Temple info -1412 Sadasivamurthy temple, Puliyarai, Thirunelveli சதாசிவமூர்த்தி கோயில், புளியரை, திருநெல்வேலி

 Temple info -1412

கோயில் தகவல் -1412



Sadasivamurthy Temple (Yoga Dhakshinamoorthy Temple), Puliyarai, Thirunelveli


Sadasivamurthy Temple is dedicated to Hindu God Shiva located at Puliyarai in Thirunelveli District of Tamilnadu. The Temple is a Guru Sthalam. This is the only temple in the world where Lord Dhakshinamoorthy is situated between 'Nandhi' and the idol of 'Lord Shiva'- All in one line. One can view Shiva through the horns of the 'Nandhi' and Dhakshinamoorthy. This is said to be of unique in nature. Thursdays and Saturdays are very special for lord Dhakshinamoorthy and people beeline to Puliyarai on these days to have a glance of the god and seek his blessings. It is a beautiful temple surrounded by thick green forest slopes on one side and fields and pond on the other side.


Legends

It was a time when the Jains had an upper hand in Tamilnadu. Chidambaram temple was under their control. Shiva devotees took the Nataraja idol from there and came to Thrikoodachala Hills dense with Tamarind trees and hid the idol in a tree hole. The idol fell in the view of the owner of the trees. He was worshipping Nataraja daily. Many years later, Shiva devotees returned to this place and took the idol back to Chidambaram. The tree owner was disappointed to the see the empty hole and prayed to Lord Shiva to grace the place with his presence. Lord Shiva appeared there as a Swayambu Linga. The owner praised him as Sadasiva. People built the temple here then.


The Temple

The main deity is a Swayambu lingam Sri Sadasiva Moorthy with Ambal Sivagami Ammai. Urchavar is Sadasivam. Sthala Vriksham is Tamarind Tree. Theertham is Jadamagudam Theertham. There are 27 steps to reach the sanctum and they represent the 27 stars. Those having problems due to some planetary movements are advised to worship Lord Shiva ascending on the steps.  Since the Lord gave darshan under a Tamarind tree, the place is called Puliyarai. More importance is attached to Lord Dakshinamurthy than to Lord Shiva in the temple. The devotee crowd would be huge on Thursdays as this a shrine for Jupiter worship.


The one speciality in the temple, against traditions followed in other Shiva temples is that Lord Dakshinamurthy graces in between the presiding deity and the Nandhi at the entrance instead of in the southern corridor.  One can view Shiva through the horns of the 'Nandhi' and Dhakshinamoorthy. This is said to be of unique in nature. Near the feet of Dhakshinamoorthy there are 9 Avathara Peetas in the form of squares on a square stone which represent the Navagrahas.


As Mother was brought from Chidambaram, She is worshipped as Sivakami. The place has also the reputation as Chinna Sringeri as a sub-mutt of Sri Sringri Sharada Peetam. There are shrines for Navaneetha Gopala, Sadasivamurthy, Chandikeswara, Saturn, Subramaniar, Bhairavar, Nagar, Chandra the Moon and Saptha Kannikas the seven maidens. Lord Vinayaka graces in the name of Teppakulam Vinayakar. Sweet Pudding – Sarkarai Pongal is offered as Nivedhana.


There is also a beautiful small Krishna Temple here.


Temple Opening Time

The temple is open from 6.00 a.m. to 12.00 p.m. and 5.00 p.m. to 8.00 p.m.


Festivals

10 day main festival in Thai (January-February), Jupiter and Saturn transit days, Maha Shivarathri in February-March), Navarathri in September-October and Aadi Pooram in July-August are the festivals celebrated in the temple.


Prayers

Removal of obstacles in marriage talks, child boon, education, job, progress in trade and Naga Dosha relief are the prayer subjects of the devotees. Special abisheks and Archanas are performed to the Lord and Mother with vastras, and special pujas for Guru Dakshinamurthy with pulses and jasmine garland and curd rice as Nivedhana are the prayer commitments followed by the devotees. They also light lamps called Kodi Deepam and light lamps with black pulse to Saturn.


Contact

Sri Sadasivamurthy Temple,

Puliyarai, Thirunelveli District

Phone: +91 – 4633 – 285518 / 285490


Connectivity

The Temple is located at about 9 Kms from Sengottai, 16 Kms from Courtallam, 12 Kms from Panpoli, 13 Kms from Ilanji, 17 Kms from Tenkasi, 77 Kms from Thirunelveli, 175 Kms from Madurai and 95 Kms from Thiruvananthapuram. Bus facility is conveniently available from Tenkasi to Puliyarai. The temple is about a kilometer from the bus stop. Therkumedu buses from Tenkasi pass through the temple. Nearest Railway Station is located at Sengottai and Tenkasi. Nearest Airport is located at Madurai and Thiruvananthapuram.


