Temple info -680 Brahmapureeswarar Temple, Thirukkuvalai பிரம்மபுரீஸ்வரர் கோயில்,திருக்குவளை. Padal Petra Sthalam No.240

 Temple info -680

கோயில் தகவல் -680



Brahmapureeswarar Temple, Thirukkuvalai


Brahmapureeswarar Temple or Thiurkolili is a Hindu temple dedicated to Shiva located in Thirukkuvalai in Nagapattinam district of Tamil Nadu, India. Shiva is worshiped as Brahmapureeswarar, and is represented by the lingam and his consort Parvati is depicted as Vandamar Poonguzhali. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Tevaram, written by Tamil poet saints known as the nayanars and classified as Paadal Petra Sthalam.


Brahmapureeswarar Temple

Tirukolili


Religion

Affiliation

Hinduism


District

Nagapattinam


Deity

Brahmapureeswarar(Shiva)


Location

Thirukkuvalai


State

Tamil Nadu


Country

India


Geographic coordinates

10°37′N 79°43′E



Architecture

Type

Dravidian architecture


There are many inscriptions associated with the temple indicating contributions from Cholas, Thanjavur Nayaks and Thanjavur Maratha kingdom. The oldest parts of the present masonry structure were built during the Chola dynasty in the 9th century, while later expansions, are attributed to later periods, up to the Thanjavur Nayaks during the 16th century.


The temple house a five-tiered gateway tower known as gopurams. The temple has numerous shrines, with those of Brahmapureeswarar, Somaskandar and Vandamar Poonguzhali being the most prominent. The temple complex houses many halls and three precincts. The temple has six daily rituals at various times from 6:30 a.m. to 9 p.m., and five yearly festivals on its calendar. The Nelatti festival where the paddy grains are transported from the temple to Thiruvaru is the major festival in the temple. The temple is now maintained and administered by Hindu Religious and Charitable Endowments Department of the Government of Tamil Nadu.


Legend


One old man of Kundaiyur near Tirukkuvalai hearing of Sundaramurthi Nayanar's greatness was supplying him with paddy and dhol, when owing to adversity of season being unable to contribute the stipulated quantity prayed to God. Sundarar sung praying the deity here in favour of the old man and wanted to shift the paddy to Thiruvarur. Shiva was pleased by his devotion and sent the footgrains to his house in Thiruvarur. As per Hindu legend, the image of Shiva, in the form of lingam was made with white sand by Brahma which gave the name Brahmapureeswarar. Navagrahas, the nine planetary deities are believed to have worshipped Shiva to absolve themselves of the sins committed. The place got the name Thirukolili from kol (planet) which got relief from sins ili. Following the legend, the images of the Navagrahas is located in a single line in the temple. Thyagarajar is called Avani Vidangar and is believed to perform Bringa Natanam. During later period, the place came to be known as Thirukolili. As per another legend, during Mahabharatha, Bheema the Pandava prince was propitiated off his sins of killing Bakasura by worshipping the presiding deity. Sage Agastya was also believed to have worshipped the presiding deity. The temple has various other names like Brahmapothavanam, Kathakaranyam, Pushapavanam, Thenkailai and Pandavapuram.


History

There are 19 inscriptions in the temple. As per the inscription, the temple was part of Rajendra Chola Valanadu Ilayalanadu Vendalai Vellorekotram. A devotee named Irulkudian Indrapathinallur Uyyavandhan Jayathundangan commissioned the Mahamandapam and contributed to the renovation till the end of the temple. There were multiple contributions from Jatavarman Sundara Pandyan I. The inscriptions refer to the presiding deity as "Thirukoili Utaya Nayanar" and Tyagesar as "Avanivitankar Tykar". The northern street is referred as "Thirumaraikadan Thiruveethi". During Pandya times, there were Saivite Brahmins belonging to Kani Udayar. During the 18th regnal year of Sadayavarman Sundara Pandiyan, 800 gold coins were donated to the temple. The region was called Rajendra Chola Valanadu Vandarai Velakotram as Thirukolili. The temple is now maintained and administered by Dharmapuram Adheenam, a Saivite monastic institution.


