Temple info -3372. Singandeeswarar Temple,Thiruvur,Thiruvallur. சிங்கண்டீஸ்வரர் கோயில்,திருவூர், திருவள்ளூர்

 Temple info -3372

கோயில் தகவல்-3372

Tiruvur Shringandeeswarar Temple

Discover more
sculptural
artistic
art
Sculptural
artwork
Sculpture
Work of Art
Planet by Marc Quinn
Art
Sculptures
Tiruvur (also spelled as Thiruvur) is a charming village nestled approximately 40 kilometers from Chennai. Its closest well-known neighbor, Tiruvallur, lies about 12 kilometers away. What makes Tiruvur unique is its ancient temple dedicated to Lord Shiva, known as Shringandeeswarar, a deity with a fascinating history.

Highlights:

  • God Shringandeeswarar 
  • Goddess Utpalambal
  • Shiv Linga installed by the sage Rishya Shringa

Legend:


The temple has an enchanting legend associated with it. It is believed that the sage Rishya Shringa, who possessed deer-like horns, consecrated the Shiv Linga within the temple. Thus, the deity came to be known as Shringandeeswarar. It's worth noting that the name is often misspelled as Singandeeswarar, even by temple authorities.

History:

Historical accounts suggest that the temple's origins trace back to the Chola period. It underwent renovations during the Vijayanagara period, bearing testament to the region's rich historical tapestry. Inscriptions from both the Cholas and the Vijayanagara Kings can be found within the temple's premises.

Temple Layout:

The temple faces eastward, featuring a three-tier Raja gopura adorned with two imposing and intricate stucco Nandi figures at the entrance. These Nandi sculptures stand in a unique four-armed, standing posture. The temple tower also boasts inscriptions and the symbol of the Vijayanagara Kings.

The sanctum, also facing east, enshrines a substantial Shiv Linga, Shringandeeswarar. Adjacent to it, a separate south-facing shrine houses the presiding Goddess, Utpalambal. Facing the sanctum, the bali peetha, the flagstaff, and the Nandi mandapa are located.



The Maha Mandapa area is adorned with pillars boasting intricate carvings. Among these artistic sculptures, one particularly stands out, depicting the sage Rishya Shringa Rishi.
Within this grand space, there are stucco icons, including Nataraj-Shivakami and Nandi accompanied by his consort. However, the true gem of the temple is the image of the sage Rishya Shringa alongside the Shiv Linga named Vishwanatha.

The temple grounds consist of a wide, spacious prakra, housing several sub-shrines, including Vallal Peruman (Murugan) and Aththi Mukha Vinayakar. Notable images of Surya, Chandra, Bhairava, Vallalar, and Annanmars (seven warriors) can be found throughout the temple.

The ornate pillars feature various captivating sculptures, such as depictions of Vali worshipping the Linga, an elephant in devotion to the Linga, Nardana Ganapati, and Rishyashringa with the Linga, among others.

There are niche images adorning the surrounding wall, featuring Ganesha, Dakshinamurti, Lingodbhava, Brahma, and Durga. Chandikeshwarar can be found in its customary location within the temple.

Numerous ancient icons discovered during excavations have found their home in various corners of the temple. Notable among them are a well-preserved Murugan near the Amman shrine and a Ganesha welcoming visitors at the temple's entrance. However, some of the recovered sculptures have sustained damage over the years.

Happy travelling.








அருள்மிகு சிங்காண்டீஸ்வரர் திருக்கோயில், திருவூர்.

  இறைவன் : சிங்காண்டீசுவரர்
  இறைவி     : உத்பலாம்பிகை
  விருட்சம்    : வில்வம்
  தீர்த்தம்       : முனி (ரிஷி) தீர்த்தம் 
  ஆகமம்       : சிவாகமம்

    சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில்  நிலையத்திலிருந்து திருவள்ளூர் செல்லும் இருப்புப் பாதையில் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது திருவூர் என்னும் கிராமம். 
தன் பெயரிலேயே "திரு" என்ற அடைமொழியைக் கொண்ட இந்த ஊரில் மிகப் பழைமையான அருள்மிகு சிங்காண்டீசுவரர் திருக்கோயில் உள்ளது. புனிதமான "கூவம்" நதிக்கரை யின் வடகரைத் தலமாக இத்தலம் அமைந்துள்ளது. கூவம் நதியில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் திருத்தலம் அமைந்துள் ளது.

    திருக்கோயிலில் உள்ள லிங்கம் "ரிஷ்ய சிருங்கர்" என்ற முனிவரால் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டதால் இந்த லிங்க மூர்த்திக்கு "சிங்காண்டீஸ்வரர்" என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. இத்தலத்தின் அம்பிகை "உத்பலாம்பிகை" என்று வணங்கப்படுகின்றார். ரிஷ்ய சிருங்கரால் இறைவனுக்கு நீராட்டு செய்ய அமைக்கப்பட்ட தீர்த்தம் " முனி (ரிஷி) தீர்த்தம்" என்று வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த தீர்த்தம் பராமரிப்பு இன்றி காணப்படுகின்றது. தல விருட்சமாக ஈசனுக்கு உகந்த வில்வம் உள்ளது. 
   
     இக்கோயிலின் கருவறையில் ஈசன் சிங்காண்டீசுவரர் கிழக்குத் திருமுகமாக பக்தர்களுக்கு திருக்காட்சி அளிக்கின்றார். ராஜகோபுர வாயிலை அடுத்து மகா மண்டபமும், முன் மண்டப மும் உள்ளன. மகா மண்டபத்தில் உள்ள தூண்கள் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் சோழர் மற்றும் பிற்காலப் பாண்டியர் களின் கலைத்திறனுக்குச் சான்றாக அமைந்துள்ளன. மகா மண்டபத்தில் இத்திருக் கோயிலைச் சார்ந்த துர்க்கை, பைரவர், விஷ்ணு போன்ற சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    கல்வெட்டுகளில் இறைவனது திருநாமம் "ரிஷ்ய சிங்கீசுவரர்" எனவும் இத்திருத்தலம் "பெருமளையூர்" எனவும் வழங்கப்பட்டுள்ளது. இப்பெருமளையூர் தற்போது "பெருமாள்பட்டு" என்று மருவி வழங்கப்படுகினறது. இக்கல்வெட்டின் மூலம் "உலகளந்த சோழ சதுர்வேதி மங்கலமான பெருமுளையூர்" ஈக்காடு கோட்டத்தில் இருந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது.

     பிற்காலப் பாண்டியர்களின் 
                 திருப்பணி 

    முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டு தொடங்கி தெலுங்குச் சோழ மன்னனான விஜய கண்ட கோபாலன் கல்வெட்டு மற்றும் விஜயநகர அரசர்களின் கல்வெட்டுகள் வரையில் மொத்தம் 12 கல்வெட்டுத் தொடர்கள் இத்தலத்தில் உள்ளன.
கிபி 13- ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முழுவதும் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

     சோழ மன்னர்களின் பலம் குறைந்த பின் மதுரையை ஆண்ட பாண்டியர்கள், சோழ மன்னர்களை வெற்றி கொண்டு இந்தப் பகுதிகளை தங்களது ஆட்சி எல்லைக்குள் கொண்டு வந்தனர். அக்காலத் தமிழகத்தின் வடக்கு எல்லையான திருவேங்கடம் வரை உள்ள நிலப்பகுதிகள் பாண்டிய மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இவர்களின் ஆட்சிக் காலத்தில் தங்கள் பங்குக்கு இப் பகுதிகளில் உள்ள பல கோயில்களை புதியதாக நிர்மாணித்தும் செங்கல் தளிகளை கற்றளியாகப் புதுப்பித்தும் திருப்பணி செய்தனர். 

     முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1251-1284) கி.பி. 1261-ல் திருவூர் கோயில் கற்கோயிலாகத் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இதனை "ஒழுகரை" எனப்படும் குலோத்துங்க நல்லூரைச் சார்ந்த திருவண்ணாமலை உடையான் என்பவன் கட்டியுள்ளான். இவன் "வெண்பையூர்" என்றும் "துகடூர்" என்றும் வழங்கப்படும் இடத்தின் தலைவன் எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதே மன்னனின் ஆட்சி ஆண்டைச் சார்ந்த மற்றொரு கல்வெட்டில் இவன் "மலையன் திருவண்ணாமலை உடையான்" என்றும் வழங்கப்பட்டுள்ளான். இம் மன்னனின் 18- ஆவது ஆட்சி ஆண்டில்  ஒழுகரையைச் சார்ந்த "குலத்தறையன்" ஆகிய "பெரியாண்டவன்" என்ற வணிகன் இக்கோயிலுக்கு நிலத்தினை தேவதானமாக அளித்துள்ளான். பாண்டிய மன்னர்களின் காலத்தில் திருவூர் கோயில் மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றுள்ளன.

   பாண்டிய மன்னர்களுக்குப் பின்னர், தெலுங்குச் சோழ மன்னனான விஜய கண்ட கோபாலனின் 18 -ஆம் ஆட்சியாண்டில் இக்கோயில் கணக்குகள் பிச்சாண்டவனான வில்லவரையன் என்பவனால் சரி செய்யப்பட்டுள்ளன. அப்போது "அயத்தூர்" என்ற  தேவதான கிராமம் இம்மன்னனின் 17 ஆம் ஆட்சி ஆண்டு வரை கோயில் கணக்கில் விடுபட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைச் சரி செய்ததுடன், அதிலிருந்து கிடைத்த வருவாயைக் கொண்டு இத்திருக்கோயிலில் சித்திரை மாதத்தில் "சித்திரைத் திருவிழா" நடத்த பயன்படுத்தப்பட்டுள்ளதை யும் கல்வெட்டுகள் தெரிவிக் கின்றன.

   கோயிலின் நுழைவு வாயிலில் உள்ள விஜயநகர அரசர் சாளுவ வம்சத்தினைச் சார்ந்த திம்மைய தேவரின் கல்வெட்டில் இவருக்கு முன்னர் ஆட்சி புரிந்த திப்பைய தேவரின் நினைவாக கி.பி. 1502- ஆம் ஆண்டு இவ்வூர் பொது மக்களும், கேசவராயன் என்பவனும் நியாயக் கட்டணமாக அளிக்க வேண்டிய தொகைக்கு தென்னந்தோப்பினை வாங்கிக் கோயிலுக்குத் தானமாக அளித்துள்ள செய்தி காணப் படுகிறது.

   கி.பி. 1519 -ல் விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவ ராயரின் தளபதி "இம்மடி திருமலை நாயக்கரும்" திருவூர் பொதுமக்களும் சேர்ந்து திருவூரின் அருகில் உள்ள வரதராஜப்பட்டு, மகா மண்டலப் புருஷன்பட்டு ஆகிய கிராமங்களிலிருந்து வசூலிக்கப்பட்ட தண்ணீர் வரியாகிய ஆறு கழஞ்சு பொன்னைக் கோயிலுக்கு வழங்கியுள்ளனர்.

    கல்வெட்டில் தமிழ் நிகண்டு 

    கிருஷ்ணதேவராயர் காலத்தில் தமிழ் நிகண்டினை தொகுத்தவர் மகா மண்டலப் புருஷன் என்பவர் ஆவார். இவரது பெயரால் மகா மண்டலப் புருஷன் பட்டு என்று ஒரு கிராமத்திற்கு பெயரிடப் பட்டுள்ளது. கிருஷ்ணதேவ ராயரின் கி.பி. 1527- ஆம் ஆண்டில் இம்மடி திருமலை நாயக்கரின் தளபதியான சதாசிவ நாயக்கர் என்பவர் திருமலை எனப்பட்ட திருவூர் சிங்கீசுவரம் உடைய நாயனார் கோயிலுக்கு மடவிளா கமாக வீடு கட்ட நிலத்தினை இவ்வூர் மக்களிடமிருந்து வாங்கி வழங்கியுள்ளார்.

     விஜயநகர ஆரவீடு வம்சத்தின் வழிவந்த வெங்கடாத்ரி மன்னர் இக்கோயிலில் உள்ள கரிய மாணிக்கப் பெருமாளுக்கு திருவூர் மற்றும் பெருமுளைப்பட்டு ஆகிய கிராமங்களில் இருந்து பெறப்பட்ட வருவாயை தேவதானமாக வழங்கியுள்ளார். இதில் சிவராம நரசப்பநாயக்கர் என்பவர் அரசரின் பிரதானியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

    சிங்கீசுவரமுடையார் கோயிலின் கருவறை முக மண்டபத்தினைத் திருவூரைச் சார்ந்த அணுக்கி புருஷோத்தமன் பட்டர் வரதன் என்பவர் கி.பி. 14- ஆம் நூற்றாண்டில் நிர்மாணித்து ள்ளார். இதற்கு ஈடாக, அட்டகப் பிள்ளையார் என்ற பிள்ளையார் கோயிலில் இரவில் தீபம் ஏற்றவும், வழிபாட்டுக்காகவும் சிங்கீசுவரமுடையார் கோயிலில் இருந்து தனக்குச் சேர வேண்டிய பணம் மற்றும் நெல்லினை தானமாக வழங்கியுள்ளார்.

   இக்கல்வெட்டில் குறிப்பிடப்படும் அட்டகப் பிள்ளையார் கோயில் தற்போது கூவம் ஆற்றின் மேற்குக் (?)கரையில் உள்ள சிறிய பிள்ளையார் கோயிலாக இருக்கலாம் என்று கருதப்படு கின்றது.

    விஜயநகர மன்னர்களின் காலத்தில் இத்திருக்கோயிலுக்கு மூன்று நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. ராமேசுவரர், திருநாகேசுவரர், ஜம்புகேசுவரர், ரிஷ்ய சிங்காண்டீசுவரர் போன்ற சிற்பங்கள் அர்த்தமண்டபத்தில் உள்ள ஒரு தூணின் நான்கு பக்கங்களிலும் காணப்படு கின்றது.

       சிறந்த பரிகாரத் தலம்

    மூல நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு சிறந்த பரிகாரத்தலமாக திரூர் சிங்காண்  டீசுவரர் திருத்தலம் திகழ்கின்றது.
பொதுவாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களை மணம் செய்தால் மாமனாருக்கு ஆகாது என்று ஒரு நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்படுகின்றது. ஆனால் ஜோதிடபூர்வமாக இது குறித்து எந்த ஆதாரமும் இல்லை. இதனை பல ஜோதிடர்கள் விவரித்தாலும்  மக்கள் புரிந்து கொள்ளாமல் மூல நட்சத்திரம் என்றாலே அந்த ஜாதகம் வேண்டாம் என்று சொல்லி விடுகின்றனர்.
 
   இக்காரணங்களால் திருமணத் தடை உள்ள அன்பர்களும் புத்திர பாக்கியம் வாய்க்காத அன்பர்களும் பிரதோஷ நாளில், பிரதோஷ வேளையில் ஒரு கலசத்தில் நீர் எடுத்து திருக்கோயில் பிராகாரத்தில் மூன்று முறை வலம் வந்து நந்தி  எம்பெருமானுக்கு கலச நீரை அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்கின்றனர். இதனால் மணமாகாதவர்களுக்கு திருமணம் உடனே கை கூடுவதாக வும் குழந்தைப் பேறு இல்லாதவர் களுக்கு அவர்களது இல்லங்க ளில் விரைவில் மழலை ஒலி கேட்பதாகவும் தெரிவிக்கின்றனர் பலனடைந்த அன்பர்கள்.

    இத்திருக்கோயிலில் உள்ள ஆறுமுகப் பெருமானுக்கு  கந்தசஷ்டியின் போது சூரசம்மார விழா சிறப்பாக நடைபெறுகின் றது. பங்குனி உத்திர விழாவும் இத்தலத்தில் நடைபெறும் சிறப்பான விழாவாகும். 

    இந்தியாவின் முதல் கூட்டுறவு சங்கம் 1904- ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஊரும் திரூர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

    திருக்கோயில் காலை 6.00 மணி முதல் 8:30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும். 

    மேலும் விபரங்களுக்கு  கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

   98840 67957
   87542 10850

© முன்னூர் ரமேஷ்
 8939294677

_______________________________________

Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -1012 Val vill ramar temple,Thirupullabhoothangud வல்வில் ராமர் கோயில், திருப்புள்ளபூதங்குடி. Divya Desam No.10

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை