Temple info -3757. Amirdha Narayana Perumal temple,Thirukkadaiyur. அமிர்தநாராயண பெருமாள் கோயில்,திருக்கடையூர்
Temple info -3757
கோயில் தல-3757
Amirdha Narayana Perumal Temple
Swamy : Amirdha Narayana Perumal.
Ambal : Amirdha Valli Thayar.
Special Feature : Ramanujar offered worship here. The popular belief is that the full benefit of worshipping Abirami Samedha Amirdagadeswar reaces a person only offer he has offered worship to Amirdha Narayana Perumal. This shrine is also considered a place for offering atonement for Ragu-Kedhu doshas.
Temple History : Devas and Asuras churned Thirupparkadal and obtained the Nector. Vishnu deceived asuras and placed it in a Kalasa. When the Kalasa was opened again, the Nectar (Amirdham) was in the form of Sivalingam. Vishnu understood that this was due to the absence of the grace of Parvathy. He removed the ornaments on his bosom and worhsipped them considering them Parvathy. Ambal appeared then with the name of Abirami and offered Her grace for obtaining Amirdham. Vishnu shared the Amirdha among the Devas. An asura joined the Devas in the disguise of a Deva and drank the amirdham. He attained immortality and the strength of Devas. Vishnu cut him into two. He did not lose his life as he was immortal. The cut pieces of his body became Ragu and Kedhu and joined the Navagraha Mandala. Vishnu, who is responsible for the appearance of Abirami Ammai and also for getting Amirdham for Devas, is gracing as Amirdha Narayana Perumal at Thirukkadaiyur along with Sri Devi and Bhoo Devi. That the expectant women are blessed with good husbands if they offer worship to Amirdhavalli Thayar is a popular belief.
Temple Timings : 6.00 am to 8.30 am - 4.30 pm to 7.00 pm
Nearest Town : Mayiladuthurai.
Address : Sri Amirdha Narayana Perumal Temple,
Thirukkadaiyur (Po.),
Nagappattinam(Dt).
அமிர்த நாராயண பெருமாள் கோயில்,திருக்கடையூர்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அபிராமி கோவிலுக்கு அருகில் அமிர்த நாராயண பெருமாள் இங்கு கோவில் கொண்டிருக்கிறார். 60 80ம் கல்யாணத்தன்று இவரை தரிசிப்பது சிறப்பு. இங்கு வழிபட்டால் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உண்டாகும் என்பது ஐதீகம்.
தல வரலாறு
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அமிர்தம் கிடைக்கப்பெற்றனர். அசுர்ர்களை ஏமாற்றிய விஷ்ணு அதிய ஒரு கலசத்தில் வைத்தார் அந்தக் கலசத்தை திறந்தபோது அமிர்தம் சிவலிங்கமாக மாறியிருந்தது. பார்வதி தேவியின் அருள் இல்லாத்தால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார் தனது மார்பில் அணிந்திருந்த ஆபரணங்களை கழற்றி அவற்றைப் பார்வதி தேவியாக கருதி பூஜித்தார். அப்போது அம்பாள் அபிராமி என்ற நாமத்துடன் அங்கு தோன்றி சகோதர்ர் விஷ்ணுவுக்கு அமிர்தம் கிடைக்க அருள்புரிந்தாள். அமிர்தத்தை தேவர்களுக்கு விஷ்ணு பங்கிட்டு கொடுத்தார். இதனை அறிந்த சுவர்பானு என்னும் அசுரன் தேவரைப்போல வடிவம் தாங்கி அமிர்தத்தை பருகினான். அசுரனின் தலையை துண்டித்தார் விஷ்ணு. அமிர்தம் பருகியதால் சாகாவரம் பெற்ற அசுரனின் உயிர் நீங்கவில்லை. ஆனால் அசுரனது துண்டான உடல்கள் ராகு கேது என்ற பெயர் பெற்று நவக்கிரக மண்டலத்தில் இணைந்தன. அபிராமி அன்னை தோற்றத்திர்கும் தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்கவும் காரணமான விஷ்ணுவுக்கு திருக்கடையூரில் பிற்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. அமிர்தம் வழங்கிய இவருக்கு அமிர்த நாராயண பெருமாள் என்று பெயர் சூட்டப்பட்டது.
கருவறையில் அமிர்த நாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுடன் காட்சியளிக்கிறார். இவரை தரிசித்தால் ஒரே நேரத்தில் 108 திவ்ய தேசங்களையும் தரிசித்த பலன் உண்டாகும் என்பது ஐதீகம். அமிர்தவல்லி தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிராள். மணமாகாத பெண்கள் தாயாரை வேண்டினால் சிறந்த மணவாழ்வு உண்டாகும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறிய பின் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து நெய்விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். இங்குள்ள பால ஆஞ்சனேயர் சன்னதி விசேஷமானது. கல் திருப்பணி இல்லாமல் கோவில் முழுவதும் சுட்ட செங்கற்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கடையூரில் மட்டுமின்றி அவரவர் ஊர்களில் சஷ்டியப்த பூர்த்தி எனப்படும் 60ம் கல்யாணம் சதாபிஷேகம் என்னும் 80ம் கல்யாணம் நடத்துபவர்கள் திருக்கடையூர் அபிராமியையும் அமிர்தகடேஸ்வரரையும் தரிசிப்பது வழக்கம். இவர்கள் அமிர்த நாராயணபெருமாளை வழிபட்டால்தான் கல்யாண சடங்கு முழுமை பெற்றதாக ஐதீகம்.
சர்ப்ப தோஷம் எனப்படும் ராகு கேது தோஷத்துக்குரிய பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. இந்த கிரகங்கள் தனி சன்னதியில் வீற்றிருக்கின்றனர். வைகுண்ட ஏகாதசி புரட்டாசி சனிக்கிழமை நவராத்திரி திருக்கார்த்திகை அனுமன் ஜெயந்தி ஸ்ரீராம நவமி ஆகிய விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. இந்தக் கோவில் பெருமளவு சிதிலமடைந்து கிடக்கிறது. சில முறை திருப்பணி துவங்கியும் தடைப்பட்டு விட்டது. அறுபதாம் கல்யாணம் சதாபிஷேகம் நடந்த இங்கு எத்தனையோ பேர் இங்க் வருகின்றனர். எல்லோரும் இணைந்து திருப்பணியை முடித்து கோவிலை புதுப்பித்தால் பெரும் புண்ணியம் கிடைக்கும்..
இருப்பிடம்
மயிலாடுதுறையிலிருந்து 20 கிமீ தூரத்தில் திருக்கடையூர் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிமீ தூரத்தில் கோவில்



Comments
Post a Comment