Thanks Ilamurugan's blog



சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி கோவில் - திருநெல்வேலி


திருநெல்வேலி செங் கோட்டையை அடுத்துள்ள புளியறை எனும் கிராமத்தில் அமைந் துள்ளது சிவகாமி அம்பாள் சமேத சதாசிவமூர்த்தி கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம். 


திருநெல்வேலி செங் கோட்டையை அடுத்துள்ள புளியறை எனும் கிராமத்தில் அமைந்துள்ளது சிவகாமி அம்பாள் சமேத    சதாசிவமூர்த்தி கோவில். இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.


மானுட வாழ்க்கையில் மகத்தான மாறுதல்களை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ள குரு பகவான், “புளியறை” கிராமத்தில் அபூர்வ வடிவில் வீற்றிருந்து அருள் புரிகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு சிறப்புகளை கொண்ட இவ்வால யத்தில் ஒரே தீபாராதனையில் மூன்று தெய்வங்களை தரிசனம் செய்யலாம். சிவகாமி அம்பாள் சமேத சதாசிவ மூர்த்தி கோவில் என்று அழைக்கப் படும் இந்த விசேஷ திருத்தலம், திருநெல்வேலி மாவட்டம், செங் கோட்டையை அடுத்துள்ள புளியறை எனும் கிராமத்தில் அமைந் துள்ளது.


திரிகூடாசலம் வந்த தில்லை :


ஈசன், தான் எழுந்தருள விரும்பும் ஷேத்திரத்தில் நடத்தும் திருவிளை யாடல்கள் மிகச்சிறப்பானவை. தில்லை நடராஜர், புளியறைக்கு வந்த விதமும் இப்படித்தான். சில நூற்றாண்டு களுக்கு முன் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்துவந்த சேர, சோழ, பாண்டிய நாடுகளுள் சைவ சமயம் தழைத் தோங்கி இருந்தது. திடீரென நடராஜர் குடிகொண்டிருந்த சிதம்பரம் உள்ளிட்ட சோழ நாடும், பாண்டிய நாடும் சமணர்களின் ஆளுகைக்கு உள்ளானது. 


அப்போது நடராஜர் விக்ரகத்துக்கு பாதிப்பு எதுவும் நேர்ந்து விடக்கூடாதே என் றெண்ணிய சிவ பக்தர்கள், சிலையை எங்காவது அடர்ந்த காட்டுக்குள் மறைத்து வைக்க முடிவு செய்தனர். வளர்பிறை தொடங் கியதும் ஒரு நல்ல நாளில் ஐந்து சிவ பக்தர்கள், நடராஜர் சிலையை சுமந்து கொண்டு மனம்போன போக்கில் தென் திசை நோக்கி நடக்கத் தொடங்கினர்.


பகலில் யார் கண்ணிலும் படாதவாறு தங்கிக் கொண்டு, இரவு முழுவதும் நடை பயணம் மேற் கொண்டனர். எங்கு தேடியும் பாதுகாப்பான இடம் கிடைக்க வில்லை. இறுதியில் அவர்கள் வந்து சேர்ந்தது தென் திசையில் உள்ள திரிகூடாசலம் என்னும் மலைப்பகுதி. சேர நாட்டின் ஆரம்ப பகுதியான திரிகூடாசலம் பக்தர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. எங்கு திரும் பினாலும் ஓங்கி வளர்ந்த பசுமையான மரங்களுக் கிடையே பயணித்து அம்மலைக்கு தென் மேற்கில் மலைச் சாரலில் உள்ள வேணு வனத்தை அடைந்தனர். அவ்வனத்தில் பெரிய மலைகளும் அடர்ந்து நெருங்கி வானளாவி வளர்ந்த மூங்கில் பண்ணை களும், புளிய மரங்களும் இருந்தன.


நடராஜர் சிலையை மறைத்து வைக்க இதுவே சரியான இடம் என்று முடிவு செய்தனர். மறைவுப் பகுதியைத் தேடியபோது, ஓரிடத்தில் வானத்தில் கருடன் வட்டமிட்டு இடம் காட்டியது. அங்கே புளிய மரம் ஒன்றில் பெரிய பொந்து இருந்தது. அப்பொந் தினுள் நடராஜர் சிலையை வைத்து, இலை,    தழைகளை வைத்து மூடி விட்டு, சிவ பக்தர்கள் ஐவரும் தில்லைக்குத் திரும்பிச் சென்றனர்.


சில நாட்கள் கழித்து, புளியந் தோப்பின் உரிமையாளரான செல்வந்தர் அங்கு வந்தார். அப்போது இலை, தழை அகன்று நடராஜர் காட்சி கொடுத்துக் கொண்டிருந்தார். தில்லை அம்பலம் தன் தோப்பில் எழுந்தருளி காட்சியளிப்பதைக் கண்டு பேரானந்தம் அடைந்தார் செல்வந்தர். எனினும் அக் காலத்தில் நிலவிய மதச் சூழலை மனதில் கொண்டு, இதுபற்றி யாரிடமும் சொல்லாமல், இறைவனை தினமும் பூஜித்து வழிபட்டு வந்தார்.


வழிகாட்டிய ஈசன் :


காலச்சக்கரம் சுழன்று கொண்டே இருந்தது. சைவ சமயம் மீண்டும் புத்துயிர் பெற்றது. ஆயினும் நடராஜர் இல்லாத அம்பலம் வெறிச்சோடிக் கிடந்தது. மீண்டும் எப்படியாவது தேடிக் கொண்டு வந்து அம்பல வாணனை ஆலயத்தில் சேர்க்க வேண்டும் என்று உறுதி பூண்டனர் பக்தர்கள். எனவே, தென்திசை நோக்கி நடராஜர் மறைத்து வைக்கப் பட்டிருக்கும் இடம்தேடி விரைந்தனர். 


பல ஊர்களைக் கடந்து திரிகூடாசலம் வந்தடைந்து அங்குள்ள கானகம் முழுவதும் தேடியும் எம்பெருமானைக் காணாது தவித்தனர். அப்போது வானிலிருந்து, ‘திரிகூடாசலத்திற்குப் பஸ்யம் திசையில் உள்ள வேணுவனம் செல்க’ என்று அசரீரி ஒலித்தது. அந்தக் காட்டிலிருந்து வேணுவனம் செல்லும் பாதை தெரியாமல்    தயங்கி நின்றபோது மீண்டும் அசரீரி, ‘சாரை சாரையாகச் செல்லும் எறும்புத் தொடரைப் பின்பற்றுக’ என்று ஒலித்தது.


பக்தனுக்காக சுயம்பு :


மட்டில்லா மகிழ்ச்சியுடன் பக்தர்கள் அவ் விதமே எறும்புகளைப் பின்தொடர்ந்து வேணு வனம் அடைந்தனர். மிகுந்த சிரமப்பட்டு இறைவன் வீற்றிருந்த புளிய மரத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர். இறைவன் சிலையை எடுத்துக் கொண்டு தில்லை யம்பதி திரும்பினர். சில நாட்கள் கழித்து செல்வந்தர் தன் தோப்புக்குச் சென்றார். ஆனால், அங்கு நடராஜர் இல்லாதது கண்டு வருந்திப் புலம்பினார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. செல்வந்தரின் பக்திக்கு மனமிளகிய ஈசன், திடீரென பூமிக்குள் இருந்து சிறியதொரு லிங்கமாகத் தோன்றினார்.

  

இதைக்கண்டு அளவிலா ஆச்சரியமும், ஆனந்தமும் கொண்டார் செல்வந்தர். இந்தத் தகவல் எங்கும் காட்டுத்தீயாய் பரவியது. தீவிர சிவபக்தனான, அச்சன்குன்றம் பகுதி குறுநில சேர மன்னன் விரைந்து வந்து சுயம்பு லிங்கத்தை வழிபாடு செய்தான்.


அன்றிரவே மன்னன் கனவில் தோன்றிய சிவபெருமான், ‘நான் எழுந்தருளி இருக்கும் இடத்தில் கோவில் அமைப் பாயாக. கோவிலின் முன்பு சடாமகுட தீர்த்தம் ஏற்படுத்து. 27 நட்சத்திரங்களையும் படிக்கட்டு களாக அமைத்து, குரு பகவானை வலம் வந்து வழிபட ஏதுவாக கோவிலை உருவாக்கு’ என்று உத்தரவிட்டார். ஈசனின் ஆணைப்படியே கோவில் அமைத்து பெரும் பாக்கியசாலி ஆனான் மன்னன். புளியமரம் தல விருட்சமானது. ஊரும் ‘புளியறை’ எனப் பெயர் பெற்றது.


