Temple info -1322 Magadi Sri Ranganatha Swamy Temple,Bengaluru மாகாடி ஸ்ரீரங்கநாதர் கோயில்,பெங்களூரு

 Temple info -1322

கோயில் தகவல் -1322











Magadi Sri Ranganatha Swamy Temple


All Days :

8:30 AM to 1:00 PM

4:30 PM to 7:30 PM


History


The Ranganatha Swamy  is located in the historic town of Magadi, about 41 km from Bangalore, the capital of the Indian state of Karnataka. The temple is protected monument under the Karnataka state division of the Archaeological Survey of India.


Magadi was first founded by the Chola dynasty around 1139 A.D. during their rule over the region. Magadi is the birthplace of Kempe Gowda, the Vijayanagara chieftain who founded Bangalore in the 16th century. Kempe Gowda and the chiefs who followed him built many architectural temples here.

According to Achari, The sanctum of the Ranganatha temple was first consecrated in early 12th century by the Chola ruler and the temple has undergone renovations and expansion since. Based on an inscription on a Garuda sthamba (Garuda pillar) in front of the temple, the tall decorative Gopurams (towers) were added by the famous Vijayanagara empire King Krishnadeva Raya in 1524 A.D. Contributions were also made by the Mysore regent Tipu Sultan; and the Maharaja of Mysore, Jayachamaraja Wodeyar. The Ranganatha temple complex consists of several shrines which includes sanctums for the Hindu deities Rama, Sita, Anjaneya, Lakshmi, Venugopala Krishna and Ranganatha (a form of the Hindu god Vishnu). Legend has it that the main deity (Ranganatha) was installed by Sage Mandavya lending the location the name “Mandavya Kshetra” (abode of Manavya). The pillars in the temple have attractive sculptures in relief. On either side of the temple entrance are two large colorful images of elephants.


               ஶ்ரீரங்கநாதஸ்வாமி    கோயில்,மாகடி 


பெங்களூரிலிருந்து 40கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் மாகடி என்ற சிற்றூரில் இருக்கும் திருமலே எனும் சிறு குன்றின் மேல் கோவில் கொண்டு அருள் பாலிக்கும் ஶ்ரீ ரங்கநாதஸ்வாமியைப்பற்றியதுதான் இந்த பதிவு.


ஶ்ரீ மாண்டவ்ய மகா முனிகள், திருப்பதி ஶ்ரீவெங்கடாசலபதி பெருமாளை நோக்கி தவம் இருந்தபோது, அந்தப் பெருமாள் முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சுயம்புவாய், சாளிக்ராம ரூபமாய் இந்த மலைமேல் எழுந்தருளியதாக சொல்கிறார்கள்.


இந்த சுயம்பு மூர்த்தி மூன்றடி உயர நின்ற திருக்கோலம். மேற்கு நோக்கிய கோலம் ஆதலால் பஸ்சிம (மேற்கு) வேங்கடாசலபதி என்ற பெயரும் உடையவர். நான்கு கரங்கள். சங்கு, சக்ரம், கதாயுதம் தரித்து, அபயஹஸ்தத்துடன் அருளாசி வழங்கும் திருஉருவம்.


இந்த விக்ரஹத்துக்கு திருமஞ்சனம் செய்யும் அபிஷேக நீர், ஒரு உத்தரணி கூட கிடைக்காமல் மாயமாகிவிடுமாம். எங்கு செல்கிறது என்பது யாருக்குமே புரியாத புதிர் என்கிறார் அர்ச்சக பட்டர். வியப்பாக இருக்கிறது.


மாண்டவ்ய மகரிஷியால் நிர்மாணிக்கப்பட்டு பின் சிதிலமடைந்த கோவிலை, பின்னர் புணரமைத்து ராஜ கோபுரம் கட்டியது விஜயநகர மன்னர் ஶ்ரீ க்ருஷ்ணதேவராயர். அதன் பின் இவ்வூரில் பிறந்த கெம்பகௌடா (பெங்களூரை உருவாக்கியவர்) செப்பனிட்டு, ஶ்ரீரங்கநாதரை மிகவும் ஆராதித்த திப்புசுல்தானால் வ்ருத்தி செய்யப்பட்டு பின் மைசூர் மன்னர் உடையாரால் பாதுகாக்கப்பட்டதாக வரலாறு.


