Temple info -1473 Chidambareswarar temple, Kitlambakkam, Cuddalore சிதம்பரேஸ்வர்ர் கோயில், கிட்லம்பாக்க, கடலூர்
Temple info -1473
கோயில் தகவல் -1473
Chidambareswarar Temple, Kotlampakkam, Cuddalore
Chidambareswarar Temple is a Hindu Temple dedicated to Lord Shiva located in Kotlampakkam near Panruti Town in Panruti Taluk in Cuddalore District of Tamilnadu. Presiding Deity is called as Chidambareswarar / Chitrambalanathar and Mother is called as Sivagamasundari. The Temple is considered as Thevara Vaippu Sthalam as Devaram hymns had a mention about this Temple. As per Periya Puranam, the place was mentioned as Madam (religious mutt) located near to Thiruvathigai Paadal Petra Sthalam.
Legends
Chidambareswarar Temple, Kotlampakkam – Legends
Pada Deeksha:
As per legend, Sundarar, famous Nayanmar saint, did not enter the temple as it was already praised by Appar. He decided to stay in a madam (Mutt) in Siddhavadam. He was sleeping in the Madam where an old man stepped on his head. Sundarar avoided him and turned his head toward other direction, but the old man still stepped on his head. Sundarar wanted to know who the old man was when Shiva appeared in his true form in front of him. Thus, Sundarar was blessed with Pada Deeksha. This Madam was situated towards the western side of Chidambareswarar Temple but now it is not found.
Kotlampakkam:
Kodalam (Senganthal Poo) means Flame Lily. This area might be densely populated with Flame Lily plant in ancient times. Hence, the area came to be called as Kodalam Pakkam. Later, got corrupted to Kotlampakkam.
Other Names:
Kotlampakkam was called as Siddhandimadam / Siddhantha Madam / Siddhavadamadam / Kodalam Pakkam in ancient times.
The Temple
This is an east facing Temple with three tiered Rajagopuram. Nandi housed in a Mandapam and Balipeedam can be found immediately after Rajagopuram facing the sanctum. There is a small shrine for Vinayaga before Balipeedam. This is the first shrine to be seen immediately after the entrance. Presiding Deity is called as Chidambareswarar / Chitrambalanathar. He is housed in the sanctum in the form of Lingam. Mother is called as Sivagamasundari. She is housed in a separate shrine.
There is a shrine for Annamalaiyar with his consort Unnamulai Amman in the Temple premises. There are shrines of Veeerabadhra, Navagrahas, Nataraja, Kala Bhairava, Suryan, Agastya with his consort Lopamudra, Dakshinamoorthy, Selva Ganapathy, Naalvar, Lakshmi Narasimha, Lord Murugan with his consorts Valli & Deivanai and Anjaneya in the Temple premises.
Literary Mention
The Temple is considered as Thevara Vaippu Sthalam as Devaram hymns sung by Appar and Sundarar had a mention about this Temple. The Temple is mentioned in 4th Thirumurai in 2nd Patikam in 3rd Song by Appar and 7th Thirumurai in 38th Patikam in 1st Song by Sundarar.
Appar:
ஒத்த வடத்திள நாகம்
உருத்திர பட்ட மிரண்டும்
முத்து வடக்கண் டிகையும்
முளைத்தெழு மூவிலை வேலுஞ்
சித்த வடமும் அதிகைச்
சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து
தத்துங் கெடிலப் புனலும்
உடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவது மில்லை.
Sundarar:
தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே
Connectivity
The Temple is located at about 4 Kms from Panruti Bus Stand, 4 Kms from Panruti Railway Station, 21 Kms from Thiruvennainallur, 25 Kms from Viluppuram, 30 Kms from Cuddalore, 50 Kms from Puducherry, 53 Kms from Puducherry Airport and 172 Kms from Chennai Airport. The Temple is situated on Panruti to Thiruvennainallur Route. The Temple is situated next to Pudupet.
Thanks to
Ilamurugan's blog
சுந்தரருக்கு சிவபெருமான் திருவடி தீட்சை கொடுத்த திருத்தலம் .
1110 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது சித்தவட மடம் ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில்
வழக்கில் தற்போது கோட்டலாம்பாக்கம் என்றழைக்கப்படும் சித்தவட மடம் அமைந்திருந்த இடத்தில் தற்போது ஸ்ரீ சிவகாமசுந்தரி உடனாய ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருவதிகை திருக்கோயில்
கல்வெட்டில் இவ்வூர் கொட்டிளம்பாக்கம் (தற்போதைய பெயர் கோட்டலாம்பாக்கம்) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திருத்தலம் மேற்கு நோக்கிய சத்தியோஜன மூர்த்த திருத்தலமாகும்.
கி.பி. எட்டாம் நூற்றாண்டில், இந்த இடம் சித்தர்கள் மடமாக இருந்த காலத்தில், ஸ்ரீ வீரட்டானேஸ்வரரைத் தரிசிக்கும் பொருட்டு வந்த சுந்தரமூர்த்தி நாயனாருக்கு திடீரென்று ஒரு சிந்தனை தோன்றியது. அது என்ன சிந்தனை தெரியுமா? திருவதிகை திருத்தலத்தில் திருநாவுக்கரசர் பெருமானும் அவரது தமைக்கையார் திலகவதி அம்மையாரும் தங்களது திருக்கரங்களால் உழவாரத் திருப்பணி செய்துள்ளனரே அந்த இடத்தை, தான் தனது கால்களால் மிதிக்கக் கூடாது என்ற பக்தியின் மேலீட்டால், ஸ்ரீ வீரட்டானேஸ்வரரை சித்தவட மடத்திலிருந்தவாறே தரிசித்து விடலாம் என்று முடிவு செய்த சுந்தரமூர்த்தி நாயனார் அங்கேயே தங்கி விட்டார்.
தன்னை தரிசிக்க விரும்பிய தனது பக்தன் சுந்தரன் தன்னை தரிசிக்காமல் செல்லலாகாது என்று எண்ணிய ஸ்ரீ வீரட்டானேஸ்வரர், சுந்தரர் தங்கியிருந்த சித்தவட மடத்திற்கே சென்று சுந்தரருக்கு அருட்காட்சி தர விரும்பினாராம். உடனே முதுமைக் கோலம் பூண்ட சிவபெருமான் சித்தவட மடம் சென்று, அங்கு சுந்தரர் உறங்கிக்கொண்டிருப்பதனைக் கண்டு, அவர் அருகிலேயே சிவபெருமானும் தனது கால்கள் சுந்தரரின் தலை மீது படும்படியாகப் படுத்துக்கொண்டார். முதியவரின் கால்கள் தன் தலை மீது படுவதை உணர்ந்த சுந்தரர், பக்கத்திலேயே சற்று தள்ளி வேறு இடத்தில் சென்று படுத்துக்கொண்டார். சிவபெருமான் அவரை விட்டு விடுவாரா என்ன? சிவபெருமானும் சுந்தரர் படுத்திருந்த இடத்தருகே சென்று அவரின் கால்கள் மீண்டும் சுந்தரரின் தலை மீது படும்படியாகப் படுத்துக் கொண்டார்.
சுந்தரர் வன் தொண்டர் அல்லவா? வெகுண்டு எழுந்த சுந்தரர், “ஐயா, பெரியவரே, ஏன் மீண்டும் மீண்டும் இப்படிச் செய்கிறீர்?” எனக் கேட்க, “நீ வேண்டும் என்பதால் தான்” என்று முதியவர் கோலத்திலிருந்த சிவபெருமான் பதில் தர, உடனே சுந்தரர், “நீர் யார்? எந்த ஊர்?” எனக் கேட்க, அதற்கு சிவபெருமான், “நீ ஒரு சித்தன் – நீ எனது பித்தன்” என்று கூறி ரிஷப வாகனத்தில் உமையாளுடன் சுந்தரருக்கு அருட்காட்சிகொடுத்து மறைந்தாராம் சிவபெருமான்.
தன் தலை மீது தன் கால்பட தனக்கு திருவடி தீட்சை தந்தது சிவபெருமான் தான் என்பதை அப்போது தான் உணர்ந்தார் சுந்தரர்.
தம்மானை அறியாத சாதியார் உளரே
சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல்
உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும்
ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
என்று தொடரும் தேவாரப் பதிகத்தைப் பாடினார்.
இப்பாடல் திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரைக் குறித்துப் பாடப்பட்டிருப்பினும், இப்பாடல் பிறந்த இடம் சித்தவட மடம் திருத்தலமாகும்.
இந்த சித்தவட மடம் தான் தற்போது ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயிலாக மிளிர்கிறது. இம்மடத்தின் வரலாற்றுப் புகழை அறிந்த சோழ மன்னர்கள் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இங்கு திருக்கோயில் எழுபினராம். கி.பி.13-ஆம் நூற்றாண்டில் அரசாண்ட சேந்தமங்கல அரசன் கோப்பெருஞ்சிங்க காடவராயன் தனது24-ஆம் ஆட்சி ஆண்டில் (1267) கருவறைப் பகுதியை கருங்கற்கலால் மாற்றி அமைத்ததாக இத்திருக்கோயில் கல்வெட்டு சான்று கூறுகிறதாம். கி.பி.16-ஆம் நூற்றாண்டில், சிவகாமி அம்மனின் சந்நிதிக்கு தினந்தோறும் பூமாலை அளிப்பதற்கான தானக் கல்வெட்டும் காணப்படுகிறதாம். இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சிற்பங்கள் சோழர் காலம் மற்றும் கி.பி.13-ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவையாம்.
சுந்தரருக்கு சிவபெருமான் தம் திருவடியைச் சூட்டியதும் (திருவடி தீட்சை), ஞான சித்தர்களும், முனிவர்களும் இறவாப் புகழுடன் வாழும் சித்தவட மடத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சிவகாமி உடனுறை ஸ்ரீ சிதம்பரேஸ்வரரை தரிசித்து பலன் பெறுவோம், வாரீர்! வாரீர்!!
ஓம் நமசிவாய.!
Comments
Post a Comment