Temple info -3512Puthupathur Punnaivananathar temple, Thiruvarur. புதுப்பத்தூர் புன்னைவன நாதர் கோயில்,திருவாரூர்
Temple info -3512
கோயில் தகவல்-3512
Puthupathur Punnaivananathar Temple, Tiruvarur Taluk, Tiruvarur District
A Chola King, desiring to establish a major city to the southeast of Tiruvarur, was traveling through the region when he decided to rest with his troops in a grove of Punna trees (Alexandrian Laurel) along the way. As the King drifted into a slumber in the shade of the trees, the Divine Lord appeared to him in a dream and instructed him: "Establish a small town within this Punna grove, and build a temple for every street."
Acting upon this divine command, the forest area—which was dense with Punna trees—was cleared and developed; subsequently, Shiva temples were erected on every street. According to local legend, this newly constructed settlement—featuring ten temples across ten streets—came to be known as "Puthupathur."
Puthupathur is situated approximately 8 kilometers from Tiruvarur, along the Anandakudi road. It is customary in this region to refer to paddy fields as "Pathu." Since this settlement was intrinsically linked to these agricultural fields, it acquired the name "Pathur." As it was a newly established settlement, it eventually evolved into the name "Puthupathur" (New Pathur).
This town houses two Shiva temples: the Punnaivananathar Temple and the Thirumeninathar Temple. Let us first explore the Punnaivananathar Temple.
The Presiding Deity (Lord): Punnaivananathar. He acquired this name because His temple is enshrined within an area surrounded by Punna trees.
The Goddess (Consort): Sri Santhanayaki. She is the Divine Mother who bestows grace upon all who seek her blessings, embodying both compassion and serenity as her very eyes.
This temple is situated at the very end of a small street that branches off to the west from the main road. It is a large temple complex, with the main shrine facing towards the west. Although the temple had remained in a dilapidated state for a considerable period, it recently underwent a *Kumbhabhishekam* (consecration ceremony). Unlike the architectural norms found in many other holy sites, here the Presiding Lord faces west, while the Goddess is enshrined in a separate sanctum to His left, facing east. It is believed that circumambulating both deities together—specifically performing 9 to 11 rounds—will swiftly resolve any obstacles hindering one's marriage prospects. **Blessings for a Harmonious Marriage**
Situated in front of the presiding deity are a long *Artha Mandapam* (intermediate hall) and a *Maha Mandapam* (great hall). Although these structures originally featured conical roofs, the roofs were subsequently reconstructed as flat slabs following structural damage. Opposite the Goddess (Ambigai), there stands a spacious, conical-roofed *Mandapam*. Within this *Maha Mandapam* are enshrined two east-facing forms of Lord Vinayagar—known as *Selva Vinayagar* and *Siddhi Vinayagar*—as well as a beautiful idol of Lord Subrahmanya.
The *Sanctum Sanctorum* (Garbhagriha) is a magnificent structure featuring exquisite brickwork. In the *Koshthas* (niches) on the outer walls of the sanctum, Lord Dakshinamurthy appears in a truly beautiful and graceful posture. The term *Dakshinya* signifies "serenity" or "grace," and true to this meaning, the deity is depicted with a serene countenance, matted locks (*Jata*) flowing down on both sides, and the *Kallala* tree (Banyan tree) rising behind Him. A serpent is depicted slithering down from the tree; in His hands, He holds a prayer bead garland (*Akshamala*), a flame (*Agni*), a scripture (*Suvadi*), and displays the *Abhaya Mudra* (gesture of fearlessness)—making for a truly magnificent divine form. It is noteworthy that the demon *Apasmara* is absent beneath His feet; this, too, is considered a unique and special feature of this deity.
On the northern side, Goddess *Vishnu Durga* is enshrined in a separate niche. A spacious and beautiful shrine is dedicated to Lord *Chandikeswarar*. Located in the northeast corner is a well; facing west stands Lord *Kala Bhairava*; and situated directly behind the presiding deity is the shrine of Lord *Surya* (the Sun God). A large temple tank (*Kulam*) is situated directly in front of the temple complex.
It would be incomplete to speak solely of the temple without also introducing the priest who serves here. His name is Sakthivel, and by nature, he has a speech impediment. Although he is a humble devotee who finds it difficult to clearly articulate even the sacred *Panchakshara Mantra* (the five-syllable mantra of Lord Shiva), and despite being physically unable to perform strenuous labor and not belonging to the traditional Brahmin lineage, he serves with profound devotion to the Lord. He performs the *Abhishekam* (ritual bathing) and *Alankaram* (decoration) with great dedication and excellence, and he maintains the temple premises with impeccable cleanliness. Let us pray to the Almighty Lord—who is the provider of all things—to grant Sakthivel a life partner and to keep him forever close to His divine presence throughout his life.
Contact Number: Sakthivel – 91594 35055
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டம், புதுப்பத்தூர் புன்னைவனநாதர் திருக்கோயில்
Puthupathur Punnaivananathar temple
திருவாரூரில் இருந்து தென் கிழக்கில் ஒரு பெரும் நகரத்தை கட்டமைக்க வேணும் என சோழ மன்னன் ஒருவன் எண்ணிய நிலையில் அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, வழியில் புன்னை வனம் ஒன்றில் தன் படையினருடன் இளைப்பாறினான். மன்னன் மர நிழலில் கண்ணயர்ந்து தூங்கிவிட கனவில் வந்த இறைவன், 'இந்த புன்னை வனத்தில் ஒரு சிறுநகரம் உருவாக்கி . வீதிக்கு ஒரு கோயில்கள் கட்டு என கூறுகிறார்.
