Temple info -1828. Ananda Natarajar Temple, Vilankurichi, Coimbatore. ஆனந்த நடராஜர் கோயில், விலங்குறிசி, கோயம்புத்தூர்
Temple info -1828
கோயில் தகவல் -1828
Vilankurichi Ananda Natarajar temple:
Vilankurichi is near Sivananda Mills and is around 10 Kms from Coimbatore Gandhipuram bus stand. There are direct city buses to this place. This temple is popularaly known as Arutperum Jothi Natarajar Gnana Madalayam. Many of the rituals followed in this temple are similar to the ones we find in Vadalur near Villupuram where Sri Ramalinga Swamigal’s temple is situated. The connection between these two temples is confirmed by the prefix Arutperum Jothi.
In the eighteenth century, there was a sage by name Shri Kachi Thirumalai Swamigal in Tamilnadu. He used to offer the jaggery kept in his Kamandala as prasadam to his devotees which used to give them lot of relief. During his tours around the country, he came to Vilankurichi. A young girl by name Chinnammal served him with devotion. Swamigal was pleased and blessed her to get a son who will be a great sage. The words of this holy person proved true and Chinnammal after marriage gave birth to Shri Venkataramanan in 1827. This boy grew to become a spiritual persona and he came to be called Venkataramana Swamigal. He was a follower of Shri Ramalinga Swamigal of Vadalur. He sent his disciples to Vadalur and asked them to observe the temple and its rituals. He replicated them in Vilankurichi.
An Octagonal shaped temple in the form of a Lotus blossom was constructed where he installed a Shivalingam made of various herbs. He also installed Vinayagar outside the temple below a neem tree along with Rahu, Ketu and Kannimar. Within the temple, Murugan was installed. In front of this octagon, he constrcted a 24 pillared Sanmarga Mandapam. In this mandapam, he installed Shri Ananda Natarajar along with Shri Sivakami Amman and Vinayakar. This Natarajar is unique as He has raised His right leg, instead of left leg seen in other temples. He also installed seven screens in front of this Gnana Sabha, indicating seven chakras or energy levels as per the Hindu tradition-Sahasrara, Ajna, Visuddha, Anahata, Manipura, Svadhishtana and Mooladhara. When the seven screens are removed, one can see the Gnana Jothi of Shri Natarajar. Like Vadalur, here also singing of Thiruarutpa every morning is practiced for more than 100 years. Shri Swamigal attained Samadhi here.
During his life time, there was a severe famine in this area and the people requested the Swamigal to help them. He did intense penance and after some time, there was copious rain to solve the problem. Once the local people saw a young boy begging in the streets, singing Tiruvarutpa. The villagers were surprised and brought him to the Swamigal. The sage blessed him and gave him Vibhuthi with the assurance that his problems would be solved within 15 days.
The boy left the place and went to the banks of a nearby river and started doing meditation. At that time, he saw a group of people taking a young girl home. The girl was the daughter of the local Zamindar and was afflicted with some major medical problem which could not be cured by the doctors. When he heard this, the boy said that he would cure it. He prayed to Venkataramana Swamigal and gave the Vibhuthi to the girl. In no time, the girl became normal. The Zamindar was pleased and gave lot of presents to the boy and his problem was solved as predicted by the Swamigal. The Zamindar also visited the Swamigal and became his follower.
*கோயம் புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு விளாங் குறிச்சி ஆனந்த நடராஜர் ஆலயம்...*
*மூலவர்
ஆனந்த நடராஜர்
*அம்மன்/தாயார்
பார்வதி தேவி
*தல விருட்சம்
அரசமரம்
*பழமை
1000-2000 வருடங் களுக்கு முன்
*ஊர்
விளாங் குறிச்சி
*மாவட்டம்
கோயம்புத்தூர்
*மாநிலம்
தமிழ்நாடு
*திருவிழா:*
*இத்தலத்தில் பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜையும் ஞாயிறுகளில் மாலை 7 மணிக்கு ஜோதி தரிசனமும் நடைபெற்று வருகிறது. கடலூரில் நடப்பது போலவே இங்கும் ஏழு திரைகள் விலகி நிறைவாக ஜோதியைத் தரிசிக்கலாம்.இச்ஜோதியை தரிசிப்பது மிகவும் சிறப்பாக கருதப் படுகிறது. வருட திருவிழாக் களில் சித்ரா பவுர்ணமி, ஆருத்ரா தரிசனம் இவற்றோடு, மாசி மாத சித்திரை நட்சத்திரத்தில் குருபூஜையும் நடைபெறு கிறது. சிவாகம முறைப்படி பூஜைகள் நடக்கும்.*
*தல சிறப்பு:*
*வலது காலை தூக்கி ஆடும் ஆனந்த நடராஜரை தரிசிப்பதும், ஜோதி தரிசனத்தைக் காண்பதும் சிறப்புக்குரியதாகக் கருதப் படுகிறது.*
*திறக்கும் நேரம்:*
*காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந் திருக்கும்.*
*முகவரி:*
*அருட்பெரும் ஜோதி நடராஜர் ஆலயம் ஞான மடாலயம் , விளாங் குறிச்சி , கோவை 641 035.*
*போன்:*
*+91 99521 68232*
*பொது தகவல்:*
*ஒரு சமயம் நீண்ட காலமாக மழையே இல்லாமல் இப்பகுதியில் விவசாயம் முடங்கி விட்டது. குடிநீர்கூட இல்லாத நிலை ஏற்பட்டு விட்டது. விளை நிலங்கள் எல்லாம் பாளம் பாளமாக வெடித்து காயந்து விட்டன. ஊரார் ஒன்றுகூடி வெங்கடரமண சுவாமிகளிடம் முறை யிட்டனர். இறைவனை வேண்டி சுவாமிகள் செய்த பிரார்த் தனையின் பலனாக பெருமழை பொழிந்து விவசாயம் செழித்தது. குடிநீர் கிணறுகள் நிறைந்தன. அனைவரும் சுவாமியை வணங்கி தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். மற்றொரு சமயம் அருகில் இருந்த ஊரில் ஒரு சிறுவன் வறுமை காரணமாக திருஅருட்பா பாடி யாசகம் எடுத்துக் கொண்டிருந்தான். அக்காட்சியை கண்டு அதிர்ந்து போன பக்தர்கள் சிலர் அச்சிறுவனை கோயிலுக்கு அழைத்து வந்து சுவாமி முன் நிறுத்தினர். சுவாமி அச்சிறுவனை ஆசீர்வதித்து, உன் குறை யாவும் பதினைந்தே நாட்களில் சரியாகிவிடும் எனக் கூறி. உபதேசித்து திருநீற்று பிரசாதம் வழங்கி விடை கொடுத் தனுப்பினார். நம்பிக்கை யோடு ஊர் திரும்பினான், சிறுவன். பதினைந் தாவது நாள் சிறுவன் ஒரு நதிக்கரையில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்தான்.*
*அச்சமயம் அந்த நாட்டின், ஜமீன்தார் ஒருவர் உடல்நலம் குன்றிய தன் மகளை சிகிச்சைக்காக அழைத்துச் சென்று கொண் டிருந்தார். எந்த சிகிச்சை முறையும் பலன் அளிக்க வில்லை. எனவே வேறு மாளிகைக்கு அழைத்துச் சென்று கொண் டிருந்தனர். தியானம் முடிந்து கண் விழித்த அச்சிறுவன், ஜமீன்தாரின் மகளைக் கூட்டிச் செல்வதைக் கண்டான். அவரைச் சந்தித்து விபரங்களைக் கேட்டறிந்து தாமே சிகிச்சை அளிப்பதாகத் தெரிவித்தான். பின் சுவாமிகள் வழங்கிய திருநீற்றை தண்ணீரில் கலந்து குடிக்கச் செய்து பின் உடலில் திருநீறை பூசியும் விட்டான். சிறிது நேரத்திலேயே அப்பெண் கண் விழித்து பார்த்து பேச ஆரம்பித்தாள். பிணி நீங்கி,நான்கைந்து நாட்களில் பூரண குண மடைந்தாள். தன் மகளின் பிணியைப் போக்கிய சிறுவனை மாளிகைக்கு அழைத்து வெகுவாகப் பாராட்டி, அவன் மகிழும் வண்ணம் பெருஞ் செல்வத்தை அளித்தார். ஜமீன்தார். பின் அவன் மூலம் சுவாமிகளைப் பற்றி அறிந்து தன் மகளுடன் இக் கோயிலுக்கு வந்து நன்றி தெரிவித்து ஆசி பெற்றுச் சென்றனர்.*
*ஞான சபையில் தினமும் வள்ளலார் சுவாமிகளின் திருஅருட்பா எனும் இறைநூலை கூட்டு வழிபாட்டில் பாடிவந்தனர். அன்று முதல் இன்றளவும் தொடர்ந்து நடந்து வருவது சிறப்பு. 1911-ம் ஆண்டு தனது 84-வது வயதில் தான் அவதரித்த சித்திரை நட்சத்திரத் தன்றே ஜீவ சமாதி அடைந்தார் வெங்கட ரமணர். ஞானியர் களுக்கு மரணம் இல்லை என்பது அருளாளர்கள் வாக்கு, சுவாமிகள் உடலால் இல்லை எனிலும் அவரை நினைத்து வணங்கிய வர்கள் இறை யருளால் நிறைவான பேற்றினை பெறு கின்றனர். என்பது கண்கூடு. விநாயகர், முருகன் மற்றும் 108 மூலிகை களால் உருவாக்கப் பட்ட சிவலிங்கமும் அதே மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டன. கோயில் அருகே 132 ஆண்டு களுக்கு முன் ஸ்தாபிக்கப் பட்ட வேம்பு அரசு விநாயகர், ராகு-கேது மற்றும் கன்னிமார் சன்னிதிகளும் உள்ளன.*
*பிரார்த் தனை:*
*இன்றும் நம்பிக்கை யுடன் இத்தலம் வந்து பணிவோர்க்கு தாயினும் சாலப்பரிந்து அவர்களது துன்பங் களையும் அனைத்து உடல் பிணி களையும் உள்ளத்து நோய் களையும் தீர்த்து நல் அருள் புரிகின்றார். செல்வமும் நன் மக்கட்பேறும் அளிக்கிறார். 100 ஆண்டு களுக்கு மேற்பட்ட வளர்ந்து ஓங்கிய அரசு, வேம்பு மரங்களின் கீழ் அருள் பாலிக்கும் விநாய கரையும் ராகு கேது பகவான் களையும் தொழுவது தோஷத்தைப் போக்கவல்லதென்பது ஐதிகம்.*
*நேர்த்திக் கடன்:*
*பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் சுவாமிக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய் கின்றனர்.*
*தலபெருமை:*
*கோயில் அருகே 132 ஆண்டு களுக்கு முன் ஸ்தாபிக்கப் பட்ட வேம்பு அரசு விநாயகர், ராகு-கேது மற்றும் கன்னிமார் சன்னிதி உள்ளன.*
*தல வரலாறு:*
*சென்ற நூற்றாண்டில், கச்சி திருமலை சுவாமிகள் என்ற அருந்தவ ஞானி தமிழ்நாட்டில் அருட் பணியாற்றி வந்தார். தன் கலசத்தில் இருக்கும் சர்க்கரையை துன்பமுற்ற மக்களுக்கு அருட் பிரசாதமாக வழங்கியதன் பலனாக துன்ப பிணி நீங்கி நல்வாழ்வு பெற்றனர். ஒருசமயம் கோவைக்கு அருகே உள்ள விளாங் குறிச்சி கிராமத்திற்கு அவர் எழுந்தருளிய போது தன்னை வணங்க வந்த ஒரு சிறுமியை ஆசீர்வதித் தவர், உரிய காலத்தில் உன் வயிற்றில் ஒரு ஞானி அவதரிப்பார் என அருளாசி வழங்கினார். அதன்படியே பருவம் அடைந்த அச் சிறுமியான சின்னம்மை என்ற அச்சிறுமி, தகுந்த வயதில் சுப்பராயன் என்பவரை மணந்தாள். அத்தம்பதி யினருக்கு 1827 ஆண்டில் ஆண்மகவு ஒன்று பிறந்தது. வெங்கட ரமணன் என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். மூன்றாவது வயதிலேயே சிவபெரு மானிடம் தீவிர பக்தி கொண்டார். வெங்கட ரமணன். தனது ஏழாவது வயதில் பள்ளிக்கே செல்லாமல் கல்வி கேள்விகளில் சிறந்து சிவஞான நூல்களையும் கற்றறிந்தார். அதோடு தங்களின் குலத் தொழிலான பொன் வேலையிலும் சிறந்து விளங்கினார். வெங்கட ரமணருக்கு பதின்மூன்று வயது நிரம்பிய சமயத்தில் ஜடாமுடியுடன் ரிஷி வடிவில் திருநீறு அணிந்து உத்திராட்ச மும், முப்புரி நூலணிந்த வயதான தோற்றத் துடன் ஒருவர் அப்பகுதிக்கு வந்த ஞானி ஒருவர், அவருக்கு பஞ்சாட்சர மந்திர உபதேசம் செய்தார். அது முதல் தீவீர சிவ வழிபாட்டில் ஈடுபட்டவர்,*
*இச்சிறு வயதிலேயே தன் வல வலிமையால் மகா சித்துக்கள் கைவரப் பெற்று ஞான முனிவராகத் திகழந்தார். தன்னை நாடி வரும் மக்களின் துன்பங் களைப் போக்கி நல்லருள் புரிந்து வந்தார். வடலூர் ராமலிங்க சுவாமி களிடம் ஆழ்ந்த பக்தியும் ஈடுபாடும் கொண்டிருந்ததுடன், அவரை தம் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார் வெங்கட ரமணர். வடலூரில் உள்ள சத்திய சன்மார்க்க சங்கத்தைப் போலவே, தாம் வாழ்ந்து வரும் விளங்குறிச்சி கிராமத்திலும் ஒரு ஞான சபையை நிறுவ எண்ணினார். அதற்கென தன் சீடர்களை வடலூருக்கு அனுப்பி அச்சபையினைப் பார்த்து விவரங்களைச் சேகரித்து வருமாறு பணித்தார். அவ்வாறே அவர்கள் தேவையான விபரங்கள் அனைத் தையும் திரட்டி ஊர் திரும்பினர். ஒரு சுபயோக நல்லதொரு நாளில் வேதியர் களைக் கொண்டு பூஜை செய்து அஸ்திவாரம் இட்டு, அடியவர் களுக்கு அன்னதான மிட்டு மகிழ்ந்தார். அதற்கு அடிக்கல் இடப்பட்டது. எண்கோண வடிவில் தாமரை மலர் போன்ற அற்புதத் திருக் கோயிலையும், அதன் முன் இருபத்து நான்கு தூண்களைக் கொண்ட சன்மார்க்க சபா மண்டபமும் கட்டி முடிக்கப் பட்டன.*
*30 அடி உயரமும் 25 டன் எடையுமுள்ள ஒரே கல்லால் செய்யப்பட்ட துவஜஸ்தம்பத்துடன் கூடிய முன் மண்டபமும் எழுப்பப்பட்டது. 1901-ம் வருடம் ஆவணி மாதம் முதல் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஞான சபையில் மூலாதாரம், சுவா திஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, துரியம் என்ற ஏழு நிலைக்கும் ஏழு திரையிட்டு எவ்வுலகும் எவ்வுயிரும் ஞான இன்பமும் அடைதல் பொருட்டு அதி அற்புத அருள் ஞான ஆனந்தத் திருத்தாண்டவ திருநடனம் செய்யும் அருட்பெருஞ் ஜோதியை ஸ்தாபித்தார். சன்மார்க்க சபா மண்டபத்தில் கனகசபை அமைத்து, அதில் வலது காலை தூக்கி ஆடும் ஆனந்த நடராஜரையும், பார்வதி தேவியையும் எழுந்தருளச் செய்தார்.*
*சிறப்பம்சம்:*
*அதிசயத் தின் அடிப் படையில்:*
*வலது காலை தூக்கி ஆடும் ஆனந்த நடராஜரை தரிசிப்பதும், ஜோதி தரிசனத்தைக் காண்பதும் சிறப்புக்குரியதாகக் கருதப் படுகிறது.*
*அமைவிடம்
*கோவை சிவானந்தா மில்-விளாங் குறிச்சி சாலையில் உள்ளது. காந்திபுரம் பஸ் நிலையத் திலிருந்து தடம் எண் 100-ல் பயணித்து கோயிலை அடையலாம். ஞான மடாலயம் பஸ் நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.*
*அருகிலுள்ள ரயில் நிலையம்
கோயம்புத்தூர்
*அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்புத்தூர்
*தங்கும் வசதி
கோயம்புத்தூர்
Comments
Post a Comment