Temple info -3760

 Temple info -3760

கோயில் தகவல் -3760


Sri Chandrasudeswarar Temple, Kovilanchery








Moolavar: Sri Chandrasudeswarar
Amman: Sri Vadivambigai
Place: Kovilanchery, Medavakkam, Chennai

A good 1000 year old Sivalingam has been found here in a well and later a temple has been built around it . In earlier days it’s said that this temple was spanned in an area of 7 acres. Now there is not even a proper approach road to this temple which is really a sad state of affair.

There is a unique stone Natarajar here along with Sivakami Ambal. Also you have an old murthy of Karaikal Amayar and few Nayanmargal

Devi Vadivanbal is facing south. Separate Sannidhi for Navagraham, Anjaneyar, Byiravar.

You also have all ghosta murthies as found in any shiva temple.

This temple really needs more support and contributions for care taking. 


Contact: A devotee named Gunasekara is taking care of this temple and can be reached on 9796905273

Location:
Sri Chandrasudeswarar Temple, Kovilanchery

சென்னை கோவிலாஞ்சேரி சந்திரசூடேஸ்வரர் சிவன்கோயில். 
Kovilancheri sivan temple 

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டத்தில் அமைந்துள்ள அமைதியான ஒரு கிராமம் இன்று  சென்னை பெருநகரத்தின் வளர்ந்து வரும் குடியிருப்புப் பகுதியாகும். சித்தாலப்பாக்கம் ஏரியின் தென்புறமும் மதுரபாக்கம் காப்புக்காடுகளை ஒட்டிய பகுதி. மேடவாக்கம் மாம்பாக்கம் பிரதான சாலையை ஒட்டியே அமைந்துள்ளது சிவன் கோயில். 

கிழக்கு நோக்கிய சிவாலயம் எளிமையான சிமென்ட் ஆர்ச் கொண்டு நுழைவாயில் உள்ளது. 2004ல் சிதைவடைந்து இருந்த இக்கோயிலை புனரமைப்பு செய்து அதே ஆண்டு குடமுழுக்கும் செய்துள்ளனர். 

இறைவன்-சந்திரசூடேஸ்வரர்  இறைவி-வடிவாம்பிகை

பழமையான திருக்கோயில் சிதைவடைந்த பின்னர்  எளிமையாக செங்கல் கொண்டு கட்டப்பட்ட திருக்கோயில், இறைவன் கிழக்கும் இறைவி தெற்கும் நோக்கி கருவறை கொண்டு அருள் பாலிக்கின்றனர். இரு கருவறைகளையும் ஒரு முகப்பு மண்டபம் இணைக்கிறது. இறைவனின் நேர் எதிரில் மண்டபத்தின் வெளியில் நந்தி உள்ளார் அவரின் பின்புறம் உயர்ந்த கொடிமரம் பலிபீடம் உள்ளது. 

தென்மேற்கில் வீர ஆஞ்சநேயர் ஒரு சிற்றாலயத்தில் உள்ளார். அருகில் ராஜகணபதி ஒரு சிற்றாலயத்தில் உள்ளார். சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். வடக்கில் ஒரு பெரிய மரத்தின் அடியில் நாகர்கள் உள்ளனர் வடகிழக்கில் நவகிரகங்கள் மற்றும் பைரவர் சிற்றாலயம் அமைந்துள்ளது. 





நன்றி கடம்பூர் விஜய் 


Comments