Temple info -3852. Nageswarar temple, Vijayamangalam, Erode. நாகேஸ்வர ர் கோயில்,விஜயமங்கலம்,ஈரோடு

 Temple info -3852

கோயில் தகவல்-3852

Eswaran Temple, Vijayamangalam

Eswaran Temple, 6GR4+XHJ, National Highway 47, Vijayamangalam, Tamil Nadu 638056  TPS  Eswaran Temple (Nageswar) is located in  Vijayamangalam, Tamil Nadu  at a distance of 73 kms from Coimbatore Railway station and 28 kms from Erode. This is a Thiruppugazh sthalam- songs redered by Saint Arunagirinathar on Lord Murugan of this temple.  The place is also called as Vijayapuri. It is one of the 1000 Murugan temples in India.

As per the legend, Pandavas during their exile came to Viradapuram (now known as Tharapuram). Arjuna (also called asVijayan) hide all his weapons in a Vanni Tree near Vijayapuri Amman Temple. He disguised himself as awoman and started to live in hiding in Viradapuram. He defeated Duryodhana in battle at the end of hisexile. To commemorate his victory, he built this Temple for Nageswarar. Also, he named the place afterhis name Vijayan. Hence the place is called as Vijayapuri / Vijayamangalam.

Moolavar : Sri Nageswarar / Nageswaraswamy ; Ambal : Sri Govarthanambigai. This temple was believed to be constructed during 7th to 8th Century by Cheras. It is believed that Nagas used to worship Lord Shiva here. Hence Lord is called as Nageswarar

The temple is facing west with a newly built 5 tier Rajagopuram. There is a Vilakku Thoon or Garuda Thoon in front of Rajagopuram. Presiding Deity is called as Nageswarar and is facing west. Lord is a Swayambu Moorthy. He is housed in the sanctum in the form of Lingam. Dwarabalakars can be found at the  entrance of the sanctum.Deepasthambam is infront. Nagars and Vinayagar are under a Bodhi ( Arasamaram ) tree. Dwarapalakars are at the entrance of arthamandapam, Deer and Mazhu on the left side dwarapalakr and soolam and damaru on the right side dwarapalakar. In koshtam Ganapathy, Dakshinamurthy, Durgai, Lingothbavar and Brahma.

In prakara /mahamandapam Valli Deivasena samedha Sri Subramaniyar, Bhairavar, a Big size Nagar and 5 Shiva Lingas of Panchabootha sthalangal and Sandikeswarar. Urchavars and Saba in the front mandapam. Ambal is in a separate temple and facing west. This was built during 12th century.

Ganapathy, Dhakshinamoorthy, Durgai, Lingothbavar and Brahma are the Koshta Idols, located around the sanctum walls. There are shrines for Lord Subramaniyar with his consorts Valli & Deivanai, Bairavar,a Big size Naga and 5 Shiva Lingams of Pancha Bootha Sthalangal and Sandikeswarar in the Mahamandapam. Utsava Idols and Nataraja Sabha can be found in the front Mandapam

Mother is called as Govarthanambigai and is facing west. She is housed in a separate shrine on the southern side of prakaram. It is believed that this shrine was built in the 12th Century AD. Idols of Nagas can be found under a Bodhi (Arasamaram) tree in front of the temple. There is a shrine for Saptha Mathas in the Temple premises. The Temple is rich in inscriptions. Inscriptions can be seen all over the temple (i.e. Temple walls, Ardha Mandapam, Maha Mandapam etc.).

Shanmuga Subramanyar is 5 feet tall. LOrd Murugan gives darshan with six faces and twleve hands sitting on the peacock with Devis Valli and Deivayanai. It is near Chennimalai Murugan temple. Pinnakku Siddhar  avatara sthalam.

Temple timings : 6am  to 12 noon  and 5 pm – 8 pm.  Contact phone number : Sri Shunmuga Subramania Gurukkal and mani Gurukkal  +919488152412.

விஜயமங்கலம் நாகேஸ்வரர் கோயில்

நாம் அடுத்து செல்லவிருக்கும் திருப்புகழ் தலம் விஜயமங்கலம். ஈரோட்டிலிருந்து பெருந்துறை வழியாக 28 கிமீ தொலைவிலும், திருப்பூரிலிருந்து 26 கிமீ தொலைவிலும் இத்தலம் அமைந்திருந்திருக்கிறது. இத்தலம் விஜயபுரி என்றும் அழைக்கப்படுகிறது.

இறைவன்: நாகேசப் பெருமான் அம்பாள் : கோவர்த்தனாம்பிகை

பாண்டவர்கள் தமது அஞ்ஞாதவாசத்தைக் கழித்துக் கொண்டிருந்த சமயம். அர்ஜூனன் (விஜயன் என்றும் அழைக்கப்பட்டவன்) தனது ஆயுதங்களை விஜயபுரி அம்மன் கோவிலில் ஒளித்து வைத்துவிட்டு பெண் வேடம் தரித்திருந்தான். நீண்ட வாசம் முடிந்த பின்னர், பாரதப் போரில் துரியோதனனை வென்றதைக் கொண்டாடும் விதமாக இங்கு நாகேசஸ்வரனுக்கு கோவில் அமைத்தான் என்கிறது புராண வரலாறு. அவனுடைய பெயரிலேயே இந்த ஊர் விஜயபுரி/ விஜயமங்கலம் என்றழைக்கப்படுகிறது.

மேற்கு நோக்கிய ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம். அதன் முன்னால் விளக்குத் தூண்/ கருடன் தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரதான தெய்வமான நாகேஸ்வரர் , சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். சன்னதிச் சுவரில் விநாயகர், பிரம்மா, துர்க்கை , லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்கள் கோஷ்டங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. 

ஆறுமுகப்பெருமான் பன்னிருகரம் கொண்டு தனது இரு தேவியருடன், மயில்மீதமர்ந்த கோலத்தில் தெற்கு நோக்கி நமக்கு அருள் பாலிக்கிறார். மயிலின் முகம் இடப்பக்கமாக இருப்பதும், தெய்வ மூர்த்தம் ஐந்தடி உயரத்தில் இருப்பதும் சிறப்பம்சங்கள். 

அம்பாள் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். தத்தாத்ரேயர் சன்னதியும் உள்ளது.

கோவிலில் திருப்பணி வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இத்தலத்திற்கான திருப்புகழ் : ஒன்று (பாடல் எண்: 936)

தனன தந்தனத் தானான தானன
     தனன தந்தனத் தானான தானன
          தனன தந்தனத் தானான தானன …… தனதான
கலக சம்ப்ரமத் தாலேவி லோசன
     மலர்சி வந்திடப் பூணார மானவை
          கழல வண்டெனச் சா¡£ரம் வாய்விட …… அபிராமக்

கனத னங்களிற் கோமாள மாகியெ
     பலந கம்படச் சீரோடு பேதக
          கரண முஞ்செய்துட் பாலூறு தேனித …… ழமுதூறல்

செலுவி மென்பணைத் தோளோடு தோள்பொர
     நிலைகு லைந்திளைத் தேராகு மாருயிர்
          செருகு முந்தியிற் போய்வீழு மாலுட …… னநுராகந்

தெரிகு மண்டையிட் டாராத சேர்வையி
     லுருகி மங்கையர்க் காளாகி யேவல்செய்
          திடினு நின்கழற் சீர்பாத நானினி …… மறவேனே

உலக கண்டமிட் டாகாச மேல்விரி
     சலதி கண்டிடச் சேராய மாமவ
          ருடன்ம டிந்திடக் கோபாலர் சேரியில் …… மகவாயும்

உணர்சி றந்தசக் ராதார நாரணன்
     மருக மந்திரக் காபாலி யாகிய
          உரக கங்கணப் பூதேசர் பாலக …… வயலூரா

விலைத ருங்கொலைப் போர்வேடர் கோவென
     இனையு மங்குறப் பாவாய்வி யாகுலம்
          விடுவி டென்றுகைக் கூர்வேலை யேவிய …… இளையோனே

விறல்சு ரும்புநற் க்¡£தேசி பாடிய
     விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
          விஜய மங்கலத் தேவாதி தேவர்கள் …… பெருமாளே.

