Temple info -1820 Marudanda Nadeswarar temple, Angarai, Tiruchi. மருதாண்ட நாதேஸ்வரர் கோயில், ஆங்கரை, திருச்சி

 Temple info -1820

கோயில் தகவல் -1820


Marudanda Nadeswarar Temple, Angarai, Trichy


Marudanda Nadeswarar Temple is a Hindu Temple dedicated to Lord Shiva located at Angarai near Lalgudi Town in Trichy District of Tamilnadu. Presiding Deity is called as Marudanda Nadeswarar and Mother is called as Sundara Kanchani.


Legends

Marudandhan was the son of the sage Suholar. The sage drove away his consort (mother of Marudandhan) on charges of adultery, and thereafter she led an immoral life. As Marudandhan grew, he became a friend of the prince of the country. The prince was a lustful and salacious youth. Marudandhan too got influenced by him and became lustful. Once, womanizing, both went to an elderly woman and made merry together. Then she realized that the adult who accompanied the prince was her son. Knowing this, Marudandhan, began to lament loudly at the sin he had had committed. Pricked by this ill feeling, he discarded the material life and went to the forest and began to meditate.

Pleased by his sincere and strong penance, Lord Shiva appeared before him. He pardoned the sin, as it was done unknowingly. However, Lord Shiva said. “Any man should see a woman as a mother only”. To make the world realize this I enacted this horrible drama. In the ‘Kali Yuga’ many such incidents may happen. The guilty should realize the sin and repent. Still, being wreck with this conscience thrashing him, Marudandhan asked, for atonement. Lord Shiva asked him to construct a temple and pray towards him every day will give him a peace at mind. Marudandhan built a temple out of his own resources after this and worshipped every day. Ambal pacified him. She is called Sundara kanchani here.


The Temple

Presiding Deity is called as Marudanda Nadeswarar and Mother is called as Sundara Kanchani. Though the temple is facing east, the south facing entrance only is in use. While the shrine of Lord faces east, that of Mother is facing South in a single hall – mandapam. The devotee can go around the shrines simultaneously. This is a rare model. The temple has a one Prakara-corridor only having shrines for Dakshinamurthy, Vinayaka, Gajalakshmi, Durga, Chandikeswara and Navagrahas – the 9 planets. The consecration of the temple was performed last in the year 1968.


Temple Opening Time

The temple remains open from 6.00 a.m. to 11.00 a.m. and 4.00 p.m. to 8.00 p.m.


Festivals

Tamil New Year day falling almost on April 14 each year, Vaikasi Visakam in May-June, Aadi Kruthikai in June-July, Vinayak Chaturthi mostly during August-September, Navarathri during September-October, Skanda Sashti in October-November, Tirukarthikai in November-December, Panguni Uthiram in March-April are the festivals celebrated in the temple with special pujas.


Prayers

People pray for removal of obstacles in marriage alliances, for child boon and excellence in education. Devotees perform abishek and offer vastras (clothes) to Lord and Mother.


Connectivity

The Temple is located at about 1 Km from Santhai Pettai Bus Stop, 2 Kms from Lalgudi, 2 Kms from Lalgudi Bus Station, 3 Kms from Lalgudi Railway Station, 2 Kms from Mandurai, 14 Kms from Srirangam, 21 Kms from Trichy and 26 Kms from Trichy Airport.


Thanks

Ilamurugan's blog


*தோஷங்கள் போக்கும் மருதாந்த நாதேஸ்வரர் கோவில்*


திருச்சி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் உள்ளது மருதாந்த நாதேஸ்வரர் கோவில். 


திருச்சி அருகே உள்ள ஆங்கரை என்ற கிராமத்தில் உள்ளது மருதாந்த நாதேஸ்வரர் கோவில். இங்கு அருள் பாலிக்கும் இறைவன் பெயர் மருதாந்த நாதேஸ்வரர். இறைவி சுந்தர காஞ்சனி அம்பாள். ஆயிரம் ஆண்டு களுக்கு முற்பட்ட ஆலயம் இது.


சாரத்வதம் என்று ஒரு ஊர். அங்கு வருமான ககோளர் என்பவர் இருந்தார். அவர் சகல சாஸ்திரங் களையும் அறிந்தவர்; சிவபக்தி மிகுந்தவர். அவருடைய மனைவி லீலாவதி. கண்டவர் மயங்கும் அழகு கொண்டவள். இவர்களுக்கு ஒரு ஆண் மகன் பிறந்தான். தனது ஞான திருஷ்டியால் தனது மகன் பெரிய பாவம் செய்யப் போகிறான் என்பதை ககோளர் அறிந்தார். அதனால் அவனுக்கு மருதாந்தன் என்று பெயரிட்டார்.