Processional Dance

The Thyagarajar Temple at Tiruvarur is famous for the ajapa thanam(dance without chanting), that is executed by the deity itself. According to legend, a Chola king named Mucukunta obtained a boon from Indra(a celestial deity) and wished to receive an image of Thyagaraja Swamy(presiding deity, Shiva in the temple) reposing on the chest of reclining Lord Vishnu. Indra tried to misguide the king and had six other images made, but the king chose the right image at Tiruvarur. The other six images were installed in Thirukkuvalai, Nagapattinam, Tirukarayil, Tirukolili, Thirukkuvalai and Tirumaraikadu.[ All the seven places are villages situated in the river Cauvery delta. All seven Thyagaraja images are said to dance when taken in procession (it is the bearers of the processional deity who actually dance). The temples with dance styles are regarded as Saptha Vidangam(seven dance moves) and the related temples are as under:


Temple Vidangar Temple Dance pose Meaning

Thyagarajar Temple Vidhividangar Ajabathaanam Dance without chanting, resembling the dance of Sri Thyagaraja resting on Lord Vishnu's chest

Dharbaranyeswarar Temple Nagaradangar Unmathanathaanam Dance of an intoxicated person

Kayarohanaswamy Temple Sundaravidangar Vilathithaanam Dancing like waves of sea

Kannayariamudayar Temple Adhividangar Kukunathaanam Dancing like a cock

Brahmapureeswarar Temple Avanividangar Brunganathaanam Dancing like a bee that hovers over a flower

Vaimoornaathar Temple Nallavidangar Kamalanaanathaanam Dance like lotus that moves in a breeze

Vedaranyeswarar Temple Bhuvanivividangar Hamsapthanathaanam Dancing with the gait of a swan

Architecture

The temple is located 15 km away from Thiruvarur. The temple has a five tiered Rajagopuram with elevated stone walls separating the second and third precincts. The images of the presiding deity, Brahmapureswarar, in the form of Shiva lingam occupies the main sanctum facing east. The shrine of the consort of Brahmapureeswarar, Vadar Poonguzhali faces west. The third prakaram has a separate shrine for the Saivite saints. The temple has three water bodies located at various places inside the temple. There is an image of Vinayagar in the third precinct who is believed to have shown the path of heaven to a king named Hemakantha, giving the name, Hemakantha Vinayagar. The temple tank, Brahma Theertham, is considered sacred and is located opposite to the temple tank. The shrine of Avanivitangar in the form of Somaskanda is a shrine parallel to the sanctum and has almost the same size as the sanctum. The image of Sundarar with Paravainachiyar is located in the shrine of Somaskandar. The temple has an emerald lingam, which is located inside the sanctum. There are three images of Chandikeswara in the temple. The halls leading to the sactum has pillars with sculptures indicating various legends associated with the temple.


Religious importance and worship practices


The temple is revered in the verses of Tevaram, the 7th century Saivite canonical work by the three saint poets, namely, Appar, Sambandar and Sundarar. As the temple is revered in Tevaram, it is classified as Paadal Petra Sthalam, one of the 275 temples that find mention in the Saiva canon.


The temple priests perform the puja (rituals) during festivals and on a daily basis. Like other Shiva temples of Tamil Nadu, the priests belong to the Shaiva community, a Brahmin sub-caste. 


The temple rituals are performed six times a day; Ushathkalam at 6:30 a.m., Kalasanthi at 8:00 a.m., Uchikalam at 12:00 a.m., Sayarakshai at 5:00 p.m., and Ardha Jamam at 8:00 p.m. Each ritual comprises four steps: abhisheka (sacred bath), alangaram (decoration), naivethanam (food offering) and deepa aradanai (waving of lamps) for both Brahmapureeswarar and Poongkuzhalammai. The worship is held amidst music with nagaswaram (pipe instrument) and tavil (percussion instrument), religious instructions in the Vedas (sacred texts) read by priests and prostration by worshipers in front of the temple mast. There are weekly rituals like somavaram (Monday) and sukravaram (Friday), fortnightly rituals like pradosham and monthly festivals like amavasai (new moon day), kiruthigai, pournami (full moon day) and sathurthi. Brahmotsavam during the Tamil month of somavaram (September – October), Thiruvadhirai during the month of Margazhi (December – January) and Annabhishekam during the Tamil month of Masi are the major festivals celebrated in the temple. The Nelatti festival where the paddy grains are transported from the temple to Thiruvaru is the major festival in the temple.


 திருக்குவளை

பிரமபுரீசுவரர் திருக்கோயில்


 திருக்குவளை - தல வரலாறு

 

இறைவர் திருப்பெயர் : பிரமபுரீசுவரர், கோளிலிநாதர், கோளிலிநாதேஸ்வரர்.

இறைவியார் திருப்பெயர் : வண்டமர் பூங்குழலி.

தல மரம் : தேற்றாமரம்

தீர்த்தம் : பிரம தீர்த்தம்.

வழிபட்டோர் : பிரமன், திருமால், இந்திரன், அகத்தியர், முசுகுந்தன், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், ஹேமகாந்த மன்னன் முதலியோர்.

தேவாரப் பாடல்கள் : 1. சம்பந்தர் - 1. நாளாய போகாமே நஞ்சணியுங்.

2. அப்பர் - 1. மைக்கொள் கண்ணுமை, 2. முன்ன மேநினை யாதொழிந்.

3. சுந்தரர் - 1. நீள நினைந்தடி யேனுமை.


தல வரலாறு:


திருக்கோளிலி தலம் தியாகராஜருக்குரிய சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூரை அடுத்து விசேஷமான தியாகராஜர் ஆலயம் திருக்கோளிலி ஆகும். விடங்கருக்கு அவனிவிடங்கர் என்று பெயர். நடனம் பிருங்க நடனம். பிரம்மா, திருமால், பஞ்சபாண்டவர்கள், நவக்கிரகங்கள், அகத்தியர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.அகத்தியர் பூசித்த லிங்கம் பிரகாரத்தில் இருக்கிறது. மூலவர் கோளிலிநாதர் வெண்மணலால் ஆன சிவலிங்கமாகக் காட்சி தருகிறார். வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது. பீமன் பகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் இங்கு இறைவனை வழிபட்டதால் நீங்கியது. பகாசுரன் உருவம் முன் கோபுரத்தில் உள்ளது. நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே வரிசையில் தெற்குப் பார்த்து உள்ளனர். நவக்கிரகங்களின் குற்றங்களை நீக்கி அருள்புரிந்ததால் கோளிலி என்று தலப்பெயர் ஏற்பட்டது. கோளிலிநாதரை வழிபடுவதால் பக்தர்களுக்கு ஜாதகத்தில் நவக்கிரக தோஷம் இருந்தால் அவை நீங்கி விடும் என்பது இத்தலத்தின் சிறப்பு.


