Temple info -2244 Kalahestheeswarar Temple, Purasakudi, Thanjavur காளஹஸ்தீஸ்வரர் கோயில்,புரசகுடி,தஞ்சாவூர்

 Temple info -2244

கோயில் தகவல் -2244


Arulmigu Kalahastiswar Temple,Purasakudi,Thanjavur


The Village obtained the name of Purasakudi, due to the sthalavruksham of this Shiva Temple. The parivara deities names are starts with Gnana. 

The Village obtained the name of Purasakudi, due to the sthalavruksham of this Shiva Temple. The parivara deities names are starts with Gnana. This Temple is believed to be the “Southern Kalahasti”.

Moolavar : Sri Gnana Kalahastheeswarar

Consort : Sri Gnanambigai

Some of the salient features of this temple are….

The temple is facing east with balipeedam and rishabam. Stucco image of Shiva and Parvati are on the Rishaba mandapam. Moolavar is on a square avudayar. In koshtam Vinayagar, Dakshinamurthy, Gnana Maha Vishnu, Gnana Brahama and Gnana Durga.

Ambal is in a separate sannidhi facing south. Ambal is in standing posture with abhaya varada hastam.

In praharam, Gnana Vinayagar, Gnana Valli Devasena Subramaniar, Gnana Saraswati ( with right hand in Chin mudra and left hand is holding chuvadi / palm leaves ), Gnana Lakshmi, Gnana Suriyan, Navagrahas, Gnana Chandikeswaras ( Two ), Gnana Sundara Varadaraja Perumal with Ramar, Sita, Lakshman, Anjaneyar, Alwars, Stala Vruksham Purasa Tree with a Shiva Lingam and VivakGnana Shiva Lingam. .


ARCHITECTURE

The temple consists of sanctum sanctorum, antarala and ardha mandapam. The sanctum sanctorum is on a upanam and pada bandha adhistanam with jagathy, three patta kumudam and pattikai. The bhitti starts with vedikai. The pilasters are of Vishnu kantha pilasters with kalasam, kudam, palakai and vettu pothyal. The temple was constructed with stone from upanam to half of the wall. The prastaram consists of valapi and kapotam. The Vimanam is of eka tala with greevam and vesara sigaram. Shiva, Dakshinamurthy, Maha Vishnu and Brahma are in the greeva koshtam.


HISTORY AND INSCRIPTIONS

It is believed that the original temple belongs to 11th to 12th century Chozha period, received contributions from Pandyas, Nayakas and Maratas. Pandya’s, Sundara Pandyan period inscription starts with his meikeerthi.


LEGENDS

As per the legend, Sri Kannappar ( Original name was Thinnan ), one of the 63 nayanmar and an ardent devotee of Shiva. He used to offer the meat of the animals which he hunted in the forest. Shiva wants to show Kannappar’s bhakthi, to this world and tested him through flowing of blood from his eyes. First Kannappar removed his one of the eye and applied to Shiva. Now the flood started came from the second eye too. Kannapar, hold Shiva’s eye spot with his leg and tried to remove his second eye too. About to remove, Lord Shiva appeared before Kannappar and blessed him.

In another Legend, Shiva was worshipped by a snake with precious gems, and Elephant worshipped with flowers. Hence Shiva is being called as Kalahastheeswarar.



*🙏 இன்றைய கோபுர*

*தரிசனம் 🙏*


*தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்நாடு புரசக்குடி அருள்மிகு காலஹஸ்தீஸ்வரர் ஆலயம்.*


*கோபுர தரிசனம் - கோடி புண்ணியம்*


*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்*


*மூலவர் :- காளஹஸ்தீஸ்வரர்*


*அம்மன்/தாயார் :- ஞானாம்பிகை*


*பழமை :- 500-1000 வருடங்களுக்கு முன்*


*ஊர் :- புரசக்குடி*


*மாவட்டம் :- தஞ்சாவூர்*


*மாநிலம் :- தமிழ்நாடு*


*திருவிழா:*


*அன்னாபிஷேகம், சிவராத்திரி, பிரதோஷம்*


*தல சிறப்பு:*


*ஞானம் பெற இங்குள்ள ஞானாம்பிகையை வழிபடுவதும், இங்குள்ள தட்சிணா மூர்த்தி விக்கிரகத்தின் இடப்புறக் காலுக்குக் கீழ் அடியவர் சிற்பம் ஒன்று உள்ளதும் தலத்தின் சிறப்பு.*


*திறக்கும் நேரம்:*


*காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.*


*முகவரி:*


*அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்,அய்யம்பேட்டை சூலமங்கலம் தொலைவில் புரசக்குடி, கும்பகோணம், தஞ்சாவூர்.*


*போன்:*


*+91 99411 28535, 90252 58547*


*பொது தகவல்:*


*இங்கு பைரவர், சூரிய பகவான், சந்திர பகவான், சனி பகவான், ஆஞ்சநேயர், விநாயகர், வரதராஜ பெருமாள், முருகப் பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் குடி கொண்டுள்ளன. பிராகாரத்தில் கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி குடி கொண்டுள்ளார்.*


*பிரார்த்தனை:*


*இங்குள்ள சிவனையும், அம்மனையும் வழிபட்டால் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.*


*நேர்த்திக்கடன்:*


*பக்தர்கள் இங்குள்ள சுவாமிக்கு பால், தேன் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக் கடனை செலுத்து கின்றனர்.*


*தலபெருமை:*


*பலிபீடம், நந்திதேவர் தாண்டி நடந்தால் கிழக்குப் பார்த்து தரிசனம் தருகிறார் காளஹஸ்தீஸ்வரர். அழகான லிங்கத் திருமேனி.*


*பிரதோஷ தினங்களில் இங்கு வழிபாடு நடக்கிறது. இவர் தவிர காசி விஸ்வநாதர், விஸ்வக்ஞானர் என்கிற திருநாமத்துடன் மேலும் இரு லிங்கத் திருமேனிகள். தெற்கு நோக்கிய ஞானாம்பிகை. சகல ஞானத்தையும் தருபவள்.*


*மற்ற சிவாலயங் களில் தரிசிக்கக் கிடைக்கும் மூர்த்தியைப் போல் இல்லாமல் இங்கு வித்தியாசமாக தரிசனம் தருகிறார் இந்த தட்சிணாமூர்த்தி. இவரது விக்கிரகத்தின் இடப்புறக் காலுக்குக் கீழ் அடியவர் சிற்பம் ஒன்று காணப் படுகிறது.*


*நின்ற நிலையில் இருகரம் கூப்பி வணங்கிய நிலையில் மீசை, தாடியுடன் இடுப்புக்குக் கீழாக அரை ஆடை அணிந்து இந்த அடியவர் காணப் படுகிறார்.*


*இந்த சிற்பம் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தியது என்று சொல்லப்படுகிறது. எனவே, 13-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டை ஆண்ட அந்த மன்னனின் வடிவம்தான் இது என்று கருதவும் இடம் உண்டு என்கிறார்கள்.*


*தல வரலாறு:*


*19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புரசக்குடியில் வாழ்ந்தவர் ராமய்யர். மிகவும் ஆச்சாரமான குடும்பம். அந்தக் காலத்தில் புரசக்குடியில் அந்தணர்கள் பெருமளவில் வசித்து வந்தனர். வேத வித்துக்களாக அவர்கள் விளங்கினார்கள்.*


*அதிகாலையில் எழுந்து ஆற்றங் கரையில் ஸ்நானம் செய்து அனுஷ்டானங்களை முடித்து வீடு திரும்புவார்கள். வீட்டில் அமர்ந்து அட்சர சுத்தமாக வேதம் சொல்லுவார்கள்.*


*பிறகு, காலை ஆகாரத்தை முடித்து விட்டு வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு வயல் களுக்குச் சென்று விளைச்சலைப் பார்வை யிடுவார்கள்.*


*இதுதான் அவர்களது வாடிக்கை. ராமய்யரும் அப்படித்தான். ராமய்யருக்கு சுப்பிரமணியன், சந்திரசேகரன் என்று இரு மகன்கள்.*


*இவர்களில் சந்திரசேகரன் - பார்வதி அம்மையார் தம்பதிக்குப் பிறந்தவர்தான் வேங்கடராமன் எனும் சி.வி. ராமன்.*


*ஆரம்பப் பள்ளிக்குப் பிறகு கல்கத்தா போய் நிதித்துறை படிப்பு முடித்தார் சி.வி.ராமன். பிறகு, அறிவியல் ஆய்வில் மூழ்கி விட்டார்.*


*உலகின் மிகப் பெரிய விருதான நோபல் பரிசை 1929-ல் பெற்றார். பிரிட்டிஷ் அரசாங்கம் கௌரவ விருதாகக் கொடுத்த சர் பட்டம்தான் இவருடைய பெயருக்கு முன்னால் ஒட்டிக் கொண்டிருக் கிறது.*


*புரசக்குடியைச் சேர்ந்த சி.வி. ராமன் மட்டும் நோபல் பரிசு வாங்க வில்லை. இதே ஊரைச் சேர்ந்த இன்னொருவரும் நோபல் பரிசு வாங்கி இருக்கிறார் என்பது ஆச்சரியமூட்டும் செய்தி.*


*அந்த இன்னொருவர் -சந்திரசேகரன். இவர் சர். சி.வி. ராமனின் அண்ணனாக சுப்பிரமணியத்தின் மகன் ஆவார்.*


*நட்சத்திரங்கள் பற்றிய இயற்பியல் ஆய்வுக்காக வில்லியம் பவுலர் என்ற அமெரிக்கருடன் இணைந்து நோபல் பரிசு பெற்றவர் சந்திரசேகரன்.*


*ஆக, புரசக்குடியைச் சேர்ந்த இருவர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள்.*


*சிறப்பம்சம்:*


*அதிசயத்தின் அடிப்படையில்:*


*ஞானம் பெற இங்குள்ள ஞானாம்பிகையை வழிபடுவதும், இங்குள்ள தட்சிணா மூர்த்தி விக்கிரகத்தின் இடப்புறக் காலுக்குக் கீழ் அடியவர் சிற்பம் ஒன்று உள்ளதும் தலத்தின் சிறப்பு.*

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்