Temple info - 1588. Pagalavadi Shiva Temple, Thuraiyur,Trichy. பாகலவாடி சிவன் கோயில், துறையூர், திருச்சி

 Temple info -1588

கோயில் தகவல் -1588



Pagalavadi Shiva Temple & Siddhar Peedam, Trichy


Pagalavadi Shiva Temple & Siddhar Peedam is located at Karattampatty Village near Pagalavadi in Trichy District of Tamilnadu. Presiding Deity is called as Ekambareswar and Mother is called as Kamakshi Amman. Pagalavadi is situated on the northern bank of river Cauvery.


Legends

This place was known as Jamuna Vanam (Naval Trees). This place was surrounded by mountains having small caves. It is believed Siddhars engaging themselves in the services of Lord Shiva lived in these caves. It is believed that this temple was built by them. With the invasion of outside forces, the temple was destroyed. As years rolled on, the local population tried to rebuild the temple. Even queen Mangammal know the glory of this Shiva peetam and has visited the temple, gifted lands and money of its welfare and built Yatrikar mandapams.


The peetam appeared in the dreams of many citizens of the local community. A divine prasannam (Holy prediction) by the people proclaimed that Shiva peetam was created by the Siddhars and the pooja articles of the temple are buried in a well. The declaration proved to be true and the Shiva peetam resembled the facts of its classical nature with the worship of Siddhars.


The Temple

The temple is made of hard polished stones and fine architecture. Presiding Deity is called as Ekambareswar and Mother is called as Kamakshi Amman. The sanctum sanctorum of Lord Shiva is a round construction, decorated by lotus, surrounded by eight elephants and eight serpents, saints, rishis. The wall has the pictures of all the 12 (Rasis) and 27 (Stars) the construction is like mount Meru where lord Shiva blesses on everyone with his divine grace.


There are also basements (Peetams) for lord Vigneshwara, Muruga, Vishnu and Parasakthi. There is tank in the temple with 1008 madams to illuminate with lights. It is believed that Sitadevi took her bath in this holy tank before falling into fire, as per the orders of Lord Rama. On 15.5.2009 the consecration of the temple was performed. It was followed by (kooda Muzhukku) on 15.5.2011.


Contact

Pagalavadi Shiva Temple & Siddhar Peedam,

Trichy District

Mobile: +91 98424 33363 / 88700 57615


Connectivity

The Temple is located at about 1 Km from Jayaram College Bus Stop, 9 Kms from Thuraiyur, 17 Kms from Thiruvellarai, 18 Kms from Thiruppainjeeli, 28 Kms from Uthamarkovil Railway Station, 39 Kms from Trichy and 44 Kms from Trichy Airport.


Thanks

Ilamurugan's blog


*🙏🌹12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப் பெற்றி ருக்கும்*


*சிவபீடம் என்று அழைக்கப் படும் ஏகாம்பரேஸ் வரர் கோவில்...!*


( ▪️இது காஞ்சிபுரம் அருகே உள்ள கோவில் என்று நினைத்து விடாதீர்கள். திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ் வரர் திருக்கோவில். ராசி கோவிலாக திகழ்கிறது. இதைப் பற்றிப் பார்ப்போம்._ )


ராசி கோவிலாக திகழ்கிறது திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ் வரர் திருக்கோவில்.


மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை 12 ராசிகள், 27 நட்சத்திரங் கள், 9 கிரகங்கள் மற்றும் திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் என்று சொல்லக் கூடிய பஞ்சகங்கள் போன்றவை தான் நிர்ணயம் செய்கின்றன.


இவைகளால் ஏற்படக்கூடிய தோஷங் களில் ராசி ரீதியாகவும், நட்சத்திர ரீதியாகவும் மனிதர் களாகிய நாம் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக் குள்ளா கிறோம்.


அந்த பாதிப்பில் இருந்து விடுபட பலரும் பரிகாரத் தலங்களைத் தேடிச் செல் கிறார்கள்.


அந்த வகையில் நமக்கெல்லாம் சிறந்த பரிகார தலமாக இருக்கிறது திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ் வரர் திருக்கோவில்.


சுமார் 1300 வருடங் களுக்கு முற்பட்ட மிகப் பழமை வாய்ந்த சிவாலயம் இதுவாகும்.


இத்தல இறைவனின் பெயர் ஏகாம்பரேஸ் வரர். அம்பாளின் திருநாமம் காமாட்சி யம்மன். இந்த சிவால   யத்தில் வட்ட வடிவிலான பீடம் அமைந் துள்ளது.


இந்த பீடத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய பன்னிரண்டு ராசிகளுக் குரிய குறிகள் பொறிக்கப் பட்டுள்ளன.


மேலும் ஐராவதம், புண்ட்ரீகன், புஷ்பதந்தன், குமுதன், சார்வபவுமன், அஞ்சனன், சுப்ரதீபன், வாமனன் என திசைகளை காக்கும் அஷ்டதிக் கஜங்கள் (யானைகள்), நாகங்கள்,       64 கலைகளை விளக்கக் கூடிய சிற்பங்கள், ஒவ்வொரு ராசிக்கும் உரிய அதி தேவதை, பிரத்தியதி தேவதைகள் ஆகியன 4, 8, 16, 32 ஆகிய எண்ணிக் கையில் வாழ்க்கையின் தத்துவத்தை வெளிப் படுத்தும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன.


இந்த பீடத்தின் மீதுதான் அனுக்கிரக மூர்த்தியாக ஏகாம்பரேஸ் வரரும், சாரங்கநாத சித்தர் வழிபட்ட சிவ லிங்கமும் பக்தர்களுக்கு அருள்பாலிக் கின்றனர்.


இந்தியா விலேயே ஒரே இடத்தில் இது போன்ற சிறப்பம் சங்களுடன் கூடிய சிவாலயம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பாகும்.


இத்தலத்தில் காமாட்சி யம்மன், சிந்தாமணி மாணிக்க விநாயகர், ஐஸ்வர்ய மகாலட்சுமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடா ஜலபதி, அரசு-வேம்பு இணைந்த மரத்தடியில் ராகு, கேதுவுடன் கூடிய வலம்புரி விநாயகர், நவக் கிரகங்கள், காலபைரவர் ஆகிய சன்னிதிகளும் தனித் தனியாக அமையப் பெற்றுள்ளன.


சாரங்கநாதர் எனும் சித்தர் இந்த ஆலயத்தில் ஏகாம்பரேஸ் வரரை வழிபட்ட தாகவும், அவர் இந்த ஆலயத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளதாகவும் கருதப்படு வதால், அவர் நினைவாக துளசி மாடமும், அதன் அருகில் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.


இந்த சித்தர் சன்னிதியில் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்றும் மாலையில் யாக வேள்வியும், 210 சித்தர்களின் தமிழ் போற்றி வழிபாடும், அன்ன தானமும் நடை பெறுகிறது.


இந்த வழிபாட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகின்ற பக்தர்கள் தங்களது ஜாதக குறிப்பினை வைத்து எடுத்துச்செல்கின்றனர்.


கோவிலின் வடபுறத்தில் 27 நட்சத்திரங் களுக்கும் மரங்கள் அமையப் பெற்றுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத் திற்குரிய மரங்களில் ஒரு குடம் நீர் ஊற்றுவது சிறந்த பரிகாரமாகும்.


ஆலயத்தின் அக்னி மூலையில் தீர்த்தக் குளம் உள்ளது. ராமர் சொல் கேட்டு அக்னி பிரவேசம் செய்த சீதாதேவி, இக்குளத்தில் நீராடி இங்குள்ள சிவனை வழிபட்டதாக ஐதீகம். எனவே இந்த குளத்திற்கு ‘சீதாதேவி குளம்’ என்ற பெயரும் உண்டு.


இத்திருத் தலத்தில் மாதம் இருமுறை பிரதோஷம், சிவராத்திரி, தேய்பிறை அஷ்டமி, ஐப்பசி பவுர்ணமி அன்னா பிஷேகம், கார்த்திகை தீபம் உள்ளிட்ட விசேஷங்கள் வெகு விமரிசையாக நடைபெறு கிறது.


இத்தலத்தில் பக்தர்கள், தங்கள் ராசிக்குரிய இடத்தில் தீபம் ஏற்றி வழிபடு கின்றனர்.


இந்த ஆலயத்தில் தற்போது 63 நாயன்மார்கள் மற்றும் சமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர் ஆகியோரது திருமேனி களை பிரதிஷ்டை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.


இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந் திருக்கும்.


ஞாயிற்றுக் கிழமை மட்டும் பகல் 12 மணி வரையும், இரவு 7.30 மணி வரையும் ஆலய தரிசனம் செய்யலாம்.


இந்தக் கோவிலுக்கு அருகில் பரந்தமலை என்னும் மலை உள்ளது. அங்கு சப்தகன்னி யர்களும், வற்றாத சுனையும் உள்ளது.


எல்லா காலத்திலும் அந்த சுனையில் நீர் இருந்து கொண்டே இருக்கும். மேலும் அங்கு சித்தர்கள் வாழ்ந்த சிறிய குகைகளும் காணப் படுகின்றன.


அமைவிடம்


திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊர் உள்ளது.


இங்கிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கரட்டாம்பட்டி தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.


கல்லூரியில் சுற்றுச்சுவரை ஒட்டி கிழக்கு திசையில் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் சத்திரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் அமைந் திருக்கிறது.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்