(சேர்க்கையில் உண்டாகும்) ஊடல் கலகப் பரபரப்பால் கண்களாகிய மலர் சிவக்கவும், அணிந்த முத்து மாலைகளும் கழன்று விழவும், (புட்குரல்) வண்டு முதலியவற்றின் ஒலிகளை வெளிப்படுத்தவும், அழகிய பருத்த மார்பகங்களைக் கண்டு பெருங் களிப்புடன் குதித்து மகிழ்பவனாய், (உடலெல்லாம்) பல நகக் குறிகள் உண்டாக, சிறந்த வெவ்வேறு வகையான புணர்ச்சிகளைச் செய்து, மனத்தில் பால் போலவும் தேன் போலவும் இனிக்கின்ற வாயிதழ் அமுதம் போன்ற ஊறலைச் செலுத்தி, மெல்லிய மூங்கிலைப் போன்ற தோளோடு தோள் இணைய நிலைமை தளர்ந்து, அழகிய அரிய உயிர் சோர்வுற்று, பொருந்திய வயிற்றின் மீது போய் விழுகின்ற மயக்கும் காமப்பற்றை வெளிக்காட்டும் களிப்புக் கூத்தாடி, தணிவு பெறாத கூட்டுறவில் உள்ளம் உருகி, விலைமாதர்களுக்கு அடிமைப் பட்டு, அவர்கள் இட்ட வேலைகளைச் செய்த போதிலும், உன்னுடைய வீரக் கழல் அணிந்த சிறப்புற்ற திருவடிகளை நான் இனி மறக்க மாட்டேன். உலக்கையை* துண்டு துண்டாகப் பொடி செய்து ராவித் தூளாக்கி, ஆகாயம் மேலே விரிந்துள்ள நடுக் கடலில் (அப்பொடிகளைச்) சேரும்படி செய்தும், கூட்டமான ஆயர் அனைவரும் (சாபத்தின் காரணமாக) ஒரு சேர இறந்து பட, இடையர்கள் வாழும் சேரியில் குழந்தையாக வளர்ந்தும், ஞானம் சிறந்த சக்ராயுதத்தை ஏந்தியும் இருந்த நாராயணனின் மருகனே, (ஐந்தெழுத்து) மந்திரத்தின் மூலப் பொருள் ஆனவரும், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், பாம்பைக் கையில் வளையாகக் கொண்டவரும், பூதகணங்களைக் கொண்ட தலைவருமாகிய ஈசர் சிவபெருமானின் பிள்ளையே, வயலூரில் வாழ்பவனே, கொலை செய்யும் வில்லைக் கொண்டு போர் புரியும் வேடர்கள் கோ கோ என்று பேரொலி இட்டு நெருங்க, (அதைக் கண்டு) வருந்திய வள்ளி நாயகியை நோக்கி, வருந்துகின்ற அழகிய குறப் பாவையே, நீ வருத்தத்தை விடு விடு என்று கூறி, தான் கையில் ஏந்திய கூர்மையான வேலை (வேடர்கள் மீது) செலுத்திய இளையோனே, வீரம் வாய்ந்த வண்டுகள் நல்ல முயற்சியுடன் தேசி என்னும் ராகத்தைப் பாடிடும், நறு மணம் கொண்ட தாமரைப் பூக்களைக் கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில்** வீற்றிருக்கும், தேவாதி தேவர்களின் பெருமாளே.

* யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் அதன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின் பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.

Comments

Popular posts from this blog

Temple info -2583 Airavatheswarar Temple, Melamaruthuvakudi, Thanjavur. ஐராவதீஸ்வரர் கோயில், மேலமருத்துவகுடி,தஞ்சாவூர்

Birla Mandir Hyderabad பிர்லா மந்திர்,ஹைதராபாத்

Temple info -1113 Dharmasthala Manjunatha swami Temple, Karnataka மஞ்சுநாதஸ்வாமி கோயில்,தர்மஸ்தலா,கர்நாடகா