Temple info -90 Araikkasuamman temple, Thirugokarnam அரைக்காசு அம்மன் கோயில்

 Amazing temple info -90

அதிசய கோயில் தகவல் -90



Araikasu Amman






Worship of female deities known as Ammans has been a Dravidian culture from time immemorial. Pragadhambal is one such Amman with her abode at Thirugokarnam near Pudukkottai.


The Vijaya nagar Emperor who was ruling over Pudukkottai lost one impartant document. All his efforts to trace it were futile. Then he prayed to Pragadhambal Amman for its restoration. The Amman granted his wish and the lost document was found. The king was very happy and to express his gratitude he embossed Pragadambal’s picture on one side of a coin of Araikasu denomination and distributed the coins to his subjects during festive occasions. In those days the Araikasu coins were designed in a semi circular shape. The Amman from then onwards came to be known as “ARAIKASU AMMAN” and people started to pray Her for the recovery of lost / misplaced items.


There is a Lakshmi Kubera Temple in Rathinamangalam, where the marriage of Lord Kubera is performed annually. During one such celebration, a very costly and valuable ornament of Sri Lakshmi was lost and could not be found. The Managing Trustee of that temple prayed to Araikasu Amman and promised to build a Peedam for Her if the lost ornament could be traced. It was to his surprise that he could see the ornament within the temple and as vowed, he built a Peedam for ARAIKASU AMMAN in Rathinamangalam it self very near to the Lakshmi Kubera Temple in gratitude and for the benefit of every one.


Now the Peedam has become very popular not only in Tamilnadu, but also in other parts of the country and devotees throng this Peedam to seek blessings and restoration of lost / misplaced items or to thank Her for her benevolence in restoring their lost items.


Number of instances have been reported about Araikasu Amman’s answers to the prayers of benefitted people like restoration of lost / misplaced items, recovery of lost money, Marriages, Child Births, Reunion of family members and many more.


அரைக்காசு அம்மன்

நம்பியவரைக் காக்கும் எல்லா நலனும் அருளும் அரைக்காசு அம்மன்!

'எங்கெங்கும் காணினும் சக்தியடா' என்பது உண்மையிலும் உண்மை. பிரபஞ்சமே சக்தியின்றி அசைவதில்லை. எல்லா உருவிலும் எங்கும் காணப்படும் அந்த சக்திதான் அனைத்தையும் இயக்கி வருகிறாள். அதனாலேயே ஒவ்வோர் ஊரிலும், ஒவ்வொரு வடிவிலும் பல்வேறு பெயர் தாங்கி அருள்பாலித்து வருகிறாள். அத்தகைய சக்தி வடிவத்தில் ஒரு வடிவே அரைக்காசு அம்மன். அது என்ன அரைக்காசு அம்மன்? எந்த ஆகமத்திலும், புராணத்திலும் இந்தப் பெயரே கேள்விப்பட்டது இல்லையே என்கிறீர்களா? உண்மைதான்.


மக்களால் கொண்டாடப்படும் இந்த மகா சக்தி வந்த விதம் பற்றி செவிவழிச் செய்தியாகச் சொல்லப்படும் கதையைப் பார்ப்போம்.


தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சமஸ்தானம் புதுக்கோட்டை சமஸ்தானம். இந்த சமஸ்தான மன்னர்களின் குலதெய்வமாக இருப்பவள் திருக்கோகர்ணத்தின் அம்பாள் பிரகதாம்பாள். அருள்மழை பொழியும் இவளை எண்ணிய பிறகே எந்த ஒரு காரியத்தையும் புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தினர் செய்வர். விழா எடுத்து விரதமிருந்து இந்த அன்னையை புதுக்கோட்டை மக்கள் எல்லோரும் கொண்டாடுவர். இந்த தேவியைப் போற்ற புதுக்கோட்டை சமஸ்தானம் இவளின் திருவுருவம் பொறித்த காசினை வெளியிட்டது.


அரைப்பணம் என்ற மதிப்பில் அம்மனின் திருவுருவம் வெளியானதால் ஏழை எளிய மக்கள் அந்த அம்மனையே அரைக்காசு அம்மன் என்று சொல்ல ஆரம்பித்தனர். ஒருமுறை புதுக்கோட்டை மன்னரின் பாரம்பரிய நகை ஒன்று காணாமல் போய்விட்டது. இதனால் துடித்துப் போன சமஸ்தானத்தினர், அன்னையை வணங்கி தொலைந்து போன நகை திரும்ப கிடைக்குமாறு வேண்டினர். என்ன ஆச்சர்யம்! தொலைந்த பொருள் உடனேயே கிடைத்தது. இதனால் மகிழ்ந்து போன அரச குடும்பத்தினர் இந்த அன்னைக்கு விசேஷ பூஜை செய்து மகிழ்ந்தனர். இந்தத் தகவல் எங்கும் பரவி, அன்றிலிருந்து இன்றுவரை அரைக்காசு அம்மன், 'தொலைந்து போன பொருட்களை தேடித்தரும் விசேஷ தேவியானார்'


மன்னர்கள், இந்த அன்னைக்கு பிரசாதமாக வெல்லத்தை வைத்து உண்பர். அதுவே இன்றுவரை விசேஷமாக உள்ளது. எலுமிச்சை மாலை அணிவித்து இவளை வணங்கினால் தொலைத்த பொருள் மட்டுமல்ல, நமக்கு வரவேண்டிய பொருளும்கூட எளிதாகக் கிட்டி விடும் என்பது மக்களின் நம்பிக்கை. அரைக்காசு அம்மனுக்கு என்று தனிக்கோயில் எதுவுமே தமிழ்நாட்டில் இல்லை. ஆனால், பல சக்தி ஆலயங்களில் இவள் தனிச் சந்நிதி கொண்டு அருள் செய்து வருகிறாள்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழைமை கொண்டது திருக்கோகர்ண ஆலயம். இந்த ஆலயத்தில் ஈசனோடு இருந்து அருள் செய்பவளே பிரகதாம்பாள். பிரகதாம்பாள்தான் மக்களால் அரைக்காசு அம்மனாக உருமாறி நமக்கு அருள்புரிந்து கொண்டு இருக்கிறாள். இவளின் உருவம் பொறித்த காசினை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் செல்வ வளம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மங்கள நாயகி என்றே வணங்கப்படும் திருக்கோகர்ணத்து பிரகதாம்பாள் சகல சௌபாக்கியங்களையும் அருள்பவள். 500 வருடங்களுக்கு மேலாக தமிழக மக்களால் விரும்பி வணங்கப்படும் இந்த தேவி, நம்பியவரைக் காப்பவள். நலன்கள் பல அளிப்பவள். கண்மூடி இவளை தியானித்தால் போதும் நிச்சயம் வேண்டியதை அருள்வாள்.


சக்திக்கே விருப்பமான இந்த ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இவளை தரிசித்து வெல்லத்தை நைவேத்தியம் செய்து, வெல்லம் கலந்த பானகத்தை பக்தர்களுக்கு வழங்கினால் போதும். மனமுவந்து உங்களின் வேண்டுதல்களை இவள் நிறைவேற்றுவாள். திருக்கோகர்ணத்து அன்னை பிரகதாம்பாளே அரைக்காசு அம்மனாக வணங்கப்படுகிறாள்; வணங்கும் பக்தர்களுக்கு அருள்புரிகிறாள். எனவே நாம் அரைக்காசு அம்மனை வழிபட்டால், திருக்கோகர்ணம் பிரகதாம்பாளையும் தரிசித்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது உறுதி.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்