ஶ்ரீரங்கநாதர் எல்லா இடங்களிலும் சயன கோலத்தில்தான் அருள் பாலிப்பார். ஆனால் இக்கோவிலில் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிப்பது தனிச் சிறப்பு.


தாயார் பத்மாவதி (சரோஜா என்றும் பெயர்) கிழக்குமுகமாக பெருமாளைப்பார்த்தபடி தனி சன்னதியில் அமர்ந்திருக்கிறார். எதிர் எதிர் திசையை நோக்கியபடி தாயார் பெருமாள் இருப்பது இக்கோவிலின் இன்னொரு சிறப்பு. தாயாரும் சுயம்பு மூர்த்தியே.


இக்கோவிலில் பெருமாள் சன்னதிக்கு இருபுறமும் கருட பகவானுக்கும் ஆஞ்சநேயஸ்வாமிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. எல்லா விஷ்ணு கோவில்களிலும் கருட பகவான் பெருமாளுக்கு எதிரே அவரை வணங்கியவாறு காணப்படுவார். ஆனால் இக்கோவிலில் பக்கத்தில் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இதுவும் ஒரு சிறப்பு.


ராமர், சீதாதேவி, ஶ்ரீவேணுகோபாலஸ்வாமி, ஶ்ரீ வைஷ்ணவ மகான் ஶ்ரீ ராமானுஜர், 12 ஆழ்வார்கள். ஶ்ரீதேவி பூதேவியுடன் ஆதி சேஷன்மேல் இருக்கும் ஶ்ரீவைகுண்ட நாதர்.  இவர்களுக்கும் தனித்தனிச்சன்னிதிகள் இக்கோவிலில் அமைந்துள்ளது.


ப்ராகார வலம் வரும்போது கற்சுவரில் சுயம்புவாக உருவான சயனகோலத்தில் இருக்கும் ஶ்ரீரங்கநாதஸ்வாமி உருவம் இக்கோவிலின் முக்கிய சிறப்பு. இந்த பகவான் வருஷா வருஷம் வளர்ந்து வருவதாகச் சொல்கின்றனர். அதனால் இவருக்கு (பெளுயுவ)கன்னடத்தில் வளரும் ரங்கநாதர் என்று பெயர். அபார சக்தி(super power) இவருக்கு என்கின்றனர். மனதில் என்ன நினைத்து வேண்டிக் கொண்டாலும்உடனே அதை  நிறைவேற்றி வைப்பாராம். ஒருகாலை மடக்கி அதன்மேல் இடது கையை வைத்தபடி ஒய்யாரமாக படுத்துஇருக்கும் அவரைப் பார்க்கும்போது பரவசமாக இருக்கிறது.


இன்னொரு விசேஷம், தினந்தோறும் திருமஞ்சனம் பூஜை சமயத்திலும், உற்சவங்கள் நடக்கும் சமயத்திலும் கருட பறவை இக்கோவிலை வட்டமிடுவது  மகா அதிசயம் என்கிறார் பூஜை செய்யும் பட்டர். நமது ஆச்சரியம் கூடுகிறது.


மிகப் பெரியதான, ஆயிரம் வருஷங்கள் பழமையான இக் கோவிலைச் சுற்றி வந்தால், அதீதமான மனநிம்மதி, சந்தோஷம், பக்திபரவசமான பரமத்ருப்தி அனைத்தும் நமக்குக் கிடைக்கிறது, இது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் விஷயம்.


கோவிலுள் நுழைய சில படிகள் ஏற வேண்டும். அதற்குமுன் இடப்புறத்தில் இருக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட புஷ்கரிணியில் நீரை ப்ரோக்ஷணம் செய்து கொண்டு தரிசனத்துக்குப் போகலாம்.


எவ்வளவு நேரம் நின்று தரிசனம் செய்தாலும் போறாது என்ற எண்ணமே உண்டாகிறது. மீண்டும் மீண்டும் நின்று மெய்யுருகி துதித்து, அவனருளைப்பெற்று, வளரும் ரங்கநாதரையும் மீண்டும் மீண்டும் வணங்கி பரவசமாகி கிளம்புவோம்.


நன்றி மாலதி முரளி

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி