Temple info -3379. Thaduthaleeswarar temple,Thandalam,Chennai. தடுத்தாலீஸ்வர ர் கோயில்,தண்டலம், சென்னை
Temple info 3379
கோயில் தகவல்-3379
Sri Thaduthaleeswara Alias Athikesavaperumal Temple, Thandalam
Discover the serene Sri Thaduthaleeswara Alias Athikesavaperumal Temple in Thandalam, an ancient pilgrimage site and architectural marvel with exquisite sculptures and a rich history.
Sri Thaduthaleeswara Alias Athikesavaperumal Temple, Thandalam
History and Significance:
The Sri Thaduthaleeswara Alias Athikesavaperumal Temple is an ancient Hindu temple located in Thandalam, Chennai, Tamil Nadu. It is believed to date back to the 7th century CE and is dedicated to Lord Shiva and Lord Vishnu. The temple is a unique amalgamation of Dravidian and Vijayanagara styles of architecture.
According to legend, the temple was built by the Pallava king Mahendravarman I on the request of Sage Agastya. The sage is said to have been in deep penance near the temple site when he was disturbed by a demon. King Mahendravarman, a devout devotee of Lord Shiva, immediately came to the sage's aid and killed the demon. In gratitude, Sage Agastya requested the king to build a temple dedicated to Lord Shiva and Lord Vishnu.
Deity:
The main sanctum of the temple houses the idol of Lord Thaduthaleeswara (Lord Shiva). He is depicted in the form of a Lingam, with the idol of Lord Athikesavaperumal (Lord Vishnu) placed on top of it. The idol of Lord Vishnu is made of black stone and is believed to be a swayambhu (self-manifested) idol.
How to Reach:
The Sri Thaduthaleeswara Alias Athikesavaperumal Temple is located at a distance of approximately 25 kilometers from Chennai city. It is easily accessible by road, rail, and air.
By Road: The temple can be reached by taking the OMR (Old Mahabalipuram Road) from Chennai.
By Rail: The nearest railway station is the Tambaram Railway Station, which is located about 10 kilometers from the temple.
By Air: The nearest airport is the Chennai International Airport, which is located about 30 kilometers from the temple.
Nearby Temples:
Sri Parthasarathy Temple This temple is dedicated to Lord Krishna and is located about 3 kilometers from the Thaduthaleeswara Temple.
Sri Marundeeswarar Temple This temple is dedicated to Lord Shiva and is located about 5 kilometers from the Thaduthaleeswara Temple.
Sri Arulmigu Karaneeswarar Temple This temple is dedicated to Lord Shiva and is located about 2 kilometers from the Thaduthaleeswara Temple.
அருள்மிகு தடுத்தாலீசுவரர் திருக்கோயில், தண்டலம்.
இறைவன்: தடுத்தாலீசுவரர்
இறைவி : காமாட்சி
விருட்சம் : வில்வம்
ஆகமம் : சிவாகமம்
முருகப்பெருமானின் தேவியான அருள்மிகு வள்ளி முருகனைக் குறித்து தவமியற்றிய மிகப் புராதனமான திருத்தலம் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகில் உள்ள தண்டலம் அருள்மிகு தடுத்தாலீசுவரர் திருத்தலமாகும்.
"இச்சா சக்தியான" வள்ளிப் பிராட்டி உலக நன்மைக்காகத் தன் மணாளன் முருகப்பெருமானைக் குறித்துக் கடுந்தவம் இயற்றினார். வள்ளியின் தவம் பொருட்டு நடைபெற்ற பெருவேள்வியில் இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வந்து கலந்து கொண்டனர்.
இதற்காக அமைக்கப்பட்ட வேள்வி குண்டத்தில் தேவ குருவின் தலைமையில் எல்லாவிதமான சமித்துகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் புஷ்பங்கள் சேர்த்து சுத்தமான நெய்யினால் வேள்வித் தீ மூட்டப்பட்டது. நால் வேதங்களை யும் கற்றறிந்த அந்தணர்கள் வேள்வித் தீயில் திரவியங்களைச் சேர்க்க, அப்பகுதி முழுவதும் வேள்வித் தீயிலிருந்து எழுந்த புகையால் நறுமணம் சூழ்ந்திருந்தது.
வள்ளியின் நீண்ட நெடிய தவம் பலகாலம் நீடித்தது. தன் பிராட்டியிடம் திருவிளையாடல் நிகழ்த்தத் திருவள்ளம் கொண்ட முருகப்பெருமான் வள்ளியின் முன் தோன்றி வரம் அளிக்கத் தாமதம் செய்தார். வருந்திய வள்ளி தேவி, அந்த வேள்வித் தீயில் தன்னையே தன் தலைவனுக்கு அர்ப்பணிக்க எண்ணி, யாக குண்டத்தில் இறங்க முடிவு செய்தார்.
அப்போது ஈசன் வள்ளிக்குத் திருக்காட்சி கொடுத்து அவரை தடுத்தாட்கொண்ட அதே நேரத்தில் முருகப்பெருமானும் வள்ளிக்குத் திருக்காட்சி கொடுத்து அவரை மாலைசூட்டி மணம் புரிந்ததாக இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் இத்தல இறைவனுக்கு "தடுத்தாலீஸ்வரர்" என்ற திருநாமமும் முருகப்பெருமானு க்கு "கல்யாண சுப்ரமணியர்" என்ற திருநாமமும் ஏற்பட்டுள்ளது.
தடுத்தாலீசுவரர்
தண்டலம் தலத்தின் மூலவரான தடுத்தாலீசுவரர் இத்தலத்தில் வாழ்ந்த சித்தர் ஒருவரின் ஜீவ சமாதியின் மேல் அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்த லிங்கத் திருமேனி சுயம்புத் திருமேனி என்பதால் இவர் தீண்டாத் திருமேனியராக வணங்கப்படு கின்றார்.
வரமளிப்பதில் வள்ளலான இந்த ஈசனுக்குப் பௌர்ணமி நாட்களில் நோய் நொடிகளால் பாதிக்கப்பட்ட அன்பர்கள் நோய்கள் நீங்கி நலம் பெற, நெய் அபிஷேகமும் விபூதி அபிஷேகமும் செய்து மலர் மாலைகள் சாற்றி வழிபடுகின்றனர். ஈசனுக்கு அபிஷேகம் செய்த நெய்யை சிறிதளவு பிரசாதமாக அருந்தி, விபூதியை அனுதினமும் அணிந்து வர அவர்களது நோய் விரைவில் நீங்கப் பெறுவதாக அன்பர்கள் பக்தியோடு தெரிவிக்கின்றனர்.
காமாட்சி அம்பிகை
32 வகையான அறங்களைச் செய்து ஈசனின் வாம (இடது) பாகத்தைப் பெற்ற அன்னை காமாட்சி இத்தலத்தின் அம்பிகையாக அருள் பாலிக்கின்றார். அம்பிகையின் திருவுருவச் சிலையில் இயற்கையாகவே தாலி அமைந்திருப்பதால் மணம் ஆகாதவர்களுக்கு மங்களகரமான வாழ்வளிக்கும் அம்பிகையாகத் திகழ்கின்றாள் அன்னை காமாட்சி. இதனால் இந்த அம்பிகைக்குக் "கல்யாண காமாட்சி" என்ற திருநாமமும் வழங்கப்படுகின்றது.
மணமாகாதவர்கள் ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் இத்தலத்திற்கு வந்து மஞ்சள் கயிறும் மஞ்சள் கிழங்கும் சமர்ப்பித்து வழிபாடு செய்து வர விரைவில் திருமணம் நடப்பதாகத் தெரிவிக்கின்றனர். திருமணம் முடிந்த பிறகு இந்த அன்னைக்கு புத்தாடைகள் அணிவித்து மலர் மாலைகள் சாற்றி வழிபாடு செய்கின்றனர். வழிபாட்டுக்கு உரிய மஞ்சள் கயிறும் மஞ்சள் கிழங்கும் இத்தலத்திலேயே வழங்கப்படுகின்றது.
வில்வமரம் விருட்சமாக அமைந்திருக்கும் இத்தலத்தில் தோஷங்கள் நீங்கும் ஜோடி மீன்கள், ஆமை மற்றும் பாம்புகள் சிற்பம் கல்லினால் மேல் கூரையில் செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
தடுத்தாலீசுவரர் திருக்கோயிலுக்கு எதிரே அதாவது திருக்கோயிலை நோக்கியவாறு மேற்குத் திருமுகமாக ஒரு மகா கணபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சித்தி, புத்தி சமேதராக மகா கணபதி அருள்பாலிக்கின்றார். இத்தலமும் பார்ப்பதற்கு மிகவும் புராதனமான அழகான திருத்தலமாகக் காணப்படுகின்றது. இத்தலத்தின் விமானத்தில் அமைந்துள்ள சுதைச் சிற்பங்கள் மிகவும் அழகாக வடிக்கப்பட்டுள்ளன.
புராதனமான தடுத்தாலீசுவரர் தலம் சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இருப்புப் பாதையில் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. செவ்வாய் பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டோ வசதியும் உள்ளது.
இத்தலம் காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரையிலும் நடை சாற்றப்படாமல் தொடர்ந்து தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இத்தலத்திற்கு பூஜை செய்யும் சிவாச்சாரியார் திரு குமார் குருக்கள் அவர்களை 98946 57112
என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Comments
Post a Comment