Temple info -3841. Mudimalai Aandavar temple,Sengurichi,Dindukkal. முடிமலை ஆண்டவர் கோயில்,செங்குறிச்சி,திண்டுக்கல்

 Temple info -3841

கோயில் தகவல் -3841


Sengurichi Mudimalai Aandavar Temple

A Shiva temple in the Dindigul district of Tamil Nadu

The Sengurichi Mudimalai Aandavar Temple is a Shiva temple located in the village of Sengurichi in the Dindigul district of Tamil Nadu.


Arulmigu Mudimalai Aandavar Temple

Location

Country:

India

State:

Tamil Nadu

District:

Dindigul

Location:

Sengurichi, Dindigul Taluk

Assembly Constituency:

Dindigul

Lok Sabha Constituency:

Dindigul

Temple Information

Presiding Deity:

Mudimalai Aandavar

History

Date of Construction:

19th Century [Citation needed]

Contents

History

Prior to the Third Mysore War of 1792, the Mysore ruler Tipu Sultan confiscated the *Palayams* (feudal estates) of Kannivadi, Natham, Idayakkottai, and Virupakshi within the Dindigul region because they had failed to pay tribute. At the conclusion of the Third Mysore War in 1792, the Dindigul region came under the control of the English East India Company. The Company entrusted the administration of these *Palayams* back to the original *Palayakkars* (chieftains), who then paid the required tribute to the British. Subsequently, due to conflicts with the British, the *Palayakkars* waged war against them under the leadership of Gopal Nayakar of Virupakshi. Ultimately, in 1801, Gopal Nayakar was defeated by the British and executed by hanging. The *Palayams* of the Dindigul region were subdued, their armies were disbanded, and the possession of weapons was criminalized. Furthermore, to diminish their power, the *Palayams* were subdivided into smaller estates known as *Mittas* (a form of *Zamindari*). The eastern boundary of the Virupakshi *Palayam* extended up to Gopalpatti. The northern boundary of Natham Lingam Nayakkar’s territory extended up to Manakkattur and Sendurai.


The Ammayanaickanur Palayam encompassed Sirumalai and its entire foothills, while the Kadavur Palayam extended to the Vadamadurai-Ayyalur region. Additionally, the southern and western parts of Vaiyampatti (part of the Manapparai Lakshmi Nayakkar Palayam) were included. Subsequently, the Palayams were reorganized; various *Mittas*—such as Sengurichi, Madur, Emakkalapuram, Vadamadurai, Eriyodu, Sekkanam, and Kumaravadi—were created, and *Zamindars* were appointed to streamline tax administration. Following conflicts among the *Palayakkars* that had previously caused frustration for the British, the administration of the Sengurichi and Madur *Mittas* was entrusted to the owners of the Marungapuri Palayam (in the Trichy district), bypassing the *Palayakkars* of the Dindigul region. Before the creation of these *Mittas*, the western boundary of the Marungapuri Palayam extended up to Sendurai-Kottaipatti—the junction of the western part of the present-day Trichy district and the eastern part of the Dindigul district—while the Sengurichi *Mitta* is situated on the western slope of the Karanthai Hills. According to inscriptions, the descendants of Muthu Venkatasamy Nayakkar—members of the Nayakkar *Zamindar* family known locally as "Aramanaiyar"—managed the *Mitta* effectively, overseeing both tax collection and local administration. It was these *Zamindars* who built the Mudimalai Aandavar Temple. In Tamil, the word *Mudi* signifies a peak, summit, head, or high point. When viewed from the Dindigul Hill Fort (towards the east) or from locations such as the Pillamanayakkanpatti junction on the Malaikeni road, Elapparimedu, Mugilam, or Agadami Medu, the Karanthai hill range appears to stretch from Ayyalur to the Natham Pass. Within this range, Mudimalai stands as the highest peak. On the western slope of Mudimalai, the Aranganaiyar family of Senkurichi constructed a temple dedicated to Lord Shiva, known as Mudimalai Aandavar.


**Mudimalai Aandavar Temple**


The temple is built on a 10x10 square footprint. It features a granite foundation, with the *adhisthana* (base), *prastara* (entablature), and *vimana* (superstructure) constructed using brick and lime mortar; the *kalasam* (finial) is also made of brick and stucco. The *vimana* features *Bhuta Ganas* (celestial attendants) and *Dikpalakas* (guardians of the directions) along the circumambulatory path, with seated bulls adorning the four sides. It houses a single sanctum sanctorum, though there is no *Linga* idol inside. The temple is currently in a state of disrepair.


**Large Stucco Guardian Sculptures (Male and Female *Bhuta Ganas*):**


**Male *Bhuta Gana*:** This figure stands 25 feet tall from head to base. It features a crown of fire (*Agni*), *kumkum* on the forehead, elongated eyebrows, menacing round eyes, broad nostrils, and a twisted mustache. Oval-shaped *Olaikundam* earrings hang from the ears. The right arm is raised, adorned with a wrist bangle, an armlet (*Laguvalayam*), and a *Kandigai* necklace, while a long chain (*Aaram*) rests on the chest. The left hand points downwards, holding a *Mazhu* (battle-axe) weapon. A sword and a waist-wrap garment are worn at the hips, and *Thandai* (anklets) adorn the long legs. A massive stucco sculpture constructed using brick, lime, and sand.


Female Deity (*Pen-bhootham*): She is depicted wearing a crown adorned with the tail of a *Makara* (mythical sea creature) and a *kumkum* mark on her forehead. Her features include wide eyes and a broad nose; she wears *Kundalam* earrings set with gems. Her left arm is raised, adorned with bangles and an armlet, while her right hand holds an axe (*Mazhu*) resting on the ground. She wears a stitched blouse and a chain necklace with a pendant; a floral garland drapes from her neck over both shoulders. A sword is tucked at her waist, and she wears *Thandai* (heavy anklets) extending from her ankles up to her calves. These two sculptures hold a significant place in the worship of village deities in the Sengurichi region.




செங்குறிச்சி முடிமலை ஆண்டவர் கோயில்

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

செங்குறிச்சி முடிமலை ஆண்டவர் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம்செங்குறிச்சிஎன்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு முடிமலை ஆண்டவர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவிடம்:செங்குறிச்சி, திண்டுக்கல் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திண்டுக்கல்
மக்களவைத் தொகுதி:திண்டுக்கல்
கோயில் தகவல்
மூலவர்:முடிமலை ஆண்டவர்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

1792 மூன்றாம் மைசூர் போருக்கு முன் திண்டுக்கல் சீமை கன்னிவாடி நத்தம், இடையக்கோட்டை விருப்பாட்சி பாளையங்கள் கப்பம் கட்டாததால் மைசூர் அரசர் திப்பு இந்த பாளையங்களை ஜப்தி செய்தார். 1792 மூன்றாம் மைசூர் போரின் முடிவில் திண்டுக்கல் சீமை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிவசம் வந்தது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி திண்டுக்கல் சீமை பாளையங்கள் நிர்வகிக்க பழைய பாளையக்காரர்களிடமே ஒப்படைத்தனர். பாளையக்காரர்கள் கப்பத்தொகையை ஆங்கிலேயருக்கு கட்டினர். பின் ஆங்கிலேயருடன் ஏற்பட்ட மோதல்களால் பாளையக்காரர்கள் விருப்பாட்சி கோபால் நாயக்கர் தலைமையில் ஆங்கிலேயருடன் போரிட்டனர். இறுதியாக 1801ம் ஆண்டு கோபால் நாயக்கர் ஆங்கிலேயர்களால் வெல்லப்பட்டு தூக்கிலிப்பட்டார். திண்டுக்கல் சீமை பாளையங்கள் அடக்கப்பட்டன. பாளையங்களின் படைகள் கலைக்கப்பட்டன. ஆயுதம்வைத்திருப்பதும் குற்றமாக்கப்பட்டது. மேலும் பாளையங்களின் வலிமையை குறைக்க பாளையங்கள் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு மிட்டா எனப்படும் ஜமீன்களாக உருவாக்கப்பட்டது. விருப்பாட்சி பாளையத்தின் கிழக்கு எல்லை கோபால்பட்டி வரை இருந்தது. நத்தம் லிங்கம் நாயக்கரின் வடக்கு எல்லை மணக்காட்டூர் செந்துரை வரை இருந்தது.

    அம்மையநாயக்கனூர் பாளைய எல்லை சிறுமலை, சிறுமலை அடிவாரப்பகுதி முழுவதும, கடவூர் பாளையத்தெற்கு எல்லை வடமதுரை அய்யலூர் பகுதி முழுவதும் மணப்பாறை லட்சுமி நாயக்கர் பாளையத்தின் வையம்பட்டியின் தெற்கு, மேற்கு பகுதிகளும், பாளையைங்கள்,பிரிக்கப்பட்டுசெங்குறிச்சி, மடூர், எமக்கலாபுரம், வடமதுரை, எரியோடு, செக்கணம், குமாரவாடி என பல மிட்டாக்கள் பிரிக்கப்பட்டு பல ஜமீன்தார்கள் உருவாக்கப்பட்டு வரி நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தினர். மதுரை ஆங்கில கலெக்டர் ஹர்திஷ் 1804-ல் மிட்டாக்களின் வரிவிதிப்பு முறையையும், சென்னை வருவாய் நிர்வாக சபை அங்கீகரித்தது முன் ஏற்பட்ட பாளையக்காரர்கள் மோதல்களால், வெறுப்புற்ற ஆங்கிலேயர்கள் திண்டுக்கல் சீமை பாளையக்காரர்களை தவிர்த்து, திருச்சி மாவட்ட பாளையம் மருங்காபுரி பாளையத்தின் உரிமையாளர்களைக் கொண்டு செங்குறிச்சி,மடூர் மிட்டாக்கள் நிர்வகிக்கப்பட்டன. இம்மிட்டாக்கள் உருவாக்கப்படுவதற்கு முன் மருங்காப்புரி பாளைய மேற்கு எல்லை, தற்போதைய திருச்சி மாவட்ட மேற்கு பகுதியும், திண்டுக்கல் மாவட்ட கிழக்குப்பகுதியும், சந்திக்கும் செந்துறை கோட்டைப்பட்டி வரை இருந்து, செங்குறிச்சி மிட்டா கரந்தை மலையின் மேற்கு சரிவில் உள்ளது. தற்போது செங்குறிச்சியில் அரண்மனையார் என சொல்லப்படும் நாயக்கர் ஜமீன்தாரர்கள் கல்வெட்டு படி முத்து வெங்கடசாமி நாயக்கர் வாரிசுகள் நல்ல முறையில் பராமரித்து சிறப்பாக வரி,நாட்டு நிர்வாகம் செய்தனர். இச்ஜமீன்தாரர்களே முடிமலை ஆண்டவர் கோயில் கட்டினர்.
           தமிழில் முடி என்பது உச்சி, சிகரம், தலை, உயரமான பகுதி எனப் பொருள் கொள்ளும், இக்கரந்தைமலைத் தொடரை திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்து கிழக்குப்பகுதியிலும், அல்லது மலைக்கேணி சாலை பில்லமநாயக்கன்பட்டி பிரிவு, எளப்பாரிமேடு, முகிலம், அகடாமி மேட்டில் இருந்து பார்த்தால் அய்யலூர் முதல் நத்தம் கணவாய் வரை இக்கரந்தை மலை தொடர் நீண்டு இருக்கும். இதில் முடிமலையே உயர்ந்த மலையாக இருக்கும். இம்முடிமலையின் மேற்கு சரிவு முடிமலையாண்டவர் என்னும் சிவன் கோயில் செங்குறிச்சி அரண்மனையார் கட்டியுள்ளனர். )

