Temple info -3770. Kalahastheeswarar temple,Keelvelur,Nagapattinam. காளஹஸ்தீஸ்வரர் கோயில், கீழ்வேளூர், நாகப்பட்டினம்
Temple info -3770
கோயில் தகவல்-3770
Kalahastheeswarar temple,Keelvelur
Thirukannangudi Shiva Temple (Keelvelur Taluk, Nagapattinam District)
To reach Thirukannangudi, travel to Azhiyur on the Keevalur–Nagapattinam road and proceed two kilometers south. It is one of the *Pancha Krishnaranya* (five Krishna-forest) shrines and one of the holy sites praised (*Mangalasasanam*) by Thirumangai Azhwar.
Once, the sage Vashistha worshipped an idol of Krishna that he had fashioned out of butter.
Observing this, Krishna assumed the form of a small child—a cowherd boy (*Gopalan*)—and entered Vashistha’s home. There, He snatched and swallowed the very butter Vashistha was using for worship. Vashistha chased after the boy.
When Vashistha finally caught hold of Krishna’s feet, the Lord stood still, having allowed Himself to be captured; thus, the place came to be known as "Kannankudi." This is the 18th of the 108 *Divya Desams* (holy abodes of Lord Vishnu).
A king named Uparichara Vasu was a devout worshipper of Shiva; it was his custom to perform Shiva *puja* every day before dawn. One day during the Tamil month of Chithirai, while he was traveling through this area, dawn was fast approaching. As he searched for a Shiva temple to perform his daily worship, he spotted the Thirukannangudi Perumal (Vishnu) temple. Mistaking it for a Shiva temple, he entered the premises. To ensure the king did not miss his daily Shiva *puja*, Perumal appeared to him in the form of Lord Shiva for a duration of three-and-three-quarter *nazhigais* (90 minutes), enabling him to complete his worship. The event where Perumal appeared as a Shiva Lingam, adorned with sacred ash (*Thiruneeru*), is celebrated at this temple as the *Thiruneerani* festival. During this festival, held on the seventh day of the Chithirai Brahmotsavam, Perumal is adorned with sacred ash (Vibhuti).
As one travels from Azhiyur and crosses the Odambokki River, the village begins; the Perumal temple is situated on the eastern bank of a large tank. Moving south past it, the Shiva temple is located in the area between two tanks. Thirukkannangudi is the temple associated with the Rohini *Nakshatra* (star).
This Shiva temple is of great antiquity.
It welcomes visitors with an east-facing *Raja Gopuram* (main tower) featuring three tiers. Beyond it lie the Nandi, the *Kodimaram* (flagstaff), and the *Balipeedam* (sacrificial altar). Typically, in Shiva temples, the *Kodimaram* is placed after the Nandi and *Balipeedam*; however, the arrangement of *Vahanam* (divine vehicle), *Kodimaram*, and *Balipeedam* is characteristic of Vaishnavite temples built according to the *Vaikhanasa* tradition. The reason for such a layout here remains unknown. Lord Vinayaga is enshrined in a small sanctum to the right of the *Maha Mandapam* entrance.
The presiding deity is Lord Kalahatheeswarar; the temple is said to derive its name from the fact that a serpent named 'Kalam' and a female elephant named 'Athi' worshipped here.
The Goddess is Gnanambikai; it is said that Lord Murugan bestowed the grace of wisdom and offered blessings here after performing the *Soorasamharam* (slaying of the demon Soorapadman) at Sikkal.
The Lord resides in the sanctum sanctorum as a large *Linga Murthy*, while the Goddess has a south-facing sanctum with a southern entrance directly opposite her. The shrine of Lord Thyagarajar is located to the left of the Lord's sanctum. The sanctum sanctorum is constructed entirely of black granite, and a large *Vilva* tree laden with fruit stands directly behind it. The entrance hall (*Mukha Mandapam*) and the intermediate halls (*Artha Mandapams*) are also constructed of black granite. More than forty beautiful stucco figures adorn the *Vimanam* (tower) above the sanctum.
Regarding the niches (*Koshtams*) on the exterior walls of the sanctum, only the southern niche houses Lord Dakshinamurthy; the niches on the western and northern sides remain empty. To the west lies a long row of shrines; the first houses Ayyanar, while the next features three Vinayagar idols seated together on a single platform, facing east. Following this are the shrines of Viswanathar; Murugan (flanked by Valli and Deivanai); Mahalakshmi; and finally, Kasi Viswanathar (with Visalakshi). Chandikeswarar is situated in his customary location. In the northeast, one finds the Navagrahas, Bhairavar, and Surya. Come, let us visit Kannangudi—a temple renowned for the glory of both its sacred site and its presiding deity.
நாகை மாவட்டம், கீழ்வேளுர் வட்டம், திருக்கண்ணங்குடி சிவன்கோயில்
Thirukannangudi sivan temple
கீவளூர் – நாகை சாலையில் உள்ள ஆழியூர் வந்து அதன் தெற்கில் இரண்டு கிமி தூரம் சென்றால் திருக்கண்ணங்குடி அடையலாம். பஞ்ச கிருஷ்ணாரண்யத் தலங்களில் ஒன்று, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த தலங்களுள் ஒன்று.
ஒரு முறை வசிஷ்டர் வெண்ணையில் கிருஷ்ண விக்ரகம் செய்து அதை பூஜை செய்து வந்தார்.
