Temple info -1826 Kattu Vinayakar Temple, Vadavalli, Coimbatore. காட்டு வினாயகர் கோயில், வடவள்ளி, கோயம்புத்தூர்

 Temple info -1826

கோயில் தகவல் -1826



 Vadavalli Kattu Vinayakar Temple, Coimbatore 


Vadavalli Kattu Vinayakar / Vinayagar

Sri Kattu Vinayakar Temple History and Special Features


·       The Moolavar and Urchavar of Sri Kattu Vinayakar Temple is Kattu Vinayakar/ Kattu Vinayagar. The Amman / Thayar of the temple is Meenakshi Amman.


·       The Thala Virutcham of Sri Kattu Vinayakar Temple is Arasa Maram – Bodhi tree. The Theertham offered in this temple is Siruvani.


·       Two pujas will be done per day in Sri Kattu Vinayakar Temple. This is an ancient temple which is 500 years old.


·       The specialty of this temple is the Arasa maram – big Bodhi Satva tree which a century old.


·       The historical name of the place where Sri Kattu Vinayakar Temple is situated is Pulikkadu. At present, it is located in Vadavalli city, Coimbatore district, Tamil Nadu.


Festivals Celebrated in Sri Kattu Vinayakar Temple

·       Undoubtedly Vinayaka Chaturthi is the main festival celebrated in this temple. More than 1000 devotees are grandly fed during this celebration.


·       During November – December months while pilgrims travel to Sabarimala, they participate in Bhajans and stay in the temple before continuing their journey on the next day.


Prayers and Thanks Giving by the Devotees


Many people seek the blessings of Mother Madurai Meenakshi Amman for a happy wedding and early marriages. People also visit this temple for business and trade developments.


The main offering done in Sri Kattu Vinayakar temple is feeding people which is widely known as Annadhanam. Depending upon the profits gained devotees offer various items which contribute to the development of the temple.


Address of the Temple

Sri Kattu Vinayakar Temple, Landmark: Opposite to Vadavalli Bus stand, Vadavalli, Coimbatore – 641 041.


How to Reach the Temple

The place is 10 km in distance from Gandhipuram bus stand. The temple is located opposite to Vadavalli bus stop. Town buses are quite common from many city bus stand.


The nearest railway station is the Coimbatore railway station. The nearest airport is the Coimbatore Airport.


Timings of the Temple

The temple generally opens at 06.00 AM in the morning and closes at 12.00 PM. And reopens at 04.00 PM and completely closes by 08.00 PM.


·       Opening time: 06:00 AM – Closing time: 12:00 PM


·       Opening time: 04:00 PM – Closing time: 08.00 PM


Temple Contact Number Details

+91 422 – 2426529, 94865 87944



*கோயம்புத்தூர் மாவட்டம் தமிழ்நாடு வடவள்ளி அருள்மிகு காட்டு விநாயகர் ஆலயம்...*


*மூலவர் :*

காட்டு விநாயகர்


*உற்சவர் :*

காட்டு விநாயகர்


*அம்மன்/தாயார் :*

மீனாட்சி அம்மன்


*தல விருட்சம் :*

அரச மரம்


*தீர்த்தம் :*

சிறுவானி


*ஆகமம்/பூஜை :*

இரண்டு கால பூஜை


*பழமை :*

500 வருடங்களுக்குள்


*புராண பெயர் :*

புலிக்காடு


*ஊர் :*

வடவள்ளி


*மாவட்டம் :*

கோயம்புத்தூர்


*மாநிலம் :*

தமிழ்நாடு


*திருவிழா:*


*விநாயகர் கோயில் என்பதால், விநயாகர் சதுர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். விழாக்காலத்தில், சராசரியாக இக்கோயிலில், ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கு அன்னதானமிட்டு, பிரம்மாண்டமாக கொண்டாடுவர். இதை தவிர, மதுரை மீனாட்சியம்மனைப்போலவே, இக்கோயிலிலும் மீனாட்சியம்மன் உள்ளது. மதுரையில், திருக்கல்யாண உற்சவம் நடைபெறும் அதே நாளில், இக்கோயிலிலும் மிகவும் பிரம்மாண்டமாக திருக்கல்யாண உற்சவ நிகழ்வு நடைபெறும். கார்த்திகை மாத காலத்தில், ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள், இக்கோயிலில் தங்கியிருந்து, தினமும் இரவு பஜனையில் ஈடுபடுவார்கள்.*


*தல சிறப்பு:*


*கோயில் வளாகத்திலேயே செயற்கை வனத்தை போல, ஒரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட வேப்ப மரம் ஒன்றும் உள்ளது.*


*திறக்கும் நேரம்:*


*காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.*


*முகவரி:*


*அருள்மிகு காட்டு விநாயகர் திருக்கோயில்,வடவள்ளி பேருந்து நிலையம் எதிரில்,வடவள்ளி,கோயம்புத்தூர்– 641041.*


