Temple info -3453. Arunachaleswarar temple,Vadapathimangalam,Thiruvarur. அருணாசலேஸ்வர ர் கோயில்,வடபாதிமங்கலம்,திருவாரூர்
Temple info -3453
கோயில் தகவல்-3453
Vadapathimangalam Shiva Temple, Koothanallur Taluk, Thiruvarur District
The journey took place on a day when a storm was centered a few hundred kilometers from Nagapattinam, with alternating periods of sunshine and rain. Suddenly, the sky began to darken. As if the sky was gradually pouring darkness, dark clouds began to engulf the earth. Dark clouds started moving above the road, competing with the tarred surface. Beyond the Panduthagudi bridge, bushes and trees grew haphazardly on both sides of the road; there was no place to take shelter.
The river Vennar and the road ran so closely together that it was hard to tell whether the road was accompanying the river or vice versa. I rushed to take shelter at the Vadapathimangalam bus stop, and within a few minutes, the rain poured down heavily. A few minutes later, as if nothing had happened, the sun pierced through the clouds, and I reached the Vadapathimangalam temple.
Vadapathimangalam is seven kilometers from Koothanallur and ten kilometers from Mavoor on the Thiruvarur-Thiruthuraipoondi road. History says that the deity of this temple was worshipped by Idaikattu Siddhar.
An inscription from the Chola period in the Vadapathimangalam Munniyur Agatheeswaramudaiyar temple mentions the name "*Vadavarimangalamudaiyan". It would not be wrong to assume that the name "Vadavari Mangalam" gradually transformed into "Vadapadhi Mangalam" over time. This suggests that this village has existed since the time of the Chola dynasty.
Another notable feature of this village is the Arooran Sugar Mill. This mill's management was renowned for donating 1000 veli of land to the Thiruvarur Thyagaraja Swamy Temple and 320 veli of land to the Vadapadhi Mangalam Arunachaleswarar Temple. The owner of this sugar mill also held the prestigious position of hereditary trustee, covering all the expenses of the Thiruvarur Thyagaraja Temple's chariot festival and other temple activities.
The Arooran Sugar Mill management also bore the maintenance costs for all the temples in the villages surrounding Vadapadhi Mangalam. It is no exaggeration to say that the Shiva temples in the surrounding areas were severely affected after the mill was closed for various reasons.
Just as the Thiruvarur Thyagaraja Temple's chariot has a special significance in the Thiruvarur district, the Vadapadhi Mangalam Arunachaleswarar Temple's chariot is also equally significant. Every year, after the Thiruvarur chariot festival concludes, the Vadapadhi Mangalam Arunachaleswarar Temple chariot is pulled by devotees in the month of Chithirai (April-May). Before this chariot festival, special pujas are performed for the deity, followed by 20 days of special events. As a result, the entire Vadapadhi Mangalam area takes on a festive appearance.
The temple faces east, and at the entrance, there is a five-tiered Rajagopuram (temple tower). Beyond that is the second prakaram (courtyard), where a copper flagpole stands directly opposite the deity. Beyond this, one can reach the first prakaram, which is surrounded by a high compound wall.
The presiding deity is Arunachaleswarar, and the consort is Unnamulai Amman.
The main deity faces east in the sanctum sanctorum, which includes an ardha mandapam (half-hall) and a mukha mandapam (front hall). The goddess has a separate shrine facing south. In the temple courtyard, there are shrines for Ganesha and Murugan. Near Ganesha, there is a statue of Idaikattu Siddhar. Bhairava and Shani are located in the northeast.
Four daily pujas are performed in this temple according to the Kamikagama tradition. The Kandha Shashti festival in the month of Aippasi is the main festival. The Aadi Pooram festival is celebrated in the month of Aadi.
An inscription states that in 1917 AD, Sokkapa Mudaliar renovated the Arunachaleswarar temple, which he had built with bricks in 1845, and that from 1912 to 1917, Somasundara Mudaliar rebuilt the temple with granite. This inscription is located in the storehouse.
The chariot is being prepared for the upcoming chariot festival. Soon, Annamalai will be adorned in festive splendour.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், வடபாதிமங்கலம் சிவன்கோயில்
Vadapathimangalam sivan temple
நாகையில் இருந்து சில நூறு கிமில் புயல் மையம் கொண்ட நாளில் பயணம், வெயிலும் மழையும் மாறி மாறி வந்து கொண்டு இருந்தது. திடீரென வானம் இருட்ட தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமா வானத்துலேந்து இருட்டை கொட்டுவது போல கருமேகங்கள் பூமியை இருட்டாக்கத் தொடங்குது. ரோட்டுல தாரோட போட்டி போடுறாப்புல ரோட்டுக்கு மேலயும் கருமேகங்கள் நகர ஆரம்பித்தது பண்டுதகுடி பாலம் தாண்டி ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் செடிங்களும், மரங்களும் கண்டமேனிக்கு வளந்து கெடக்குதுங்க.ஒதுங்க இடமில்லை.
ரோட்டுக்கு வெண்ணாறு துணையா, வெண்ணாத்துக்கு ரோடு துணையான்னு தெரியாத அளவுக்கு ஆறும், ரோடும் கைகோத்துக்கிட்டுத்தாம் போகும். ஓடிப்போய் வடபாதிமங்கலம் பேருந்து நிறுத்தத்தில் ஒண்ட, அடுத்த சில நிமிடங்களில் மழை கொட்டோ கொட்டு என கொட்டி தீர்த்தது, அடுத்த சில நிமிடங்களில் எதுவுமே நடக்காதது போல் சூரியன் மேகத்தை ஊடறுத்துக்கொண்டு வெளிச்சம் காட்ட, வடபாதிமங்கலம் கோயில் வந்தடைந்தேன்..
கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் ஏழு கிமி தூரத்திலும், திருவாரூர்- திருத்துறைபூண்டி சாலையில் உள்ள மாவூரில் இருந்து பத்து கிமி தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவனை இடைக்காட்டு சித்தர் வழிபட்டதாக வரலாறு சொல்கிறது.
வடபாதிமங்கலம் முன்னியூர் அகத்தீசுவரமுடையார் கோயிலில் உள்ள சோழர் கால கல்வெட்டொன்றில் “*வடவாரிமங்கல முடையான்” என்ற பெயர் காணப்படுகிறது. இந்த “வடவாரி மங்கலம்'' என்ற பெயரே காலப்போக்கில் “*வடபாதி மங்கலம்'”' என மருவிவிட்டது எனக் கருதுவது பிழையாகாது, இதனால் இவ்வூர் சோழ மன்னராட்சி காலத்திலிருந்தே இருந்து வருகிறதெனலாம்
இவ்வூரின் இன்னொரு சிறப்பு ஆரூரான் சர்க்கரை ஆலை. இந்த ஆலை நிர்வாகம் திருவாரூர் தியாகராஜ சுவாமிகோவிலுக்கு மட்டுமே 1000 வேலி நிலத்தை தானமாக கொடுத்தும் வடபாதிமங்கலம் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு 320 வேலி நிலத்தை தானமாக கொடுத்தும் பெருமை பெற்றது. திருவாரூர் தியாகராஜர் கோவில் தேர் மற்றும் திருவிழா என அனைத்து கோயில் செலவுகளையும் செய்ததோடு பரம்பரை அறங்காவலராகவும் இந்த சர்க்கரை ஆலையின் உரிமையாளர் இருந்த பெருமையைக் கொண்டது
வடபாதிமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களில் எல்லாக் கோவில்களுக்கும் பராமரிப்பு செலவை ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகமே செய்தது. பல காரணங்களால் ஆலை மூடப்பட்டபின் பெரிதும் பாதிக்கப்பட்டது சுற்றிலும் உள்ள சிவன் கோயில்கள் என்றால் அதுமிகையல்ல.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு எப்படி ஒரு சிறப்பு உண்டோ, அதேபோல் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தேரும் சிறப்பு வாய்ந்ததாகும். திருவாரூர் ஆழித்தேரோட்டம் நடைபெற்று முடிந்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் தேர், பக்தர்களால் வடம்பிடித்து தேரோட்டம் நடைபெறும். இந்த தேரோட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து 20 நாட்கள் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனால் வடபாதிமங்கலம் பகுதி முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளிக்கும்.
கிழக்கு நோக்கிய திருக்கோயில், முகப்பில் ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனை தாண்டியவுடன் இரண்டாம் பிரகாரம் அதில் இறைவனின் நேர் எதிரில் செப்பு கொடிமரம் உள்ளது. அதனை கடந்து உயர்ந்த மதில் சுவர் கொண்ட முதல் பிரகாரம் அடையலாம்.
இறைவன் – அருணாசலேஸ்வரர் இறைவி - உண்ணாமுலை அம்மன்
இறைவன் கிழக்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார், அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் என உள்ளது, இறைவி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். பிரகாரத்தில் விநாயகர் சன்னதி, முருகன் சன்னதி என உள்ளது. விநாயகர் அருகில் இடைக்காட்டு சித்தர் சிலை உள்ளது. . வடகிழக்கில் பைரவர், சனீஸ்வரர் உள்ளார்.
இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் 1 கந்தசஷ்டி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் ஆடிபூரம் திருவிழாவாக நடைபெறுகிறது.
வடபாதிமங்கலம் கிபி 1917ம் ஆண்டில் அருணாச்சலேஸ்வரர் கோயிலை சொக்கப்ப முதலியார் என்பவர் இக்கோயிலை 1845 செங்கல்லால் கட்டி திருப்பணி செய்தார் எனவும் 1912-1917 வரை சோமசுந்தரமுதலியார் மீண்டும் இக்கோயிலை கருங்கற்பணியாக செய்தார் என கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது. உக்கிராண அறையில் இது உள்ளது.
விரைவில் இங்கு தேரோடும் வைபவம் நடைபெற தேர் தயாராகிறது. விரைவில் அண்ணாமலை விழாக்கோலம் காண்பார்...
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்
நன்றி கடம்பூர் விஜய்
Comments
Post a Comment