இதை கண்ட கிருஷ்ணர். சிறு குழந்தை வடிவம் கொண்டு, கோபாலன் ஆக வசிஷ்டர் வீட்டுக்குள் சென்றார். அங்கு வசிஸ்டர் பூஜை செய்து கொண்டிருந்த வெண்ணையை கிருஷ்ணர் அப்படியே எடுத்து விழுங்கி விட்டார். இதை கண்ட வசிஷ்டர் அந்த சிறுவனை விரட்டிச் சென்றார்
விரட்டி வந்த வசிஷ்டர் கிருஷ்ணரது பாதங்களை பற்றிக் கொண்டதும். கண்ணன் கட்டுப்பட்டு நின்றபடியால் “கண்ணங்குடி” என்று அழைக்கப்பட்டது
பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 18வது தலம்.
உபரிசரவசு எனும் மன்னன் சிறந்த சிவபக்தன் தினமும் விடிவதற்குள் சிவபூஜை செய்வது அவனது வழக்கம். அவன் சித்திரை மாதம் ஒரு நாள் இப்பகுதியில் வந்து கொண்டிருந்த போது விடியற்காலை நேரம் நெருங்கிவிட்டது. சிவபூஜை செய்வதற்காக அவன் சிவாலயத்தை தேடிக் கொண்டிருந்தபோது, திருக்கண்ணங்குடி பெருமாள் கோவில் அவன் கண்ணில் பட்டது. அதை சிவன் கோவில் என்று தவறாக புரிந்து கொண்டு கோவிலினுள் நுழைந்தான். மன்னனின் சிவபூஜை தவறி விடக் கூடாது என்பதற்காக,பெருமாள் அவனுக்கு மூன்றே முக்கால் நாழிகை நேரம் (90mts) சிவபெருமானாக காட்சி தந்து, சிவபூஜை செய்ய அருளினார். பெருமாள், உபரிசரவசுக்கு திருநீறு அணிந்து சிவலிங்கமாக காட்சி கொடுத்ததைத்தான் இத்தலத்தில், திருநீரணி விழாவாகக் கொண்டாடுகிறார்கள். சித்திரை பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் நடைபெறும் இந்த விழாவின் போது, பெருமாள் விபூதி அணிந்து கொள்கிறார்
ஆழியூரில் இருந்து செல்லும்போது ஒடம்போக்கி ஆற்றை தாண்டியதும் ஊர் ஆரம்பிக்கிறது முதலில் பெரிய குளத்தின் கிழக்கு கரையில் பெருமாள் கோயில் உள்ளது அதனை கடந்து தெற்கில், இரு குளங்களின் இடைப்பட்ட பகுதியில் இந்த சிவன்கோயில் அமைந்துள்ளது. ரோஹிணி -நட்சத்திரத்துக்கு உரியது திருக்கண்ணங்குடி. இந்த கோயில் எனப்படுகிறது.;
சிவன் கோயில் மிகவும் தொன்மையான கோயில்.
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. அதனை தாண்டி உள்ளே நந்தி கொடிமரம்,பலிபீடம் என உள்ளது. வழக்கமாக சிவனுக்கு நந்தி பலிபீடம் அடுத்து தான் கொடிமரம் அமைக்க வேண்டும், ஆனால் வைணவ கோயில் அமைப்பில் வைகானச முறைப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் மட்டுமே வாகனம் கொடிமரம் பலிபீடம் என இருக்கும். இங்கு அதுபோன்ற ஒரு கட்டமைப்பு உள்ளது ஏன்? என அறியமுடியவில்லை. மகாமண்டப வாயிலின் வலதுபுறம் ஒரு சிறிய சன்னதியில் விநாயகர் உள்ளார்.
இறைவன்-காளகத்தீசுவரர், காளம் எனும் நாகமும் அத்தி எனப்படும் பெண்யானையும் வழிபட தலம் எனப்படுகிறது.
இறைவி – ஞானாம்பிகை; முருகன் சிக்கலில் சூரசம்காரம் செய்த பின்னர் ஞானஅருள் வழங்கி ஆசீர்வதித்த இடமாக சொல்லப்படுகிறது.
இறைவன் கருவறையில் பெரிய லிங்க மூர்த்தியாக உள்ளார், அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், அவரின் நேர் எதிரில் தென்புற வாயில் ஒன்றும் உள்ளது. இறைவன் சன்னதி இடதுபுறம் தியாகராஜர் சன்னதி அமைந்துள்ளது. கருவறை முற்றிலும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டு உள்ளது இந்த கருவறையின் நேர் பின்புறம் பெரிய வில்வமரம் காய் பிடித்து நிற்கிறது. முகப்பு மண்டபம் அர்த்த மண்டபங்கள் அனைத்தும் கருங்கல் பணியாக அமைந்துள்ளது. கருவறை விமானத்தில் நாற்பதுக்கும் அதிகமான அழகிய சுதைகள் வடிக்கப்பட்டுள்ளன.
கருவறை கோஷ்டங்களில் தென்புறம் மட்டும் தக்ஷணமூர்த்தி உள்ளார். மேற்கு வடக்கில் உள்ள இரு கோஷ்டங்களும் காலியாக உள்ளன.
மேற்கில் நீண்ட திருமாளிகைப்பத்தி உள்ளது இதில் முதல் சன்னதியில் ஐயனார் உள்ளார் அடுத்த சன்னதியில் மூன்று விநாயகர்கள் ஒரே மேடையில் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளனர். அடுத்து விஸ்வநாதர் சன்னதி அதற்கடுத்தாற்போல் வள்ளி தெய்வானை சமேத முருகன் அடுத்து மகாலட்சுமி அடுத்து விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் சன்னதியும் உள்ளது. சண்டேசர் வழமையான பகுதியில் உள்ளார். வடகிழக்கில் நவகிரகங்கள், பைரவர் சூரியன் உள்ளார். தலம் மூர்த்தி என பெரும்சிறப்புடன் விளங்கும் கண்ணங்குடி செல்வோம் வாரீர்.
நன்றி கடம்பூர் விஜய்
Comments
Post a Comment