Temple info-3362 Adinarayana/Aadinayaka Perumal Temple,Gopurapatti,Tiruchirapalli. ஆதிநாராயண பெருமாள் கோயில்,கோபுரபட்டி, திருச்சிராபள்ளி
Temple info -3362
கோயில் தகவல்-3362
Aadi Narayana/Nayaka Perumal, Gopurapatti, Tiruchirappalli
Basic information about the temple
| Moolavar: | Aadi Narayana Perumal | Ambal / Thayar: | Aadi Nayaki |
| Deity: | Perumal | Historical Name: | |
| Vriksham: | Teertham: | ||
| Agamam: | Age (Years): | ||
| Timing: | – To – & – To – | Parikaram: | |
| Temple Group: | – | ||
| Sung By: | Temple Set: | ||
| Navagraham: | Nakshatram: | ||
| City / Town: | Gopurapatti | District: | Tiruchirappalli |
| Maps From (Click): | Current Location | Tiruchirappalli (15 Km) | Perambalur (54 Km) |
| Ariyalur (64 Km) | Thanjavur (67 Km) |
Location
Gopurapatti is located about 20km from Trichy, off the road to Tiruvellarai and Thuraiyur.
Sthala puranam and temple information
The temple is situated on, and surrounded by, land belonging to the Srirangam Ranganathar temple, between two rivers (Peruvalavan and Kamba, which are now only small canals). The temple’s history itself is connected with the Srirangam temple, and is very interesting.

In the early 14th century CE, Islamic troops of Allaudin Khilji, under the command of Malik Kafur, invaded the Pandya kingdom, including areas in and around Trichy. In order to protect Perumal at the temple, Pillai Lokacharyar and his followers hid the moolavar behind a wall they constructed in the Srirangam temple, and moved the utsava murti to the nearby Sundararaja Perumal (Azhagiya Manavalar) temple at Palayanallur. The daily pujas of Srirangam were conducted at Gopurapatti instead, and this tradition continues even till today, where annual tarpanam rituals are carried out (on Aadi Amavasya) on the banks of the Peruvalavan river, for those who sacrificed themselves to protect the Lord. Many years later, after the invading forces were driven back, the idols were restored at Srirangam by Kempanna and the Hoysalas. It is also believed that some renovation was done by a Lankan king in the 15th century.
The puranam of the temple is that the local Vaishnavite people – who used to till the lands here that belonged to the Srirangam temple – used to provide a measure of rice every day to the Lord at Srirangam, and would gather here at this temple for that purpose. One day, the measure went missing, and the people were very concerned as to how they would be able to make their offering. Lord Vishnu himself came with a measuring instrument, to relieve the people of their worry. The moolavar at this temple is in Bala Sayana Kolam, with a measuring instrument (padi) in his hand.
Other information for your visit
Nearby is the Sundararaja Perumal (Azhagiya Manavalar) temple at Palayanallur, where the utsava murti of Srirangam Ranganathar temple was kept during the Islamic invasion (see puranam above).
Tiruvellarai Pundarikaksha Perumal temple, a Divya Desam, is located about 10 km away. Close to this temple, or on the way from Trichy, are also the Gneeli Vaneswarar temple at Tiruppaigneeli (Paadal Petra Sthalam) which has been referred to above, Uttamar Koil Perumal temple, and the Bhoominathar temple at Mannachanallur. The Maatruraivaradeeswarar temple (Paadal Petra Sthalam) at Tiruvasi is a small diversion from Uttamar Koil.
Trichy is the nearest major city, and is served by an international airport. Being in roughly the geographical centre of Tamil Nadu, Trichy is well connected by trains to the rest of the state and with other destinations as well.
There are several accommodation options in Trichy across all budgets.
கோபுரப்பட்டி ஸ்ரீ ஆதிநாயகி ஸமேத ஸ்ரீ ஆதிநாயகர் பெருமாள் ஸந்நிதி, அழகிய மணவாளம் PO., மண்ணச்சநல்லுார் தாலுக்கா. திருச்சி
வைணவம் வளர்த்த ஊர்..!
1323ம் ஆண்டு வீர வல்லாளன் என்னும் ஹொய்சாள மனனனால் குடமுழுக்குச் செய்விக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் போன்றதொரு நிர்மாணம்..! இந்த பெருமாளும் தெற்குப் பார்த்த சயனம்..! பெருவள வாய்க்கால், கம்பலாறு எனும் இரு காவிரி நதி பாயும் வாய்க்கால்கள் நடுவே அமைந்த ஊர்..!
1324 – மாலிக்காபூர் திருவரங்கத்தின் மீது படையெடுத்து 12000 வைணவர்களின் தலையினை கொய்து பெருங்கொலை செய்துள்ளான்..! சுமார் 750 வைணவர்கள் மட்டும் “கந்தாடை தோழப்பர்” என்பார் தலைமையில் இந்த ஊரில் தஞ்சம் புகுந்து இந்த அரங்கனை ஸ்ரீரங்கம் போன்று கொண்டாடியுள்ளனர்..! ஸ்ரீரங்கத்தில் இறந்தோர் அனைவருக்கும் நீத்தார் கடன்களை பெருவள வாய்க்காலின் கரையில் செய்துள்ளனர்..! இந்த சடங்கினை இன்று வரை இந்த கிராமத்து மக்கள் பிரதி வருடந்தோறும் ஆடி அமாவாஸை அன்று, பெருவள வாய்க்காலின் கரையில், செய்து வருகின்றனர்..! நம்பெருமாள் , அழகிய மணவாளம், கோபுரப்பட்டி ஆகிய ஊர்களில் தங்கியிருந்து, அஙகிருந்து மதுரைக்குத் தப்பிச் சென்றுள்ளார்..! திரும்ப 1371ம் ஆண்டு கோபண்ணா தலைமையில் திரும்ப ஸ்ரீரங்கத்திற்கு பெரும் படையுடன் திரும்பிய போது, இந்த ஊர் மக்கள் ஸ்ரீரங்கம் சென்று தயிர் விற்பவர்கள் போன்றும், வணிகர்கள் போன்றும் மாறுவேடத்தில் உளவறிந்து வந்திருக்கின்றனர்..! இநத ஊரின் வழியே, இங்கெல்லாம் தஙகி உபசாரங்கள் கண்டருளியபடி, திருவரங்கம் திரும்பியுள்ளார் திருவரங்கன்..! எஞ்சியிருந்த வைணவர்களைக் காத்த ஊர்..! வைணவம் வளர்த்த ஊர்..!
வீர வல்லாளன் பெரும் வீரன்..! அசகாய தீரன்..! அரங்கனின் பக்தன்..! மொகலாயர்களிடம் அஞ்சாத நெஞ்சுரத்துடன் போர் புரிந்துள்ளான்..! இவர்களை ஓட ஓட விரட்டியுள்ளான்..! மதுரை வரை சென்று போரிட்டு மாய்ந்து்ள்ளான்..! மதுரை மதில் சுவரில் இவன் உடம்பை பதப்படுத்தி மாலிக்காபூர் படையினர் தொங்கவிட்டுள்ளனர்..! இவன் போர் புரிந்த போது இவனது வயது 86..!
இத்தகைய பெருமைகள் வாய்ந்த கோபுரப்பட்டி 2010ம் ஆண்டு பழமை மாறாமல் புனுருத்தாரணம் செய்விக்கப்பட்டு, தற்சமயம் முத்தங்கியுடன் பழமையான மூலவர், புதுப் பொலிவுடன் சேவை சாதிக்கின்றார்..!
எப்படிச் சென்றாலும் ஸ்ரீரங்கத்திலிருந்து 15 கி.மீ க்குள் ஊர் வந்து விடும்..! அடியார்களை காத்த இவ்வரங்கனையும் தரிசிப்போம் வாருஙகள்..! தாஸன் – முரளீ பட்டர்
================================================================
Gopurapatti Sri Aathinayagaperumal Thirukkoil Maha Samprokshanam – 07.09.22
Kindly click the following link for utsava pathirikai and photos :
https://photos.app.goo.gl/4g4PWyKEgZ5XMbzb6
https://photos.app.goo.gl/iDix6BReyE3MF4Yd9
https://photos.app.goo.gl/kbWWB5x187mAEFFv7
==============================================================
கோபுரப்பட்டிப் பெருமாள் கோயில் பாலாலயம் – 01.06.2022 (ஸ்ரீரங்கம் முரளீ பட்டர்)
கோபுரப்பட்டி – அரங்கன் துயிலும் இன்னொரு அற்புதத் தலம். ஏறத்தாழ எழுநுாறு ஆண்டுகள் கழித்து, கிளர்ந்தெழுந்தத் திருத்தலம். மண்ணும், கல்லும் சிதறிக்கிடந்த நிலை பலகடந்து, மனதிற்கினியனாய் அரங்கன் பள்ளிக்கொண்டு, கண்ணுக்கு விருந்தாய் மாறிய ஒரு மாயாஜாலம் நிகழ்த்திய ஊர்..! விண்ணும் மண்ணும் வணங்க, ஆறு நுாற்றாண்டுகள் கடந்து, கட்ந்த 27.08.2010 அன்று சிறப்பாக நடந்தேறிய மஹாஸம்ப்ரோக்ஷணம், தற்சமயம் பனிரெண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில், நாம் காண, கண்டு வணங்கி மகிழ மீண்டும் விரைவில் நடைபெறவுள்ளது.! இதற்காக வருகின்ற வைகாசி மாதம் 18ம் நாள், 01-06-2022 அன்று பாலாலயம் நடைபெறவுள்ளது..! இதில் தாங்கள் அனைவரும் பங்குக் கொண்டு, இறையருள் பெறவேண்டி அன்புடன் அழைக்கின்றேன். இத்துடன் நடைபெறவுள்ள திருப்பணிகளுக்கான விவரங்களையும் இணைத்துள்ளோம்..! தாங்களனைவரும் அவசியம் தாங்களால் ஆன உதவிகளை அவசியம் செய்யுமாறு அன்போடு வேண்டுகின்றேன். நாமனைவரும் இவ்வரிய கைங்கர்யத்தில் கைகோர்த்து கூடி மகிழந்து கொண்டாடுவோம் வாருங்கள்.! நமஸ்காரம்..!
அன்புடன் – முரளீ பட்டர்
லீலாசுகர் எழுதிய “கிருஷ்ண கர்ணாம்ருதம்” எனும் அற்புதமான காவியத்தில்,
”க்ருஷ்ணேனாம்ப கதேன ரந்து-மதனா
ம்ருத்பக்ஷிதா ஸ்வேச்சயா”
”…அம்மா..! விளையாடுவதற்கு வந்த கிருஷ்ணன் மண்ணைப் பட்சணம் போன்று புசிக்கின்றான்..” என்று பலராமன் தாயான யசோதையிடம் கூறுகின்றான். வாயைத் திறந்து பார்த்த யசோதைக்கு உலகமே அதில் தெரிந்து மயங்குகிறாள்..!
மண்ணையும் அவன் தின்கிறான் – வெண்ணையையும் அவன்தான் களவாடுகின்றான். அலகிலா விளையாட்டு அவனுடையது.
இது போன்று பாம்பணைத் துறந்து மண்தரையில் பாம்புப் புற்றுகள் சூழ, கோபுரப்பட்டிப் பெருமாள் துயின்றதையும் கண்ணுற்று வருந்தின காலம் சென்று, நம் வருத்தம் தீர்ந்திட இன்று பாம்பணையில் கம்பீரமாகப் பள்ளி கொள்ளும், கண் கொள்ள பாக்கியமும் கிடைக்கப் பெறுகின்றோம்.
இன்னும் கோலகலமாக கோயிலை மாற்றுவோம். நடைபெறவுள்ள திருப்பணியிலும், மஹா ஸம்ப்ரோக்ஷணையிலும் பங்கு கொண்டு, பள்ளி கொண்டானின் பரம அனுக்ரஹத்தினைப் பெறுவோம் வாருங்கள்..!
Comments
Post a Comment