Temple info -1830. Perunna Subramanya Swamy Temple, Kottayam. பெருந்நா சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், கோட்டயம்
Temple info -1830
கோயில் தகவல் -1830
Perunna Subrahmanya Swami temple is located at Perunna in Changanacherry in Kottayam district, Kerala. The shrine is dedicated to Muruga or Subrahmanya. Thaipooyam in Makaram month (January – February) is one of the most important festivals here. The annual Pallivetta utsavam is held in Vrishchikam month (November – December). Another important festival is the Skanda Sashti.
This is perhaps the only Murugan temple in the world in which Muruga is depicted as holding the Vel down. This is because he has just annihilated the demons. In all other temples, Muruga is shown as holding the Vel upwards.
The annual Thaipooyam Kavadi procession attracts thousands of devotees to the temple.
The 10-day annual festival in Vrischika masam begins on the Kartika nakshatra day.
The sankalpam of Muruga in the temple is that of Devasenapathi, who has just annihilated Tharakasuran. Therefore it is believed that Muruga is here in a furious form. The deity faces east. He was worshipped initially to overcome enemies - Shatru Samhara murti.
The temple has a round sanctum sanctorum or vatta sreekovil and the murti of Subrahmanya is 6 feet tall.
An unique aspect of the sreekovil is that there is hole in the sreekovil through which sunlight falls on the murti worshipped in the sanctum.
The upa devatas worshipped in the temple are Shiva, Ganapati, Sri Krishna, Ayyappa, Rakshas, Sundrayakshi and Nagas.
The temple is famous for the murals on the walls of the sreekovil. Another attraction is the huge temple pond.
Ottanaranga puja held on Tuesdays is an important puja here. For this reason, Tuesdays are considered auspicious in the temple.
Perunna Subrahmanya Swami Temple Story
It is said that a Namboothiri from Edamana in Perunna went to Palani and did intense bhajan to find a solution to attacks done on this Illam by Umbazhi gramam Namboothiris. Palani Murugan gave darshan to the Namboothiri and directed him to a hidden murti of his in Kodumthara Arru (river) near Kaipattoor in Pathanamthitta district. The Namboothiri first installed the vigraham at Vengal and later it was consecrated at Perunna.
Perunna Subrahmanya Swami Temple History
As per history, the partishta in the temple was performed in 753 CE.
The temple is historically important as ancient inscriptions belong to the 10th century CE can be seen on the west gate of the shrine.
It is said that initially the temple was maintained by eight illams. The temple later came under the ownership of Kumaramangalam, Edamana, Peyyambra, Thamarassery and Punjamon Illams.
From 1962, the temple is under the control of Uzhanma Devaswom Board.
🙏 இன்றைய கோபுர தரிசனம் 🙏
அருள்மிகு
ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி
திருக் கோவில்
பெருநா,
சங்கனாச்சேரி,
கோட்டயம் மாவட்டம்
கேரள மாநிலம்.
வேலின்றி முருகனை எங்குமே காண இயலாது. ஆனால் வேலைத் தலைகீழாகப் பிடித்து நிற்கும் திருக் கோலத்தில் முருகன் அருள் பாலிக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது. இவ்வாலயம், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே உள்ள பெருநா என்ற ஊரில் அமைந் துள்ளது.
இங்கு தாரகா சுரனைச் சங்கரித்த முருகப் பெருமான், வேலைத் தலைகீழாகப் பிடித்து நிற்கும் தோற்றத்தில் அருள் பாலிக் கின்றார்.
உம்பிளி மற்றும் பெருநா எனும் இரு கிராமங்களில் அந்தணர்கள் வசித்து வந்தனர். பெருநா எனுமிடத்தில் வசித்த சாத்விக குணம் கொண்ட அந்தணர்கள் சிவ பக்தர்கள். உம்பிளியில் வாழ்ந்த மாய, தந்திர வேலைகளைச் செய்யும் அந்தணர்கள் பெருநா மக்களின் மீது பொறாமை கொண்டு உம்பிளி பகுதி மக்களின் சிவன் கோவிலை இடித்து சேதப் படுத்தினர். அப்போது பெருநா ஊர் மக்கள் சிவப்பரம் பொருள் சிலையை மட்டும் பாதுகாப்பாக மீட்டனர்.
இவர்களின் பிணக்கைத் தீர்ப்பதற்காக இடமனா இல்ல நம்பூதிரி என்பவர் பழனி முருகன் கோவிலுக்குப் புனிதப் பயணம் சென்றார். அங்கு காட்சியளித்த பழனி முருகப் பெருமான், “பத்தினம் திட்டா மாவட்டத்தில் செல்லும் கொடுந்துறா ஆற்றில் கிடைக்கும் தனது சிலையை எடுத்து வழிபட்டு வந்தால், அனைத்துப் பிரச்சினை களும் தீர்ந்துவிடும்” என்றார்.
அதன் படி இடமனா நம்பூதிரி ஆற்றில் கிடைத்த சிலையை எடுத்துச் சென்று பெருநா கிராமத்தில் நிறுவினார். விடயம் அறிந்த உம்பிளி யினர் பெருநா முருகன் கோவிலை அழிக்க முயன்றனர். இதனைக் தடுப்ப தற்காக இடமனா நம்பூதிரி, அவரது நண்பரான காரணவர் என்பவருடன் உம்பிளியை நோக்கிச் சென்ற போது வழியில், உம்பிளி கிராமத்தினர் செய்த மாய, தந்திரங் களால், நெருப்புப் பந்து ஒன்று உருவாகி அது கோவிலை அழிக்கும் வேகத்துடன் வந்து கொண் டிருந்தது.
இடமனா நம்பூதிரி அதனைத் தடுக்த போது இந்த பூஜையில் காரணவர் பலியானார் இருப்பினும் பூஜையை தொடர்ந்து செய்த இடமனா நம்பூதிரி அந்தத் தீயசக்தியை முழுவது மாகக் கட்டுப் படுத்தினார்.
அதன் பிறகு, உம்பிளி கிராமத் தினர் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வி யடைந்தன. பிற்காலத் தில் உம்பிளி கிராமமே முற்றிலும் அழிந்து காடாக மாறிப் போய் விட்டதாக ஆலய வரலாறு சொல்கிறது.
இக் கோவிலில் நிறுவப் பட்டிருக்கும் முருகன் சிலை, முன்பொரு காலத்தில் முனிவர்கள் மற்றும் தேவர்களாலும் வணங்கப் பட்டு வந்தது என்று கூறப் படுகிறது.
முருகனின் தோற்றத் திற்கான காரணம் சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய முருகப் பெருமான் அசுரர்களை அழிக்கப் போருக்குச் செல்லும் போது முருகப் பெருமானை வாழ்த்திய தந்தை சிவப் பரம்பொருள், அவருக்குப் பதினொரு ஆயுதங் களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத் தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார்.
முருகப் பெருமான் தாரகா சுரனுடன் போரிடும் போது முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தை களைக் காட்டத் தொடங் கினான். அதனைக் கண்டு கோப மடைந்த முருகப் பெருமான், தாய் தந்த வேலா யுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந் தார். அந்த வேல் கிரவுஞ்ச மலையைப் பல கூறு களாக்கி உடைத் தெறிந்து, தாரகா சுரனையும் அழித்துத் திரும்பியது.
தாரகா சுரனை அழித்த இரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப் பெருமான், வேலில் படிந்திருந்த இரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலைத், தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார்.
முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர்.
சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலை யமைத்து வழிபட்டு வந்தனர்.
அந்தச் சிலையே பிற்காலத்தில் இடமனா நம்பூதிரிக்குக் கிடைத்தது என்று சொல்லப் படுகிறது.
இதனையே அவர் பெருநாவில் ஆலயம் அமைத்து வழிபட்டதாக நம்பப் படுகின்றது.
Comments
Post a Comment