காலம் ஓடியது. லீலாவதி தடம் மாறினாள். பிற ஆடவர் பழக்கம் அவளுக்கு உண்டானது. அதனால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டாள். கோதாவரிக் கரையில் உள்ள உத்தம புரத்தில் வசித்தபடி,   பல ஆண்களிடம் பொன், பொருள் பெற்றுக் கொண்டு சுகவாழ்வு வாழ்ந்தாள்.


அவள் மகன் மருதாந்தன் வேத சாஸ்திரங் களை நன்கு கற்றான். அவன் தேச யாத்திரை செய்து வரும் போது, உத்தமபுரம் வந்தான். அவனது அறிவுத் திறமையை நேரில் கண்ட அவ்வூர் மன்னன், அவனுக்கு மந்திரி பதவி வழங்கினான்.


தவறான நண்பனின் வழிகாட்டு தலால், லீலாவதியின் வீட்டிற்கு சென்றான் மருதாந்தன். அங்கு சென்றதும் தான் அது அவனது தாய் என்பது தெரிந்தது. இருவரும் வேதனை அடைந்தனர். லீலாவதி தன் மகனிடம், “நீ தர்ம சாஸ்திரங்கள் கற்ற மகான் களிடம் கூறி பிராயச்சித்தம் அறிவாய்” எனக் கூறினாள்.


கோதாவரி கரைக்குச் சென்ற மருதாந்தன், சந்தியா வந்தனத் திற்காக அங்கு கூடிய வேத விற்பன்னர் களிடம் நடந்ததை கூறி, பிராயச்சித்தம் அருளும்படி வேண்டி நின்றான்.


அவர்கள் “கருப்பு நிறமுள்ள இரும்பினால் செய்யப்பட்ட மணிகளை கழுத்தில் கட்டி கொண்டு கிராமங்கள் தோறும் போய் பிச்சை எடு.     நீ செய்த பாவங்களை அவர்களிடம் கூறு. இறைவனுக்கு பூஜை செய். உன் கழுத்தில் உள்ள மணிகள் ரத்தினமாக மாறும் வரை இப்படிச் செய். இரும்பு மணிகள் ரத்தினமாக மாறியதும், உன் பாவம் நீங்கி விட்டதாக அறிந்துகொள். அந்த இடத்தில் ஒரு சிவலிங் கத்தை பிரதிஷ்டை செய்” என்று கூறினர்.


அதன்படியே செய்தான் மருதாந்தன். 12 ஆண்டுகள் பல ஊர்களைச் சுற்றி வந்த அவன், ஓரிடத்தில் கடுமையான தவத்தில் ஈடுபட்டான். அப்போது அவன் கழுத்தில் இருந்த இரும்பு மணிகள் ரத்தினமாக மாறின. தன் பாவம் விலகிய அகம்ஹரம் என்ற இடத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். அந்த ஊர் தற்போது ஆங்கரை என்று அழைக்கப் படுகிறது. மருதாந்தன் பிரதிஷ்டை செய்த லிங்கமே, மருதாந்த நாதேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.


ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமர்ந் திருந்தாலும், தெற்கு திசை வாசலே பயன்படுத்தப்படுகிறது. முகப்பை கடந்ததும் அகன்ற பிரகாரம். மகாமண்ட பத்தில் நத்தியம் பெருமான் வீற்றிருக்க, இடதுபுறம் தண்ட பாணியின் திருமேனி உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்து உள்ள கருவறையில் இறைவி சுந்தர காஞ்சனி அம்பாள் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறாள். அன்னைக்கு நான்கு கரங்கள். தனது மேல் வலது மற்றும் இடது கரங்களில் தாமரை மலர்களை தாங்கி,          கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரை களுடன் வீற்றிருக் கிறாள். அம்மனை தரிசித்துவிட்டு வலதுபுறம் வந்தால் மருதாந்த நாதேஸ்வரர் சன்னிதி உள்ளது.


*சிவயநம*


மாத்ரு கமன என்ற மகா தோஷத்தை மருதாந் தனுக்கு போக்கிய இத்தலத்து இறை வனையும், இறைவி யையும் வணங்கு வதால் நம்மை பிடித்திருக்கும் அனைத்து தோஷங்களும் விலகும் என்று நம்புகின்றனர் பக்தர்கள்.


திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் சாலையில் லால்குடிக்கு 2 கிலோமீட்டர் முன்பாக ஆங்கரை உள்ளது.                 .

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்