Temple info -2230 Taliparamba Krishna temple,Trichambaram,Kannur தலிப்பரம்பா கிருஷ்ணர் கோயில், திருச்சம்பரம்,கண்ணூர்

 Temple info -2230

கோயில் தகவல் -2230




Taliparamba Krishna

Temple,Trichambaram


Trichambaram Krishna Temple is a 11th century shrine situated at Trichambaram, just 2 km south of Taliparamba in Kannur District. It is 20 km from Kannur on National Highway 17. The temple dedicated to Lord Krishna is one of the best known Krishna temples in Kerala.


The temple enshrines Lord Krishna in his child-form, soon after slaying Kamsa. Trichambaram Krishna Temple is believed to be built by Lord Parashuram, the mythological architect of Kerala, who had laid down the rituals, routine, worship and details of the annual festival.


Krishna temple is of great archeological importance. The sanctum sanctorum is double storied and has a pyramid shaped copper roof with a golden stupa (pinnacle) at the top. The sanctum has beautiful carvings and murals which date back to the 15th and 16th centuries. The beautiful statues, mural paintings and the wood carvings illustrating scenes from Mahabharata, adorning the temple walls testifies the craftsmanship of the bygone days.


The temple complex also has a tank with a shrine dedicated to Goddess Durga in the center.


The annual festival held here in the Malayalam month of Kumbham (February March) is attended by thousands of pilgrims from all over the state. At this time the idol of Krishna's brother Lord Balram is brought from Dharmikulangara Temple at Mazhoor and they are said to play together at Trichambaram, before being separated again at the end of the festival.


The Kootipiriyal ceremony, held on the last day of the festival, represents the parting of the brothers Krishna and Balram.


Ayiram appam of Trichambaram Temple, a special kind of sweet offering made in thousands, is quite famous. This is the only temple in Kerala where women from Namboothiri families prepare the offering.


 Trichambaram Krishna Temple is just 14 km from Pappinisseri Railway Station.


திருச்சம்பரம் கிருஷ்ணர் கோவில் - கேரளா


தளிப்பறம்பா ராஜ ராஜேஸ்வர கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் இந்தப் புகழ்பெற்ற (Trichambaram Krishna Temple) கிருஷ்ணன் கோவில் இருக்கிறது.


 இதை வடக்கு குருவாயூர் என்று அழைப்பர். 


இது வட கேரளத்தில் உள்ள முக்கியக் கோவில். கண்ணனுர் (கண்ணூர்) மாவட்டத்தில் இருக்கிறது .


கம்சனை வதம் செய்துவிட்டு வந்த கிருஷ்ணனை, அதே ருத்ர ரூபத்தில் காட்டுகிறது இங்குள்ள கிருஷ்ணன் சிலை .


பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் அதிகாலையில் நடை திறந்ததும், கருவறையில் வீற்றிருக்கும் மூலவருக்கு தொடக்க கால பூஜை செய்யப்படுவது வழக்கம்.


 ஆனால் திருச்சம்பரம்  கிருஷ்ணர் கோவிலில், அதிகாலை பூஜை எதுவும் நடைபெறாமல், நடை திறந்ததும் முதலில் இறைவனுக்கு பச்சரிசி சாதம் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை வழக்கத்தில் இருந்து வருகிறது.


சந்நிதி திறந்தவுடன் நைவேத்தியத்தை கிருஷ்ணனுக்கு படைப்பது ஏனென்றால்


 கம்சனைக் கொன்ற பின்னர், கண்ணன், பசியுடன் இருந்ததால் யசோதையிடம் சென்று அம்மா, சோறு போடு என்றானாம்


சம்பர வனத்தில் சம்பர மகரிஷி தவம் செய்து இறைவனுடன் ஐக்கியமான புண்ய பூமி இது.


இந்தக் கோவிலில் உள்ள ஓவியங்கள் கண்களைக் கவரும் வண்ணத்தில் தீட்டப்பட்டுள்ளன. சிற்பங்களும் அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.


சிற்பங்களும் ஓவியங்களும் 200 முதல் 400 ஆண்டுப் பழமையானவை.


 இங்கு அமைக்கப்பட்ட மரச் சிற்பங்கள் பாகவத புராண (கிருஷ்ணர் வரலாறு) நிகழ்ச்சிகளை சித்தரிக்கின்றன


இங்கு துர்க்கை அம்மன் குளத்துக்கு நடுவில் கோவில் கொண்டுள்ளது தனிச் சிறப்பு வாய்ந்தது.  


துர்கா உறையும் குளம் புண்ய தீர்த்தம் என்பதால் யாரும் குளிக்க அனுமதி இல்லை. 


கோடை காலத்திலும் கூட குளம் வற்றாமல் ஒரே மட்டத்தில் நிற்பது ஒரு அதிசயமே


கேரளத்தில் பெரும்பாலான கோவில்களில் ஆனக்கொட்டில் இருக்கும்

 அங்கே பல யானைகளைக் காணலாம். 

ஆனால் திருச்சம்பரம்கோவிலில் யானைகள் இல்லை


கிருஷ்ணன் கொன்ற கம்சனின் யானையின் பெயர் குவலயா பீடம். அவன் யானையைக் கொன்றபின்னர் கம்சனின் வம்சத்தையே துவம்சம் செய்தான். 


அதனால் இந்தப் பக்கமே யானை களைக் கொண்டுவரக்கூடாது என்பது சம்பிரதாயம்.


இதைச் சோதிக்க முற்பட்ட ஒரு முஸ்லீம் வியாபாரியும் மன்னிப்புக் கேட்கும் சம்பவம் நடந்தது. 


அவர் வாங்கிய புதிய யானையில் கோவிலைச் சுற்றி பவனி வந்தார்.


 கிழக்கு கோபுரம் அருகில் அந்த யானை வந்த பொழு து இடி ஓசையுடன் கோவில் கதவுகள் திறந்தன. 


யானை முன்கால்களை மடித்து அமரவே, மாவுத்தன் தூக்கி எறியப்பட்டான். 


வியாபாரியும் தவற்றை உணர்ந்து கோவிலுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்


கேரளத்தின் ஒரு பகுதியை எலி வம்சத்தினர் ஆண்டார்கள்.


 ஸம்ஸ்க்ருதத்தில் எலி வம்சத்தை மூஷக வம்சம் என்பார்கள். 


அதுல என்னும் கவி, மூஷக வம்ச காவியத்தை இயற்றினார்.


 11-ஆம் நூற்றாண்டு வரை அவர்கள் ஆண்டார்கள் 


அந்த வம்ச அரசர்களில் ஒருவரான வலபன் என்பவன் திருப்பணி செய்ததை காவியம் குறிப்பிடுவதால் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில் இது என்பது புலப்படுகிறது .


பாலகனாக இருந்த கிருஷ்ணனைக் கொல்ல, கம்சன் செய்த சூழ்ச்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன. 


அந்த இயலாமையால் வருத்தமும், கோபமும் கொண்ட கம்சன், கிருஷ்ணனையும், பலராமனையும் மல்யுத்தப் போட்டிக்கு வரச்செய்து கொல்வதென்று முடிவு செய்தான்.


 அவர்கள் இருவரையும் அழைத்து வரும் பணியை, அக்ரூரரிடம் கம்சன் ஒப்படைத்தான்.


மன்னரின் கட்டளையை மீற முடியாத அக்ரூரர், பிருந்தாவனத்திற்குச் சென்று, மல்யுத்தத்தைக் காண மதுராவிற்கு வரும்படி கிருஷ்ணன் மற்றும் பலராமனுக்கு அழைப்பு விடுத்தார். 


இதற்கிடையே கம்சன், மதுராபுரிக்கு வரும் இருவரையும் வலிமை மிகுந்த ‘குவாலயபீடம்’ என்னும் யானையைக் கொண்டு கொல்ல வேண்டுமென்று யானைப்பாகனிடம் சொல்லி வைத்தான். 


அந்த யானையிடம் தப்பித்தால், மதுராபுரியில் இருந்த சாணுரன், முஷ்டிகன், சாலன், தோசாலன், கூடன் என்கிற வலிமையான மல்யுத்த வீரர்களிடம், கிருஷ்ணன் மற்றும் பலராமனை எப்படியாவது மல்யுத்தத்திற்கு வரச்செய்து கொன்றுவிட வேண்டுமென்று அறிவுறுத்தினான்


மல்யுத்தத்தைக் காண மதுராபுரிக்கு நுழைந்த கிருஷ்ணன் மற்றும் பலராமனை வழிமறித்த யானை பாகன், அவர்கள் இருவரையும் கொல்ல யானையை ஏவினான்.


 ஆனால், கிருஷ்ணர் அந்த யானையையும், யானை பாகனையும் கொன்றுவிட்டு, மல்யுத்தக் களத்திற்கு வந்தனர்.


அங்கு அவர்கள் இருவரையும், மல்யுத்தத்திற்கு வரும்படி, கம்சனால் ஏவப்பட்ட மல்யுத்த வீரர்கள் அழைத்தனர். 


ஆனால் கிருஷ்ணரும் பலராமரும் தாங்கள் சிறுவர்கள் என்றும், பெரியவர்களான தங்களுடன் மல்யுத்தம் செய்வது யுத்த தர்மத்திற்கு புறம்பானது என்றும் வாதாடினர்.


ஆனால் மல்யுத்த வீரர்கள், அவர்கள் இருவரையும் ஏளனமாகப் பேசிப் போட்டிக்கு வர வைத்தனர். 


மல்யுத்த வீரர்களில் சாணுரனைக் கிருஷ்ணனும், முஷ்டிகனைப் பலராமனும் கொன்றனர். 


பின்னர் தங்களுடன் போட்டியிட்ட அனைத்து மல்யுத்த வீரர்களையும் கொன்று குவித்தனர். 


இதனைக் கண்டு அதிர்ந்து போனான், கம்சன்.


ஆவேசத்தில், கிருஷ்ணனையும், பலராமனையும் கொல்லும்படி ஆணையிட்டான். 


இதனால் கோபம் அடைந்த கிருஷ்ணன், அரசவையில் வீற்றிருந்த கம்சனை அங்கிருந்து, மல்யுத்தக் களத்திற்கு இழுத்து வந்து கொன்றான். 


கம்சனுக்கு ஆதரவாக வந்த கம்சனின் எட்டு சகோதரர்களையும் பலராமன் கொன்றான்.


நீண்ட நேரமாக மல்யுத்தம் செய்து, கம்சனையும் கொன்ற கிருஷ்ணர் அதிகாலை வேளையில், தன்னைப் பெற்ற தாய் தேவகியைச் சந்தித்தார்.


 தாயிடம் தனக்குப் பசிப்பதாகச் சொல்லி, அவர் தந்த உணவை வாங்கிச் சாப்பிட்டார். 


மகாபாரதத்தில் வரும் இந்தக் கதை, காட்டிற்குள் தவமியற்றி வந்த சாம்பர முனிவர் மனதிற்குள் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.


 அதனைத் தொடர்ந்து அவர், அங்கு கம்ச வதம் செய்து திரும்பிய கிருஷ்ணரின் உருவச் சிலையை நிறுவி வழிபட்டு வந்தார் என்றும்,


 பிற்காலத்தில் பரசுராமர் அங்கு கோவில் அமைத்து, வழிபாட்டு முறைகளை வகுத்துக் கொடுத்தார் என்றும் ஆலய தல வரலாறு சொல்கிறது.


இந்த ஆலயத்தில் கம்ச வதத்திற்குப் பின்பான கிருஷ்ணர், சிறிது சினத்துடன் வலது கரத்தில் சிறிய குச்சியும், இடது கரத்தில் சங்கும் வைத்துக் கொண்டு கிழக்கு பார்த்த நிலையில் அமர்ந்திருக்கிறார்.


 அவருக்கு வெள்ளியாலான மேலாடை அணிவிக்கப் பட்டிருக்கிறது. 


இங்கு விசாகச் சேனனுக்குத் தெற்கு பார்த்த நிலையில் தனிச் சன்னிதி இருக்கிறது. 


இக்கோவில் வளாகத்தில் தவமியற்றும் நிலையில் சாம்பர முனிவர் சிலையும் இடம் பெற்றிருக்கிறது. 


ஆலய வளாகத்தில் இருக்கும் மூன்று குளங்களில், ஒரு குளத்தின் நடுவில் காளி கோவில் உள்ளது


திப்பு சுல்தானின் துலுக்கப்படைகள்  இடிக்காத இந்துக் கோவில்கள் வட கேரளத்தில் இல்லை. 


திருச்சம்பரம் கிருஷ்ணன் கோவிலும் முஸ்லீம்களின் தாக்குதலுக்கு உள்ளானது. 


இதனால் கடந்த 200 ஆண்டுகளில் கோவில் திருப்பணிகள்  அடுத்தடுத்து நடந்தன. 


ஆயினும் நடுவிலுள்ள கர்ப்பக்கிரகப் பகுதி சதுர வடிவில் உள்ளதால் இது பழைய பகுதி என்பது வரலாற்று அறிஞர்களின் துணிபு.


கடுமையான தோல் நோயுடைய ஒருவர் ஆறாத புண்களுடன் இந்தக் கோவிலில் தஞ்சம் புகுந்தார்;


 கோவில் திறந்தவுடன் கண்ணனைத் தரிசித்துவிட்டு கோவிலுக்கு வெளியேயுள்ள இலஞ்சி மரத்துக்கு அடியில் அமர்ந்து பிராத்தனை செய்து வந்தார். 


மரத்தின் காய்கள் உடலில் விழும்போது வலியால் அலறுவார் ; கண்ணா இப்படி என்னைக் கொடுமைப்படுத்துகிறாயே என்று அலறியவுடன் மரம், காய் காய்ப்பதையே நிறுத்திவிட்டது

 அவருக்கும் நோய் குணமானது


 இதை நினைவுபடுத்தும் வகையில் திருவிழாக்காலத்தில் கண்ணன் உருவம் மரத்துக்கு முன்னால் நிறுத்தப்படும். 


பக்தர்கள் அதன் இலையில் மோதிரத்தை வைத்து தமது கோரிக்கைகளை எடுத்துரைப்பார்கள்.


கும்ப மாதத்தில் (மார்ச்) ஆண்டு உற்சவம் நடக்கும். 


அப்போது 6 கி.மீ. தொலைவிலுள்ள தாராம்குளங்கரை கோவிலிலிருந்து பலராமர் சிலை ஊர்வலமாக வரும்.


 இரண்டு இடங்களிலும் யானைகள் தடை செய்யப்பட்டதால் கிருஷ்ணர், பலராமர் உருவங்களை அர்ச்சகர்கள் தலையில் வைத்துக்கொண்டு ஆடிக்கொண்டே வருவார்கள் ;


 இரவு முழுதும் இந்த ஆட்டம் நடக்கும் 


 இவை எல்லாம் கோவிலுக்கு வெளியேயுள்ள மைதானத்தில் நடப்பதால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பார்க்க வருகிறார்கள் .


முன் காலத்தில் கோவிலுக்குள் இந்த திடம்பு நிருத்யம் நடந்தது. 


ஒரு பக்தை இதைக்காண முடியாமல் வருந்தி பிரார்த்தித்தார். 


அப்போது நடனம் ஆடிய அர்ச்சகர்கள் மெய் மறந்து கோவிலுக்கு வெளியே 2 பர்லாங் தூரம் சென்று பூக்கொத்து இல்லத்தில் இருந்த பக்தை முன்னர் ஆடினார்கள். 


அவர்கள் தலையில் சுமந்து வந்த விக்கிரகங்களை அம்மையாரும் தரிசித்து மகிழ்ந்தார். 


அதைத் தொடர்ந்து இப்போதும் கோவிலுக்கு வெளியே இந்த நடனம் நடக்கிறது .


நன்றி மாலதி முரளி

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்