Temple info -1584. Kanthaswamy Temple Cheyyur, Chengalpat. கந்தசுவாமி கோயில், செய்யூர், செங்கல்பட்டு

 Temple info - 1584

கோயில் தகவல் -1584



Kanthaswamy temple, Cheyyur


Kanthaswamy Temple in Cheyyur, in Chengalpattu district in the South Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Murugan. Constructed in the Dravidian style of architecture, the temple was constructed during the Cholas during the 10th century. Murugan is worshipped as Kanthaswamy along with his consorts Valli and Deivasena. A granite wall surrounds the temple, enclosing all its shrines.


Religion

Affiliation

Hinduism


District

Kanchipuram


Deity

Kanthaswamy (Murugan) Valli, Deivasena


Location

Cheyyur


State

Tamil Nadu


Country

India


Geographic coordinates

12°21′09″N 80°02′22″E


Architecture


Dravidian architecture

The temple is open from 6 am - 12:30 pm and 4:30 - 8:00 pm on all days. Four daily rituals and many yearly festivals are held at the temple, of which the Vaikasi Visagam, Kanthasasti festival, Soorasamharam, Thaipoosam festival and Panguni Uthiram festival being the most prominent being the most prominent. The temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.


Legend


As per Hindu legend, Muruga obtained the Vel (spear) from his mother Parvathi from Sikkal Singaravelan Temple. He slayed Sooran, the demon, the event called Soorasamharam at Tiruchendur. During the war, the Bhutaganas, Shiva's army, is also believed to have helped Murugan. Since Murugan killed Sooran and his son Iranyeswaran, he attained Dosha (sin). To propitiate himself from the sin, he is believed to have installed the image of Shiva as Somanatha at this place and worshipped Shiva. Since the son of Shiva (called Sei) worshipped him, the place is called Cheyyur. The 27 Bhutaganas are personified to the 27 stars as per Hindu mythology.


History


The place was believed to be ruled by a Chola emperor named Valanvan and the place came to be known as Valavapuri. From the inscriptions in the temple, it is believed that it was constructed by the Cholas during the 10th century. The inscriptions from the Vijayanagar Empire during the 15th century indicate that Muslims were employed in the office of the kings. They also indicate that lands were endowed to the temple by the Muslims. The shrine of Meenakshi was added by the benevolent contribution by a devotee in 1937. The temple is believed to have been visited by Arunagirinathar, a 15th-century Murugan devotee and composed Thiruppugazh at this place.


Architecture


Kanthaswamy temple has a flat rajagopuram in the North, piercing the rectangular granite walls around the temple. The presiding deity Kanthaswamy, is housed in the East facing sanctum, with Valli and Deivasena on either of his sides. The sanctum is approached from the main entrance through the flag staff hall, Maha mandap and Artha mandap. There is a 5 ft (1.5 m) granite Vel in front of Kanthaswamy. The flag staff is located in the flagstaff hall axial to the sanctum. An image of peacock, the vehicle of Muruga and Surya faces the main shrine in the Maha Mandap. There are shrines of Vinayaga before the Mahamandap and the sanctum is guarded by Brahma and Vishnu, which is an unusual feature in Murugan temples. The shrine of Tiripurasundari is located in the second precinct. There are separate shrines of Valli and Deivasena in South facing shrines diagonally opposite to the sanctum. The image of Somanathar and Meenakshi are in the temple. The images of the 27 Bhutaganas, each 2 ft (0.61 m) tall are sculpted in the niches around the sanctum. The first precinct around the sanctum houses the images of Nrithuya Kanthar, Bala Kanthar, Brahma Sastha, Sivagurunathar, Veduvar and Navagrahas. There are several pillars without roof in the precinct indicating the presence of large halls in the temple earlier. A hall called Vadya Mandapa which was used for recitals of Nadaswaram is not existent anymore.


Festival


The temple follows Saivite tradition. The temple priests perform the pooja (rituals) during festivals and on a daily basis. The temple rituals are performed four times a day: Kalasanthi at 7:00 a.m., Uchikalam at 12:30 p.m., and Sayarakshai at 6:00 p.m.. During the Arthajamam between 8:30  - 9:00 p.m, Kanthaswamy is believed to offer his worship Somanatha along with the 27 Bhoothagans and it is enacted every day. Each ritual has three steps: alangaram (decoration), neivethanam (food offering) and deepa aradanai (waving of lamps) for both Kanthaswamy and Tiripurasundari. There are weekly, monthly and fortnightly rituals performed in the temple. The temple is open from 6 am - 12:30 pm and 4-9:00 pm on all days. The temple has many festivals in its calendar, with the Vaikasi Visagam, Kanthasasti festival, Soorasamharam, Thaipoosam festival and Panguni Uthiram festival being the being the most prominent. Sarva vadyam is a music instrument used in the temple from historic times during the festive occasions. Chengalvaraya Sastri, a historical musician is believed to have composed songs praising the presiding deity. The practise of singing his songs during the rituals is continued in modern times.


*காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு செய்யூர் அருள்மிகு கந்தசுவாமி ஆலயம்.*


*கோபுர தரி

*மூலவர் : கந்தசுவாமி*


*அம்மன்/தாயார் : வள்ளி-தெய்வானை*


*தல விருட்சம் : வன்னி, கருங்காலி*


*பழமை : 500 வருடங்களுக்குள்*


*ஊர் : செய்யூர்*


*மாவட்டம் : காஞ்சிபுரம*


*மாநிலம் : தமிழ்நாடு*


*திருவிழா*


*ஆடிக் கிருத்திகை, கந்தசஷ்டி-சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், தைப்பூசம், பங்குனி உத்தர திருக்கல்யாணம், வைகாசி விசாகம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன.*


*தல சிறப்பு*


*வெளிப் பிரகாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் இக்கோயிலைச் சுற்றி அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.*


*திறக்கும் நேரம்*


*காலை 5 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.*


*முகவரி*


*அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்,செய்யூர், காஞ்சிபுரம்.*


*பொது தகவல்*


*வெளிப் பிராகாரத்தில் இருந்து முன் மண்டபத்திற்குள் நுழைந்ததும், இடப்புறத்தில் சோமநாதர், மீனாட்சியம்மை சன்னதியும், அதன் அருகில் பள்ளியறையும் இருப்பதைக் காணலாம். இச் சன்னதியின் முன் நந்தி தேவர் வீற்றிருக்க இருபுறமும் பிரம்மாவும், விஷ்ணுவும் காட்சியளிக்கின்றனர். கொடி, மரத்துக்கு வடக்கில் அம்மன் சன்னதியும், அதற்கு முன் சர்வ வாத்திய மண்டபமும் அமைந்துள்ளன. துவஜஸ்தம்பத்திற்குப் பின்னால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தைச் சுற்றி அமைந்துள்ளன நட்சத்திர வேதாளங்கள்.*


*பிரார்த்தனை*


*தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற பக்தர்கள் இங்குள்ள முருகனை மனதார பிரார்த்தித்துச் செல்கின்றனர்.*


*நேர்த்திக்கடன்*


*வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள முருகனுக்கு பால் அபிஷேகம் செய்தும், காவடி எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.*


*தலபெருமை*


*வேதாளங்களை சிவகணங்களாக செய்யூர் கந்தசுவாமி கோயிலில் காணலாம். வேதாளங்கள் பைரவரின் ஆணைக் குக் கட்டுப்பட்டவை. எனவே ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும், அவரவர் நட்சத்திரத்திற்குரிய வேதாளங்களை வழிபட்டு, கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தால், அக்கோரிக்கைகளை வேதாளங்கள் பைரவர் மூலமாக விரைவாக முருகனிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்பது ஐதிகம். இதனால் பலர் பயனடைந்துள்ளதால், ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் இக்கோயிலை நாடி வருவோர் அதிகம். தெற்கு, கிழக்கு என இரண்டு நுழைவு வாயில்கள் கொண்டது கோயில். வெளிப்பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் பழமையான கல் தீபஸ்தம்பமும், கொடிமரமும் மூலஸ் தானத்தை நோக்கியவாறு காட்சி அளிக்கின்றன. இக்கோயிலின் சிறப்பு, கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்ரமணிய ரூபங்காளாகவே காட்சியளிப்பதாகும். வழக்கமாக சைவ கோயில்களில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை விளங்குவர். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் பிரம்ம சாஸ்தாவும், விஷ்ணு மாடத்தில் பாலஸ்கந்தரும், பிரம்மாவின் இடத்தில் சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புலிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர். மேலும் சிவதலங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரும், பைரவரும் இம்முருகன் கோயிலில் அவரவருக்கு உரிய இடத்தில் அமர்ந்திருக்கின்றனர். இங்கிருக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார். வெளிப்பிரகாரத்தில் பிரதட்சிணமாக வரும்போது முதலில் விநாயகர் சன்னதியும், மூலஸ்தானத்திற்கு வடக்கே நந்தவனமும் காணப்படுகின்றன. தலவிருட்சம் வன்னி மற்றும் கருங்காலி மரங்களாகும். தேய்பிறை அஷ்டமி அன்று மாலை வேதாள பூஜை விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளிப்பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது. கோயலுக்கு வெளியே நவகிரகங்கள் பூஜித்த விநாயகர்கள் காணப்படுகிறார்கள். கோயிலிற்கு மேற்கே செட்டிகுளம் என்ற திருக்குளம் உள்ளது. செட்டி என்பது முருகனின் திருநாமங்களுள் ஒன்று.*


*தல வரலாறு*


*கந்தசுவாமி பெருமானைப் போற்றி அந்தக் கவி வீரராகவ முதலியார் இயற்றிய சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், சேயூர் கலம்பகம், சேறை கவிராஜ பிள்ளையின் சேயூர் முருகன் உரை, முருகதாச ஸ்வாமிகளின் சேயூர் முருகன் பதிகக் கோவை, சிவப்பிரகாச சுவாமிகளின் நெஞ்சுவிடு தூது எனப் பல நூல்கள் தோன்றி யுள்ளன. அருணகிரிநாதரும் இத்தல முருகனைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். இப்புண்ணிய தலத்தில் அவருக்கு சிலையும், அவர் பாடிய பதிகங்களின் கல்வெட்டும் காணப்படுவது சிறப்பு!*


*சிறப்பம்சம்*


*அதிசயத்தின் அடிப்படையில்*


*வெளிப்பிரகாரத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக மொத்தம் 27 பூத கண வேதாளங்கள் இக்கோயிலைச் சுற்றி அமைந்திருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.*


*அமைவிடம்*


*மதுராந்தகத்திலிருந்து 29 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் எல்லையம்மன் கோயில் நிறுத்தத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும் செய்யூர் உள்ளது.*


*அருகிலுள்ள ரயில் நிலையம்*

*செங்கல்பட்டு*


*அருகிலுள்ள விமான நிலையம்*

*சென்னை*


*தங்கும் வசதி*

*காஞ்சிபுரம்*

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்