*போன்:*


*+91 422– 2426529, 94865 87944*


*பொது தகவல்:*


*பல ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் அமைந்திருந்த இடம் வனப்பகுதி என்றாலும், தற்போது வடவள்ளியின் மையப்பகுதியில்தான் இக்கோயில் அமைந்துள்ளது. கோயிலை பராமரித்தல் குறித்த பிரச்னை எழுந்தபோது, இப்பகுதி வாழ் பெரியோர்கள் இணைந்து, கோயில் பெயரில் பொது நல அறக்கட்டளை துவங்கினர். இதற்கு பிறகு, கோயிலின் வளாகத்திலேயே, மீனாட்சியம்மன், முருகன், நாகதேவதைகள் என வரிசையாக சுவாமிகளை பிரதிஷ்டை செய்து வைத்தனர். இன்று இப்பகுதி வாழ் மக்கள், இந்த கோயில்தான், தங்களின் மன அமைதிக்கான ஒரே தியானப்பீடம் என்கின்றனர். இதை தவிர, இக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள முருகனின் வடிவமும், பழனியில் உள்ள முருகப்பெருமானின் வடிவமும் ஒரே மாதிரியாக இருப்பதாக கோயிலுக்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.*


*பிரார்த்தனை :*


*மீனாட்சியம்மன் இங்கு மிகவும் நேர்த்தியான, தோற்றத்தில் காணப்படுவதாலும், மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் என்பதாலும், பெரும்பாலும் கல்யாணம் ஆக வேண்டும் என்ற பிரார்த்தனைதான் அதிகம் இருக்கும். அதேசமயம், தொழில் நகரம் கோவையில், புதிதாக தொழில்துவங்கவோரின் எண்ணிக்கையும் கனிசமாக இருக்கும். எனவே, தொழில் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதலும் பக்தர்கள் இக்கோயிலில் வைப்பதுண்டு.*


*நேர்த்திக்கடன்:*


*நேர்த்திக்கடனை பொறுத்த வரையில், பக்தர்களுக்கு அன்னதானம் இடுவது மட்டுமே பிரதான நேர்த்திக்கடனாக உள்ளது. மேலும், தொழில் சிறப்பாக இருந்தால், அவரவர் தொழிலுக்கு ஏற்ப, கோயிலுக்கு தேவையான பொருட்களை காணிக்கையாக வழங்குவார்கள்.*


*தலபெருமை:*


*பிரார்த்தனைகளை தவிர்த்து, தியானத்திற்கான சிறந்த இடமாக இக்கோயிலை மக்கள் விரும்புகின்றனர். ஊரின் மையத்தில் இக்கோயில் அமைந்திருந்தாலும், கோயிலின் வளாகத்திற்கும் அமைதியை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலை உள்ளது. ஒரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட வேப்ப மரம் ஒன்றும் உள்ளது. இந்த இரண்டு மரங்களும், அப்பகுதியை மிகவும் குளிர்ச்சியாக வைக்கிறது. மேலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய இடத்திலும், வடவள்ளியின் மையப்பகுதியில் அமைந்திருப்பதால், மக்கள் எளிதில் இக்கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வசதியாக உள்ளது. ஒரு சில கிராமக்கோயில்களுக்கு செல்ல பேருந்து வசதி இல்லையே என்ற ஏக்கம் இருக்கலாம். ஆனால், இக்கோயில் வடவள்ளியின் மையப்பகுதியில் இருப்பதால், இங்கு பேருந்து வசதி வாகன வசதிக்கும் குறைச்சல் இல்லை எனலாம்.*


*தல வரலாறு:*


*இக்கோயில் பல ஆண்டு காலத்திற்கு முன், அடர்ந்த வனப்பகுதியில் இருந்தது. அப்போது, வனத்திலேயே மிகவும் பெரிய மரமாக இருந்த, இந்த அரசமரம் காணப்பட்டது. விநாயகரின் சிலையை வடிவமைத்த சிற்பி, வனத்தில் ஆடு மேய்த்தவர். அப்போதைய காலத்தில் தீண்டாமையில் சிக்கி தவித்து வந்த, அப்பகுதி மலைவாழ் சிறுவன் ஒருவன், வேறு கிராமத்தில் உள்ள விநாயகர் சிலையை பார்த்துவிட்டு வந்து, தங்கள் வனத்திலும் இதேபோன்ற சிலையை வடிவமைக்க வேண்டும் என, வனத்திலிருந்த கருங்கற்கலால் இச்சிலையை நிறுவினான் என்று கூறப்படுகிறது. இதனை அரிந்த அப்போதைய, பழந்தமிழர்கள், அரசமரத்திற்கு அடியில், விநாயகரை வைத்து தரிசனம் செய்ய துவங்கினர். பின், நாகரீக வளர்ச்சியின் காரணமாக, சுவாமியை சுற்றியும், சுற்றுச்சுவர் எழுப்பி, கோயிலாக நிறுவப்பட்டது.*


*மேலும், அதன் வழியாக இக்கோயில் நிர்வாகமும், சமுதாயம் வித்யாசமின்றி, அனைத்து சமுதாயத்தினரும் இணைந்து இக்கோயில் திருப்பணியை செய்து வருகின்றனர்.*


*சிறப்பம்சம்:*


*அதிசயத்தின் அடிப்படையில்:*


*கோயில் வளாகத்திலேயே செயற்கை வனத்தை போல, ஒரு பெரியதோர் அரசமரம், சுமார் நூற்றாண்டுகளை கண்ட வேப்ப மரம் ஒன்றும் உள்ளது.*


*அமைவிடம் :*


*கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையத்திலருந்து மருதமலை செல்லும் வழியில், சுமார் 10 கி.மீ., தொலைவில்,வடவள்ளி பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் உள்ளது.*


*அருகிலுள்ள ரயில் நிலையம் :*

கோயம்புத்தூர்


*அருகிலுள்ள விமான நிலையம் :*

கோயம்புத்தூர்


*தங்கும் வசதி :*

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்