Temple info -3434. Aryankavu Dharmsastha temple,Kollam. ஆர்யன்காவு தர்மசாஸ்தா கோயில்,கொல்லம்
Temple info -3434
கோயில் தகவல்-3434
The Aryankavu Dharma Sastha Temple:
The Aryankavu Dharma Sastha Temple, located in the Kollam district of Kerala, is one of the prominent temples of Lord Ayyappa, renowned for its unique significance in Ayyappa worship. It is one of the Arupadaiveedu (six abodes) of Lord Ayyappa, following Sabarimala in importance. The temple is unique as it depicts Lord Ayyappa in a "marital form," being the only place where Ayyappa is married to Pushkala Devi.
Historical and Mythological Background:
The temple is said to have been established by Parasurama, who created several Dharma Sastha temples in Kerala's eastern mountain regions to protect and bless the land. The four key forms of Ayyappa associated with these temples are:
Brahmacharya (celibate state) at Kulathupuzha,
Grihasthashrama (householder state) at Aryankavu,
Vanaprastha (retirement state) at Achankovil, and
Sanyasa (ascetic state) at Sabarimala.
In Aryankavu, Lord Ayyappa is seen in a wedded form, accompanied by his consort, Pushkala Devi, signifying the householder stage of life.
The Legend of Ayyappa and Pushkala:
The legend revolves around a merchant from Madurai who wove fine clothes for the royal family of Travancore. During one of his journeys to Travancore, he brought his daughter Pushkala along. Upon reaching Aryankavu, the dense forest path proved challenging for his daughter, and she refused to travel further. The merchant sought help from the chief priest of the Aryankavu Sastha temple, leaving Pushkala in his care while he continued his journey.
Pushkala, staying near the temple, began to serve Lord Sastha with devotion, which gradually turned into love. Meanwhile, her father, on his return journey, was chased by a wild elephant in the forest. A young man appeared, subdued the elephant, and rescued the merchant. When the merchant thanked him and asked what he desired as a reward, the young man asked for his daughter Pushkala's hand in marriage. The merchant agreed, only to later realize that the young man was none other than Lord Sastha himself.
Upon reaching Aryankavu, the merchant found that the temple's deity bore the same appearance as the young man who saved him. Overwhelmed, he arranged for Pushkala's marriage to Sastha with the blessings of the Travancore king. To this day, the temple commemorates this divine union with an annual wedding festival during the Malayalam month of Dhanu (December-January).
Architectural and Ritual Significance:
The Aryankavu temple reflects Kerala-style architecture, but its rituals follow Tamil traditions. The sanctum sanctorum houses Lord Ayyappa seated in a royal posture with his right leg resting on the floor and his left leg slightly raised. To his right is Lord Shiva in lingam form, and to his left stands Pushkala Devi.
Other deities worshiped in the temple include Nagas (serpents), Lord Ganapati, Valiyakada Karuppasamy, and Karuppayi Amman.
Rituals and Festivals:
Special poojas are conducted during important Ayyappa worship days, particularly during the Mandala season.
The Ayyappa-Pushkala wedding festival is celebrated annually with grandeur. Events like the "Pandiyan Mudippu" (engagement ceremony) and "Thalipoli Utsavam" (procession) are conducted as part of the festivities.
Devotees believe that worshiping the deity here removes obstacles to marriage and brings blessings for a harmonious married life.
Unique Features:
This is the only temple where Lord Ayyappa is seen in a marital form.
The temple has a marriage hall (kalyana mandapam), which is rare among Sastha temples.
Both Malayalam Tantric rituals and Tamil Pandiyan customs are followed during temple events, emphasizing its cultural blend.
Name Origin and Sacred River:
The name "Aryankavu" is derived from the term Aryan, meaning "noble one," and "kavu," meaning "grove" or "sacred place." A holy river called Karuppa River flows near the temple, enhancing its spiritual sanctity.
The Aryankavu Dharma Sastha Temple holds immense spiritual significance for devotees and remains a vital part of Lord Ayyappa's sacred pilgrimage circuit, alongside Kulathupuzha, Achankovil, Erumeli, Pandalam, and Sabarimala.
ஆரியங்காவு தர்ம ஸாஸ்தா கோயில்
செங்கோட்டையிலிருந்து சுமார் 12 கிமீ தொலைவில் கேரள மாநிலத்தில் உள்ளதே ஆரியங்காவு ஸ்ரீஐயப்ப சுவாமி திருத்தலமாகும். கலியுலகத்தின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவரே ஸ்ரீஐயப்ப சுவாமி. ஸ்ரீஐயப்ப சுவாமி அச்சன்கோவில், ஆரியங்காவு, குழத்துப்புழா, சபரிமலை, காந்தமலை என ஐந்து இடங்களில் தன்னுடைய பூரண கடாட்சத்தோடு விளங்குகிறார். இதில் சபரிமலையில் யோக நிலையிலும் காந்தமலையில் ஜோதி ஸ்வரூபமாகவும் ஸ்ரீஐயப்ப சுவாமி எழுந்தருளி உள்ளதால் இவ்விரு தலங்களையும் தரிசிப்பதற்கு பக்தர்களுக்கு மிகுந்த நெறிமுறைகளும் விரத கோட்பாடுகளும் விளங்குகின்றன என்பது உண்மையே. பொன்னம்பல மேடு எனப்படும் காந்தமலையில் ஜோதி ரூபமாக விளங்கும் ஜீவன்களே அனுமதிக்கப்படுவர் என்பதால் சதாதாரண மனிதர்களின் நடமாட்டம் இங்கு நிலவுவது கிடையாது. ஒரு மண்டல காலத்திற்கு விரத அனுஷ்டானங்களை மேற்கொள்பவர்கள் மட்டும் இருமுடியை தலையில் ஏந்தி சபரிமலையில் 18 படிகளை ஏறிச் சென்று ஸ்ரீஐயப்ப சுவாமியை தரிசிக்கலாம் என்பது விதி. இத்தகைய கோட்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறார்கள் சித்தர்கள். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் ஒரு மண்டல காலத்திற்கு தானே சமைத்த உணவை ஏற்று விரதமிருந்து ஒரே பசு மாட்டின் பாலைக் கறந்து தயாரிக்கப்பட்ட நெய்யில் இருமுடி கட்டி ஸ்ரீசபரிமலை செல்பவர்களுக்கு அந்த யாத்திரை அவர்களுடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பது உண்மையே.
ஆரியங்காவு திருத்தலம்
ஒரு முறை ஒரு பக்தருடைய மகன் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டதால் அவன் கோமா என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டான். கண்கள் கூட திறவாத நிலை. அந்த பக்தரும் ஒருவாறாக மனம் தெளிந்து ஐயப்ப சுவாமியே இதற்கு வழிகாட்ட வல்லவன் என்று திடமான முடிவிற்கு வந்து அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு வீட்டிலேயே ஒரு தனி அறையை தனக்கென்று ஒதுக்கி வைத்துக் கொண்டு தானாக சமைத்து சாப்பிட்டுக் கொண்டு ஒரு மண்டல ஐயப்ப விரதத்தை மேற்கொண்டார். வீட்டை விட்டு வெளியே செல்லாமல் மற்ற பெண்களை பார்க்காதது மட்டுமன்றி தன் மனைவியின் முகத்தைக் கூட விரத நாட்களில் அவர் பார்த்தது கிடையாது. விரத முடிவில் தானாக இருமுடியை தலையில் கட்டிக் கொண்டு ஐயப்ப சுவாமி கோயிலுக்கு யாத்திரையாகப் புறப்பட்டு விட்டார். சபரி மலையில் பசு நெய்யை சுவாமிக்கு அபிஷேகத்திற்கு அளித்து விட்டு பிரசாதத்தோடு வீட்டிற்குத் திரும்பினார் அந்த பக்தர். வீட்டில் தன்னுடைய வாய் திறவாத மைந்தனுக்கு பல்லைச் சற்றே விலக்கி ஸ்ரீசபரி நாதனின் பிரசாதத்தை துளி ஊட்டினார். அப்புறம் என்ன அவருடைய செல்ல மகன் கண்களை மெதுவாகத் திறந்து தந்தையைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டதுடன் வாய் திறந்து இரண்டு வருடங்களுக்குப் பின் அப்பா என்று அழைக்கவும் செய்தான். இதுவே ஐயப்ப சுவாமியின் கருணை. கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஐயப்ப சுவாமியின் திருத்தலங்கள் மிகுந்திருந்தாலும் மேற்கூறிய ஐந்து தலங்கள் சிறப்பாக மனித வாழ்வின் ஐந்து கட்டங்களை சுட்டிக் காட்டும் தலங்களாக உள்ளன என்பதே அவற்றின் சிறப்பாகும். பாலன், பிரம்மசாரி, குடும்பத் தலைவன், யோகி, மோட்சதாயி என்ற ஐந்து நிலைகளையும் குறிப்பதாகவே இந்த அச்சன்கோயில் ஆதியாக உள்ள ஐயப்ப தலங்கள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஐந்து நிலைகளுக்கு உரியதாகவே தர்மசாஸ்தா, மணிகண்டன், பந்தளராஜா, பூதநாதன், பம்பாவாசன் என்ற ஐந்து ஐயப்ப நாமங்களும் அமைந்துள்ளன. அதே போல மந்தாரை மலர்கள் என்று அழைக்கப்படும் மலர்களும் ஐந்து நிலைகளில், வண்ணங்களில் நிலவி ஐயப்ப சுவாமியின் ஐந்து விதமான அனுகிரக சக்திகளை அளிக்கவல்லவையே. இதில் கொக்கு மந்தாரை என்ற வெள்ளை மந்தாரை பொலியும் தலமே ஆரியங்காவு திருத்தலமாகும். மந்தாரை மலர்களும் ஐந்து இதழ்களை உடையவையே என்பதும் ஐயப்ப சுவைக்கு மெருகூட்டும் மந்தாரை சுவையாகும். சிறு குழந்தைகள் தங்கள் கைகளை நீட்டி அதில் ஒவ்வொரு விரலாக காசி காவடி இந்து பால் என்று எண்ணி விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள். சிறுவர்களின் விளையாட்டு என்று எண்ணும் இந்நிகழ்ச்சி எத்தகைய பொருள் பொதிந்தது. மூன்றாம் பிறையை சூடிய சிவபெருமானை முறையாக தரிசனம் செய்தவதால் அமிர்த சக்திகளைப் பெறலாம் என்பதை இந்த விளையாட்டு மேலோட்டமாகக் குறிப்பிடுகிறது. இதுவே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன். இவ்வாறு முறையாக மூன்றாம் பிறையை தரிசனம் செய்து அதன் பலன்களை எல்லாம் மக்களுக்கு, பக்தர்களுக்கெல்லாம் தம்முடைய அருள் பிரசாதமாக வழங்கியவரே கனிந்த கனி என சித்தர்களால் புகழப்பட்ட ஸ்ரீகாஞ்சி பரமாச்சாரியார் ஆவார். இத்தகைய பால் என்னும் அமிர்த சக்திகளில் ஒன்றை அனுகிரகமாக அளிப்பதே ஆரியங்காவு திருத்தலமாகும். இதைக் குறிப்பதாக விளங்குவதே இத்தலத்தில் மலர்ந்துள்ள கொக்கு மந்தாரைகளின் காட்சியுமாகும்.
பம்பை நதி
சந்திரனின் மூன்றாம் பிறை என்பது எத்தனையோ திருத்தலங்களில் உலகம் முழுவதும் தரிசிக்கக் கூடிய ஒரு திவ்ய தரிசனம் என்றாலும் ஒவ்வொரு பிறையையும் தரிசனம் செய்யும் திருத்தலத்தை சித்தர்களும் உயர்நிலையில் வாசம் செய்யும் ஸ்ரீபரமாச்சாரியார் போன்ற மகான்கள் மட்டுமே அறிவர். மூன்றாம் பிறை என்பது சாட்சாத் சிவபெருமானின் தரிசனமாகவே திகழ்வதால் ஒரு தூசி அளவு சுயநலம் அந்த தரிசனத்தில் கலந்திருந்தாலும் அதனால் தரிசனம் செய்யும் அடியார்களுக்குப் பல தீர்க்க முடியாத கர்மச் சுமைகள் மிகும் என்பதாலேயே இந்த தரிசனங்கள் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒவ்வொரு மூன்றாம் பிறையையும் தரிசனம் செய்யும் திருத்தலத்தை அடைந்து அங்கிருந்து சிவபெருமானை ஆயிரம் முறை தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெற்றவரே கனிந்த கனி ஆவார். ஸ்ரீபரமாச்சாரியார் சுவாமிகள் இதற்காக இந்தியா முழுவதையும் இரண்டு முறை பாதயாத்திரையாகவே வலம் வந்து இவ்வாறு மூன்றாம் பிறைகளை தரிசனம் செய்து அதன் பலன்களை தாரை வார்த்து அளித்தார் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும். இத்தகைய மூன்றாம் பிறை சந்திர தரிசன பலனில் விளையும் அமிர்த சக்திகள் மனிதனுக்கு மட்டும் உரியவை அல்லவே. அனைத்து உயிரினங்களுக்கும் எம்பெருமான் அருளவல்லவர்தானே ? இவ்வாறு மூன்றாம் பிறை தரிசன சக்திகளை ஈர்க்கும் அருகம்புற்களை புள்ளிமான்கள் தங்கள் உணவாக ஏற்கின்றன. இத்தகைய மான்களை வேட்டையாடும் புலிகள் அந்த அமிர்த சக்திகளை பம்பை நதியில் சேர்க்கின்றன. இந்த நதியில் நீராடும் பக்தர்களும், இந்த நதி தீர்த்தத்தால் தர்ப்பணம் அளிக்கும் பக்தர்களும் பெறும் பயனை வார்த்தைகளால் விவரிக்க இயலுமா ? அதனால்தான் பம்பா தீர்த்தத்தை மிகவும் புனிதமாக பராமரிக்கும்படி பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நதிகளில் புனிதமானது கங்கை நதி. காரணம் அது சிவபெருமானின் சிரசில் பொலிவது, பொழிவது. ஸ்ரீசபரிமலை ஈசனின் நாமமோ பம்பாவாசன் என்பது. அதாவது பம்பை நதியையே தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டவன் என்று பொருள். நீங்கள் பம்பை நதியின் ஒரு துளி நீரை தரிசனம் செய்தாலும் நீங்கள் அதில் உறையும் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்யும் பேறு பெறுகிறீர்கள் என்றால் இறைவனின் கருணைதான் என்னே. மக்கள் எந்த அளவிற்கு பம்பை நதியின் புனிதத்தைக் கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பது இப்போது புரிகின்றதல்லவா ? மான்கள் மூலம் பெற்ற அமிர்த சக்திகளை புலிகள் பம்பை நதியில் நிரவுவதுடன் சரஸ்வதி தேவியும் வளர் நவமி திதி அன்று கங்கை, காவிரி போன்ற புனித நதிகளில் தன்னுடைய வித்யா சக்திகளை நிரவுகின்றாள் என்பது சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியம் ஆகும். இவ்வாறு நதிகளில் பொலியும் சித்தாமிர்த சக்திகளைப் பற்றி சித்தர்கள் மட்டுமே அறிந்திருந்தாலும் பக்தர்கள் அனைவரும் சரஸ்வதி தேவியை நவராத்திரி நவமி திதி அன்று துதித்து சர்வ வித்யா சக்திகளையும் பெறுவதில் யாதொரு தடையும் இல்லையே. அலகாபாத் திரிவேணி சங்கமம் போன்ற திருத்தலங்களில் சரஸ்வதி கங்கை, யமுனை போன்ற புனித நதி சக்திகளுடன் சேர்ந்து அந்தர்யாமியாக விளங்குகிறாள் என்று இந்த பால் போல் பொலியும் வித்யா சக்திகளையே குறிப்பிடுகிறார்கள் என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உலகில் உள்ள ஜீவன்களில் சிவபெருமானின் சிரசில் பொலியும் சந்திர பகவான் அருளும் அமிர்த சக்திகளை மக்களுக்கு நிரவும் சக்தி படைத்த ஒரே ஜீவன் புலி என்பதையும் புலி மிகுந்த ஒரே நாடு நம் பாரதப் பூமி என்பதும் புலியை வாகனமாக உடைய மூர்த்தி ஸ்ரீஐயப்ப சுவாமி மட்டுமே என்பதே பக்தர்கள் உணர்ந்து இன்புற வேண்டிய சுவையாகும்.
யானை வாகன மூர்த்தி |
புலியே சிறப்புடைய ஐயப்ப வாகனமாக இருக்க ஆரியங்காவில் அருள்புரியும் ஸ்ரீஐயப்ப மூர்த்தி யானை வாகனத்தின்மேல் பவனி வருவது ஏனோ என்ற கேள்வி முளைக்கின்றது அல்லவா ? பம்மை தீர்த்தத்தில் புலிகள் அமிர்த சக்திகளை நிரவுகின்றன என்பதைக் குறிப்பிட்டோம் அல்லவா ? இவ்வாறு புலி வாகனத்தின் மேல் அமர்ந்த ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதால் மட்டுமே தீராத பல நோய்கள் தீரும் என்பது உண்மையே. பலருக்கும் பம்பை நதியைப் பற்றியே தெரிந்திருக்க நியாயம் இல்லை அல்லவா ? அத்தகையோர் பம்பை நதியில் அமிர்த சக்திகளை நிரவும் புலிகளைப் பற்றி அறிந்திருக்க நியாயமில்லையே. அதனால் கருணைக் கடலான ஐயப்ப சுவாமியும் புலிமேல் அமர்ந்து பக்தர்களுக்கெல்லாம் ஏற்படும் கொடிய நோய்களைக் களையும் தன்வந்திரி மூர்த்தியாக அருள் வழங்குகின்றார் என்பதே புலி வாகன ஐயப்பன் மூர்த்தி உணர்த்தும் தரிசன பலனாகும்.
