Temple info -3344. Pannaipatti Kuttykaradu Aadhimurugan temple,Dindukkal. பண்ணைப்பட்டி குட்டிகரடு ஆதி முருகன் கோயில்,திண்டுக்கல்

 Temple info -3344

கோயில் தகவல்-3344












Dindigul district, Dindigul taluk, Pannaipatti kuttikaradu Adhimurugan temple. 

Pannaipatti kuttikaradu Adhimurugan temple 


If you come to Rediyar Chatram on Dindigul - Ottanchathram road and turn left, you will reach Patala Sembu Murugan temple. Beyond that, go to Thethupatti on the Paarapatti - Ottanchathram road. There is a small hill in Pannaipatti Kuttikaradu village, 2 km west of the town, on which there is a small Perumal temple. 


A hill was leveled at a height of a hundred feet from the foot of the hill and a small temple has been built for Murugan. 


At this place, there is a cave-like structure on a rock, it is said that Bogar Siddhar performed penance here. That big rock is also here and a Murugan temple has been built next to it. Murugan, who was from this village, asked him to build a temple for him in his dream, and he started building a temple on the first level of the hill with his own money. The temple was built and completed in a month. The electricity connection was also received on the same day. Permission was also given to lay a path from the foot of the hill on the same day. It is said that everything is the grace of this Adi Murugan. 


There is a small Mahalakshmi temple at the foot of the hill. If you go up the dirt road that slopes upwards beyond it, Idumban welcomes us. The temple faces east and has an Aluyara Antikola Murugan in the sanctum sanctorum. There is a Vinayagar shrine on the side wall. There is a small ancient cave temple on the south side, which has a small statue of Bogar Siddhar.

The beautiful mountain scenery around makes us mesmerized. 


There is also a Perumal temple on the top of the hill. Since there is no proper path, it is difficult to climb. A suitable place to visit in a group.

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் வட்டம், பண்ணைப்பட்டி குட்டிகரடு ஆதிமுருகன் கோயில். 

Pannaipatti kuttikaradu Adhimurugan temple 


திண்டுக்கல் – ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள ரெட்டியார் சத்திரம் வந்து இடதுபுற சாலையில் திரும்பி சென்றால் பாதாள செம்பு முருகன் கோயில் அதையும் தாண்டி பாறைப்பட்டி – ஒட்டன்சத்திரம் சாலையில் உள்ள தெத்துப்பட்டி சென்று ஊரின் மேற்கில் 2 கிமி தூரத்தில் பண்ணைப்பட்டி குட்டிகரடு  ஊரில் சிறிய மலைக்குன்று ஒன்று உள்ளது அதன் மேல் ஒரு சிறிய பெருமாள் கோயில் உள்ளது. 


மலையடிவாரத்தில் இருந்து நூறடி உயரத்தில் மலை சமப்படுத்தப்பட்டு ஒரு சிறிய கோயில் ஒன்று முருகனுக்கு எழுப்பப்பட்டுள்ளது 


இந்த இடத்தில் ஒரு பாறையில் குகை போன்ற அமைப்பு உள்ளது இங்கு தான் போகர் சித்தர் தவம் செய்ததாக கூறுகின்றனர். அந்த பெரிய பாறை ஒன்றும் இங்கே உள்ளது இதை ஒட்டி ஒரு முருகன் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வூரை சேர்ந்த திரு.... அவர்களின் கனவில் தமக்கு ஒரு கோயில் எழுப்புமாறு  முருகன் கூற தன் சொந்த பணத்தில் மலையின் முதல் மட்டத்தில் கோயில் ஒன்றை எழுப்ப ஆரம்பிக்கின்றார், ஒரே மாதத்தில் கோயில் எழும்பி குடமுழுக்கும் கண்டுள்ளது.  கேட்ட ஒரே நாளில் மின் இணைப்பும் கிடைத்துள்ளது. ஒரே நாளில் மலையடிவாரத்திலிருந்து பாதை போட அனுமதியும் கிடைத்துள்ளது. எல்லாம் இந்த ஆதி முருகனின் அருள் தான் என்கின்றனர். 


 மலையடிவாரத்தில் சிறிய மகாலட்சுமி கோயில் உள்ளது. அதனை தாண்டி சரிவாக மேலேறும் மண் சாலையில் மேலேறினால் இடும்பன் நம்மை வரவேற்கிறார். கிழக்கு நோக்கிய திருக்கோயில், கருவறையில் ஆளுயர ஆண்டிக்கோல முருகன் உள்ளார். பக்க வாட்டில் விநாயகர் சன்னதி உள்ளது. தென்புறம் சிறிய பழமையான குகைகோயில் உள்ளது அதில் சிறிய அளவில் போகர் சித்தர் சிலை உள்ளது.

  சுற்றிலும் அழகிய மலைப்பிரதேச காட்சி நம்மை மெய்மறக்க செய்கிறது. 


மலை உச்சியில் பெருமாள் கோயில் ஒன்றும் உள்ளது. சரியான பாதை இல்லாததால் சிரமத்துடன்  ஏற வேண்டியதிருக்கும். ஒரு குழுவாக சென்றுவர ஏற்ற இடம் .


#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்


நன்றி கடம்பூர் விஜய்

Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -1012 Val vill ramar temple,Thirupullabhoothangud வல்வில் ராமர் கோயில், திருப்புள்ளபூதங்குடி. Divya Desam No.10

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை