Temple info -1921. Mantra Pushpam. மந்திர புஷ்பம்

 Temple info - 1921

கோயில் தகவல் -1921


மந்த்ர_புஷ்பம்_என்றால்_என்ன 

என்பதை_தெரிந்து_கொள்வோம்


மந்த்ர புஷ்பம் என்பது ஒரு வேத பாடலாகும் , இது பூஜைகளின் முடிவில் இந்து தெய்வங்களுக்கு மலர்களை சமர்ப்பிக்கும் நேரத்தில் பாடப்படுகிறது . மந்திரம் வேத மந்திரங்களின் மலராக கருதப்படுகிறது.


இந்த மந்திரம் யஜுர் வேதத்தின் தைத்திரிய ஆரண்யகத்திலிருந்து எடுக்கப்பட்டது . நீர், நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மேகங்கள் மற்றும் நேரம் பற்றிய இரகசிய அறிவால் வழங்கப்படும் வரம்பற்ற நன்மைகளைப் பற்றி இது பேசுகிறது. இது பொதுவாக எந்த பூஜை (வழிபாடு) அல்லது யாகம் செய்த பிறகு அனைத்து ப்ரோகிதர்களாலும் பாடப்படுகிறது . நீர் (இங்கு நீர் ஈதர்) இந்தப் பிரபஞ்சத்தின் அடிப்படை என்று சுருக்கமாகச் சொல்கிறது. 


மந்திர சக்தியை உடைய புஷ்பம் என்று சொல்வதை விட, மந்திர உச்சாடனத்தின் மூலம் சக்தி பெற்ற பூக்களைக் கொண்டு வணங்குவது என்று புரிந்துகொள்ளலாம். ஆலயத்தில் அபிஷேகம், அலங்காரம், ஷோடஸ உபச்சார தீபாராதனை, சதுர்வேத பாராயணம் என்று அத்தனை உபச்சாரங்களையும் இறைவனுக்கு செய்து முடித்த கையோடு, ‘யோபாம் புஷ்பம் வேத..’ என்று ஆலயத்தில் அர்ச்சகரின் குரல் கணீரென்று ஒலிக்கும்போது மெய் சிலிர்க்கும். ஒவ்வொரு கால பூஜையின்போதும் மகாதீபாராதனைக்கு முன்னதாக ஆலயங்களில் ஓதப்படும் இந்த மந்த்ரபுஷ்பம் என்கிற வேத மந்திரம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது. பொருள் புரியாதவர்கள் கூட அந்த மந்திரத்தின் ஸ்வரத்திலும், உச்சரிப்பிலும் மெய்மறந்து மனம் உருகி நிற்பர்.


நம் இல்லங்களில் நடைபெறும் பூஜையின்போதும் ஏற்ற இறக்கத்தோடு அதற்குரிய ஸ்வரத்தில் சாஸ்திரிகள் இந்த மந்திரபுஷ்பத்தை உச்சாடனம் செய்யும்போது நாமும் அவரோடு இணைந்து சொல்வது போன்ற ஒரு உள்ளுணர்வு நமக்குள் உண்டாவதை உணர முடியும். எல்லாவிதமான பூஜைகளின் போதும், அதன் உச்சக்கட்டத்தில் முத்தாய்ப்பாக இந்த மந்திரபுஷ்பத்தைச் சொல்கிறார்களே., அப்படி என்னதான் சிறப்பு இதற்கு என்பதையும் தெரிந்து கொள்வோம்.


நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவன் வாக்கு. இந்த நீர்தான் உலகின் அடிப்படை ஆதாரம் என்பதையே இந்த மந்திரம் வலியுறுத்துகிறது. நீர், நிலவு, நெருப்பு, காற்று, சூரியன், நட்சத்திரங்கள், மேகங்கள் போன்ற இயற்கை சக்திகளுக்கு இடையே உள்ள தொடர்பினை நாம் அறிந்துகொள்ளும் விதமாக இந்த வாக்கியங்கள் அமைந்திருக்கின்றன.


மந்திர புஷபம் 


ஓம் யோபாம் புஷ்பம் வேத/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ சந்த்ரமா வா

அபாம் புஷ்பம்/ புஷ்பவான் ப்ரஜாவான் பஸுமான் பவதி/ ய ஏவம் வேத


விளக்கம் 


யாரொருவன் நீரின் மலரை அறிகிறானோ, அவன் மலர்களை உடையவனாக, மிருகங்களை உடையவனாக, சந்ததிகளை உடையவனாக ஆகிறான். நிலவே நீரின் மலர். யார் இவ்வாறு அறிகிறானோ அவன் சந்ததிகளை உடையவனாக, மிருகங்களை உடையவனாக ஆகிறான். 


யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அக்னிர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோக்னேராயதனம் வேத/ ஆயதனவான்

பவதி/ ஆபோ வா அக்னேராயதனம்/ ஆயதனவான் பவதி/ய ஏவம் வேத

 

விளக்கம்


யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நெருப்பே நீரின் ஆதாரம். எவன் நெருப்பின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நெருப்பின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.


யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ வாயுர்வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ வாயோராயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை வாயோராயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத

 

விளக்கம்


யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். காற்றே நீரின் ஆதாரம். யார் காற்றின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே காற்றின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.


யோபா மாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ அஸெள வை தபன்னபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோமுஷ்ய தபத ஆயதனம் வேத

ஆயதனவான் பவதி/ ஆபோ வா அமுஷ்ய தபத ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத


விளக்கம்

 

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். கொதிக்கும் சூரியனே நீரின் ஆதாரம். யார் கொதிக்கும் சூரியனின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே அந்த தகிக்கும் சூரியனின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். (4)


யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ சந்த்ரமா வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யச்சந்த்ரமஸ ஆயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை சந்த்ரமஸ ஆயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத


விளக்கம்

 

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நிலவே நீரின் ஆதாரம். யார் நிலவின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நிலவின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.


யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ நக்ஷத்ராணி வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யோ நக்ஷத்ராணாமாயதனம் வேத/

ஆயதனவான் பவதி/ ஆபோ வை நக்ஷத்ராணா மாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத


விளக்கம்


யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நட்சத்திரங்களே நீரின் ஆதாரம். யார் நட்சத்திரங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே நட்சத்திரங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.


யோபாமாயதனம் வேத/ ஆயதனவான் பவதி/ பர்ஜன்யோ வாஅபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய: பர்ஜன்யஸ்யாயதனம் வேத

ஆயதனவான் பவதி/ஆபோ வை பர்ஜன்யஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத


விளக்கம்

 

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மேகமே நீரின் ஆதாரம். யார் மேகங்களின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மேகங்களின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.

 

யோபாமாயதனம் வேத/ ஆயதனாவான் பவதி/ ஸம்வத்ஸரோ வா அபாமாயதனம்/ ஆயதனவான் பவதி/ யஸ்ஸம்வத்ஸரஸ்யாயதனம்

வேத/ ஆயதனவான் பவதி/ ஆபோ வை ஸம்வத்ஸரஸ்யாயதனம்/ ஆயதனவான் பவதி/ ய ஏவம் வேத


விளக்கம்

 

யாரொருவன் நீரின் ஆதாரத்தை அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். மழைக்காலமே நீரின் ஆதாரம். யார் மழைக்காலத்தின் ஆதாரத்தை அறிகிறானோ அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான். நீரே மழைக்காலத்தின் ஆதாரம். யார் நீரின் ஆதாரத்தை இப்படி அறிகிறானோ, அவன் தன்னில் நிலை பெற்றவன் ஆகிறான்.


யோப்ஸு நாவம் ப்ரதிஷ்டிதாம் வேத/ ப்ரத்யேவ திஷ்டதி

யாரொருவன் நீரில் நிலைபெற்றுள்ள ஓடத்தை அறிகிறானோ, அவன் அதிலேயே நிலை பெறுகிறான்.

 

ஓம் ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே/ நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே/ ஸ மே காமான் காமகாமாய மஹ்யம்/ காமேச்வரோ வைச்ரவணோ ததாது/ குபேராய வைச்ரவணாய/ மஹா ராஜாய நம:


விளக்கம் 

 

தலைவர்களுக்கெல்லாம் தலைவனும், பெரும் வெற்றிகளைக் கொடுப்பவனுமான குபேரனை நாங்கள் வணங்குகிறோம். விருப்பங்களை நிறைவேற்றுபவனும், செல்வத்தின் தலைவனான அவன், என் விருப்பங்கள் நிறைவேறுவதற்கு எனக்குத் தேவையான செல்வத்தைக் கொடுக்கட்டும். செல்வத்தின் தலைவனான குபேரனுக்கு, மன்னாதி மன்னனுக்கு வணக்கங்கள்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்