அதன்படி, புன்னை மரங்களால் நிறைந்திருந்த அந்த வனப்பகுதி சீர்படுத்தப்பட்டு தெருவுக்கு தெரு சிவாலயங்கள் எழுப்பப்பட்டன. பத்து தெருக்களில், பத்து கோயில்கள் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அந்த ஊர், புதுப்பத்தூர் என அழைக்கப்பட்டதாக ஒரு செவி வழி தகவல்.
திருவாரூரில் இருந்து ஆனந்தகுடி சாலையில் சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது புதுப்பத்தூர். நெல் வயல்களை பத்து என்று குறிப்பிடும் வழக்கம் உள்ளது. வயல்சார்ந்த ஊர் என்பதால் இது பத்தூர் என்ற பெயர் கொண்டது. புதிதாக உருவாக்கப்பட்ட ஊர் என்பதால் புது பத்தூர் ஆனது.
இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன புன்னைவனநாதர் அடுத்து திருமேனிநாதர். முதலில் நாம் புன்னைவன நாதரை பார்ப்போம்.
இறைவன் - புன்னைவன நாதர். புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டிருப்பதால் இவர் புன்னைவன நாதர் என பெயர்கொண்டார்.
இறைவி - ஸ்ரீசாந்தநாயகி , கருணையும் சாந்தமும் இரு கண்களாக வருவோருக்கெல்லாம் அருள் புரியும் அம்பிகை
பிரதான சாலையில் இருந்து மேற்கில் செல்லும் சிறிய தெருவின் கடைசியில் உள்ளது இந்த கோயில். பெரிய கோயிலாக மேற்கு நோக்கியபடி உள்ளது. திருக்கோயில். பல காலமாக சிதைவடைந்த நிலையில் இருந்த கோயில் சமீபத்தில் குடமுழுக்கு கண்டுள்ளது. பிற தலங்களில் உள்ளது போல இல்லாமல் இறைவன் மேற்கு நோக்கியும் அம்பிகை இடதுபுறம் கிழக்குநோக்கிய கருவறை கொண்டுள்ளார். இவ்விருவரையும் சேர்ந்தாற்போல் 9 – 11 சுற்றிவந்தால் விரைவில் திருமணத் தடைகள் அகலும்;
மாங்கல்ய வரம் கிடைக்கும்
இறைவன் முன்னர் நீண்ட அர்த்த மண்டபம் மகாமண்டபம் உள்ளது, கூம்பு வடிவத்தில் இருந்தவை சிதைவடைந்த பின்னர் மேற்கூரை சமதள கூரையாக்கப்பட்டுள்ளது. அம்பிகையின் எதிரில் அகன்ற கூம்பு வடிவ மண்டபமும் உள்ளது. இந்த மகாமண்டபத்தில் கிழக்கு நோக்கிய செல்வ விநாயகர் சித்தி விநாயகர் என இருவரும், அழகிய சுப்ரமணியரும் உள்ளனர்.
கருவறை அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட செங்கல் பணியாக உள்ளது. கருவறை கோட்டங்களில் தக்ஷ்ணமூர்த்தி மிக அழகிய கோலத்தில் காட்சியளிக்கிறார். தக்ஷின்யா என்றால் சாந்தம் எனப்பொருள் அதற்கேற்ற சாந்தமான முகம், இருபுறமும் வழியும் சடாமுடிகள், பின்னால் கல்லால மரம்,அதில் இருந்து படமெடுத்து இறங்கும் ஒரு நாகம், கைகளில் அக்கமாலை, அக்னி, சுவடி அபயஹஸ்தம் என ஒரு அற்புதமான மூர்த்தி. அபஸ்மரன் இவரது காலடியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் ஒரு சிறப்பு தான்.
வடபுறம் விஷ்ணு துர்க்கை தனி மாடத்தில் வைக்கப்பட்டுள்ளார். சண்டேசருக்கு அழகான பெரிய சன்னதி உள்ளது. வடகிழக்கில் ஒரு கிணறும், மேற்கு நோக்கிய காலபைரவரும்,இறைவனுக்கு நேர் பின்புறம் சூரியனும் உள்ளனர். கோயிலின் எதிரில் பெரிய குளம் ஒன்றும் உள்ளது.
கோயில் பற்றி மட்டும் சொன்னால் போதாது , இங்குள்ள பூசகர் பற்றியும் தெரிந்துகொள்வோம். இவர் பெயர் சக்திவேல் இயல்பில் தெற்றி பேசுபவர். பஞ்சாட்சர உச்சரிப்பு கூட தெளிவாக செய்ய இயலாத அன்பர், கடின உழைப்பு செய்ய இயலாதவர், அந்தண மரபில் வராதவர், இருந்தும் இறைவன் மேல் ஈடுபாட்டுடன் சிறப்பாக அபிஷேகம், அலங்காரம் செய்துவருகிறார். கோயிலையும் தூய்மையாக பராமரிக்கிறார். எல்லாம் வல்ல இறைவன் இவருக்கு ஒரு துணையை கொடுத்து ஆயுள் முழுதும் தன்னருகே வைத்துக்கொள்ள இறைவனை வேண்டுவோம்.
தொடர்பு எண்- Sakthivel-91594 35055
நன்றி கடம்பூர் விஜய்
Comments
Post a Comment