Temple info -1453. Natarajar temple, Neyveli. நடராஜர் கோயில், நெய்வேலி

 Temple info -1453

 கோயில் தகவல் -1453











Nataraja Temple in Neyveli


Neyveli is a cosmopolitan city with people from all religions living in that small township. There are temples for Lord Krishna, Lord, Ayappa, Lord Murugan, Lord Nataraja  in Neyveli. Of these, the Nataraja temple is well known for the metal statue of Lord Shiva as Nataraja, which is the biggest statue in the world. The temple is believed to find its place in the Guinness Book of Records as its height is 10 feet 1 inch with a base of 8 feet 4 inch and a weight of 2,420 kilograms. There is an idol of Godess Sivakami measuring 7 feet in height and 750 kilograms in weight.


History of Neyveli Nataraja Temple


It is said that Saint Manickavasagar sang his eminent Tiruvasagam in Chidambaram and this song is written on the hands by Lord Shiva himself in the disguise of a devotee. After this, he signed it stating “written to the transcription of Manickavasagam” as Azhagia Tiru Chittrambalam Udayan. The Godess Sivakami is known by the name Osai Kodutha Nayaki and she is celebrated for giving the voice and thala to the dance of Lord Shiva graced by devotees.


Nataraja idol in the temple is said to be sculpted in harmony with the rules that are laid in Bogar 4000 text with various herbals and Panchaloka (five metals). The entrance features Lord Shiva carrying out his three activities – creating, sustaining and destroying. For a difference, the temple features Saint Tirumoolar at the feet of Nataraja instead of Saint Manickavasagar. The two sages namely Patanjali and Vyakrapada can be seen sitting next to Lord Shiva.


Once again, going against the tradition, the Lord Nataraja temple in Neyveli has Sun and Bhairava before the Lord Shiva instead of Sun and Moon. Bhairava has 10 hands and carries the name Dasabuja Bhairava and there is a separate shrine for Sani Baghwan.


Though the temple existed since almost 500 years dating back to history, the Poomi Pooja for the building was done in 1986 and the wax work commenced in the same year. The completion of the temple construction took place in 1987 followed by the holy consecration.

Greatness of Nataraja Temple in Neyveli

Usually in Shiva temples there will be 63 Nayanmars collectively in a row while in the Nataraja temple in Neyveli the shrines are placed separately. The devotees choose to worship the saint corresponding to their birth star in order to meet their desires.


The temple has the idols of Lord Ganesha, Lord Chandrasekhara, Godess Parvathi and Saints Manickavasagar and Sekkizhar, celebrated for his creation – the Tiruthondar Puranam praising the glory of the Nayanmars. To the west of Lord Nataraja’s shrine is the shrine for Sempon Jyothi Nathar.


In adherence to the ancient practice of Manu Needhi, there is a prayer box used by devotees to write their miseries in a paper and put it in and ring the bell thrice. These petitions will be collected by the Dikshit while carrying out the morning pooja and are read it in front of the Lord Shiva secretly and burnt in fire. After realizing their wishes, devotees write a thanksgiving letter and drop it into the box.


Pooja in Nataraja Temple in Neyveli


The Nataraja temple in Neyveli is open for devotees from 6:00 AM to 12:00 PM and again from 4:00 PM to 9:00 PM. There are different poojas such as Thirupalliyezhuchi Pooja, Kala santhi Pooja, Uchikala Pooja, Sayaratchai Pooja, Irandam Kala Pooja and Arthajama Pooja that are carried out in this temple. Even special poojas are performed with demonstration on the Guru Pooja days of Nayanmars and is followed by a talk on their lives.


Social Services at Nataraja Temple in Neyveli


This temple of Tamil Nadu is administered by the Panniru Tirumurai Valarchi Kazhagam, but Naalvar Narpani Mandram is the one that serves the devotees. They conduct an assembly prayer every Monday at 5.30 PM and offer Prasad to the sick people who come to the temple.


Address


Natarajar Dhyanasabai Neyveli,

Address: Sivapuram Complex,

Vellore Salai, Block-16,

Neyveli-607801


Phone: (04144)-223500, 94438 43912, 94423 88832

Website: https://neyvelinatarajartemple.org/



கடலூர் மாவட்டம் தமிழ்நாடு நெய்வேலி அருள்மிகு நடராஜர் ஆலயம்.


கடவுள் குடியிருக்கும் இடம் கோயில். இதன் அடையாளம் கோபுரம். அதை கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நின்று வழிபட்டாலும் புண்ணியமே. இதனால் எல்லா சன்னதிகளையும் தரிசித்த பலன் கிடைக்கும்.  இதை ’கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்பர்.


மூலவர் : நடராஜர் (அழகிய திருச்சிற்றம்பலமுடையான்)


அம்மன்/தாயார் : சிவகாமி


பழமை : 500 வருடங்களுக்குள்


புராண பெயர் : -


ஊர் : நெய்வேலி டவுன்ஷிப்


மாவட்டம் : கடலூர்


மாநிலம் : தமிழ்நாடு



திருவிழா


சித்திரை முதல் தேதி சிவனும் பார்வதியும், 63 நாயன்மார்கள் மற்றும் 12 திருமுறைகளுடன், குறுந்தேரில் வீதி உலா வருவார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்க வாசகர், சேக்கிழார், திருமூலர் ஆகியோரது குருபூஜையன்று சிவனும், பார்வதியும் குறுந்தேரில் கோயில் பிரகாரத்தில் எழுந்தருளுவர்.

 

தல சிறப்பு


உலகின் உயரமான நடராஜர். இங்குள்ள நடராஜரின் உயரம் 10 அடி 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம். எடை 2 ஆயிரத்து 420 கிலோ. இதுவே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை. இதை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற வைக்க முயற்சி நடக்கிறது. இச்சிலை ஐம்பொன்னால் ஆனது. நடராஜரின் அருகிலுள்ள சிவகாமி அம்பிகையின் சிலை 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது.


திறக்கும் நேரம்


காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் 


முகவரி


அருள்மிகு நடராஜர் திருக்கோயில், நெய்வேலி - 608 001,கடலூர் மாவட்டம்.


போன்


+91-4144-223 500, 94438 43912, 94423 88832.


பொது தகவல்


போகர் நான்காயிரத்தில் கூறப்பட்ட விதிகளின்படி பல்வேறு மூலிகைகளைப் பயன்படுத்தி, ஐம்பொன்னால் இந்த நடராஜர் சிலையை வடித்ததாகச் சொல்கின்றனர். சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் என முத்தொழில் புரியும் திரிமூர்த்தி வடிவம், கோயில் முகப்பில் உள்ளது. நடராஜர் கோயில் அமைக்கப்பட்ட பின் இப்பகுதி "சிவபுரம்' என அழைக்கப்படுகிறது.


மற்ற தலங்களில் நடராஜரது பாதத்தின் கீழ் மாணிக்கவாசகர் இருப்பார். இங்கு திருமூலர் உள்ளார். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் நடராஜரின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். சிவாலயங்களில் சிவனின் எதிர்ப்புறம் சூரியனும், சந்திரனும் அருள்பாலிப்பார்கள். இங்கு சூரியனும் பைரவரும் உள்ளனர். பத்து கரங்களுடன் அருளும் "தசபுஜ பைரவர்'


 இத்தலத்தின் சிறப்பம்சம். சனிபகவான் தனி சன்னதியில் அருளுகிறார். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு சொந்தமான இக்கோயிலை பன்னிரு திருமுறை வளர்ச்சிக்கழகம் நிர்வகித்து வருகிறது. நால்வர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு பக்தர்களுக்கு சேவை செய்கிறது.


திங்கள்கிழமைகளில், மாலை 5.30 மணிக்கு நடராஜர் முன்பு கூட்டு பிரார்த்தனை செய்து, நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரசாதம் தரப்படுகிறது. நாயன்மார்களின் குருபூஜை தினத்தன்று அபிஷேகமும், அன்றிரவு நாயன்மார் புறப்பாடும், அவர்களது வாழ்க்கை வரலாறு குறித்த சொற்பொழிவும் நடக்கிறது.


பிரார்த்தனை


சிதம்பரம் நாட்டியாஞ்சலியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் இங்கு வந்து சிறப்பு அர்ச்சனை செய்கிறார்கள்.


மன அமைதி வேண்டுபவர்கள் இங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து நிம்மதி பெறுகிறார்கள்.


நேர்த்திக்கடன்


பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக 63 நாயன்மார்களின் குருபூஜையன்று சிறப்பு பூஜை செய்கிறார்கள்.


தலபெருமை


நாயன்மார்களுக்கு தனி கோயில்


சிவாலயங்களில் நாயன்மார்களை தனி சன்னதியில் தரிசித்திருப்பீர்கள். ஆனால், அவர்களுக்கென அமைக்கப்பட்ட தனிக் கோயிலை இங்கு பார்க்கலாம்."தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என அவ்வைப்பாட்டி கூறியது போல, சிவபெருமான் தன்னை வணங்குவதை விட, தன் அடியார்களை வழிபடுவதையே பெரிதும் விரும்புவார். அதன் அடிப்படையில் 63 நாயன் மார்களுக்கான தனிக்கோயில் இது. சிவாலயங்களில் இவர்கள் பிரகாரத்தில் வீற்றிருப்பர். ஆனால், இங்கு 9 கலசங்களுடன் "திருத் தொண்டர் திருக்கோயில்' என்ற பெயரில் உள்ள தனிக்கோயிலில் அருள்பாலிக் கின்றனர். பக்தர்கள் தாங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய நாயன்மார்களை பூஜை செய்து வழிபட்டால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு விநாயகர், சந்திரசேகரர், பார்வதி, மாணிக்கவாசகர், சேக்கிழார் மற்றும் தொகையடியார்களுக்கும் சிலைகள் உள்ளன.


பளிங்கு சபை


நடராஜருக்கு சிதம்பரத்தில் பொற்சபை, மதுரையில் வெள்ளிசபை, திருவாலங்காட்டில்ரத்தினசபை, குற்றாலத்தில் சித்திரசபை, திருநெல்வேலியில் தாமிரசபை என பஞ்சசபைகள் உண்டு. இங்குள்ள நடராஜர் ஆடும் சபை பளிங்கு கற்களால் ஆனது. எனவே, இத்தலம், "பளிங்கு சபை' என அழைக்கப்படுகிறது.


சிவலிங்கத்தில் விபூதிப்பட்டை


நடராஜர் சன்னதியின் மேற்கே செம்பொற்சோதி நாதர் சன்னதி உள்ளது. இதன் நெற்றியில் மூன்று கோடுகள் விபூதிப் பட்டை போல் அமைந்திருப்பதை, அபிஷேகத்தின் போது காணலாம். சுற்றுப் பகுதியில் விநாயகர், அறம்வளர்த்த நாயகி, அஷ்டபுஜ துர்க்கை, தென்முகக்கடவுள், அண்ணாமலையார், துர்க்கை, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் அருளுகின்றனர்.


தவம் செய்யும் நவக்கிரகம்


இங்குள்ள நவக்கிரக மண்டபம் வித்தியாசமாக அமைந்துள்ளது. ஒரே கல்லால் ஆன வட்ட வடிவ தேரில் சூரியன் நடுவில் தாமரை வடிவிலும், மற்ற கிரகங்கள் எட்டுத்திசையை பார்த்தபடி, அமர்ந்த தவக்கோலத்திலும் உள்ளனர். இந்த தேரை தேர்ப்பாகன் ஓட்ட, ஏழு குதிரைகள் இழுத்த நிலையில் உள்ளது. தேரைச்சுற்றி அஷ்டதிக் பாலகர்கள் உள்ளனர்.


ஆராய்ச்சி மணி


கோயில் நுழைவு வாயிலின் கிழக்கே ஆராய்ச்சி மணியும், மனுநீதி முறைப்பெட்டி ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் தேவைகளை, எழுதி, பூஜை நேரத்தின் போது பெட்டியில் போட்டு பின் மூன்று முறை மணியை ஒலிக்கச்செய்கிறார்கள். இந்த மனுக்கள், தினமும் காலை பூஜையின் போது, தீட்சிதரால் நடராஜர் முன் ரகசியமாக படிக்கப்பட்டு பின் எரிக்கப்படுகிறது. கோரிக்கை நிறைவேறியதும், மீண்டும் நன்றிக்கடிதம் எழுதி பெட்டியில் போட்டு செல்கின்றனர்.


விதியை வெல்வது எப்படி?


மனிதர்களுக்கு பணக்கஷ்டம், மனக்கஷ்டம், நோய், வறுமை என பலவகையான கஷ்டங்கள் ஏற்படும். எல்லாம் விதிப்படி நடக்கிறது என நொந்து கொள்வார்கள். இதிலிருந்து மீள்வது எப்படி? ஒவ்வொரு வரும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து விடுபட, அவற்றிற்குரிய பதிகங்களை பாடினால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதற்கு வசதியாக சம்பந்தப்பட்ட பதிகங்கள், அவரவர் ராசிக்கேற்ப கோயில் பிரகார சுவரில் பொறிக்கப்பட்டுள்ளன.


திருமுறை அரங்கம்


கோயிலுக்கு கிழக்கே அமைந்துள்ள திருமுறை அரங்கத்தில், மாதத்தின் முதல் ஞாயிற்று கிழமைகளில் திருவாவடுதுறை ஆதினத்தின் சார்பில் சைவ சித்தாந்த நேர்முகப்பயிற்சி நடத்தப்படுகிறது. இலவச தேவார வகுப்புகள், திருமுறை விளக்க வகுப்புகள், மகா சிவராத்திரி நாட்டியாஞ்சலி ஆகியவை இந்த அரங்கத்தில் நடத்தப்படுகின்றன. திருமுறைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெல்லும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழை ஆராய்ச்சி செய்பவர்களும் இங்கு வருகின்றனர்.


தல வரலாறு


மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தை சிதம்பரம் கோயிலில் சிவபெருமான் எழுதி,""மாணிக்கவாசகன் சொல்லச்சொல்ல திருவாசகம் எழுதியது திருச்சிற்றம் பலமுடையான்' எனக் கையெழுத்திட்டு நடராஜர் சன்னதியில் வைத்தார். இதன் அடிப்படையில் இத்தலத்து நடராஜருக்கு, "அழகிய திருச்சிற்றம்பலமுடையான்' என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடராஜர் இடதுகாலை தூக்கி ஆட, அருகே அவரது நடனத்திற்கேற்ப கையில் தாளத்துடன் அன்னை சிவகாமி "ஓசை கொடுத்த நாயகி' என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.


சிறப்பம்சம்


அதிசயத்தின் அடிப்படையில்


உலகின் உயரமான நடராஜர். இங்குள்ள நடராஜரின் உயரம் 10 அடி 1 அங்குலம். அகலம் 8 அடி 4 அங்குலம். எடை 2 ஆயிரத்து 420 கிலோ. இதுவே உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை. இதை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற வைக்க முயற்சி நடக்கிறது. இச்சிலை ஐம்பொன்னால் ஆனது. நடராஜரின் அருகிலுள்ள சிவகாமி அம்பிகையின் சிலை 7 அடி உயரமும், 750 கிலோ எடையும் கொண்டது.


அமைவிடம்


சென்னை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள நெய்வேலிக்கு தமிழகத்தின் முக்கிய ஊர்களிலிருந்து பஸ் வசதி உள்ளது. நெய்வேலி டவுன்ஷிப் பஸ்ஸ்டாண்ட் அருகே கோயில் உள்ளது.


அருகிலுள்ள ரயில் நிலையம்


விருத்தாச்சலம்


அருகிலுள்ள விமான நிலையம்


சென்னை


தங்கும் வசதி


கடலூர்


ஆராய்ச்சிமணி

அண்ணாமலையார்

அறம்வளர்த்தநாயகி

தசபுஜ பைரவர்

துர்க்கை

உலகின் மிகப்பெரிய நடராஜர் சிவகாமி

நாயன்மார்களுக்கு தனிக்கோயில்

ஒரே கல்லில் நவக்கிரகம்

சூரியன்

Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -2119 Dhundiraj Vinayak Temple, Kashi துண்டிராஜ வினாயகர் கோயில்,காசி