Temple info -1416 Mahalakshmi Temple, Panaji,Goa மஹாலக்ஷ்மி கோயில், பானாஜி,கோவா

 Temple info -1416

கோயில் தகவல் -1416












History About Shree Mahalaxmi Temple, Panaji


This Temple is located in the city of Panaji, off Dada Vaidhya road at the Altinho foothill. It was the first Hindu temple allowed to be built by the Portuguese in Goa after 300 years after bitter opposition. It was approved by the Portuguese authorities in 1818 after a long delay and built subsequently on contrubutions made by the devotees. It was most recently renovated in 1983. The deity of the temple originally came from the village of Taleigao and was moved to Bicholim in the 16th century to escape Portuguese destruction.


The deity is Goddess Mahalakshmi (the Hindu Goddess of Wealth), made of black stone, with four hands and is placed in a silver canopy. This is the peaceful or Satvik form of Devi. According to the Shakti cult (worship of power), Mahalakshmi is the original Goddess who takes forms according to three aspects or gunas viz. Brahma (peaceful, calm form or satva), Vishnu (creative action or rajas) and Shiva (destruction or tamas). The deity originally from Mayem in Bicholim taluka was transferred to the present site.


This 194 year old temple has a fascinating history. In the 16th century the Havig Brahmins from Karwar-Kumtha areas who lived on alms and charity of others worshipped the Mahalaxmi deity and wherever they went in search of alms they carried this deity along. In the 16th century, they moved to Goa along with this diety and reached Taleigo village of which Panjim was then a mere ward, along the river Gomati (Mandovi). The Havig Brahmins whose whole day was spent begging for alms had sought shelter in the precincts of the Vetal temple of Taleigao. But when they learnt of the conversion policy of the Portuguese, fearing desecration of their revered Mahalakshmi idol made of marble, they moved away from Taleigao and as they were moving on they found a horse stable which actually belonged to the Portuguese government.


A person called Late Shri. Raghavendra Kamat Mhamai who then worked for the Portuguese military found that this place selected by the Havig Brahmins to hide their deity was unsafe and hence moved it to his palatial house opposite the Adilshahi palace (Old Secretariat) in the heart of Panjim city. Still fearing for the safety and security of the deity, he moved it to Mayem village of the Bicholim Taluka where it remained till 1817.


Sometime later in 1817, Late Shri. Narayan Kamat Mhamai of Panaji dreamt of the deity and the next day itself he along with others went to Mayem and brought the diety to Panjim and kept it at the ancestral house of Late Shri Raaya Kamat Ghanekar.There is also one more incident related to this as it is said that when the idol was brought to panaji in a boat and taken out at a place where stands the People's High School today. That corner at the People"s High School is still venerated where the deity was kept hidden under a chinch tree.


The place where the present temple stands belongs to Late Purshottam Prabhu Sinari of Raibander. For constructing the temple donations were collected which amounted to 1006 sharafi. After building the temple the idol of Goddess along with her family deities were established on Aashaad Shukla Saptami shake 1739 ie friday 10th july 1818. It was Saraswat Brahmins who consecrated the idol of Goddess, hence they are the Mahajans of this temple along with sheth community from Panaji and Taleigao, Bhandari Community, Nhavi Community, Tarukar Community, Hindu Gaonkar Communities from Bardez taluka are also upasak of Goddess.


During this time monarchy was prevalent in the portuguese regime hence Late. Narayan Kamat Mhamai specially got a approval from king of portugal for the construction of temple. The then Governer General of Goa Conde-de-Rio-Pardo approved the order.


By 1819, the temple was completed. The original deity today lies in a small box in the rear wall of the temple which faces the present day main idol of Goddess Mahalakshmi. The magnificent sabhamandap of the temple has been added later and today the recently completed new building of the temple stands proudly as a superb addition to the landmarks of Panjim city.


The original Sabhamandap(hall) was donated by Late Shri. Guiri Soiru Sinai Dempo in March 1870.


 *குதிரை மீது காட்சி தரும்* *மகாலக்ஷ்மி*!


இந்தியாவின் மிகச் சிறிய மாநிலமான கோவாவில் வரலாற்றுப்பிண்ணனியும் பழமைச் சிறப்பும் கொண்ட 

பல புராதன ஆலயங்கள் உள்ளன. 


அதில் மகாலட்சுமி ஆலயமும் ஒன்று  


கோவாவின் தலை நகரான பானாஜியின் அதி தேவதையாக மகாலட்சுமி போற்றப் படுகிறாள். 


பதினாறாவது நூற்றாண்டின் போர்ச்சுகீசியர் படையெடுப் பிற்குப் பின்னர் கட்டப்பட்ட முக்கியமான இந்துக்கோவிலாக இது திகழ்கிறது. 


 ஆரம்பத்தில் போர்ச்சுகீசிய அரசு இந்த ஆலயத்தைக் கட்ட விடாமல் இறுதியாக 1818 ஆம் ஆண்டு மிகப் பெரிய அளவில் திருப்பணிகள் செய்யப்பட்டு தற்போது வனப்பு மிக்க ஆலயமாகத் திகழ்ந்து வருகிறது.


 இந்த ஆலயத்தின் பிண்ணனி யில் கூறப்படும் வரலாற்று நிகழ்ச்சிகள் சுவாரசிய மானவை. 


மகாலட்சுமியை வழிபட்டு 

வந்த ஹவ்யகா என்ற பிரிவினர் தங்கள் செல்லும் இடங்களுக் கெல்லாம் தேவியின் சிலையை எடுத்துச் சென்று கொண் டிருந்தனர். 


16 வது நூற்றாண்டில் கோவாவிற்கு வந்த அவர்கள் தளிதாவோ என்ற கிராமத்தில் தங்கியிருந்தபோது போர்ச்சுகீசியர்களீன் அடக்கு முறைக்குப் பயந்து சிலையை ஒரு குதிரை லாயத்தில் மறைத்து வைத்தனர்.  


அப்போது ராகவேந்திர காமத் என்ற இந்தியர் போர்ச்சுகீசிய அரசில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.


மிகுந்த பக்திமானான அவர் குதிரை லாயத்தில் மகாலட்சுமி சிலை இருப்பதை அறிந்து வருந்தி மாயம் என்ற கிராமத்திற்கு அதைக் கொண்டுவந்து பத்திரப் படுத்தினார். 


1817 ம் ஆண்டு நாராயண காமத் என்பவர் அந்த சிலையை எடுத்துச் சென்று பஞ்சிம் என்ற நகரத்தில் ஒரு மரத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். 


பின்னர் தற்போதுள்ள இடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டு 1818 ம் ஆண்டு ஜூலை மாதம் குடமுழுக்கு செய்யப்பட்டது.


காலங் காலமாக வழிபடப்பட்டு வந்த மகா லட்சுமியின் பளிங்      குச் சிலை தற்போது 

ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு கருவறையின் பின்புறத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது. 


கருவறையில் புதிதாக 

ஒரு சிலை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. 


கருவறைக்கு வெளியே சபாமண்டபம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. 


இந்த விசாலமான சபா மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மனதில் கலக்கங்கள் நீங்கி மனம் ஒருமைப் படுகிறது.


ஆலயத்திற்கு முன்பாக கொங்கணிக் கோவில்களில் காணப்படும் தீபஸ்தம்பம் உள்ளது. 


கோவாவில் காணப்படும் கொங்கணி ஆலயங்களில் கட்டட  அமைப்பை இந்த ஆலயமும் பிரதிபலிக் கிறது. 


1929 ம ஆண்டு இந்த ஆலயத்தின் வலப்புறம் அனுமன் சன்னதி கட்டப்பட்டது. 


இதன் அருகில் வரத வினாயகர் பளிங்கு நந்தி பளிங்கு மகாதேவர் சன்னதிகள் உள்ளன,  


இங்குள்ள மகாதேவர் ராவல் நாதர்  ராதா கிருஷ்ணர்  ராம புருஷர்  மற்றும் கிராம புருஷர் ஆகியோர் மகாலட்சுமி தேவதையின் பரிவாரங் களாகவும் 

காவல் தெய்வ மாகவும் கருதப்படு கின்றனர்.


கருவறையில் மகாலட்சுமி நான்கு கரங்களோடு பட்டு வஸ்திரம் தரித்து அலங்கார ஆபரணங்கள்  மலர் மாலைகள் அணிந்து வெள்ளி விதானத்தின் கீழ் குதிரையின் மீது காட்சி தருகிறாள். 


இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்தி ஆண்டிற்கு மூன்று தடவை வீதியுலா வருகிறாள்.


கோவா மகா லட்சுமியின் பேரருளால் தான் இப்பகுதியில் பலர் செல்வசெழிப்புடன் சுகமான வாழ்வு வாழ்வதாக சொல்லப்படுகிறது.


நன்றி மாலதி முரளி

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்