Temple info -3750. Siva Subramanyaswamy temple, Kumarakuppam,Vizuppuram. சிவசுப்ரமண்யஸ்வாமி கோயில்,குமரக்குப்பம்,விழுப்புரம்
Temple info -3750
கோயில் தகவல்-3750
About the Holy Shrine of Lord Kanda...
Arulmigu
Sri Sivasubramanya Swamy Temple, accompanied by Sri Valli and Sri Deivanai,
Located in the hamlet known as Kumarapuri (Kumarakuppam),
Valavanur Taluk,
Villupuram District.
Here are just a few highlights regarding this holy shrine, which is endowed with many unique distinctions:
Within the sanctum sanctorum of this temple—which has recently undergone magnificent renovation works—
Lord Murugan, the "Master who rules over me,"
Graciously appears in a divine vision
Seated upon His peacock mount,
As the Six-Faced Lord (Arumugan),
Bearing the sacred name "Sri Sivasubramanyar,"
And accompanied by His divine consorts.
(Since the peacock is positioned such that it gazes directly at Goddess Deivanai,
It is affectionately referred to as the "Devamayil" — the Divine Peacock.)
Among the many ancient temples dedicated to Lord Murugan situated in the "Nadu Nadu" (Central Region) of Tamil Nadu,
Following the renowned and magnificent Mayilam Velavan Temple,
The next most distinguished shrine
Is this very Valavanur
Kumarapuri Sivasubramanya Swamy Temple.
In ancient times, there existed a town in southern Tamil Nadu known as Panchalam. The people residing there—regardless of caste or religious distinctions—worshipped with wholehearted devotion the Lord Murugan who was enshrined in their town. However, at one point, a severe famine struck the region, causing immense suffering and torment to the people. Consequently, a situation arose where they were compelled to vacate their town and migrate elsewhere in search of sustenance and survival.
Nevertheless, they could not bring themselves to leave behind the Lord Murugan whom they had worshipped so dearly. Therefore, taking the presiding deity—Lord Murugan—along with them, they embarked on a journey northward toward Northern Tamil Nadu. Traversing through forests and mountains, they continued their journey, often wandering without a clear sense of direction.
In the course of their travels, one night they halted and stayed overnight in a certain village. The following morning, as was their routine, they prepared to resume their journey by lifting the idol of Lord Murugan. However, to their astonishment, they found themselves utterly unable to lift the idol. The idol became rooted to the spot, impossible to move even in the slightest. As they pondered the reason behind this, they observed that the surrounding area was rich in water resources and presented a lush, verdant landscape. Consequently, concluding that Lord Murugan had chosen this very spot as the place where they should reside, they settled there permanently.
When news of this reached the ears of Raja Desingu—who ruled the region with Gingee as his capital—he issued a royal decree. Through the local chieftain governing Naraiyur, he bestowed land and housing plots as *Maanyams* (royal grants) upon the people who had settled there, thereby honoring the devotees of Lord Murugan. To commemorate this event, a shrine dedicated to "Maanya Vinayagar" (the Grant-bestowing Vinayagar) stands to this day in front of the temple. (It is worth noting here that a *Maanyam* refers to a royal endowment or grant bestowed by the state.)
From that time onward, as the area came to be regarded as Lord Kumaran's chosen abode, it was named "Kumarapuri." The devotees erected a small temple for Lord Murugan there and began to worship him. Subsequently, as the region flourished and became a land of great prosperity, people from various other towns and villages migrated to Kumarapuri and settled there.
Researchers estimate that this idol dates back to the 12th century CE.
Regarding the presiding deity of this shrine—Lord Murugan—the renowned poet Vannacharam Dandapani Swamigal composed the *Kandha Nayaga Maalai* in praise of "Kumarapuri Subramaniya Swamy." Furthermore, other literary works authored by the Swamigal—such as *Shanmuga Thiruppugazh* and *Murugakkadavul Mummanikkovai*—also extol the glory of the Murugan enshrined at this sacred site.
"For those who contemplate, with a focused mind, upon the thirty-six verses of this exquisite Tamil poetic garland—offered to Lord Kandhan of Kumarapuri, a town resplendent with lush, blossoming groves—there awaits an experience akin to partaking of divine nectar, emerging from an ocean of boundless, eternal bliss."
At this sacred shrine—where all festivals cherished by our Lord Kandhan are celebrated with great fervor—the annual *Kandha Sashti* festival stands out as a grand celebration of immense local renown. The divine beauty of the processional deities (Utsavar) as a couple is captivating.
A unique spiritual feature of this sacred site is the special Tuesday worship offered to this divine couple—a ritual performed to mitigate the adverse effects of *Sevvai Dosham* (Mars affliction), to remove obstacles to marriage, and to be blessed with virtuous progeny.
