தார். கோரக்கருக்கு தன்னை வெளிபடுத்த விரும்பிய சிவன், இந்த மேலநத்தம் தலத்தில் அக்னிவடிவாக எழும்பி...

Temple info -2979. Agneeswarar Temple, Rajavallipuram

  தச வீரட்டானத் தலங்கள் 06 : ராஜவல்லிபுரம் அக்னீஸ்வரர் ஆலயம். நெல்லை  அருகே அமைந்த சிவதலங்களில் முக்கியமானது செப்பறை அழகிய கூத்தர் ஆலயம்.  தாமிர சபை என அழைக்கபடும் சிறப்பு பெற்றது அந்த நடராஜர் தலம். இது இராஜவல்லிபுரம் எனும் ஊரில் அமைந்திருக்கின்றது,  இந்த ஊரில்தான் தசவீரட்டனத்தின்  ஆறாம் ஆலயம் அமைந்துள்ளது. இதுதான் அந்த ஊரின் முதல் ஆலயம், காலத்தால் மூத்தது இதுதான். இந்த ஆலயத்தின் வரலாறு அக்னி பகவானிடம் இருந்து தொடங்குகின்றது. இந்த அக்னி பகவான் அஷ்டதிக் பாலகர்கள் எனும் எண் திசை காவலர்களில் ஒருவர். எட்டு திசைக்கும் எட்டு காவலர்கள் சிவனால் நிறுத்தபட்டார்கள். இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன். எட்டு திசைகளில் தென்கிழக்கு திசைக்கு உரியவர் அக்னி பகவான். இவர்தான் யாக வேள்விகளிலும் இன்னும் பல வழிபாடுகளிலும் பிரதானம், தீபத்தின் சுடர் முதல் எல்லாம் அவர்தான். யாகத்தில் இடப்படும் பொருட்களைத் தெய்வங்களிடம் சேர்ப்பதும் இவர்தான். தேவர்களில் மகா முக்கியமானவர் இவர். எல்லா வழிபாடுகளின் அடிப்படை அவருடையது. இந்த அக்னிபகவானுக்கு சிவனின் நாட...

Temple info -2978 Thenmalai Thripureswarar Temple

  தசவீராட்டாண தலம் 07 : தென்மலை திரிபுரேஸ்வரர் ஆலயம் தசவீராட்டாண ஆலயங்களில் ஏழாம் ஆலயம் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடியில் அமைந்திருக்கும் திரிபுரேஸ்வரர் ஆலயம் திரிபுர ஈஸ்வரர் என்றால் முப்புரமும் எரித்த சிவன் என்பது எல்லோரும் அறிந்தது, அந்த புராணம் இதுதான் தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள்  மூன்று பேர் உண்டு. வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவரும் பெரும் சக்திபெற தவமிருந்தார்கள், சிவபக்தர்களான அவர்கள் சிறப்பு வரத்துக்காக பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள்.  தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள்.  அப்படி தங்கம் வெள்ளி , இரும்பாலான மூன்று பறக்கும் கோட்டைகள் அவர்களுக்கு கிடைத்தன‌ வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள்.  தேவலோகத்தை மட்டுமல்ல எல்லா லோகத்தையும் இம்சைத்துவிட்டு ப...

Temple Info -2977. Narsinganathar Temple,Angamangalam

தசவீராட்டாண தலம் 08 : நரசிங்கநாதர் திருக்கோவில் அங்கமங்கலம் தூத்துக்குடி மாவட்டம்  ஏரல் தாலுக்கா அழ்வார்த்திருநகரி வட்டத்தில் உள்ள அங்கமங்கலம் கிராமத்தில் இந்த நரசிங்க நாதர் ஆலயம் அமைந்துள்ளது அன்னை அருள்மிகு ஆவுடையம்மாள் இந்த ஆலயத்தின் வரலாறு இரணியன் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, மலையாள தேசத்தில் எப்படி மகாபலி கதை பிரசித்தியானதோ அப்படி இங்கு இரணியன் வதம் பிரசித்தமானது எல்லோரும் அறிந்த நரசிம்ம அவதாரம் வழிபட்ட கோவில் இது, இரணியன் வரலாற்றில் இருந்தே இந்த ஆலய தலபுராணம் தொடங்குகின்றது சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் அதித்திக்கும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு மகன்கள் பிறந்தனர், ஆகாத நேரத்தில் பிறந்ததால் அசுரகுணம் வாய்த்தது இரணியாக்சனை வராகமாக வந்து விஷ்ணு அளித்ததால்  இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள  பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். அப்படி அவனுக்கு பிரம்மாவும் காட்சி தந்தார், அவன் அவரிடம் வலுவான வரம் வாங்கினான் மூன்று உலகமும் அன்று ஆடி கிடந்தது, ஒரு அசுரன் ஒரே ஒரு அசுரன் அப்படி ஆட்டிவைத்து கொண்டிருந்தான், அவனின் கடும் தவம் மூலம் பி...

Temple info -2976. Meikandeeswarar Temple, Kayalpattinam

 தச வீரட்டானம் 09 :  மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் காயல்பட்டினம் தசவீரட்டானம் தலங்களில் ஒன்பதாம் தலம் இந்த காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் பற்றி அறியுமுன் காயல்பட்டணம் பற்றி அறிதல் அவசியம். தாமிரபரணி இப்போது ஓடிக்கொண்டிருப்பது போல் அன்று ஓடவில்லை. அது முற்காலத்தில் அது கொற்கையினை ஒட்டி ஓடி கடலில்  கலந்தது. பின்னாளைய கடல்கோள் மாறுபாட்டால் அதன் நீரோட்டம் மாறிவிட்டது. தொடக்கத்தில் அது காயல்பட்டணம் அருகேதான் கடலில் கலந்தது. அப்போதுதான் அகத்திய முனிவர் இந்த ஆலயத்தை ஸ்தாபித்தார். மெய்கண்டேஸ்வரராக ஸ்தாபித்தார். தாமிரபரணியின் தொடக்கம் பாபநாசத்தில் இருந்து அதன் முடிவு வரை அகத்தியர் பெரும் சிவாலயங்களை நிறுவினார். தாமிரபரணியின் மகத்தான சக்தி அப்படியானது. அப்படி கடைசியாக அமைக்கப்பட்டதுதான் இந்த மெய்கண்டேஸ்வரர் ஆலயம். காயல்பட்டணம் என்பது குலசேகர பட்டணம் வீரபாண்டியன் பட்டணம் போன்ற பாண்டியர் கால நகரங்களின் தொடர்ச்சியாக வந்த வணிகத் துறைமுக பகுதியாக வந்தபோது இந்த லிங்கமும் ஆலயமும் பிரசித்தியானது. இந்த ஆலயத்தின் வரலாறு துர்வாச முனிவரிடம் இருந்து துவங்குகின்றது. கடுமையான தோல்...

Temple info -2975. Thirparappu Mahadevar Temple, Kanyakumari

  தச வீரட்டானம் 10 : திற்பரப்பு மகாதேவர் ஆலயம். தச வீரட்டானத் தலங்களில் கடைசி தலமான பத்தாம்  ஆலயம் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பில் அருவிக் கரையோரம் அமைந்திருக்கும் மகாதேவர் ஆலயம். மலையாளத் தேசத்தில் சிவனுக்கு மகாதேவர் என்பதே பெயர். எல்லாத் தேவர்களுக்கும் மேலான மகாதேவன் என்பதால் இந்த ஆலயமும் மகாதேவர் ஆலயமாயிற்று. இந்தத் தலவரலாறு தட்சன் யாகம் முடிந்ததில் இருந்து துவங்குகின்றது. சிவனை மதியாமல் தட்சன் யாகம் செய்து அந்த யாகத்தினால் அவமதிக்கப்பட்ட தாட்சாயினி தேவி நெருப்பில் வீழ்ந்துவிட, கடும் கோபம் கொண்ட சிவன் தன் அம்சமான வீரபத்திரரையும், சக்தி அம்சமான காளியினையும் அனுப்பி அந்த யாகத்தை அழித்துப்போட்டார். பெரும் ஆவேசத்தில் அந்த காளியும் வீரபத்திரரும் நின்று தட்சனின் யாக சாலையில் அகதளம் செய்து அழித்துப் போட்டடார்கள். ஆனாலும், அவர்களுக்கு அமைதி கிடைக்கவில்லை. தங்களின் எல்லையற்ற ஆத்திரமும் கோபமும்  தீர, தங்களுக்கு முழு அமைதி கிடைக்க இந்த திற்பரப்பு தலத்துக்கு வந்து தவமிருந்து மனம் குளிர்ந்து வரம்பெற்றார்கள். அதன்படி வீரபத்திரர் சிவனுடன் ஐக்கியமாகிவிட்டார், காளி அருகிருக்கும் குக...

Temple info -2969. Abhimuktheeswarar Temple, Kodaganallur. அபிமுக்தீஸ்வரர் கோயில்,கோடகநல்லூர்

Image
 Temple info -2969 கோயில் தகவல்-2969 Abhimukteswar temple, Kodaganallur Abhimukteswar temple, Kodaganallur, Tamil Nadu 627010,  Abhimukteswar temple is located at  Kodaganallur,  on the banks of Tambraparani river, Tamil Nadu  at a distance of 14 kms from Tirunelveli. It is an ancient temple situated close to the Sri Kailasanathar temple – Nava Kailayam temple-  kodaganallur. Reconstruction work was going on when we visited. Karkotakan attained liberation due to his penance here, and hence the place was known as Karkotaka Nallur, which has been modified to Kodaganallur with passage of time. Moolavar  : Sri Abhimukteeswarar;  Ambal  : Sri Soundaranayaki; .  This temple is an unusual west-facing temple, abutting the Tambraparani river. The temple was in reasonable shape, but would have definitely seen better days in the past. This temple was patronized by Kodaganallur Sundara Swamigal, hailing from the lineage of Appaiya Deekshitar. The te...