Temple info -3364. Kayavoor Sivan temple,Thanjavur. காயாவூர் சிவன் கோயில்
Temple info-3364
கோயில் தகவல்-3364
Kayavoor Shiva Temple, Thanjavur

Address
Kayavoor Shiva Temple, Kayavoor, Pudukottai Circle, Thanjavur -614628
Diety
Shiva Amman: Selangaranayaki
Introduction
Kayavur is a small village located on the road to Pattukkottai, and the east of Karambakudi in Pudukkottai district. The temple is dedicated to lord Shiva and his consort Selangaranayaki. Plants have sprouted in the ancient plane of the temple. In front of the temple is a beautiful Pond with turbid water. Inside the temple they are the shrines of Lord Shiva, Ambal, Ganesha, Lord Murugan, Chandikeswarar, Bhairvar, Sun, dhashinamoorthy and Gaja lakshmi. Outside the temple are Navagraha Sanctum and the Great Shiva Linga. Anointing services are held on special days.
Century/Period/Age
1000-2000 Years old
Nearest Bus Station
Kayavoor
Nearest Railway Station
Pattukkottai
Nearest Airport
Trichy
தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை வட்டம், காயாவூர் சிவன்கோயில்
Kayavur sivan temple
பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் 7 கிமி சென்று வலது புறம் திரும்பும் புதுக்கோட்டை சாலையில் 2 கிமி தூரம் சென்று காயாவூர் சாலையில் 2 கிமி சென்றால் காயாவூர் கிராமத்தை அடையலாம்.
"காயா" என்பது அதன் அழகிய நீல நிறப் பூக்களுக்காக சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. காசா, அஞ்சனி, பூங்காலி போன்ற பல பெயர்களில் இந்த மரம் அழைக்கப்படுகிறது. இந்த மரம் காய்க்காது என்பதால் 'காயா' என அழைக்கப்படுகிறது. இம்மரத்தின் பெயரால் தான் இவ்வூர் காயா ஊர் என அழைக்கப்பட்டு வருகிறது என கூறலாம். காடுகள் அழிந்தாலும் காயா அழியாது என ஒரு சொலவடை உண்டு திருமாலை காயாம்பூ மேனியன் என சொல்வர் ஏனெனில் பூக்கள் மயில் நீலத்தில் காண்போர் மனதை கொள்ளை கொள்ளும்.
இவ்வூரின் வட கிழக்கில் ஒரு அழகிய சிவாலயம் பெரிய குளத்தின் கரையில் உள்ளது.
இறைவன் அனந்தீஸ்வரர் இறைவி சௌந்தரநாயகி
ஆதிசேஷன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், தட்சகன், சங்கபாலன், பதுமன், மற்றும் மகாபதுமன். எனும் அஷ்ட நாகங்களில், அனந்தன் எனும் நாகம் வழிபட்டதால் இப்பெயர் பெற்றார் என ஒரு வரலாறும் உள்ளது. நாகதோஷம் உள்ளோர் அனைவரும் இக்கோயில் இறைவனை வணங்கி பரிகாரம் செய்து கொள்ளலாம் என்கின்றனர்.
காட்டுமன்னார்கோயில் சிவாலயத்திலும் இறைவன் இறைவி பெயர் இதுவே; அங்கும் இதே வரலாறு சொல்லப்படுகிறது.
அனந்தீஸ்வரர் என்றால் முதலும் முடிவும் இல்லாத பரம்பொருள் என்பது பொருள்.
இறைவன் கிழக்கு நோக்கிய அழகிய திருக்கோயிலில் குடி கொண்டுள்ளார், அம்பிகை தெற்கு நோக்கிய திருக்கோயில் ஒன்றில் உள்ளார். நேர்த்தியான கருங்கல் கட்டுமானம் கொண்டுள்ளது திருக்கோயில். கருவறை இடைநாழி மற்றும் கருங்கல் தூண்கள் தாங்கிய முகமண்டபம் என உள்ளது அதில் காலபைரவர் சனிபகவான் சந்திரன் உள்ளனர்.
இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக காட்சி தருகிறார் அம்பிகையும் அழகான தோற்றத்தில் நின்ற கோலத்தில் உள்ளார். முகப்பு மண்டபத்தின் வெளியில் தனியாக ஒரு மண்டபத்தில் அழகிய நந்தி சற்று நீண்ட கழுத்துடன் உள்ளது. 17 - 18 ம் நூற்றாண்டை சேர்ந்த கட்டுமானம் என்றே தோன்றுகிறது. தற்போது ஊர் மக்களால் திருப்பணிகள் தொடங்கப்பெற்று பணிகள் நடந்து வருகின்றது. பிரகாரத்தில் சிற்றாலயங்கள் ஏதுமின்றி இருந்த நிலையை மாற்றி தற்போது புதிய சிற்றாலயங்கள் அமைக்கப்படுகின்றன. ஒரு விநாயகர் ஒரு லிங்க மூர்த்தி முகமண்டப வாயிலில் இருத்தப்பட்டுள்ளது. நந்தியை ஒட்டி தனியாக செங்கல்லால் ஆன ஒரு நவக்கிரக மண்டபம் உள்ளது.
விரைவில் பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்கு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் நடைபெறும் என நினைக்கிறேன். அனைவரும் இயன்ற உதவியினை செய்தளிக்க வேண்டுகிறேன். தொடர்பு எண் தேவைப்படுவோர் கேளுங்கள்.
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்
நன்றி கடம்பூர்விஜய்
Comments
Post a Comment