Temple info -1922. Shodopacharam. ஷோடோபசாரம்
Temple info -1922
கோயில் தகவல் -1922
இறைவனுக்கு சோடசோபசாரம் என்றால் என்ன?
மஹோத்சவம் மற்றும் பிரதான வழிபாட்டு நேரங்களில் இந்த சோடோபசார வழிபாடு மிக மிக முக்கியத்தும் பெறுகிறது!!!
உபசாரம் என்பது இறைவனது வழிபாட்டில் சிறப்பு மிக்கதோர் அம்சமாகும். இறைவனை அரசனாக நினைத்து நாம் செய்யும் பணிவிடைகள். இதனை ஐந்து, பத்து, பதினாறு, அறுபத்துநான்கு என விவரிக்கலாம். இவற்றுள் சோடசோபசாரம் ( சோடசம் என்றால் பதினாறு) என்னும் பதினாறு வகையான உபசாரம் ஆலய நித்ய, நைமித்திய பூஜையில் இடம் பெறுவது வழக்கம். அவை;
1) ஆவாஹனம்: இறைவனை வரவேற்றல்; வியாபிக்கும் பரமசிவனது பொருவிலுயர் பரிபூரணாநந்தனம் அறிவிலழுந்துதல் ஆவாகனம் ஆகும்.
2) ஆசனம்: இறைவனை சிறந்த ஆசனத்தில் அமர்த்துதல்.
3) பாத்யம்: திருவடிகளை சுத்தம் செய்ய நீர் கொடுப்பது.
4) அர்க்யம்: இறைவனது திருமுடியில் சமர்ப்பிப்பது அல்லது கரங்களை சுத்தம் செய்ய நீர் கொடுப்பது.
5) ஆசமனியம்: வாயை சுத்தம் செய்ய நீர் கொடுப்பது.
6) ஸ்நானம்: நீராட்டுதல் (அபிஷேகம்)
7) வஸ்திரதாரணம்: சிறந்த உடைகளை அணிவித்தல்.
8- சந்தன குங்கும தாரணம்: மணம்மிக்க சந்தனம், குங்குமத்தால் அலங்கரித்தல்.
9) அட்சததாரணம்: நுனிமுறியாத முழு அரிசியைச் சமர்ப்பித்தல்.
10) ஆபரணதாரணம்: விலைமிக்க ஆபரணங்களால் அலங்கரித்தல். (பதிலாக உபவீந்தாரணமும் செய்யப்படும்)
11) புஷ்பதாரணம்: மணம் மிகுந்த மலர்களால் அமைந்த மாலையால் அழகுபடுத்தல்.
12) தூபம்: நறுமணம் மிகுந்த குங்கில்யம், சாம்பிராணி முதலிய பொருட் களிட்ட புகையைக் காட்டுதல்.
13) தீபம்: ஒற்றைத்தீபம் காட்டியவுடன் தீபாராதனைகளைத் தொடங்குவது வழக்கம். பெருவழக்கில் உள்ள தீபங்கள், அடுக்கும் தீபம், நட்சத்திர தீபம், பஞ்சமுகத் தீபம், வில்வ தீபம், நாகதீபம், விருஷய தீபம், கருதீபம், ஈசானாதி தீபங்கள், கற்பூர தீபம், பஞ்சாராந்திரிக தீபம் என்பன தீபங்களைக் காட்டும் முறை ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.
தீபாராதனையின் பொழுது, தீபத்திற்குரிய மந்திரங்களை முறைப்படி வேதங்களை பயின்ற அர்ச்சகர் ஓதுவார்.
14) நைவேத்தியம்:
15) நீராஞ்சனம்: இறுதியாக சமர்ப்பிக்கப்படுவது கற்பூர நீராஞ்சனமாகும்.
16) பிரதட்சண நமஸ்காரம்:
குறைகள் நிகழ்ந்திருப்பின் பொறுக்குமாறு வேண்டி தன்னைத்தானே மூன்று முறை சுற்றிக் கொண்டு நமஸ்காரம் செய்வது.
இறைவனுக்கு இந்த பூஜைகள் நடைபெறும்போது அமைதியாக மனமுருகி வழிபட்டால் நிச்சயம் பலன் உண்டு நண்பர்களே!
தொகுப்பு:- சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.
Comments
Post a Comment