Temple info -3493. Mathaleswarar temple,Melacheri,Vizuppuram. மத்தளேஸ்வரர் கோயில்,மேலச்சேரி,விழுப்புரம்
Temple info -3493
கோயில் தகவல்-3493
Mathaleswarar Temple, Melachery, Villupuram
Mathaleswarar Temple is a Hindu Cave Temple dedicated to Lord Shiva, located in Melachery Village near Gingee Town in Gingee Taluk in Villupuram District of Tamil Nadu, India. The temple was called as Shikari Pallaveswaram in ancient times. Presiding Deity is called as Mathaleswarar and Mother is called as Brihan Nayagi. The temple has been classified as a Monument of National Importance by the Archaeological Survey of India (ASI).
History
The temple was called as Sri Shikarai Pallaveswaram as per the inscription on the northern wall of the cave temple. Though the name of the temple has Pallava in it, the cave temple did not follow any of the Pallava architectural style. The inscription mentions a king named Chandraditya. This King is not identified with any Pallava Kings. He might be the vassal of Pallava King. Shikari mentioned in the inscription might be the wife of the Pallava Vassal, Chandraditya. She would have excavated this cave temple named after his Pallava Overlord.
The Temple
This cave temple is excavated in the western face of a small granite boulder, located to the north of the village. The Temple is popularly known as Mathaleswarar Temple by locals. This cave temple is facing towards west. A stone Dhwaja Sthambam, Balipeedam and Nandi can be found outside facing the sanctum. The rock cut cave shrine is hidden by a newly built Mandapam from the ruins of an earlier Mandapam.
The Sanctum Sanctorum (Cave Temple) consists of Sanctum and Mukha Mandapam. The Mukha Mandapam consists of two pillars and two pilasters. The pillars and pilasters are square in shape. This arrangement divides the cave into three partitions of equal size. Presiding deity is called as Mathaleswarar and is facing west. He is housed in the sanctum in the form of Lingam.
The Lingam and Avudaiyar are carved from the living rock, a feature never seen in Pallava Cave temples. There is a lotus carved on the ceiling just above this Lingam. There are no Dvarapalas guarding the sanctum. Mother is called as Brihan Nayagi and is facing south. She is carved on the northern wall of the cave and housed inside a niche. This carving looks like later addition.
There is a carving of Lord Ganesha in the southern wall of the cave temple. There are few shrines built opposite near to this cave temple. There are shrines for Lord Murugan, Ganesha and few other gods facing the cave temple. There is a huge pond in front of the cave temple. A newly built Murugan temple can be seen in the nearby hill top.
Connectivity
மத்தளகிரீஸ்வரர் கோயில்,மேலச்சேரி
மத்தள மலை அற்புதங்கள்
கி.பி. 6 - ம் நூற்றாண்டு!
தமிழகக் கோயில்களின் வரலாற்றில் முக்கியமான காலகட்டம் அது. அப்போதுதான் பல்லவ மன்னர்கள் தமிழகமெங்கும் பல்வேறு குடைவரைக் கோயில்களை உருவாக்கினார்கள். முதிர்ந்த பாறைகளைக் குடைந்து அவர்கள் உருவாக்கிய அழகிய குடைவரைக் கோயில்கள் இன்றும் நிலைத்திருக்கும் கலைப்பொக்கிஷங்கள்.
அபூர்வ நந்தி... அற்புத லிங்கம்!
குடைவரைக் கோயில்கள் என்றாலே பெரும்பாலானோரின் மனத்தில் தொண்டைமண்டலத்தில் அமைந்துள்ள மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகிய ஊரில் அமைந்திருக்கும் ஆலயங்களே நினைவில் தோன்றும். ஆனால், இவை தவிர வேறுபல குடைவரைக் கோயில்களையும் உருவாக்கியுள்ளனர் பல்லவ மன்னர்கள். அப்படி அவர்கள் உருவாக்கிய ஓர் அற்புத ஆலயம்தான் மேலச்சேரி அருள்மிகு மத்தளகீரீஸ்வரர் ஆலயம்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டத்திற்கு உட்பட்ட ஊர் மேலச்சேரி கிராமம். இந்தக் கிராமத்தில் உள்ள மலைக்குன்றின், ஒற்றைப் பாறையில் குடைவரையாக அமைக்கப் பட்டுள்ளது இந்தக் கோயில்.
பல்லவ மன்னர்களில் குறிப்பிடத்தக்கவன் மகேந்திரவர்மன். இவனுடைய ஆட்சிக்காலத் தில்தான் பெரும்பாலான குடைவரைக் கோயில்கள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டன. கலைகளில் ஆர்வம் மிக்கவன் இவன்; சித்திரக்காரனும்கூட. ஆகவே, ‘குடைவரைக் கோயில் கலையின் முன்னோடி,’ ‘சித்திரகாரப் புலி,’ ‘விசித்திர சித்தன்’ என்னும் பல்வேறு சிறப்பு பெயர்கள் மகேந்திரவர்மனுக்கு உண்டு.
தாய்ப் பாறையில் சிவலிங்கம்!
அருள்மிகு மத்தளேஸ்வரர் ஆலயம், மகேந்திர வர்மனின் ஆட்சியின் கீழ் இப்பகுதியை ஆண்ட குறுநில மன்னனான ‘சந்திராதித்யன்’ என்பவனால் உருவாக்கப்பட்டது. இது, மண்டகப்பட்டு குடைவரைக்கோயிலின் காலத்துக்குப் பிற்பட்டது. எளிமையும் அழகும் கொண்டு திகழும் இந்தக் குடைவரைக் கோயில் மேற்குதிசையை நோக்கியபடி அமைந்துள்ளது. இங்கு அருளும் ஈசனும் மேற்கு நோக்கியே அருள்பாலிக்கிறார்.
மகேந்திரவர்மன் காலத்துக் குடைவரைக் கோயில்களில் திகழும் பாணியில்... ‘ஒரு மண்ட பம், அதன் நடுவில் கர்ப்பகிரகம்’ எனும் அமைப்பிலேயே இந்தக் குடைவரையும் அமைந்துள்ளது. இந்தக் கோயில் மண்டபத்தின் நீளம் 19. 9 அடி அங்குலம். அகலம் 8. 9 அடி. உயரம் 6. 8 அடி. இங்குள்ள கர்ப்பக்கிரகம் சதுர வடிவில் அமைந்துள்ளது. மண்டபத்தின் உயரமும் கருவறையின் உயரமும் இணையாகவே காணப்படுகின்றன.
கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஈசனின் லிங்கத் திருமேனி குடைவரையின் தாய்ப் பாறையிலேயே செதுக்கப் பட்டிருப்பது மிகவும் சிறப்பு. சுமார் 5 அடி உயரத்துடன் பிரமாண்டமாக அமைந்திருக்கும் ஈசனின் திருமேனி தரிசிப்பவர் களின் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. அருள்மிகு மத்தள கிரீஸ்வரரை தரிசனம் செய்யும் கணத்தில், நம் மனத்தில் உள்ள கவலைகள் எல்லாம் மாயமாய் மறைவதை உள்ளூர உணரலாம்.
இந்தக் குன்றின் பெயர் மத்தளமலை. ஆகவே, மலைமீது அருளும் ஈஸ்வரனுக்கு மத்தளேஸ் வரர், மத்தளகிரீஸ்வரர் என்ற திருப்பெயர்கள் ஏற்பட்டன என்கிறார்கள்.
இங்கு அருளும் அம்பிகைக்கு அருள்மிகு பிரகன்நாயகி என்று திருப்பெயர். குடைவரைக் கோயில் மண்டபத்தில் தெற்கு நோக்கி சந்நிதி கொண்டு அருள்பாலிக்கிறாள் அம்பிகை. இந்த அம்பாளின் சிற்பம், பிற்காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
நந்தி சிலையில் சிவலிங்கச் சிற்பம்!
கருவறையின் விமானத்தில் தாமரைமலர் போல் சிற்பம் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. சதுர வடிவிலான இரண்டு முழு தூண்களும், பாறையை ஒட்டிய இரண்டு அரைத்தூண்களும் குடைவரையில் காணப்படு கின்றன. இவற்றில் ஒரு தூணில் வடமொழிக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
‘சந்திராதித்யன் எனும் அரசன் ஶ்ரீஸிகாரி பல்லவேஸ்வரம் எனப்படும் இந்த ஆலயத்தை சிங்கபுரத்தில் அமைத்தான்’ என்கிறது, இந்தக் கல்வெட்டில் உள்ள தகவல். `ஸிகாரி பல்லவேஸ்வரம்' என்பதுவே பிற்காலத்தில் சிங்கபுரம் என அழைக்கப்பட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள். மேலச்சேரி எனும் இந்த ஊர், அந்தக்காலத்தில் சிங்கபுரத்துடன் இணைந்தே இருந்துள்ளது என்பதையே இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது.
ஆலயத்தில் வடக்கு நோக்கி விநாயகப் பெருமான் சிற்பமாகக் காட்சி கொடுக்கிறார். குடைவரையின் மகாமண்டபத்தில் பெருமாள் திருவடி, வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப்பெருமான் மற்றும் யானைகளின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்தக் கோயிலில் புதிதாக மகாமண்டபம், சுற்று கோயில்கள், கோபுரம் ஆகியவை ஊர் மக்களால் புதிதாகக் கட்டப்பட்டு கும்பாபிஷேக மும் நடத்தப்பட்டுள்ளது.
மகா மண்டபத்தில் பைரவர், சூரியன், சந்திரன் சிலைகள் உள்ளன. சுற்றுப் பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகன், சண்டிகேஸ்வரர், துர்கை ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.
ஆலயத்துக்கு எதிரே காணப்படும் நந்தி விசேஷம் வாய்ந்தவர். சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த நந்திதேவர் சிலையில், அவரின் கழுத்தின் கீழ்ப்பகுதியில் கால்களுக்கு இடையில் லிங்கத்தின் உருவமும் இணைத்து வடிக்கப்பட்டுள்ளது. இப்படியான அமைப் புடன் திகழும் நந்திதேவர் திருமேனிகள் மிகவும் அரிதானவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். பிரதோஷ காலத்தில் இந்த நந்தியை வணங்கி, மத்தளேஸ்வரரை தரிசித்து வழிபடுவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்; எண்ணிய காரியங்கள் எண்ணியபடி நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நந்திக்குப் பின்புறம் 20 அடி உயரம் கொண்ட கல்மரமும், பலிபீடமும் காணப்படுகின்றன.
அபூர்வ நந்தி... அற்புத லிங்கம்!
நெய்தீப பிரார்த்தனை!
இத்தலத்தில் கார்த்திகை தீபம், மாசி சிவராத்திரி, பிரதோஷம் ஆகிய விழாக்கள் விசேஷம். இங்கு பௌர்ணமி தினங்களில், ஏராளமான மக்கள் கிரிவலம் செய்து வழிபட்டுச் செல்கிறார்கள்.நெய்தீபம் ஏற்றிவைத்து மத்தளேஸ்வரரை வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும், வாழ்க்கையில் முன்னேற்றமும் சகல செளபாக்கியங்களும் கிட்டும் என்றும் சொல்கிறார்கள் பக்தர்கள்.
வாழ்வில் துன்பங்கள் தீர்க்கும் இந்த அற்புதத் தலத்தை ஒருமுறை சென்று தரிசித்து வழிபட்டு வாருங்கள். மத்தளேஸ்வரர் உங்களின் மனக்குறைகளைப் போக்கி அருள் செய்வார்.
சதுர்முக லிங்கம்!
முக லிங்கத் திருமேனிகளில் விசேஷமானது சதுர்முக லிங்கம்.
கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு ஆகிய நான்கு திசைகளை நோக்கி இருக்கும் இதை வேத லிங்கமாகக்கூறுவர்.
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நடராஜர் சந்நிதி அருகில் நான்கு முக லிங்கம் உள்ளது.
திருவதிகை (பண்ருட்டி அருகில்) வீரட்டானேஸ்வரர் கோயிலில், தென்மேற்கு மூலையில் சதுர்முக லிங்கம் உள்ளது.
திருவண்ணாமலை, திருவானைக்கா ஆகிய தலங்களிலும், காளஹஸ்தி கோயிலுக்கு அருகில் உள்ள மலை மண்டபத்திலும் சதுர்முக லிங்க சந்நிதிகள் உள்ளன.
சதுர்முக லிங்கத்துக்கு நான்கு முக ருத்ராட்ச மாலை அணிவித்து, நான்கு வகையான வில்வங்களால் வழிபாடு செய்வோர், பிரம்ம ஞானம் கைவரப் பெற்று எட்டுத் திக்குகளும் புகழும் பேரறிஞராகத் திகழ்வர்.
-









Comments
Post a Comment