Temple info -3450 Chandrasekara swami temple,Athani, Erode சந்திரசேகர சுவாமி கோயில்,அத்தாணி,ஈரோடு

 Temple info -3450

கோயில் தகவல்-3450




*Arulmigu Sri Anandavalli Ambigai Sametha Sri Chandrasekhara Swamy Temple, Atthani village, Anthiyur Taluk, Erode District*


In the front, (with Adishesha providing shade) in the form of a small self-manifested Lingam, and at the back,

in a standing posture with our Parasakthi,

our beloved Lord grants his divine darshan in the form of an idol.

It is a blissful experience to behold Him.


According to a historical event;

(In ancient times)

the Lord of this temple manifested as a self-originated Lingam,

and (in later times)

He appeared as an idol along with his consort.


Those who have been affected by adulteration in goods,

and those who have been betrayed by broken trust,

can sincerely worship the Lord of this temple,

seek justice,

and are certain to receive favorable results.


Among the many ancient Shiva temples that are not widely known to devotees from outside the local area,

this small temple is one of those that have recently undergone significant renovations.


In this sacred temple, where the

Maha Shivaratri festival in the month of Masi and

the Thiruvathirai festival in the month of Margazhi are celebrated with great fervor,

the Monday worship performed for a good life partner and marital harmony,

and the Pradosham worship performed for the prosperity of agriculture and the well-being of livestock,

are among the special features of this temple.

🌹


*அருள்மிகு ஶ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஶ்ரீ சந்திரசேகர சுவாமி திருக்கோயில், அத்தாணி எனும் சிற்றூர், அந்தியூர் வட்டம், ஈரோடு மாவட்டம்*


முன்னே,  (ஆதிசேஷன் குடை பிடிக்க) சிறிய 

சுயம்புலிங்கத்திருமேனியராகவும் பின்னே,

நம் பராசக்தியுடன்

நின்ற திருக்கோலத்தில் 

விக்ரகமாகவும்

அருட்காட்சியளிக்கும்

நம் இனிய ஈசனை காணப்பரவசம்.


ஒரு வரலாற்று நிகழ்விபடி;

(முற்காலத்தில்)

சுயம்பு லிங்கமூர்த்தியாகவும்,

(பிற்காலத்தில்)

தம்பதி சமேதராக 

விக்ரக மூர்த்தியாகவும்

வந்தமர்ந்தவராம் இத்தல ஈசனார்.


பொருளில் கலப்படம் செய்பவர்களினாலும்,

நம்பிக்கை துரோகம் செய்பவர்களினாலும்

பாதிக்கப்பட்டவர்கள்

இத்தல இறைவனிடம்

உளமார வழிபட்டு

நீதி கேட்பதும்,

அதற்கு நற்பலன் கிடைப்பதும் நிச்சயமாம்.


உள்ளூர் மக்களைத் தவிர, வெளியூர் பக்தர்களால் அதிகம் அறியப்படாத பல பழமையான சிவாலயங்களில்,

சமீப காலத்தில் சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டுள்ள இச்சிறு திருக்கோயிலும் ஒன்று.


மாசி மாத

மஹா சிவராத்திரி மற்றும் 

மார்கழி மாத

திருவாதிரை விழாக்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படும் இத்திருத்தலத்தில்,

நல்வாழ்க்கைத்துணை அமையபெறவும்,

தம்பதியர் கருத்தொற்றுமை கூடிடவும் நடைபெறும் திங்கள் வழிபாடும்,

விவசாயம் செழித்திடவும், கால்நடைகளின் நலம் பேணிடவும்

நடைபெறும் 

பிரதோஷ வழிபாடும் தலச்சிறப்புகளாகும். 


நன்றி ராகவன் சுப்பிரமணியன்

Comments

Popular posts from this blog

Temple info -1012 Val vill ramar temple,Thirupullabhoothangud வல்வில் ராமர் கோயில், திருப்புள்ளபூதங்குடி. Divya Desam No.10

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை