Temple info -825 Oppilamaniyar Temple, Vadamaraikadu, Karaikkal வடமறைக்காடு ஒப்பிலாமணியார் கோயில், காரைக்கால்

 Temple info -825

கோயில் தகவல் -825





Karaikal Vadamaraikadu Oppilamaniyar Temple Karaikkal 


 The place is also known as Vadamaraikkadu as Vedaranyam is known as Maraikkadu.  The marriage of Shiva and parvathi takes place in Kailasam and all Devas go there to attend due to which the north india goes down. To balance this Lord Shiva asks Sage Agasthya to go south of Vindhyas to balance. Agasthya feels that he is not able to see the celestial wedding. The place where Agasthta went was Thirumaraikadu. Lord Shiva shows the wedding to him.


  In this glorious place the Lord bestows blessings by the name of Oppilamaniyar.  The goddess is named Sundarambal.


  The annual Tirukkalyana festival is held here in the month of Chittirai on the eve of the wedding.


  Once upon a time a Chettiar from Sri Lanka was coming to India in a boat with a large object to do Thiruppani to a temple. There was a huge storm and the Chettiar heard asariri asking him to build a temple where the boat settles after the storm subside.  The temple built by Agasthya is called Tirumaraikadu temple.    After a while the storm calmed down and the boat reached the Karaikal area.


 The tallest Rajagopuram to the east has three levels.  If you cross it, on the right side, the Soundarambal Sannidhi is located towards the south.  To adorn the faade with beautiful dwarapalikas, there are two dwarfs at the gate.  Ambikai presents with a beautiful large shape.  Lord Oppilamaniyar has a slightly medium sized lingam sanctum.  One of the statues of a Chola king stands majestically at the entrance of the tower seems to have been built of black stone during the Chola period up to the prominence of the sanctum sanctorum.  The Ardha Mandapam at the front is known as the Maha Mandapam and next to it is a long hall up to the Rajagopuram in which Nandi is facing the Lord.  In the sanctum sanctorum are the south-facing linkotpavar Brahman Durgai.  The two have a shrine together as Sandesar- Sandeswari.  In the southwest a neem tree is worshiped.  Nearby is the Selvavinayagar Sannadhi, which has a monastery with Lord Murugan Valli named Selvasubramaniyar.  Adjacent to the shrine of Ambikai, a large palm tree has fallen slightly and is resurrected.  To the northeast are the Navagrahas, and the four, Byravar, and Saturn.  There is a pond in front of the temple.


காரைக்கால்  வடமறைக்காடு ஒப்பிலாமணியர்  திருக்கோயில் 

Karaikkal Oppilamaniyar temple 


வேதாரண்யம் மறைக்காடு என அழைக்கப்படுவது போல் இத்தலம் வடமறைக்காடு என அழைக்கப்படுகிறது. இறைவனுக்கும் இறைவிக்கும் கயிலையில் திருமணம் நடைபெறுகிறது, அதனை காண தேவர்கள் அனைவரும் வந்து சேர வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது அதனால் அகத்தியரை தென்புலம் நோக்கி செல்ல இறைவன் பணிக்கிறார், ஈசனின் ஆணைப்படி தென்னாடு வந்த அகத்தியர் இந்த வடமறைக்காடு வந்ததாகவும் அந்த தருணத்தில் இறைவன் இறைவி திருமணம் கயிலையில் நடைபெறுகிறது இத்திருமணத்தை நேரில் காண இயலாமல் போனதே என வருந்திய அகத்தியருக்கு இறைவன் தனது திருமண காட்சியை காட்டியருளினார்.


 இத்தகு பெருமைமிகு தலத்தில் இறைவன் ஒப்பிலாமணியர் எனும் பெயர் கொண்டு அருள்புரிகிறார். இறைவி சுந்தராம்பாள் எனும்  பெயர் கொண்டுள்ளார்.


 ஆண்டு தோறும் இங்கு திருமணக்காட்சி தந்ததை முன்னிட்டு, சித்திரை மாதம் வளர்பிறையில் திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது.


 ஒருமுறை இலங்கையை சேர்ந்த செட்டியார் ஒருவர் வேதாரண்யம் எனும் மறைக்காட்டு இறைவன் கோயில் திருப்பணியை செய்ய பெரும் பொருளுடன் ஒரு படகில் இந்தியா வந்து கொண்டிருந்தார் , வரும் வழியில் இறைவன் திருவிளையாடலாக பெரும்புயல் படகை அலைக்கழித்தது, செட்டியாரோ இறைவன் திருநாமத்தை ஜபித்தவாறு தன்னை காப்பாற்றி கரை சேர்க்குமாறு வேண்டி படகில் அமர்ந்திருந்தார், அப்போது வானின்று ஒரு அசரீரி ஒலித்தது, விரைவில் புயல்காற்று அடங்கும் இப்படகு எங்கு தஞ்சமடைகிறதோ அங்கே எனக்கு உள்ள ஒரு கோயிலை மறைக்காடாக எண்ணி திருப்பணி செய்து வழிபடுவாய் என கூறியது. சற்று நேரத்தில் புயல் காற்று ஓய்ந்தது படகு இந்த காரைக்கால் பகுதியை வந்தடைந்தது  இந்த கோயிலை கண்டு அவர் நல்ல முறையில் திருப்பணிகள் செய்து வழிபட்டார் அதுமுதல் இத்தலம் வடமறைக்காடு என வழங்கப்படுகிறது. 


கிழக்கு நோக்கிய உயர்ந்த ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் உள்ளது. அதனை கடந்தால் வலது புறம் சௌந்தராம்பாள் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய சுதைகள் அலங்கரிக்க, வாயிலில் இரு துவாரபாலகியர் இருவர் உள்ளனர். அம்பிகை அழகிய பெரிய வடிவுடன் காட்சியளிக்கிறார். இறைவன் ஒப்பிலாமணியர் சற்று நடுத்தர அளவுடைய லிங்கமாக கருவறை கொண்டுள்ளார். கருவறையின்  பிரஸ்தரம் வரை கருங்கல்லால் சோழர்கால காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது கோபுர வாயிலில் ஒரு சோழஅரசனின் சிலை  ஒன்று கம்பீரமாக நிற்கிறது யாரென அறியமுடியவில்லை. முகப்பில் அர்த்த மண்டபம் மகா மண்டபம் என உள்ளது அதனை அடுத்து ஒரு நீண்ட மண்டபம் ராஜகோபுரம் வரை உள்ளது அதில் நந்தி இறைவனை நோக்கியபடி உள்ளார்.  கருவறை  கோட்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சண்டேசர் சண்டேஸ்வரி என இருவரும் ஒன்றாக சன்னதி கொண்டுள்ளனர். தென்மேற்கில் ஒரு வேம்பு ஒன்று வழிபாட்டில் உள்ளது. அருகில் செல்வவிநாயகர் சிற்றாலயம், செல்வசுப்பிரமணியர் எனும் பெயரில் முருகன் வள்ளி தெய்வானையுடன் ஒரு சிற்றாலயம் கொண்டுள்ளார்.  அம்பிகையின் சன்னதியை  ஒட்டியவாறு ஒரு பெரிய பலாமரம் ஒன்று சற்று பட்டுபோய் மீண்டும் உயிர்த்தெழுந்து வருகிறது. வடகிழக்கில் நவகிரகங்கள், மற்றும் நால்வர், பைரவர், சனி ஆகியோர் உள்ளனர். இக்கோயிலின் எதிரில் ஒரு குளம் ஒன்றும்  உள்ளது, 


அம்மையே அப்பா ஒப்பிலா மணியே

    அன்பினில் விளைந்தஆரமுதே

பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்

    புழுத்தலைப் புலையனேன் றனக்குச்

செம்மையே ஆய சிவபதம் அளித்த

    செல்வமே சிவபெரு மானே

இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்

    எங்கெழுந் தருளுவ தினியே.

Comments

Popular posts from this blog

Temple info -1646. Pidari chelliamman Temple, Velachery, Chennai. பிடாரி செல்லி அம்மன் கோயில், வேளச்சேரி, சென்னை

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -2119 Dhundiraj Vinayak Temple, Kashi துண்டிராஜ வினாயகர் கோயில்,காசி