ஆரியங்காவு திருத்தலம்
ஆரியங்காவு திருத்தலத்தில் ஸ்ரீஐயப்பன் தன் தந்தை சிவபெருமானுடனும் புஷ்கலை தேவியுடனும் குடும்ப சகிதமான தரிசனத்தை அளிக்கிறார். எனவே குடும்பத்தைப் பராமரிக்கும் ஒருவருக்கு செல்வம் என்பது அவசியமான ஒன்றல்லவா ? இது ஸ்ரீசாஸ்தா யானை மேல் எழுந்தருளியதன் பின்னணியில் அமைந்த ஒரு காரணமாகும். இவ்வாறு சுவாமி ஒரு காலை மடித்து ஒரு காலை தொங்க விட்டிருப்பதற்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. அவற்றை பக்தர்கள் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்தலே சிறப்பாகும். மூலஸ்தான கருவறையில் இவ்வாறு மூன்று மூர்த்திகள் எழுந்தருளி இருப்பது இந்த விகாரி வருடத்திற்கான சிறப்பான தரிசனமாகும். பொதுவாக யானை வாகனம் செல்வ விருத்தியை அளிப்பதால் வறுமை நிலையில் உள்ள எல்லோருமே இந்த தரிசனத்தால் நற்பலன் பெறுவார்கள் என்பதே ஸ்ரீஐயப்ப பகவானின் கருணை மழையாகும். பொதுவாக, திருத்தலங்கள் மலை உச்சிகளின் மேல், குன்றுகளின் மேலேயே அமைந்திருக்கும். இதற்கு எதிர்மறையாக காமாக்யா திருத்தலத்தைப் போல் பூமியின் அடியில் அமைந்திருப்பதே ஆரியங்காவு திருத்தல சிறப்பாகும். இத்தகைய திருத்தலங்கள் பக்தியைப் பெருக்கும் சக்தி கொண்டவையாகும். வீடுகளில், நில புலன்களில் ஈசான்ய மூலை மற்ற மூலைகளை விட தாழ்ந்து இருத்தலே சிறப்பான வாஸ்து சக்திகளை அளிக்கும். இத்தகைய வாஸ்து இலக்கணங்களை மீறிய வீடு மனைகளை உடையோர் ஆரியங்காவு திருத்தல மூர்த்திகளை தரிசனம் செய்து பேரீச்சம் பழம், தேனில் ஊறிய பலாச்சுளைகளை தானமாக அளித்தலால் இல்லங்களில், தொழிற்சாலைகளில் ஏற்படும் வாஸ்து தோஷங்களை நீக்கும் அருமருந்தாக இத்தகைய வழிபாடுகளும் தான தர்மங்களும் அமையும். இத்தலத்தில் பொலியும் தீர்த்தம் ராஜகூபம் என்றழைக்கப்படுகிறது. ஸ்ரீராம பிரானின் பட்டாபிஷேகத்தின்போது கங்கை, காவிரி போன்ற தீர்த்தங்கள் மட்டுமல்லாது பாரத திருநாட்டில் பொலியும் ஆயிரக் கணக்கான ஆறுகளிலிருந்தும், திருத்தல தீர்த்தங்களிலிருந்தும், நீர்வீழ்ச்சிகளிலிருந்தும், சுனைகளிலிருந்தும், ராமேஸ்வரம் போன்ற கடல்களிலிருந்தும் புனித தீர்த்தங்கள் வேகமாகப் பாய்ந்து செல்லும் குதிரைகள் மேல் ஏற்றிச் செல்லப்பட்டு அயோத்தியை அடைந்தன என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இத்தகைய தீர்த்தங்களில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, தாமிரபரணி, துங்கபத்ரா, பிரம்மபுத்ரா, காயத்ரீ, பல்குனி என்ற 12 நதிகளின் புனித தீர்த்தங்கள் ஸ்ரீராமருக்கும் ஸ்ரீசீதா தேவிக்கும் அபிஷேகமாக அளிக்கப்பட்ட பின்னர் மயிலாடுதுறையில் ஸ்ரீபரிமள ரெங்கநாதர் திருத்தல துளசி தீர்த்தத்தில் ஆரியங்காவு திருத்தல ராஜகூப ஆற்று நீரைக் கலந்து அபிஷேகம் நிறைவேற்றினர் என்பதே இத்தல தீர்த்த மகிமையாகும்
Comments
Post a Comment