Temple info -1815 Thirukaliswarar Temple, Ozhugur, Walajapet. திரிகாலிஸ்வரர் கோயில், ஒழுகுர், வாலாஜாபேட்டை
Temple info -1815
கோயில் தகவல் -1815
Thirukalishwarar Temple
Address
Thalangai Rd, Ozhugur, Tamil Nadu
It is a ancient temple, thirukalleswar facing east, temple entrence is south. It's located in the village called, ozhugur, which is a village 7 KMS away from. Walajapet town. This Shiva temple is ancient, the sanctum sanctrum is built in the shape of but of an elephant, it's called gajap prushtam in Sanskrit.
The moolavar avvudayar and linga are stone carved and heavily built.
The deity goddes is known as thripurasundari ambal.
This temple is surrounded by varatharajap perumal, maati Amman and murugan temples.
Bus connectivity from Walajapet is very frequent, the bus goes up to Thalangai railway station from Arcot / Vellore/ arani towns
Thirupura Sundari Sametha Thirukaleeswarar" built by King Raja Raja Chozan and the sanctum sanatorium is in the shape of elephant backside which is very rare. Further the AVADAIYAR of Lord Siva is in Square shape and normally it will be in the circle shape in all most all the temples. Annai Thirupurasundari is facing southern side and the temple is on the southern side of the entrance to the village
தீவினைகளை அகற்றும் திரிகாலேஸ் வரர் கோவில்
மூன்று காலத்துக்கும் அதிபதியாக இருக்கும் காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிகாலேஸ் வரர்’ என்று அழைக்கப் படுகிறார். மூலவரான சிவபெருமான், லிங்க உருவில் கிழக்கு நோக்கி வீற்றிருக் கிறார்.
ராணிப் பேட்டை மாவட்டத்தில் இருக்கிறது, வாலாஜா. இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந் திருக்கிறது ஒழுகூர். இங்கு முன்வினை போக்கும் வல்லமை கொண்ட திரிகாலேஸ் வரர், கோவில் கொண் டுள்ளார்.
இந்தக் கோவில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர் களாலும், தொண்டை மான் அரசர்களாலும் திருப்பணி செய்யப் பட்டதாக தெரிகிறது. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழனிடம் படைத் தளபதியாக இருந்தவன், பார்த்தவேந்திராதிவர்மன். இவன் வீரபாண்டியன் என்ற அரசனுடன் போரிட்டு அவன் தலையைக் கொய்த காரணத்தால், ‘வீரபாண்டி யனின் தலை கொய்த பரகேசரி வர்மன்’ என்ற பட்டத்தைப் பெற்றவன். பின்னர் இவன், சோழ அரசனால் தொண்டை நாட்டை தனியாக ஆளும் அனுமதியைப் பெற்றான். இவனும் இந்தக் கோவிலுக்கு திருப் பணியைச் செய் திருக்கிறான்.
வேலூருக்கு அருகில் உள்ள சேண் பாக்கத்தில் கோவில் கொண்டுள்ள ஏகாதச கணபதியைப் போல, ஒழுகூரிலும் மூன்று பிள்ளை யார்கள் சுயம்புவாக இருப்பது விசேஷமானதாக பார்க்கப் படுகிறது. இந்த மூன்று கணபதியும் ‘மாகம் பிள்ளையார்’ என்று அழைக்கப் படுகின்றனர். மகாராஜன் என்னும் பார்த்தவேந்திராதிவர்மன் வழிபட்டதால், ‘மகாராஜப் பிள்ளையார்’ என்று பெயர்பெற்று, பின்னாளில் அதுவே மருவி ‘மாகம் பிள்ளையார்’ என்றானதாக தெரிகிறது.
இந்தக் கோவில் கஜபிருஷ்ட விமானத் துடன் அமைந் திருக்கிறது. ‘கஜபிருஷ்டம்’ என்றால், தமிழில் ‘தூங்கானை மாடம்’ என்று பொருள். தூங்கும் யானையின் பின்புறம் போல் இந்த விமானம் அமைந் திருக்கும்.
‘திரிகாலம்’ என்பது இரண்டு வகையாக குறிப்பிடப் படுகிறது. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய மூன்றையும் ‘திரிகாலம்’ என்பது ஒரு வகை. அதே போல் காலை, மாலை, இரவு ஆகிய மூன்றையும் கூட ‘திரிகாலம்’ என்றே சொல்வார்கள். இப்படி மூன்று காலத்துக்கும் அதிபதியாக இருக்கும் காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிகாலேஸ் வரர்’ என்று அழைக்கப் படுகிறார். மூலவரான சிவபெருமான், லிங்க உருவில் கிழக்கு நோக்கி வீற்றிருக் கிறார். சுயம்பு வடிவத்துடன் பெரிய பாணம் கொண்டு, சதுர வடிவ ஆவுடையாரில் இந்த லிங்கம் அருள்கிறது.
திரிபுரசுந்தரி என்ற பெயருடன் அம்பாள் அருள்கிறாள். அம்பிகை தெற்கு நோக்கி வீற்றிருக் கிறாள். நான்கு திருக்கரங் களுடன் நான்கடி உயரத்தில் காணப்படும் இந்த அம்பிகையின் முகம் வசீகர தோற்றத்தில் உள்ளது. அம்பிகை சன்னிதி வாசல் உயரம் சற்றே குறைவாக உள்ளது. எனவே முதுகை வளைத்து தான் உள்ளே நுழைய வேண்டும். இந்த சன்னிதி பிற்காலத்தில்தான் ஏற்படுத்தப் பட்டு, உட்கோவிலாக இணைக்கப் பட்டதாக தெரிகிறது.
கோவில் வெளிச் சுற்றில் சப்த மாதர்களின் திருமேனிகள் காணப் படுகின்றன. பழமையான உற்சவ மூர்த்திகள், கோஷ்ட மூர்த்திகள் கிடைக்கப் பெறாததால், புதியதாக செய்யப்பட்டு வழிபாட்டில் வைக்கப் பட்டுள்ளன. இங்கு பாறையில் செதுக்கப் பட்ட அழகான விநாயகர் ஒன்று காணப் படுகிறது. இந்த பிள்ளையார், பிள்ளையார் பட்டி விநாயகரைப் போல காட்சியளிக் கிறார். இந்தக் கோவில் ராஜகோபுரம் 2 நிலைகளுடன் காணப் படுகிறது.
Comments
Post a Comment