Temple info -3780 Brahdeeswarar temple, Sripurandan,Ariyalur. பிரகதீஸ்வரர் கோயில்,ஶ்ரீபுரந்தான்,அரியலூர,
Temple info -3780
கோயில் தகவல்-3780
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஸ்ரீபுரந்தான் பிரகதீஸ்வரர் கோயில்.
Sripuranthan Pragatheeswarar temple
அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமம் இந்த ஸ்ரீபுரந்தான்.
இந்த ஊர் சோழர்கள் காலத்தில் 'ஸ்ரீ பராந்தக சோழன் சதுர்வேதி மங்கலம்' என அழைக்கப்பட்டது.இது பின்னர் மருவி ஸ்ரீ பராந்தகன் ஆகி ஸ்ரீபுரந்தான் ஆகிவிட்டது.
இங்கு முன்பு மூன்று சிவன் கோயிலகள இருந்தன, தற்போது இரண்டு சிவன் கோயில்கள் மட்டுமே உள்ளன. பிரதான சாலையினை ஒட்டி கைலாசநாதர் கோயிலும், ஏரிக்கரையினை ஒட்டிய பிரகதீஸ்வரர் கோயிலும் உள்ளன. முற்றிலும் அழிந்து காணாமல் போனது ஆதித்தேஸ்வரம் என்ற கோயில்.
கோவிந்தப்புத்தூர் சிவன் கோயிலில் எழுதப்பட்டுள்ள
முதலாம் இராஜராஜனின் 29ஆம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் வடகரை இராஜேந்திரசிங்கவளநாட்டுப் பிரம்மதேயம்
ஸ்ரீபராந்தகச்சதுர்வேதிமங்கலத்துப் பெருங்குறி மகாசபையார்
இவ்வூர் ஸ்ரீபராந்தகப்பேரேரிக் கரையிலே கூட்டம் கூடி
இவ்வூருக்கு மூலதெய்வமாக உள்ள
ஸ்ரீஆதித்தஈஸ்வரமுடையார்க்குப் பூஜை வழிபாடுகளுக்கு நிலம் வழங்கிய தகவலைத் தருகிறது. ஆனால் தற்போது ஸ்ரீபுரந்தான் ஆதித்தஈஸ்வரம் கோயில் அழிந்துவிட்டது.
இவ்விரு கோயில்களும் முதலாம் ராஜராஜன் காலத்தில் உருவானவை எனப்படுகிறது, பின்னர் மூன்றாம் குலோத்துங்கனால் திருப்பணிகள் செய்யப்பட தகவல் உள்ளது.
இதுவன்றி குலோத்துங்க ஸ்ரீபுரந்தான் பேருந்து நிலையத்தின் அருகில் ஒரு பெரிய பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் சுவர்களில்
பாண்டியர் காலத் துண்டுக் கல்வெட்டுக்கள் உள்ளன. இதில்
ஒரு கல்வெட்டு இக்கோயில் பெயரை வானவன் மாதேவி
விண்ணகர் என்று கூறுகிறது
இக்கோயில் கிழக்கு நோக்கிய திருக்கோயில் பெரிய ஏரியின் கரையில் உள்ளது. சுற்று மதில் சுவரில் தென்புறம் மட்டும் நுழைவாயில் கொண்டுள்ளது. இறைவன் துவிதள விமானம் கொண்ட பெரிய கருவறை கொண்டுள்ளார். அதன் முன்னர் இடைநாழி அர்த்தமண்டபம் மகாமண்டபம் உள்ளது அம்பிகையின் கருவறை இந்த மகாமண்டபத்தில் இணைகிறது. மகாமண்டபத்தின் வெளியில் ஒரு நந்தி மண்டபம் பலி பீடமும் உள்ளது.
இறைவன் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார் இடனழி பகுதியில் ஒரு நந்தியும், அர்த்தமண்டபத்தில் ஒரு நந்தியும் வெளியில் ஒரு நந்தியும் என மூன்று நந்தி உள்ளது. அம்பிகையும் பெரிய அளவில உள்ளார். அர்த்தமண்டப வாயிலில் ஒரு விநாயகர் உள்ளார். மகாமண்டபத்திலேயே பைரவர் மகாலட்சுமி நவகிரகங்கள் உள்ளன. கருவறை கோட்டங்களில் தக்ஷண மூர்த்தி மகாவிஷ்ணு பிரம்மா துர்க்கை உள்ளனர் சண்டேசர் சன்னதியில் இரு வேறு காலத்து சண்டேசர்கள் உள்ளன. பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் மற்றும் முருகன் சனனதிகள் உள்ளன.
இந்த சிவன் கோயில் வளாகத்தில் 6 அடி
உயரமுடைய அழகிய சற்றே உடைந்த மகாவிஷ்ணு சிற்பம் இவ்வூர் கொல்லைப் பகுதியில் இருந்ததாக கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது.
சிற்பம் முதலாம் இராஜராஜன் காலச் சிற்பக் கலைப்பாணியில் உள்ளது.
எனலாம்.
இந்த கோயிலில் இருந்து 2008-ஆம் ஆண்டு இந்த கோவிலில் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட நடராஜர் மற்றும் இதர சிலைகள், அமேரிக்கா சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் National Gallery of Australia இருந்தன. இந்திய அரசின் தீவிர முயற்சியால் 2014-ஆம் ஆண்டு மீட்கப்பட்டு மீண்டும் கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது.
பல சிறப்புக்கள் கொண்ட அரியலூர் மாவட்ட கோயில்களை ஏனைய மாவட்ட பகதர்கள் வழியட அதிக அளவில் வருவதில்லை. சில கிலோமீட்டர்களுக்கு ஒரு நீண்டுள்ள பெரிய ஏரிக்கரையோரத்து ஊர்கள், அமைதியான கோயில்கள், எளிமையான உழைப்பாளி மக்கள், பெரும்பாலான கொண்டாட்டங்கள், அது கோயிலோ வீடோ மாலை இரவு நேரங்களில் தான் இருக்கும். ஆனால் ஊரே கூட நிற்கும்.
ஒரு பயண திட்டத்தை இந்த மாவட்டத்தில் சென்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
நன்றி கடம்பூர் விஜய்
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்







Comments
Post a Comment