முடிமலை ஆண்டவர் கோயில்

        இக்கோயில் 10 X 10 சதுரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கருங்கல் அஸ்திவாரம், செங்கல், சுண்ணாம்பு காரை, கொண்டு அதிஷ்டானம் பிரஸ்தரம் விமானம் அமைக்கப்பட்டுள்ளது. கலசமும் செங்கல் சுதையிலே உள்ளது. விமானத்தில் கிரிவலத்தில்  பூத கணங்களும், அதன் 4 புறமும் திக்பாலகர்களும், காளைகளும் அமர்ந்த நிலையில் ஒற்றை கருவறையாக உள்ளது. உள்ளே லிங்க படிமம் இல்லை. கோயில் சிதிலமடைந்து வருகிறது.

பெரிய சுதை சிற்ப காவல் ஆண்/பெண் பூதகணங்கள் :-

ஆண்பூதம் – தலைமுதல் பிடம் வரை 25 அடி உயர ஆண் பூதகணம் தலையில் அக்கினி கிரீடமும் நெற்றியில் குங்குமமும் நீண்ட புருவங்களும் மிரட்டும் உருண்ட விழிகள் அகன்ற நாசிகள் முறுக்கிய மீசையும் இரு காதுகளிலும் காதுக்கு நான்கு விதம் நீள்வட்ட ஒலைகுண்டமும், வலது கை தூக்கிய நிலையில் மணிகட்டில் வளையும் தோளில் லாகுவளையமும், கழுத்தில் கண்டிகையும் நெஞ்சில் கழுத்தணி ஆரமும், இடது கை கீழ் நோக்கி மழு ஆயுதத்தை பிடித்த நிலையில் உள்ளது. இடுப்பில் வாளும் இடை சுற்று ஆடையும், நீண்ட கால்களில் தண்டையும் உள்ளது. செங்கல் சுண்ணாம்பு மணல் கொண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய சுதை சிற்பம்

பெண்பூதம் – தலையில் கிரீட மகுடமும் அதில் மகரத்தின் வாலும் நெற்றியில் குங்குமம் அகன்ற விழிகள் அகன்ற நாசி காதில் பதிகம் வைத்த குண்டலம் இடதுகை தூக்கிய நிலையில் வளையும், லாகு வளையமும் வலதுகையில் மழுதரையில் ஊன்றிய நிலையில் மார்பில் கையால் தைக்கப்பட்ட ரவிக்கை நெஞ்சில் ஆரம் பதித்த சங்கிலி கழுத்திலிருந்து இரு தோள் வழி பூமாலை இடுப்பில் வாளும், இடைச்சிலை கெண்டைக்கால் வரை கால்களில் தண்டையும் கொண்டு இவ்விரு சிற்பங்களும் கிராமதேவதை வழிபாட்டில் செங்குறிச்சி பகுதியில் முக்கிய வழிபாட்டில் உள்ளது.

இரு புரவிகள் – தரை முதல் குதிரை தலை வரை 30 அடி உயரம் கொண்டவை. இவ்விரு புரவிகளும் பீடத்திற்கு மேல் 25 அடி உயரமும் 20 அடி நீளமும் கொண்ட சுதை சிற்ப குதிரைகள். குதிரையின் கால்கள் 4 இரும்பு சட்டங்கள் ஊன்றப்பட்டு இவ்விரும்பு சட்டங்கள் பெரிய சட்டங்கள் கொண்ட இணைத்து அதை சுற்றி செங்கல் சுண்ணாம்பு காரை கொண்டு குதிரை உடல் தயார் செய்து முன் காலிருந்து இரு இணைப்பு பட்டாவை நீட்டி அதில் குதிரை தலை செய்து அழகாக இணைத்து குதிரை உருவம் செய்துள்ளனர். குதிரை முகத்தில் முகபாடமும், முதுகில் சேனமும் உள்ளது. முகபாடத்தில் இருந்து கழுத்து வரை பூ வேலைப்பாடும் சேனத்தில் கீழ் இருபட்டு துணி விரித்ததுபோலும், குதிரை வாயில் கடிவாளம், இரும்புச்சட்டத்தில் செய்து அதை வீரர் ஒருவர் பிடித்தபடியும், அவ்வீரர் அருகில் வெண்கொற்ற குடை பிடித்தபடியும், அழகு நிலையில் உள்ளது. குதிரையின் உடல் கனம் தாங்காமல் இறுக குறுக்கு சுவர் கட்டி அதில், இவ்வீரர் முண்டாசு தலைப்பாகையுடன் ஆஜனா பாகுவாய் வலிமையுடன் குதிரை பிடித்த நிலையில் உள்ளனர். பின்புறச்சுவரில் சிங்கத்தலை, மனித உடல் கொண்ட கிம்புருடர் சிற்பம் முன்புறம் அன்னப்பறவை சிற்பம் என அழகுற வடிக்கப்பட்டுள்ள இப்பூத கணங்களும், இக்குதிரைகளும் மாவட்டத்தின் எப்பகுதியிலும் இல்லாத வகையில் சுதை சிற்பமாக உள்ளது. கிராமிய வழிபாட்டில் முக்கிய மைல் கல்லாக உள்ள சிற்பங்கள் போற்றப்பட,பாதுகாக்கபட வேண்டியவை. இக்கோயிலில் இருந்து மேற்கே கரட்டில் ஒரு குதிரை சிற்பம் செங்கல் சுண்ணாம்பு கட்டுமானத்தில் காவல் தெய்வமாக உள்ளது.

           குதிரை சிற்பத்தின் கீழ் உள்ள கல்வெட்டு, சிவமயம் கலியுகாதி சு, சூ, கூ, அ, கூ குச் சரியான சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 6ம் நாள் அகண்ட பலபாலனச் சச்சிதானந்த தாசமான ஸ்திரமது முடிமலை ஆண்டவருக்கு செங்குறிச்சியில் இருக்கும் மடூவூர் துரையவர்கள் முத்து திரு. வெங்கடசாமி நாயக்கரவர்கள் மேற்படி கிராம குடித்தனகாரர்கள் சேமமடைய 2 சேமப்புரவிகள் செய்து வைத்தார்கள்.

சர்வதாரி வருடம்

விளக்கம்

           உலக சிவமயம் கலியுகம் நான்காயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்து ஒன்பது (இதற்கு ஆங்கில ஆண்டு 1888) சர்வதாரி வருடம் ஆவணி மாதம் 6ம் நாள் அகண்ட பரிபாலனத்தில் நிரந்தரமாக இருக்கும் முடிமலை ஆண்டவருக்கு செங்குறிச்சி மடூவூர் ஜமீன்தாரர்கள் முத்துவீர வெங்கடசாமி நாயக்கர் அவர்கள் மேற்படி கிராமக்குடித்தனகாரர்கள் நலமுடன் வாழ 2 சேமப்புரவிகள் செய்து வைத்தார்கள்.
           இக்கோயிலின் அருகே 12 கால் கல் மண்டபம் ஒன்று உள்ளது.

🙏🏻ஆய்வு மேற்கொண்டவர்கள் திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக் குழு வரலாற்று ஆய்வாளர் ந.தி.விஸ்வநாததாஸ், வரலாற்று மாணவர் ரத்தினமுரளிதர் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் சந்திரசேகர், உமா மகேஸ்வரன் 8-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஆனந்த்.

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின்கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.

பூசைகள்

தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.

Comments

Popular posts from this blog

Temple info -2583 Airavatheswarar Temple, Melamaruthuvakudi, Thanjavur. ஐராவதீஸ்வரர் கோயில், மேலமருத்துவகுடி,தஞ்சாவூர்

Temple info -1830. Perunna Subramanya Swamy Temple, Kottayam. பெருந்நா சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், கோட்டயம்

Temple info -1113 Dharmasthala Manjunatha swami Temple, Karnataka மஞ்சுநாதஸ்வாமி கோயில்,தர்மஸ்தலா,கர்நாடகா