Temple info -1823. 1008 Lingam temple, Ariyanoor,Salem. 1008 லிங்கம் கோயில், அறியனூர்,சேலம்
Temple info -1823
கோயில் தகவல் -1823
1008 Lingam Temple, Ariyanoor, Salem
1008 Lingam Temple is another popular temple located in Salem. This temple is located in Ariyanoor and is under the control of a private department of the Vinayaga Mission. The main feature of this temple is the presence of 1008 Shiva Lingams, with Nandi in the ‘moolasthanam’.
Shrines of Palani Murugan, Swamimalai Murugan, Thiruchendur Murugan, Pazhamuthircholai Murugan, Tiruthani Murugan, Thiruparamkundram Murugan, Raja Rajeswari, Anjaneya, Mahalakshmi, Venkatesa Perumal can also be found amidst the Lingams.
There is a shrine dedicated to Arunachala Sundareswarar along with his consort Umayambigai at the top of the hillock. Lingam is huge and is about 18 feet high.
The main temple is surrounded by 107 lingams and the main linga is the 108th one amidst all these at the main temple, it is a huge linga. There are 1008 Shiva Lingams present in the temple with the holy cow Nandi in front of them all over the hill on which the temple has been built.
There is an enormous Ganesha statue at the foothill too. The Temple is on the By - Pass. Hence, this temple is easily accessible to devotees.
Thanks
Ilamurugan's blog
*சேலம் அரியானூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற 1008 சிவலிங்கம் கோவில்*
அரியனூரில் உள்ள ஆயிரத்தெட்டு லிங்கம் கோயில், சேலத்தின் புகழ்பெற்ற கோயில்களுள் ஒன்றாகும். விநாயகா அறக்கட்டளையின் ஒரு துறையின் கீழ், இது செயல்பட்டு வருகின்றது.
இது அமையப்பெற்றுள்ள குன்றில், ஆயிரத்தெட்டு லிங்கங்கள் விரவிக் கிடப்பதையும், முன் பகுதியில் புனிதப் பசுவான நந்தியின் சிலையையும் காணலாம். கோயிலின் அடிவாரத்தில் பிரம்மாண்டமான கணேசர் சிலை உள்ளது. இது அமைந்துள்ள இடம் கண்கவர் காட்சிகள் சூழ்ந்து அமைதியாகவும் ரம்மியமாகவும் விளங்குகிறது. இக்கோயிலின் மூலக்கடவுளான ஸ்ரீ உமையாம்பிகை சமேத ஸ்ரீ அருணாச்சல சுந்தரேஸ்வரரின் திருவுருவச்சிலை, இம்மலைக் குன்றின் மேல் நிறுவப்பட்டுள்ளது. இச்சிலையை காண்பதற்காகவே, மலையேற்றத்தையும் பொருட்படுத்தாது ஏறிப் போய் தரிசித்து வரலாம்.
ஆகம விதிப்படி கட்டப்பட்ட ஆயிரக் கணக்கான கோயில் நிறைந்திருந்தாலும், பல்வேறு காரணங்களை உத்தேசித்து, நவீன பாணியில் புதிதாக கோயில்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இப்பாணியில், தமிழகத்திலும் கூட பல நவீன கோயில்கள் கட்டப் பட்டுள்ளன. அத்தகைய கோயில்களில் ஒன்று, சேலத்தில் உள்ள 1008 சிவலிங்கம் கோயில். சேலம் வினாயகா மிஷன் நிறுவனத்தால், அவர்களது நிறுவனத்தின் அருகிலேயே, ஒரு சிறிய குன்றின்மேல், சேலம்-சங்ககிரி சாலையில் அமைக்கப் பட்டுள்ளது, இந்தச் சிவலிங்கங்கள்.
1008 என்றால், நிஜமாகவே 1008! ஆவுடையோடு கூடிய சிவலிங்கங்கள்! எதிரே ஒரே மாதிரியான அளவில் 1008 நந்திகள். 1008 மண்டபங்கள். மலையின் அடிவாரத்தில் ஆரம்பித்து உச்சியில் முடியும் பொழுது 1008 வந்து விடுகிறது. அடிவாரம் முதல் உச்சி வரை, சிவலிங்கங்களை தரிசித்தபடியே வாகனத்திலேயே பயணிக்கலாம்தான். இருந்தாலும், நேரம் இருந்தால், சிவனின் ஆயிரம் நாமாக்களை உச்சரித்தவண்ணம், ஒவ்வொரு சிவலிங்கத்தினையும் தரிசித்த வண்ணம் மேலே செல்லலாம்.
பின்னனியில் பச்சைப் பசேல் என்ற மலைகளும், சரிவுகளும் அழகும் அமைதியும் தரவல்லன. 1008 லிங்கங்கள் மட்டுமல்ல; ஐயப்பன் சன்னிதி, அறுபடைவீடுகளின் பிரதிகளாக மூர்த்தங்கள் (சிற்பங்கள்), ஆஞ்சனேயர், ராமர் பட்டாபிஷேக சிற்பங்கள், ராஜ ராஜேஸ்வரி, மஹாலக்ஷ்மி, பெருமாள் என கண்ணைக் கவரும் கோயில்கள் யாவும் வெகு சுத்தமாக, அற்புதமாக அமைத்தது மட்டுமல்லாமல், அதை அப்படியே நிர்வகித்தும் வருகிறார்கள். 1008 லிங்கங்களையும், பிரம்மாண்டமான மற்ற கோயில்களையும் பராமரிப்பது சாமாண்ய காரியமா என்ன? அதுவும் மலைச் சரிவில்! எல்லாவற்றிகும் உச்சமாக, உமையாம்பிகை சமேத, அருணாசல சுந்தரேஸ்வர் மூர்த்தமும் அழகும் பிரமிக்க வைக்கும் பேரழகு. இந்த சிவலிங்கம் பதினேழு அடி உயரம். இந்த கோயில், உங்களை நிச்சயம் மலைக்கவைக்கும்
நன்றி சுப்ரமணியம் வைகுண்டம்
Comments
Post a Comment