கிழக்கு நோக்கிய அழகான ராஜகோபுரத்துடன் ஊரின் மத்தியில் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே நுழைந்தால் வடபுறம் வசந்த மண்டபம் உள்ளது. கொடிமரம் தாண்டி இரண்டாம் கோபுர வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் உள்பிராகாரத்திற்கு எதிரே மணலால் ஆன சுயம்புலிங்கமாக காட்சி தரும் சுவாமி சந்நிதியும், தென்புறம் தியாகேசர் சந்நிதியும் உள்ளன. எதிரே சுந்தரர் உற்சவமூர்த்தியாகப் பரவையாருடன் காட்சி தருகின்றார். பிராகாரவலம் வரும் போது தென் மேற்கில் தியாகவிநாயகரும், அடுத்து விசுவநாதர் இலிங்கமூர்த்தமும், வாகன மண்டபமும், விசாலாட்சி, இந்திரபுரீசர் முதலிய சந்நிதிகளும் உள்ளன. முருகப்பெருமானுக்கு அழகான சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி கிழக்கு நோக்கி தனிக்கோவிலாக உள்ளது. இக்கோவிலில் உள்ள சண்டீசுவரருக்கு மூன்று உருவங்கள் உள்ளன. இத்தலத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் உள்ள குண்டையூர் என்ற இடத்தில் பெற்ற நெல்லை இத்தலத்து இறைவன் சுந்தரருக்கு திருவாரூரில் கிடைக்கும்படி செய்தருளிய aற்புதம் நடந்த தலம் திருக்கோளிலி ஆகும். குண்டையூர் கிழார் என்பவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் சுந்தரர் வரவையொட்டி மலைபோல் நெல் மூட்டைகளை அன்புடன் அளித்தார். இவற்றை எவ்வாறு திருவாரூர் எடுத்துச் சென்று தன் வீட்டில் சேர்ப்பது என்ற வழி தெரியாமல் சுந்தரர் விழித்தார். பிறகு இப்பிரச்னைக்கு தீர்வுகாண கோளிலிநாதரிடம் பதிகம் பாடி நெல் மூட்டைகளை திருவாரூர் எடுத்துச் செல்ல வகை செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.


சிறப்புக்கள் :


சுந்தரமூர்த்தி சுவாமிகள் நெல்மலையை எடுத்துச் செல்ல ஆள்வேண்டிப் பாடிய சிறப்புக்குரியதாய் விளங்குவது இத்தலம்.


இத்தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்)


இத்தலத்திற்கு பிரமதபோவனம், கதகாரண்யம் (தேற்றாமரவனம்), புஷ்பவனம், தென்கயிலை எனப்பல பெயர்களுண்டு.


முன்கோபுரத்தில் பகாசூரன் உருவமும், பிரமகத்தி உருவமும் உள்ளது. சுவாமி, அம்பாள் சந்நிதிக்கு நடுவில் அகத்தியர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளது.


இறைவன் வெண் மணலால் ஆன சிவமூர்த்தமாக காட்சி தருகிறார். இங்குள்ள நவக்கிரகங்கள் ஒருமுகமாகத் தென்திசையை நோக்கி விளங்குகின்றன.


ஆலயத்திற்கு தென்மேற்கு மூலையில் சிவலோக விநாயகர் (ஹேமகாந்த மன்னனுக்குச் சிவலோகம் காட்டியவர்) உள்ளார். இக்கோயிலில் 19 கல்வெட்டுக்கள் - சோழர், பாண்டியர் காலத்தியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.கல்வெட்டுக்களில் இறைவன் 'திருக்கோளிலி உடைய நாயனார் ' என்றும், தியாகேசர் 'அவனிவிடங்கத் தியாகர் ' என்றும் குறிக்கப்படுகிறார்.



போன்:  +91- 4366 - 329 268, 245 412.


அமைவிடம் மாநிலம் :


தமிழ் நாடு திருவாரூரில் இருந்து தென்கிழக்கே 20 கி.மி. தொலைவில் எட்டுக்குடி செல்லும் சாலையில் இத்தலம் இருக்கிறது. திருகைச்சினம், திருநெல்லிக்கா, திருக்காறாயில் ஆகிய பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இத்தலத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளன.


இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12-30 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.


இத்தலம் சப்த விடங்கத் தலங்களுள் ஒன்று. (அவனி விடங்கத்தலம், பிருங்கநடனம்)


வெண்மணலால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த லிங்கத்திற்கு அமாவாசை தினங்களில் மட்டும் சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது. மற்ற நாட்களில் குவளை சாற்றி பூஜை செய்யப்படுகிறது. எனவே இத்தலம் "திருக்குவளை" என்று பெயர் பெற்றது.


நவக்கிரகங்கள் எல்லாம் ஒரே வரிசையில் தெற்குப் பார்த்து உள்ளனர்.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி