Temple info -3870 Abayavarada Anjaneyar temple, Dindukkal 📍அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோவில், மலைக்கோட்டை அடிவாரம், திண்டுக்கல்.
Temple info -3870
கோயில் தகவல்-3870
Abayavarada Anjaneyar temple, Dindukkal
Abhaya Varada Anjaneyar with a Shiva Lingam carved on His chest!! ✨🕉️📿
He graces devotees in a majestic posture, ready for battle, wearing a sword at His waist and footwear (sandals) on His feet!! 🙏🏻
📍Arulmigu Abhaya Varada Anjaneyar Temple, at the foothills of Malaikottai (Rock Fort), Dindigul.
Shiva Lingam on the Chest: A Shiva Lingam is carved on the deity's chest to signify that Lord Shiva Himself incarnated as Anjaneyar to serve Sri Rama during the Rama Avatar.
Thursday Worship: Although Saturday is traditionally considered auspicious for Anjaneyar, here—where He embodies the aspect of Shiva—Thursdays are considered special. Devotees offer *Vada Malai* (garland of *vadas*) and curd rice on this day, which is also sacred to Lord Dakshinamurthy. 📿🕉️
Battle-Ready Form: He graces devotees in a majestic posture, ready for battle, wearing footwear (sandals) and a sword at His waist. ⚔️🔱
Tender Coconut Offering on the Tail: To alleviate planetary afflictions (*Graha Doshas*), devotees tie tender coconuts—inscribed with their name, birth star (*Nakshatra*), and zodiac sign (*Rasi*)—to Anjaneyar's tail while offering prayers. It is believed that Anjaneyar incinerates all planetary afflictions with His tail and bestows blessings. 🪔
Historical Background: This temple is located at the site indicated by Anjaneyar in a dream to a chieftain who ruled the region in ancient times. Established through the king's devotion, this temple remains a powerful shrine that fulfills the prayers of devotees to this day. 🌺🌟
This historically significant temple, dating back 500 years, is situated at the foothills of the famous Malaikottai (Rock Fort) in the heart of Dindigul city. Witnessing this rare form of Anjaneya, seated in a warrior's stance, is a truly magnificent spiritual experience. 🙏🏻
📍அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோவில், மலைக்கோட்டை அடிவாரம், திண்டுக்கல்.
மார்பில் சிவலிங்கம் செதுக்கப்பட்ட அபய வரத ஆஞ்சநேயர் !! ✨🕉️📿
இடுப்பில் கத்தியும், கால்களில் பாதரட்சையும் (செருப்பு) அணிந்து போருக்குப் புறப்படும் கம்பீர தோற்றத்தில் அருள்பாலிக்கிறார் !! 🙏🏻
📍அருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோவில், மலைக்கோட்டை அடிவாரம், திண்டுக்கல்.
மார்பில் சிவலிங்கம் : ராமாவதாரத்தில் ஸ்ரீராமருக்கு சேவை செய்ய சிவபெருமானே ஆஞ்சநேயராக அவதரித்தார் என்பதை உணர்த்தும் வகையில், சுவாமியின் நெஞ்சில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை வழிபாடு: ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை உகந்தது என்றாலும், இங்கு சிவ அம்சமாகவும் தட்சிணாமூர்த்தி வழிபாட்டிற்குரிய நாளாகவும் கருதப்படும் வியாழக்கிழமைகளில் வடைமாலை சாற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுவது சிறப்பு. 📿🕉️
போர்க்கோல தரிசனம் : கால்களில் பாதரட்சை (செருப்பு) அணிந்து, இடுப்பில் கத்தியுடன் போருக்குப் புறப்படும் கம்பீர தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். ⚔️🔱
வாலில் இளநீர் கட்டும் வழிபாடு : கிரக தோஷங்கள் நீங்க பக்தர்கள் தங்களது பெயர், நட்சத்திரம், ராசி எழுதப்பட்ட இளநீரை ஆஞ்சநேயரின் வாலில் கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள். ஆஞ்சநேயர் தன் வாலால் அனைத்து கிரக தோஷங்களையும் பொசுக்கி நன்மைகளைத் தருவார் என்பது நம்பிக்கை. 🪔
வரலாற்று பின்னணி : முற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் ஒருவரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் சுட்டிக்காட்டிய இடமே இந்த மலைக்கோட்டைப் பகுதியாகும். மன்னரின் பக்தியால் உருவான இக்கோவில், இன்றளவும் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் சக்திவாய்ந்த தலமாக விளங்குகிறது. 🌺🌟
500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திருக்கோவில் திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை (Rock Fort) அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. போர்க்கோலத்தில் வீற்றிருக்கும் இந்த அபூர்வ ஆஞ்சநேயரை தரிசிப்பது மிகச்சிறந்த ஆன்மீக அனுபவமாகும். 🙏🏻

Comments
Post a Comment