As both Kumarakuppam and Valavanur shine as lands of profound spirituality, a remarkable array of temples is concentrated within this region. In Kumarakuppam, one finds the Vinayagar Temple; the *Karaiyerivitta Padaleeswarar* Temple (accompanied by Goddess Periyanayaki), which uniquely harmonizes both Shaivite and Vaishnavite traditions; the *Kalivaradaraja Perumal* Temple (accompanied by Goddess Perundevi Thayar); the Angala Parameswari Temple; the Mariamman Temple; and the Draupadi Amman Temple. Similarly, in Valavanur, the *Jagannatheeswarar* Temple (accompanied by Goddess Abirami Amman) and the *Lakshminarayana Perumal* Temple are situated in close proximity.
Furthermore, the region is home to several spiritual centers: the Shanmuga Swami Mutt located at the *Chatram* (rest house); the Swaroopananda Swami Mutt; the Muthaiya Desika Swami Mutt (also known as the *Vanni Mutt*), situated near the Mariamman Temple; and the Nataraja Swami Mutt, located near the Nataraja Temple on the Puducherry road. Thus, Kumarakuppam stands as a spiritual hub, with the temples dedicated to Lord Shiva and Lord Murugan serving as its central focal points. Historical records indicate that among these four spiritual masters, Muthaiya Desikar was a devotee of Lord Murugan, while the others were devotees of Lord Shiva. The *Jeeva Samadhis* (sacred resting places) of all four of these Siddhas can still be visited and revered today. The fact that four such Siddhas have chosen to reside within a single town underscores the unique spiritual significance and distinctiveness of this sacred place.
கந்த பெருமானின் திருத்தலத்தை பற்றி....
அருள்மிகு
ஶ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,
குமாரபுரி (குமாரகுப்பம்) எனும் சிற்றூர்,
வளவனூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.
சிறப்புக்கள் பல பெற்ற இத்திருத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்;
சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இத்திருக்கோயிலின் கருவறையில்,
"எனை ஆளும் ஆண்டவன்" எம்பெருமான் முருகன்,
தேவியர் சமேதராக
ஸ்ரீ சிவசுப்பிரமணியர்
எனும் திருப்பெயருடன்,
மயில் மீது அமர்ந்த
ஆறுமுக ஆண்டவனாக
அருட் காட்சியளிக்கிறார்.
(மயில், தெய்வானையை பார்த்தவண்ணம் இருப்பதால்,
'தேவமயில்' என அழைக்கப்படுகிறது)
நடு நாட்டில் அமைந்துள்ள பல பழமையான முருகனாலயங்களில்,
சிறப்புமிகு
மயிலம் வேலவன் கோவிலுக்கு அடுத்தபடியாக
சிறப்பு பெறுவது,
இந்த வளவனூர்
குமாரபுரி சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகும்.
பழங்காலத்தில் தென்தமிழகத்தில் பாஞ்சாலம் என்ற ஊர் இருந்தது. அதில் வாழ்ந்த மக்கள் அனைவரும் ஜாதி மத பாகுபாடின்றி அவ்வூரில் கோயில் கொண்ட முருகப்பெருமானை மனமுவந்து வழிபட்டு வந்தனர். ஆனால், ஒரு சமயம் அப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்தது. அதனால் பஞ்சம் பிழைக்க ஊரைக் காலி செய்துவிட்டு வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.
என்றாலும், தாங்கள் வழிபட்ட முருகப் பெருமானை அங்கேயே விட்டுவிட்டுச் செல்ல அவர்களுக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால், மூலவர் முருகப்பெருமானைத் தங்களுடன் எடுத்துக் கொண்டு, வடக்குத் தமிழகம் நோக்கிப் பயணம் செய்தனர். காடுமலைகளைக் கடந்து திக்கு திசை தெரியாமல் பயணித்துக் கொண்டே இருந்தனர்.
அதன்படியே ஒரு நாள் தங்கள் பயணத்தில் தொடர்ச்சியாக ஒரு நாள் இரவு ஒரு ஊரில் தங்கினர். மறுநாள் காலையில் வழக்கம் போல முருகப்பெருமான் சிலையைத் தூக்கிக் கொண்டு புறப்படத் தயாராகினர். ஆனால், அச்சிலையை அவர்களால் தூக்க முடியவில்லை. சிறிதளவு கூட அசைக்க முடியாமல் அச்சிலை அங்கேயே நிலைத்து விட்டது. இதற்குக் காரணம் என்ன என்று யோசித்துப் பார்த்த போது, அப்பகுதி நீர் வளம் நிறைந்து பசுமை வெளியாகக் காட்சி தந்தது. எனவே, இதுவே நாம் வசிக்க வேண்டிய இடம் என முருகப்பெருமான் தீர்மானித்துள்ளார் என முடிவு செய்து அந்தப் பகுதியிலேயே நிரந்தரமாகத் தங்கினர்.
இச்செய்தி அப்பகுதியில் செஞ்சியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இராஜாதேசிங்குவின் கவனத்திற்கு வரவே, அவன் ஆணைப்படி, நரையூரை ஆண்ட குறுநில மன்னன் மூலம் அங்கு குடியேறிய மக்களுக்கு நிலமும், வீட்டு மனைகளும் மான்யமாகத் தந்து, முருகன் அடியார்களை கௌரவித்தான். இதன் நிகழ்வைப் போற்றும் வகையில் ஆலயத்தின் முன்பு இன்றும் மான்ய விநாயகர் எழுந்துள்ளார். (மான்யம் என்பது அரசால் வழங்கப்படும் இனாம் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது. )
அதுமுதல் அப்பகுதி குமரனின் விருப்ப இடமாக விளங்கியதால், குமாரபுரி என்று பெயர் வைத்து முருகப்பெருமானுக்குச் சிறிய ஆலயம் எழுப்பி வழிபடலாயினர். அதன்பின் இப்பகுதி வளம் கொழித்த பகுதியாகத் திகழ்ந்ததால் பல்வேறு ஊர்களில் இருந்தும் குமாரபுரிக்கு வந்து குடியேறினர்.
இச்சிலை கி.பி. 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இத்தலத்து முருகனை வண்ணச்சரம் தண்டபாணி சுவாமிகள் குமாரபுரி சுப்பிரமணிய சுவாமி மீது கந்த நாயக மாலை பாடியுள்ளார். இது தவிர சுவாமிகள் இயற்றிய சண்முகத் திருப்புகழ், முருகக் கடவுள் மும்மணிக் கோவை ஆகிய நூல்களும் இத்தலத்து முருகனின் புகழ் பாடுகின்றன.
கொந்தலர் சோலை மலியத் திகழும் குமாரபுரிக்
கந்தனுக்குச் சொன்ன செந்தமிழ் மாலைக் கவிதையென
வந்தவை முப்பதிற் றாறும் கருது மனத்தினருக்கு
அந்தமி லானந்த வாரியிற் றேறியும் அமுதெய்துமே.
நம் கந்தனுக்கு உகந்த அனைத்து விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில்
நடைபெறும்
கந்தசஷ்டி விழா,
தல பிரசித்தி பெற்ற
பெரும் விழா காலமாகும்.
உற்சவர் தம்பதியர் அழகு,
செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறைந்திடவும்,
திருமணத்தடை நீங்கவும்,
நல்மகப்பேறு கிடைக்கப்பெறவும்
இத்தெய்வ தம்பதியருக்கு நடைபெறும்
செவ்வாய் வழிபாடு
தல விசேஷம்).
குமாரகுப்பமும், வளவனூரும் ஆன்மிகப் பூமியாகத் திகழ்வதால் குமாரக் குப்பத்தில் விநாயகர் ஆலயம், சைவம் -வைணவம் இணைந்த பெரிய நாயகி உடனாய கரையேறிவிட்ட பாடலீசுவரர் திருக்கோயில், பெருந்தேவித் தாயார் உடனாய கலிவரதராஜப் பெருமாள் திருக்கோயில், அங்காள பரமேஸ்வரி ஆலயம், மாரியம்மன் ஆலயம், திரௌபதியம்மன் ஆலயம் அமைந்துள்ள வளவனூரில் அபிராமி அம்மன் உடனாய ஜெகந்நாதீசுவரர் திருக்கோயில், லக்ஷ்மிநாராயணப் பெருமாள் திருக்கோயில் என அனைத்தும் ஒருங்கே அமைந்துள்ளன.
இது தவிர, சத்திரத்தில் சண்முக சுவாமி மடம், சொரூபானந்த சுவாமி மடம், மாரியம்மன் கோயில் அருகில் முத்தைய தேசிக சுவாமிகள் மடம், (வன்னி மடம்), புதுச்சேரி சாலையில் நடராஜர் கோயில் நடராஜர் சுவாமி மடம் என, குமாரக்குப்பம், சிவன் மற்றும் முருகன் ஆலயங்களை நடுநாயகமாகக் கொண்டு விளங்குகின்றன. இதில் முத்தையதேசிகர் முருகனை வழிபாடு செய்தவர். மற்றவர்கள் சிவனை வழிபட்டவர்கள் என வரலாறு கூறுகிறது. இந்த நால்வரின் ஜீவ சமாதிகளையும் இன்றும் தரிசிக்கலாம். ஒரே ஊரில் நான்கு சித்தர்கள் குடிகொண்டுள்ளது இவ்வூரின் தனிச்சிறப்பை விளக்குகிறது.
நன்றி செந்தில்குமார் ஆதித்யன்
ஓம் ஸ்ரீ குமராபுரி
சிவசுப்பிரமணியருக்கு,
அரோகரா!
Comments
Post a Comment