Temple info -3922. Brahmapureeswarar Temple, Maraignayanallur,Nagapattinam. பிரம்மபுரீஸ்வர ர் கோயில் மறைஞானநல்லூர், நாகப்பட்டினம்

 Temple-info -3922

கோயில் தகவல்-3922







Brahmapureeswarar Temple, Maraignayanallur, Vedaranyam Taluk, Nagapattinam District.


The temple is located a few hundred meters south of the 'Maraignayanallur / Mandabakulam' bus stop—situated on the Poopetti road—which branches off from the Thiruthuraipoondi road, west of Vedaranyam.


'Maraignanam' (hidden/esoteric knowledge) refers to the profound realization of the soul's energy—a dimension that transcends the perception of the five senses. This place, where such esoteric wisdom is attained, is known as 'Maraignana Nallur,' which has evolved into its current name, 'Maraignaya Nallur.'


In this village, one can find the temples of Brahmapureeswarar, Somanathar, Rudrasomanathar, and Mela Maraikkadar, as well as shrines dedicated to Kali, Veeran, Vinayagar, Draupadi, Kamakshi, and Thundikkaran.


During the Krita Yuga, Lord Shiva severed the fifth head of Brahma, who had become arrogant due to his role as the creator. Having lost his creative power as a result of this curse, Brahma descended to Earth, where he consecrated and worshipped several Shiva Lingams, seeking liberation from his curse.


According to local legends (*sthala puranas*), Brahma undertook pilgrimages on Earth not only during the Krita Yuga but also throughout the Treta and Dvapara Yugas, worshipping Lord Shiva at various sacred sites to absolve himself of his curses. Maraignaya Nallur is one such site.


The 55th chapter of the *Vedaranya Mahatmiyam* states that it was at this very location that Brahma regained his lost power of creation. This *Mahatmyam* (glorious account) was revealed by Sage Narada and recorded by a person named Manthanatha.


A Brahmin named Somagan, hailing from Sirkazhi, neglected his priestly duties and showed no respect for his parents. He led a life of vice—engaging in theft, robbery, and lustful pursuits. Furthermore, he committed the grave sin of killing another Brahmin (*Brahma-hatti dosham*), which caused him to lose his sanity.


After wandering through many places, he arrived at this sacred site. When he attempted to enter the *Brahma-theertham* (the temple tank), the people present there drove him away, splashing the tank water upon him. As soon as the water from this tank touched him, his mind cleared, and he regained his senses. He worshipped the Lord, transformed into a righteous man, and eventually reunited with his family. This episode highlights the profound significance of the *theertham* (sacred water) at this location.


The temple faces east; although it is an ancient site, the structure has been completely renovated. The presiding deity, Lord Brahmapureeswarar, faces east, while the Goddess, Akhilandeswari, faces south within their respective *garbhagrihas* (sanctum sanctorum).


There is a Nandi within the sanctum, and another Nandi *mandapam* (pavilion) located outside the main entrance hall. Another unique feature is the presence of Lord Ganesha and Bala Dandayudhapani (Lord Murugan in a meditative posture) at the entrance of the sanctum. It is said that the Nandi here was created by Lord Brahma himself and bears a *thirunamam* (a sacred sectarian mark) on its forehead.


There are no *koshta murthis* (deities in the exterior wall niches); however, Lord Chandeswarar is enshrined in a separate *sannidhi* (shrine). There is also a temple tank situated in the *isanya* (northeast) corner of the temple complex.


மறைஞாயநல்லூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், 


Maraigyaya 


வேதாரண்யத்தின் மேற்கில் செல்லும் திருத்துறைபூண்டி சாலையில்  3 கிமி தூரத்தில் உள்ள மறைஞாயநல்லூர் / மண்டபகுளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து தெற்கில் செல்லும் பூப்பெட்டி சாலையில் சில நூறு மீட்டர்கள் சென்றாலே போதும் இக்கோயிலை காணலாம்.  


மறைஞானம் என்பது ஐம்புலன்களால் உணரமுடியாத உயிரின் ஆற்றலை  ஆழமாக அறிந்துணர்வது. இப்படிப்பட்ட மறைஞானம் கிடைக்கும் பகுதி தான் இந்த மறைஞான நல்லூர்- தற்போது மறைஞாய நல்லூர் என மாறியுள்ளது 


இவ்வூரில் பிரம்மபுரீஸ்வரர் , சோமநாதர் ருத்ரசோமநாதர் மற்றும் மேல மறைக்காடர் கோயில்களும் காளிகோயில் வீரன்கோயில் விநாயகர் திரௌபதி காமாட்சி, தூண்டிக்காரன் கோயில்களும் உள்ளன. 


கிருத யுகம் நடந்து கொண்டிருந்த போது,   தனது படைப்புத் தொழிலால் அகந்தை கொண்ட பிரம்மனின் ஐந்தாவது தலையைச் சிவபெருமான் கொய்தார். சாபத்தால் படைப்பு ஆற்றலை இழந்த பிரம்மன், சாப விமோசனம் வேண்டி பூமிக்கு வந்து பல சிவலிங்கங்களை நிறுவி வழிபட்டார்.


கிருத யுகம் மட்டுமின்றி திரேதா யுகம் மற்றும் துவாபர யுகங்களிலும் பிரம்மன் பூலோக யாத்திரை மேற்கொண்டுள்ளார். பல தலங்களில் அவர் சிவபெருமானை வழிபட்டு தனது சாபங்களைப் போக்கிக் கொண்டதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. அதில் ஒன்று தான் இந்த மறைஞாய நல்லூர். 


பிரம்மன் இத்தலத்தில் தான் இழந்த படைப்பு தொழிலை மீண்டும் பெற்றான் என வேதாரண்ய மகாத்மியத்தில் 55 வது அத்யாயத்தில் இத்தலம் பற்றி கூறப்பட்டுள்ளது என்கின்றனர். இந்த மஹாத்மியம் நாரதரால் அருளப்பெற்று மாந்தநாதா என்பவரால் எழுதப்பட்டதாகும்  


சீர்காழியை சேர்த்த சோமகன் எனும் வேதியன் தனது வேதியர் தொழிலை சரிவர செய்யாமல் தாய் தந்தையரை மதிக்காமல் திருட்டு, கொள்ளை, காமஇச்சை கொண்டு திரிந்தான், அதுமட்டுமன்றி ஒரு அந்தணரையும் கொன்றுவிட பிரம்ம ஹத்தி தோஷம் பிடித்து பைத்தியமாக ஆகிவிடுகிறான்.


 பல இடங்களில் திரிந்த அவன் இந்த தலத்தில் வந்தபோது,  இங்குள்ள பிரம்மதீர்த்த குளத்தில் இறங்க முயற்சிக்க அங்குள்ள மக்கள் அவனை விரட்டுகின்றனர். குளத்தில் இருந்தவர்கள் குளத்து நீரை அவன் மேல் வீசி எரிந்தும் விரட்டுகின்றனர். இக்குளத்து நீர் அவன் மேல் பட்டதும் அவனது சித்தம் தெளிந்து நல்ல நிலைக்கு வருகிறான். இறைவனை வழிபட்டு நல்லவனாக மாறி தன் குடும்பத்துடன் சேர்கிறான். இது தீர்த்தமும் இங்கே சிறப்பு என உணர்த்துவதாக உள்ளது. 


கிழக்கு நோக்கிய திருக்கோயில்; பழமையான கோயில் முற்றிலும் புதியதாக மாற்றியமைக்கப்பட்ட திருக்கோயில். இறைவன் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியும் அம்பிகை அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர்.  


இறைவன் சன்னதி உள்ளே  ஒரு நந்தியும், முகப்பு மண்டபத்தின் வெளியில் ஒரு நந்தி மண்டபமும் உள்ளது.  கருவறை வாயிலில் விநாயகரும் பால தண்டாயுதபாணி தியான கோலத்தில் உள்ளது மற்றொரு சிறப்பு. இங்குள்ள நந்தி பிரம்மாவால் சிருஷ்டிக்கப்பட்டதாகவும் நெற்றியில் திருநாமம்  உள்ளதாக சொல்கின்றனர்.  


 கோஷ்ட மூர்த்திகள் ஏதுமில்லை சண்டேசர் தனி சன்னதியில் உள்ளார். கோயில் ஈசான்யத்தில் ஒரு குளமும் உள்ளது.


 #வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்

நன்றி கடம்பூர் விஜய் 

Comments

Popular posts from this blog

Marundeeswarar temple,Thiruvanmiyur,Chennai மருந்தீஸ்வர்ர் கோயில்,திருவான்மியூர்,சென்னை. Padal Petra Sthalam No.25

Temple info -218 Thiruneermalai Ranganathar temple திருநீர்மலை ரங்கநாதர் கோயில். Divya Desam No.61

Birla Mandir Hyderabad பிர்லா மந்திர்,ஹைதராபாத்