ருக் வேத சாஸ்திரப்படி இவ்வாலயம் அமைக்கப் பட்டுள்ளது. எனவே, இங்கு கொடிமரம் பிரதிஷ்டை செய்யப் படவில்லை. கொடிமரம் இருப்பதற்கு பதிலாக அந்த இடத்தில், குரு பகவான் யோக தட்சிணாமூர்த்தியாக வீற்றிருக் கிறார். சுயம்புலிங்கம், தட்சிணா மூர்த்தி, நந்தி மூவரும் ஒரே நேர்கோட்டில் வீற்றிருக் கின்றனர். இவ்விதம் அமைந் திருப்பது இந்தியா விலேயே புளியறையில் மட்டும் தான். ஒரே தீபாராதனையில் மும்மூர்த்திகளையும் ஒரு சேர தரிசித்து அருள் பெறலாம்.

  

அபூர்வ தட்சிணா மூர்த்தி :


பேராற்றலுடன் தோன்றி யிருக்கும் சுயம்பு லிங்கத்திடம் இருந்து அதீத ஆற்றலைப் பெற்று, அதனுடன் தன் அருளையும் சேர்த்து இரட்டிப்பாக பக்தர் களுக்கு வழங்குகிறார் இந்த தட்சிணா மூர்த்தி. இவரின் பாதத்தில் ஒரே சதுரக்கல்லில் ஒன்பது ஆவர்த்த பீடம் கட்டங்கள் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வகை கோவிலில் வழி படும் பக்தர்களின் குறைதீர வழிவகுப்பதோடு அவர்களின் வருங்காலமும் வளமோடு அமைய வரமளிக் கிறது. சுற்றுப் பிரகாரத்தில் ஒன்பது கன்னிமார் நதிகளாக இருந்து பக்தர் களின் பாவங்களைப் போக்கு வதாக    ஐதீகம். இந்தக் கோவிலின் தென்மேற்கே சந்தான பாக்கியம் அருளும் நவநீத கிருஷ்ணன் கோவில் உள்ளது.


விரைவான பலன்கள் :


இத்தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக சதாசிவ மூர்த்தி என்னும் திருநாமத் துடனும் அவரின் வலப்புறம் அம்பாள் சிவகாமி என்னும் திருநாமத் துடனும் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள் பாலிக் கின்றனர். இருவரும் நித்ய திருமணக் கோலத்தில் காட்சி தருவதால் இங்கு வந்து வேண்டு வோருக்கு, கிரக தோஷங்கள் அகன்று விரைவில் திருமணம் கைகூடும். தினமும் ஆறுகால பூஜை சிறப்புற நடைபெறும் இங்கு பள்ளியறை பூஜை கிடையாது.


இவ்வால யத்தை தரிசித்தால் சிதம்பரம் கோவிலை தரிசித்த புண்ணியம் கிட்டும். கிரக தோஷ முள்ளவர்கள் வியாழக் கிழமை தோறும் இங்கு வந்து தரிசித்தால் நல்ல பலன் கிடைக்கும். தாலி பாக்கியம் கிட்டும். தார தோஷம் நிவர்த்தி யாகும். குழந்தைப் பேறு, வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், தொழில் வளம், விவசாய நற்பலன்களும் வாய்க்கப் பெறுவார்கள்.


வழிபடும் முறை :


சடாமகுட தீர்த்தத்தில் நீராடி, அருகிலுள்ள விநாயகரை வணங்கி, 27 நட்சத்திரப் படிகள் வழியாக ஆலயத் திற்குள் சென்று கோடி தீபம் (நெய் தீபம்) ஏற்றி சிவன், அம்பாளை தரிசித்து, தட்சிணா மூர்த்தி சன்னிதியில் அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் தோஷம் நீங்கி, குருவருளும் திருவருளும் பூரணமாகக் கிட்டும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத் திற்காக திறந் திருக்கும்.

 

திருநெல்வேலியில் இருந்து முறையே 67 கி.மீ., தென்காசி 14 கி.மீ., குற்றாலம் 12 கி.மீ., செங்கோட்டையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் புளியறை உள்ளது. தென்காசி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புளியறைக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. புதிய பேருந்து நிலையத்திலிருந்து கேரளா செல்லும் அனைத்து பேருந்துகளும் புளியறை வழியாகச் செல்லும்.


நன்றி மாலதி முரளி

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி