Temple info -1367 Manapullikavu Bagawathy Temple, Palakkadu மணப்புள்ளிகாவு பகவதி கோயில்,பாலக்காடு
Temple info -1367
கோயில் தகவல் -1367
Manapullikavu Bhagawathy Temple
Manapullikavu is a Hindu temple located in Palakkad city, Kerala of India. The temple is most famous for the annual festival that takes place in the temple known as Manappullikavu Vela. Manapullikavu is also a major residential area in Palakkad city comprising apartments and residential colonies. Manappulikavu is ward 27 of Palakkad Municipality.
Manapullikavu
മണപ്പുള്ളിക്കാവ്
Temple
Coordinates: 10°45′29″N 76°39′54″E
Country
India
State
Kerala
District
Palakkad
Sree Manappully Bhagavathy Temple is situated in Palakkad city, Kerala . It is on the Palakkad–Chittur road and hardly 200 meters away from the National Highway 544 .Earlier the temple was under the private ownership of ‘Kenath Family’. Now the temple is under Malabar Devaswom Board (MDB). Kariyannur Manakkal Bavathrathan Namboothiripad of Pattambi is the Thanthri (Head Priest) of the temple now.
Sri Manappully Bhagavathy Temple has a very ancient history. It is believed that the temple originally belonged to Sri Mattappilly Bhadrakali Mana, a famous Kerala Brahmin family of Kerala. Numerous Bhrahmin families living on the banks of Holi River Sokanasini (Bharathapuzha) used to perform ‘Yagas’ on the river bed. Thus the area came to be known as ‘Yaga-kara’ which later came to be known as ‘Yakkara’. The eastern part of Yakkara where the temple is located, is called East Yakkara and the other side as ‘West Yakkara’. It is believed that the ‘Moolasthanam’ of Bhagavathy was at West Yakkara and it was subsequently shifted to the present Sanctum Santorum of the East Yakkara temple. (It is believed that a saintly Brahmin of Yagakkara conducted his prayers in his kitchen which is also called as ‘madappalli’. It is considered that in the course of time and usage, the area came to be known as "Manappulli").
Sree Manappulli Bhagavathi is Bhadrakaali and was born out of the sacred "Jada" of Lord Shiva during Dakshayaga. She is black in colour, with four hands, each one having Soolam, Kapalam, Gadkam and Khedam. She is with three eyes, two ‘Dhamshtram’, with ‘Pattudayada’ and valuable ornaments. The Prathishta is in ‘Shanta Bhava’. During ‘Chandattam’ ceremony She turns to ‘Rudra Bhava’ and becomes ‘Shanta Swaroopini ‘after accepting the ‘Kadummadura Payasa Nivedyam’. She is believed to satisfy the desires, hopes and aspirations of her true devotees and also protect them from all evils.
According to a legendary myth about the temple, an Asura called Neelan was disturbing the people with his misdeeds and became a menace to them. The people, complained about this to Parasuraman and he in turn sought a remedy from Lord Paramasiva. Paramasiva incarnating his female personality to Bhadra Kali and sent her to Akamalavaram to kill Neelan. After killing Neelan, Kali became Manappulli Bhagavathy showering prosperity to her devotees.
The Palghat district where the temple is situated, has mainly paddy cultivation as the main occupation of the people. The district is called the ‘Rice Bowl’ of Kerala. The social and cultural customs of the people are, therefore, one way or other, connected with paddy cultivation. They believe that the Goddesses of ‘Kavu’ (temple) protect them in their ‘Thattakam’ (meaning the area where they live, surrounds the ‘Kavu’). The people make offerings to the Goddesses in their ‘Thattakam’ in the form agricultural produces having bearing on the seasonal agriculture. The people prayed for good harvest and as an offering for this, they celebrates ‘Kathir’ in the third Friday of the Malayalam month of ‘Vrichikam’. On this day, a procession carrying ‘Sarodam’, in a very ornately decorated form is taken out in the evening from the premises of Lord Muniyappan temple, situated at the southern side of the Bhagavathy temple and it culminates at the Manappully Bhagavathy temple at dusk, passing through the streets of Manappullikavu Nair Thara. Another procession from Kenathuparambu, also joins the procession at the Manappullikavu junction and culminates at the temple. An attractive part of this ‘Kathir’ is the procession carrying decorative umbrellas made of palm leaves tied to freshly cut bamboo poles accompanied by ‘drum beating’. The Kathir literally announces the ensuing ‘Vela’ festival. The procession also carries ‘Kathir Koodu’, small balls made of tender palm leaves containing freshly plucked ‘Nel kathir’ (paddy bunches) which are distributed to all the houses in the area and hung in the front yard of each house till the next ‘Kathir’. These practices continue to be observed even now with great pomp and show. After the ‘Kathir’, the next preparatory function of the Vela is ‘Kanyar’ (Kodiyettam), which is performed on the first Friday of the Malayalam Month ‘Kumbam’. The huge freshly cut bamboo pole (flag post) with a typical flag - Koora is hoisted in front of the temple with rituals. This declares and denotes the ensuing Manappully Bhagavathy Vela.
Festivals
Sree Manapullikavu Vela
Some of the major festivals here are Vishu, Onam, Diwali & the great Manapulli Vela. This place is also well known for its temple processions, which would be normally conducted with nearly seventeen tuskers in minimum. The Manapulli Vela is glorified also by the firework displays, panchavadya-performances, Kathakali, Ootam Thullal, Katha Prasangam and various other cultural arts.
As mentioned, the Vela is celebrated between last week of February and first week of March based on the Malayalam Calendar year. ‘Kanyar’ is conducted on the Ist Friday of the Malayalam month ‘Kumbam’ and the Vela is invariably conducted on the 14th day after ‘Kanyar’ (Kodiyettam). A Vela Committee is constituted for the proper conduct of the Vela Festival. The entire expenditure for the festival is met from donations received from the devotees. After the Kodiyettam, many cultural events are organised in the evenings for 14 days culminating on the day of Vela, by renowned folk/cultural artists of the state which attract huge crowds. Lot of devotees from various places come and worship Bhagavathy on Vela day. The Vela day starts early with special poojas and in the afternoon, Bhagavathy starts her vela procession. It is considered that on the invitation extended by the ‘Desakkar’ (locals) with ‘Upacharam Chollal’, Bhagavathy comes out of the ‘Sanctum Sanctorum’ for the ‘Vela Procession’, mixing up with her devotees for uniting her ‘Thattakam’ and eliminating all the evils. It is noted that on Vela day, neither the usual ‘Deeparadhana’ nor the ‘Athazhapuja’ is performed, as Bhagavathy is celebrating Vela with the ‘Desakkar’. The ‘Deeparadhana and ‘Athazhapuja’ of Vela day will be performed on the next day after ‘Sudhi’ (cleansing ceremony). The ‘Chaandh Abishekam’, one of the important pooja during the Vela day, attracts flocks of devotees. ‘Vedikettu’ (Fireworks) is also an important attractive element of the festival which takes place in the late evening when the Vela procession reaches back to the temple from Fort Maidan and also in the early morning. Bhagavathy is very fond of fire works as she is considered to be born from the Jada of Paramasiva with fire and thunder. On the Vela day the ‘nada’ is opened only after Karimarunnu is lit in front of Bhagavathy’. Annadanam’ (offering of food) is conducted in which thousands of devotees take part. The day of Vela is declared as a local holiday by the government which shows the importance of the festival.
Other significant features of the Vela is the other Velas from other desams (areas) such as West Yakkara, Vadakkanthara, Vennakkara, and Koppam which also congregate at the Fort Maidan. While the East Yakkara Manappullikavu Vela remains separate at the fort entrance gate when the ‘Panchavadyam’ is in full swing. The East Yakkara Manappulli Bhaghavathy Vela consisting of the famous caparisoned Elephants, folk arts, Panchavadyam etc., reach back to the temple. Plenty of chariots (Bullock carts and other motorised vehicles) also form part of the Vela procession. When the Vela return to the temple, the ‘Panchavadyam’ reaches its mesmerising peak making the people literally dance and jump. After this, the spectacular fireworks starts, leaving the huge crowd spellbound. A vast sea of humanity assembles at the temple premises to witness this spectacular show.
After the Fireworks, the renowned ‘Pandimelam’ performed by hundreds of eminent artists begins. At midnight stage programmes will be performed. Early morning, the ‘Raavela’ starts. The highlight of ‘Raavela’ is lighting of ‘Kambam’. ‘Kambam’ is considered as ‘Paramasivas’ Jada and lighting it with ‘Karimarunnu’ makes symbolic representation of Bhadrakalis’ ulpathi. After this, Bhagavathy enters the Temple. The ‘Kanyar’ pole is plucked by Elephant to mark the end of the festival. Sudhi is performed as Bhagavathy was outside the shrine with the devotees to celebrate her Vela. ‘Eeduvedi’ announces the conclusion of Vela.
It is believed that after the evening Aarthi Bhagawathy goes to the Moolasthanam which is behind the present main temple (2 km) and returns to the Main Temple in the Morning.
Also the Easwara Pooja for Bhairavar is very special and by performing Muttu at Bhairavar keeps the Evil forces away - The Ultimate Protection.
Manappalli Bhagawathy is the family deity and so followers perform the Pooja and do an offering before starting any function such as marriage; after the marriage the newlyweds go to the temple and take the blessings.
மன அமைதி தரும் மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில்
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், யாக்கரை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது, மணப்புள்ளி பகவதி அம்மன் கோவில். இந்த அம்மனுக்குக் கருப்பு சாந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், மனப் போராட்டங்கள், மன நோய்கள் அகன்று மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு நோயற்ற வாழ்வு, கல்வியில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு கிடைத்தல் போன்ற சிறப்புப் பலன்களும், இந்த அன்னையின் கடைக்கண் பார்வையால் நமக்கு கிடைக்கும்.தல வரலாறு : பூமியில் வாழ்ந்த வந்த மக்களையும் முனிவர்களையும் நீலன் என்னும் அசுரன் துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமையான செயல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட முனிவர்கள், சிவபெருமானை சந்தித்தனர். அவரிடம், தங்களை அசுரனிடம் இருந்து காப்பாற்றி அருளும்படி வேண்டினர்.
தட்சனின் வேள்வியை நிறுத்துவதற்காக, சிவபெருமானின் சடைமுடியில் இருந்து தோன்றியவள் பத்ரகாளி. அவளை மீண்டும் அழைத்த சிவபெருமான், நீலன் அசுரனை அழித்து, முனிவர்களையும், பூலோக மக்களையும் காத்தருளும்படி கூறினார். சிவபெருமானின் கட்டளையை ஏற்றுக்கொண்ட பத்ரகாளி, அங்கிருந்து பூலோகம் சென்று நீலனையும், அவனுக்கு துணையாக இருந்த அசுரப் படைகளையும் அழித்தாள். பின்னர் மன அமைதியை விரும்பிய பத்ரகாளி, ஓரிடத்தில் அழகிய வயல்வெளி களாக இருந்த ஊரின் நடுவில் அமர்ந்து தவம் செய்யத் தொடங்கினாள். ஆனால் அறுவடைக் காலங்களில், அந்த இடத்தில் அரிசி குத்தும் சத்தம் அதிகமாக கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தம் அவளுடைய தவத்திற்கு இடையூறாக இருந்த காரணத்தால், பத்ரகாளி அங்கிருந்து கிழக்குப் பக்கமாக சென்று, ஒரு ஆலமரத்தின் அடியில் அமர்ந்தாள்.
அன்னை அங்கு குடியிருப்பதை அறிந்து கொண்ட பக்தர்கள், அவளுக்கு ஒரு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். அதன்படி ஒரு நம்பூதிரியை அழைத்து, அம்மனுக்கு கோவில் கட்ட சரியான இடத்தை தேர்வு செய்து தரும்படி வேண்டினர். அந்த நம்பூதிரியும், பிரசன்னம் என்னும் ஜோதிட ரீதியான வழிமுறையை பின்பற்றி, அம்மனுக்கு கோவில் அமைப்பதற்கு சரியான இடம் எது என்று தேடினார். அந்த தேடுதலின் முடிவில், ஆலமரத்தின் அடியிலேயே அம்மனுக்கு கோவில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதுவே அம்மனுக்கு சிறந்த இடம் என்று நம்பூதிரி கூறினார். அதன்படி அந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டது என்று இந்த ஆலயத்தின் வரலாறு சொல்லப்படுகிறது.
இந்தப் பகுதியில் வசித்து வந்த வேதியர்கள் பலர், சோகனாசினி (பாரதப்புழா) ஆற்றின் கரையில் அதிக அளவில் யாகங்களை செய்து வந்ததாக கூறப்படுகிறது. எனவே இந்தப் பகுதிக்கு ‘யாகக் கரை’ என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. அதுவே நாளடைவில் மருவி, தற்போது ‘யாக்கரை’ என்று மாற்றம் அடைந்திருப்பதாக சொல்கிறார்கள். இங்கு வசித்த வேதியர்கள், ஆற்றின் கிழக்கு பகுதியில் உள்ள கரையை, மந்திரங்கள் சொல்லும் இடமாகவும், சமையல் செய்யக்கூடிய மடப்பள்ளியாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால் ‘மடப்பள்ளி’ என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பகுதி, தற்போது பேச்சு வழக்கில் ‘மணப்புள்ளி’ என்று மாறிவிட்டதாக ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
அம்மன் முதலில் இருந்த இடம் ‘படிஞ்சாரை யாக்கரை’ என்றும், பின்னர் கோவில் கொண்ட இடம் ‘கிழக்கு யாக்கரை’ என்றும் அழைக்கப்படுகிறது. மணப்புள்ளி பகவதி கோவில், மாட்டப்பிள்ளி பத்ரகாளி மணா என்னும் கேரள அந்தணக் குடும்பத்தினருக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. பின்னர் இக்கோவிலின் நிர்வாகம் மலபார் கோவில்கள் வாரியத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது.ஆலய அமைப்பு : இக்கோவிலின் கருவறையில் உள்ள பகவதியம்மன், கருப்பு நிறத் தோற்றத்தில் காணப்படுகிறாள். மூன்று கண்கள், நான்கு கோரைப்பற்கள் கொண்டு அருளும் இந்த அன்னை, தன்னுடைய நான்கு கரங்களில், சூலம், கபாலம், வாள், கேடயம் போன்றவற்றைத் தாங்கி, வடக்கு திசையை பார்த்தபடி அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்தக் கோவில் வளாகத்தில் கணபதி, கால பைரவர் மற்றும் சாஸ்தா ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த ஆலயத்தின் தெற்குப் பகுதியில் அழகிய குளம் ஒன்று இருக்கிறது. இந்தக் குளத்தில் அசுரர்களை அழிப்பதற்காக, பகவதியம்மன் பயன்படுத்திய வாள் ஒன்று இருப்பதாக ஐதீகம் உள்ளது. இந்தக் குளத்தில் நீராடி அம்மனை வழிபட்டால் எதிரிகள் பயம் விலகும் என்கிறார்கள். இந்தத் திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மனுக்கு, சிறப்பு நாட்களில் அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. சித்திரை மாதம் முதல் நாளில் நடைபெறும் விசுத் திருநாள், ஆவணி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளில் நடைபெறும் ஓணம் திருநாள் போன்ற சிறப்பு நாட்களில், இந்த அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பெறுகின்றன.
இங்கிருக்கும் அம்மனுக்குச் சிவபெரு மானைப் போல் மூன்றாவது கண் இருப்பதால், துன்பங்களால் துவண்டு போய் இருப்பவர்களும், பிறரால் துன்பங்களை சந்திப்பவர்களும் இங்கு வந்து வழிபட்டால், அந்த குறைபாடுகள் அனைத்தும் நீங்கும். நன்மைகள் பலவும் நடைபெறும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. குருவாயூரில் கிருஷ்ணருக்கு செய்யப்படும் சந்தன அபிஷேகம், சபரிமலையில் ஐயப்பனுக்கு செய்யப்படும் நெய் அபிஷேகம் போன்றவை சிறப்புக்குரியவை. அதே போல மணப்புள்ளி பகவதியம்மனுக்கு கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இது இங்கு மிகவும் விசேஷமான அபிஷேகமாகும். கருப்பு சாந்து அபிஷேகம் செய்து வழிபட்டால், மனப்போராட்டங்கள், மன நோய்கள் போன்றவை நீங்கி மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த அபிஷேகத்தைச் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைத் திருவிழா: இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும், மாசி மாதம் வரும் முதல் வெள்ளிக்கிழமையில், ‘கன்யர்’ என்னும் கொடியேற்றத்துடன், ஆண்டுத் திருவிழா தொடங்குகிறது. விழாவின் 14-வது நாளில் நடைபெறும் ‘வேலைத் திருவிழா’ என்பது இந்த ஆலயத்தின் சிறப்பு நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த வேலைத் திருவிழாவின் போது, அம்மன் பக்தர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். அவர் ஆலயத்தின் பின்புறம் உள்ள குளத்தில் இறங்கி, அசுரனை அம்மன் அழிக்க பயன்படுத்திய வாளை எடுத்து வந்து, கோவிலில் வைத்து வழிபாடு செய்வார். இந்த வாள் எடுத்து வரும் நிகழ்வை ‘வெளிச்சப்பாடு திருவிழா’ என்கிறார்கள்.
வேலைத் திருவிழாவில் பங்கேற்கும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வை “வேல ஊட்டு” என்கின்றனர். விழாவில் 15 யானைகள் அணி வகுத்து நிற்கின்றன. பாண்டி, பஞ்சாரி மேளம், பஞ்சவாத்தியம் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன. அசுரனை அழித்து விட்டு, கோபத் தோற்றத்தில் இருக்கும் அம்மனை, அமைதிப்படுத்தும் விதமாக, அம்மனுக்கு முழுமையாகக் கருப்பு சாந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. இப்படிச் செய்வதால் அம்மன் மனம் குளிர்ந்து, பக்தர்களுக்குப் பல்வேறு நற்பலன்களை வழங்குவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது. இவ் வேளையில், அம்மனுக்கு “கடும் மதுரா பாயாசம்” படைக்கப் பெற்று பக்தர் களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆலயமானது காலை 5 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.அமைவிடம் : கேரள மாநிலம், பாலக்காடு நகரில் இருந்து சித்தூர் செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது யாக்கரை. பாலக்காடு நகரில் இருந்து யாக்கரை செல்வதற்கு ஏராளமான நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
Comments
Post a Comment