Temple info -102 Thanthondrimalai Venkatramana temple. தான்தோன்றிமலை வெங்கடரமணா கோயில்

 Amazing temple info -102

அதிசய கோயில் தகவல் -102






Thanthoni Malai Kalyana Venkatramana Swamy



Located 4kms from Karur on the Dindigul highway is the 8th Century AD historical Rock cut Cave temple of Kalyana Venkatramana Swamy in Thanthoni Malai where the 10feet Swayambu Lord is seen in a majestic standing posture facing the West. The temple tower has been constructed right at the top of the huge rock.

The wide sanctum of Kalyana Venkatramana Swamy has been carved along the cave out of the rock.

The Maha Mandapa and other Sannidhis at the temple were a later time additions possibly in the 12-13th Century AD.



Similar to Thanjai Maa Mani Narasimha Sanctum

Inside the sanctum, that reminds one of Thanjai Maa Mani Narasimha Divya Desam both in terms of the huge size of the Moolavar Lord as well as the big sized Sanctum, there are 16 specially carved sculptures each of whom is seen playing a musical instrument.


Piece of Rock falls at Thanthoni Malai


When a fight broke out between the Serpant King Adhisesha and the Wind God Vayu as to whowas more stronger and who played a more important role, Lord Vishnu asked Adhisesha to hold on to the Tirumala Hills and Vayu to try and remove the hills from the clutches of the Serpant Lord.


An angry Vayu who could not remove from Adhisesha’s hold turned into a cyclone. Pieces of the rock from the hills fell in different places. One such piece is the rock we find here at Thanthoni Malai in Karur where Venkatachalapathy provides darshan as Kalyana Venkatramana perumal.


Another story goes that Susarma who did not have a child invoked the blessings of Lord Vishnu. He was asked to come to the rock here.  Pleased with his prayers, Lord Vishnu provided darshan as Kalyana Venkatramana Perumal and blessed him with a child.


Construction


Chola King Muchukunda, a Saivite devotee, was cursed to have the face of a monkey.  To liberate himself from the curse, he built several Vishnu temples including the two perumal temples of Karur- this one at Thanthonimalai and the Abhaya Pradhana Ranganatha temple in the city of Karur.


Later on, Thirumalai Nayak of Madurai contributed to the temple.


Historical Cave temple


The Cave Temple here at Thanthoni Malai was excavated in the 8th Century AD. There is a similarity of this rock and the cave structure with the architecture seen at the Narasimha temple at Namakkal about 45kms from here though the Thanthoni Malai rock cave is a little bigger than the one at the Narasimha temple in Namakkal.


Prarthana Sthalam 


Those who offer their sincere prayers and present this slipper as suggested by Kalyana Venkatramana Perumal have their wedding wishes fulfilled.


Thiru Kalyana Utsavam is a special feature at this temple. On Shravanam Star every month, there is a special abhisheka performed for childless couples. There is a daily Thirumanjanam at this temple every day at 11.30am for the Moolavar deity.


Festivals 

Two Brahmotsavams- One in Maasi and One in Puratasi

Pavitrotsavam in Avani

Navarathri Utsavam


On the third day after Maasi, Theppotsavam is celebrated in a grand manner at this temple.

There is a big temple tank on the Western side of the temple.


Chariot Festival on the Thiruvonam day in Puratasi and Magam day in Maasi

Puratasi 3rd Saturday is a special occasion at this temple


Quick Facts


Moolavar: Venkatramana Swamy in a West Facing Standing Posture


Thaayar  : No Separate thaayar ( Mahalakshmi is seen on the chest of the Lord)


Utsavar   : Srinivasa Perumal


Time       : 6am-1pm, 3pm-7pm



தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி! தலவரலாறு



தென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்பெறும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனிததலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது. கரூரில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் கரூருக்கு தெற்கே 4கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதியே கல்யாண வெங்கடரமண சுவாமி எனும் திருப்பெயருடன் எழுந்தருளியுள்ளார்.


குன்றின் மேல் கோவில்


இந்த விஷ்ணுதலம் குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்குன்று மேல்புறம் உயர்ந்தும், கீழ்புறம் தாழ்ந்தும் காணப்படுகிறது. மூலஸ்தானத்தின் மேல்கட்டப்பட்ட கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. குன்றின் மேல்புறம்குடையப்பட்டுள்ள அழகிய குடைவரையில் கல்யாண வெங்கடரமண பெருமாள், மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிரம்மாண்ட வடிவம் கொண்ட இந்தப் பெருமாள், லட்சுமியை தனது மார்பில் தாங்கியிருக்கிறார். இதனால் இங்கு தாயாருக்கு தனி சன்னிதி கிடையாது.


தலவரலாறு


ஒரு சமயத்தில் திருப்பாற்கடலில் திருமால், லட்சுமிதேவியுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வாசலின் வெளியே ஆதிசேஷன் காவல் இருந்தார். அப்போது வாயுபகவான் இறைவனை சேவிக்க உள்ளே நுழைய முயன்றார். ஆதிசேஷனோ, வாயுபகவானை தடுத்து நிறுத்தினார். அதனால் இருவருக்குமிடையே முதல் ஏற்பட்டது. அந்த தருணத்தில் வெளியே வந்த பகவான் இருவரிடையே சமசரம் செய்து வைத்தார். இருவருக்கும் ஒரு போட்டியையும் வைத்தார்.


தான்தோன்றி மலை


அதாவது ஆதிசேஷன் திருவேங்கடமலையை தனது உடலால் அழுத்தி பிடித்து கொள்ள வேண்டும். வாயுதேவன் அதை தனது பலத்தால் அசைத்து பிடுங்க வேண்டும். இதுதான் போட்டி. இந்த போட்டி ஆரம்பமாயிற்று. ஆதிசேஷன், மலையை தனது உடலால் சுற்றி இறுக அழுத்தி கொண்டார். வாயு பகவான் அதனை பெயர்த்தெடுக்க முயன்றார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. கோபம் கொண்ட வாயு பகவான், தனது முழு பலத்தையும் கொண்டு பெரும் புயலாகவீசியபோது மலை சிதறுண்டு நாலா பக்கமும் விழுந்தன. அவ்வாறு சிதறி விழுந்த குன்றுகளில் ஒன்றுதான் இந்த தான்தோன்றிமலை என்று கூறப்படுகிறது.


இம்மலையில் திருவேங்கடவன் எவ்வாறு வந்தமர்ந்தார் என்பதை பார்ப்போம்..


கரூரை தலைநகராக கொண்டு மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சி செய்து வந்தான். அவன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் டங்கணாச்சாரி என்பவர் வசித்து வந்தார். இவர் அரசவையின் சிறந்த சிற்பியாகவும், சைவப் பற்றாளனாகவும் திகழ்ந்தார். அவனுக்கு சுந்தராம்பிகை எனும் மனைவி இருந்தாள். இந்த தம்பதியரை குழந்தை பாக்கியம் இல்லாத குறை வாட்டியது. ஒருநாள் டங்கணாச்சாரி, அரசவைக்கு சென்று இருந்தான். சுந்தராம்பிகை தனது வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது தெருவில் கோவிந்தா... கோவிந்தா... எனும் சப்தம் கேட்டது. அவள் ஓடோடி வந்து தெருவை பார்த்தாள்.


அப்போது ஒரு கூட்டம் கோவிந்தா... கோவிந்தா... என்று உரக்க கத்திக்கொண்டே சென்றது. அந்த கூட்டத்தின் நடுவில் மஞ்சள் ஆடை அணிந்து மார்பில் துளசி மாலையுடன் நெற்றியில் திருநாமத்துடன் ஐந்து வயது சிறுவன் ஒருவன் காணப்பட்டான். கூட்டத்தில் ஒரு பெண்மணியிடம் இதுகுறித்து சுந்தராம்பிகை விசாரித்தாள்.


அதற்கு அந்த பெண்மணி, அந்த சிறுவன் எனது மகன்தான். எனக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. திருப்பதி வேங்கடேசனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டோம். குழந்தை பிறந்தது. ஐந்தாவது வயதில் குழந்தையையும் அழைத்துக்கொண்டு பெருமாளின் சன்னிதியில் வந்து காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருந்தோம். அதை நிறைவேற்றவே இப்போது திருப்பதி செல்கிறோம் என்றாள். இதனை கேட்ட சுந்தராம்பிகை, தானும் திருப்பதி வேங்கடாஜலபதியை வேண்டி அதே பிரார்த்தனை செய்து கொண்டாள். வெங்கடாஜலபதியும் அருள்புரிந்தார். சுந்தராம்பிகைக்கு ஆண் குழந்தை பிறந்தது.


அவனுக்கு குண்டலாச்சாரி என்று பெயரிட்டாள். குழந்தைக்கு ஐந்து வயதானது. பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டியகாலம். இதுவரை கணவரிடம் இதுபற்றி கூறவில்லை. தற்போது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறினாள் சுந்தராம்பிகை. கோபத்தில் கொந்தளித்தார் டங்கணாச்சாரி. சிவபெருமானை தவிர உலகில் வேறு தெய்வம் இல்லை. நான் திருப்பதிக்கு போக மாட்டேன். உன்னையும் போக விட மாட்டேன் என்று எச்சரித்து விட்டு வெளியில் சென்று விட்டார். சுந்தராம்பிகையோ மனம் வருந்தி கண்ணீர் வடித்தாள்.


குண்டலாச்சாரி தனது தாய் அழுவதை கண்டு, ஏனம்மா அழுகிறாய்? என்று கேட்டான். தனது இக்கட்டான நிலையை தனது மகனிடம் சுந்தராம்பிகை கூறினாள். இதனை கேட்ட குண்டலாச்சாரி, அம்மா நீ அழாதே!. திருப்பதி சீனிவாச பெருமாளை, நமது ஊரிலுள்ள மலைக்குன்றுக்கு வரவழைக்கிறேன்.


நாம் பிரார்த்தனையை இங்கேயே நிறைவேற்றலாம் என்றான். மகனின் விளையாட்டுப் பேச்சைக் கேட்ட தாய்க்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை. அன்று இரவு எல்லோரும் தூங்கியவுடன் குண்டலாச்சாரி, தனது தந்தை வைத்திருந்த, சிற்பம் செதுக்குவதற்கான ஆயுதங்களை எடுத்துக் கொண்டு மலைக்குச் சென்றான். மலையின் மீது ஆலயம் எழுப்ப அடி அளந்து கொண்டு இருந்தான்.

அப்போது சந்நியாசி ஒருவர், அவன் முன் தோன்றி, குழந்தாய்! இங்கு வந்து என்ன செய்கிறாய்? என்று கேட்டார். குண்டலாச்சாரி, நான் இங்கே கோவில் அமைத்து, திருப்பதி சீனிவாச பெருமானை அழைக்க போகிறேன் என்று கூறினான்.

இதனை கேட்ட சந்நியாசி, உன்னால் இக்காரியம் முடியக்கூடியதல்ல. என்னிடம் ஆட்கள் அதிகம் இருக்கின்றனர். அவர்களை வைத்து கோவில் அமைத்து விடலாம். நீ நாளைக்கு இங்கே வா! என்று கூறினார். குண்டலாச்சாரி வீட்டிற்கு திரும்பி உறங்கினான். எப்போதும்போல் டங்கணாச்சாரி அதிகாலையில் எழுந்து மலைப்பக்கம் சென்றார். அங்கு ஒரு கோவில் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான்.


ஒரேநாளில் கோவில் அமைப்பது என்பது மன்னனை தவிர வேறு யாராலும் முடியாதே! மன்னன் என்னிடம் சொல்லாமல் இக்கோவிலை கட்டி விட்டானே என்று வருந்தினார். காலை விடிந்ததும் அரசவைக்கு சென்று கோவில் அமைக்கப்பட்டிருப்பது பற்றி கேட்டார். மன்னனும் வியப்பில் ஆழ்ந்தான். மலைக்குச் சென்று பார்த்தான். தனக்கே தெரியாமல் விஷ்ணு ஆலயம் கட்டியவனை கண்டுபிடித்து தண்டிப்பதாக கூறிவிட்டு சென்றான். டங்கணாச்சாரி, கடும்கோபத்தில் இருந்தார். அன்று இரவு மலைக்குச் சென்று பதுங்கி இருந்தார். கோவில் கட்டியவர்கள் எப்படியும் வருவார்கள் என்பதால் மலையில் பதுங்கி இருந்தார்.


அப்போது குண்டலாச்சாரி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு கோவில் வாசலில் நுழைந்தான். இருட்டில் யார் என்று அறியாமல் டங்கணாச்சாரி, சிறுவன் குண்டலாச்சாரியை வாளால் வெட்டி வீழ்த்தினான். அதன் பிறகு யாரும் வராததால் வீட்டிற்கு வந்து உறங்கினான். மறுநாள் காலையில் தன் மகனை காணாது சுந்தராம்பாள் துடித்தாள்.


இதற்கிடையில் மலையின் மீது தலை துண்டித்து கிடந்த குண்டலாச்சாரியை, அந்த பகுதி மக்கள் பார்த்து தூக்கி வந்தனர். பெற்றோர் கதறி அழுதனர். அப்போது அங்கு ஒரு சந்நியாசி தோன்றினார். அவர் டங்கணாச்சாரியைப் பார்த்து, கொஞ்சம் துளசி இலையைப் பறித்துக் கொண்டு வா!. உன் மகனை பிழைக்க வைக்கிறேன் என்று கூறினார். அதைக் கேட்டதும் டங்கணாச்சாரி, தனது இரு காதுகளையும் பொத்திக்கொண்டு நான் துளசியை கையால் தொடமாட்டேன் என்றான். இதனை கேட்ட மக்கள் கோபம் அடைந்து இந்த

இக்கட்டான நேரத்திலும் நீர் வைராக்கியம் பேசுவது சரியல்ல என்று சொல்லவும், அரைமனதுடன் துளசியை பறித்துக்கொண்டு வந்து கொடுத்தார் டங்கணாச்சாரி. அதை வாங்கிய சந்நியாசி, குண்டலாச்சாரியின் தலையையும் உடலையும் சேர்த்து வைத்து கழுத்து பகுதியில் துளசி சாற்றை பிழிந்து ஊற்றினார். உடனே குண்டலாச்சாரி உயிர் பெற்று எழுந்தான். அதனை கண்டோர் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். பெருமாளின் பெருமையை போற்றி புகழ்ந்தனர். சுந்தராம்பிகை அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. தனது மகனுக்கு உயிர் கொடுத்த சந்நியாசியின் பாதங்களில் விழுந்து வணங்கினாள்.


கோவில் கட்டப்பட்ட நிகழ்ச்சியையும், தான் வெட்டப்பட்ட நிகழ்ச்சியையும் குண்டலாச்சாரி தனது பெற்றோர் முன்னிலையில் எடுத்துக்கூறினான். அதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்து மலையை நோக்கி சென்றனர். சிறுவனுடன் அவனது பெற்றோர், மன்னன் உள்பட பலரும் சந்நியாசியுடன் மலையேறிச் சென்றனர். ஆனால் மலை மீது சென்றவுடன் கூட வந்த சந்நியாசி மறைந்து விட்டார்.

குகையின் நடுவே பகவான் திருப்பதி வெங்கடேச பெருமாள் காட்சியளிப்பதை கண்டு அனைவரும்வணங்கினர். அப்போது அசரீரி ஒலித்தது. குண்டலாச்சாரி என்மீது கொண்டு இருந்த அளவற்ற பக்தியை கண்டு மகிழ்ந்ததால்தான், நான் இங்கே பிரசன்னமாகி இருக்கிறேன். இனி நீங்கள் உங்களது பிரார்த்தனைகளை இங்கேயே செலுத்துங்கள். நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்