Temple info -528 Senji Singavaram Ranganathar temple செஞ்சி சிங்காவரம் ரங்கநாதர் கோயில்

 Temple info -528

கோயில் தகவல் -528












Senji Singavaram Ranganatha temple


The Senji Singavaram Ranganatha Temple (aka Singavaram Perumal Temple) is a cave-temple in India dedicated to God Ranganatha and Goddess Ranganayaki Thayar. The temple is a Pallava period structure, and was patronized by subsequent rulers.



Wall drawings

Description


The Singavaram Ranganatha temple is located about 4 miles from the Gingee Fort, with the Queen's Fort linked by tunnels to this temple. The 24 feet long idol of Ranganatha, carved from living rock, is in a reclining pose on the coils of the serpent Ananta. A panel in the rear wall depicts the Gandharvas and Brahma, in which Brahma is born from the navel of Vishnu. Besides Garuda, the demons Madhu and Kaitabha who were killed by Vishnu are depicted. Goddess Bhoomidevi graces the feet of the lord while Prahlada sits near his knee.


Pallava cave temples, cut from rock, dating to the time of Mahendravarman or Narisimhavarman (580-688 AD), exist in Melacceri as Maddileshvara temple and at Singavaram as Ranganatha temple. As per the Mandagapattu inscription, the Pallava king, Mahendravarman I established the tradition of the Ranganatha temple. Historian KR Srinivasan suggests Durga and Vishnu of this shrine are similar to some cave shrines of Mahabalipuram; and suggests the name "Singavaram" might be derived from another Pallava king, Mamalla who was either Narasimha or Simhavishnu. KR Srinivasan also notes the Dwarapalas in this temple follow Pallava iconography. Durga with 4 hands holding the Shankha, Chakra, and two arms resting on her thigh and waist, stands on the head of Mahishasura.


Legend


The Sthalapurana of the temple associates it with the legend of Prahlada, born to the demon-king Hiranyakashipu.


An inscription of kōpperuñjinga (a Kadava chieftain) in the Singavaram temple mentions the deity is tiruppanrikkunru emperuman possibly meaning a shrine intended for Varaha Perumal.


In a later legend, Tubbaki Krishnappa Nayak kept a flower garden dedicated to Lord Varadaraja Perumal. But Perumal in the form of a boar (Varaha) destroys the garden. Krishnappa chases the animal but could not kill it. The boar goes to Singavaram, bores himself into a cave, then reveals his propria persona to the nayak. Bewildered, the nayak invokes the blessings of the Singavaram god; who then directs him to build a temple with the help of an ascetic. The ascetic attempts to kill the nayak, but the nayak kills the ascetic instead and his dead body becomes gold, using which the temple of Ranganatha inside the Gingee fort was built, and the Singavaram temple was built (refurbished).


The Shashti Poorthi celebration in this temple is associated with a legend of Desing Raja. This temple was his tutelary deity (Kuldev). As per local ballads on the legend, Raja Desingh sought the God's blessings before his battle against Sadatullah Khan, the Arcot Nawab, in 1714 AD. But the deity turned his head aside marking his disapproval. However, Raja Desigh in haste proceeded with his war plans and was killed. Dumont notes Raja Desingh had his own loyal Muslim ally, while Sadatullah Khan had Hindu advisors. In the legend and ballads, God Ranganatha worried at the raja's plans to proceed with the battle, appears in front of Desingh's young wife who then seeks his permission for Sati. He tries to dissuade her at first but agrees at her insistence and blesses her and her deceased husband with boons.



எமபயம் போக்கும் சிங்கவரம் பெருமாள்!


மனிதர்களாக பிறந்த நாம் பல வகைகளில் பயம் கொள்வது உண்டு. சாலையில் பயணிக்கையில், உடலில் ஏற்படும் நோய், வயது முதிர்வு, சில சமயங்களில் இருட்டு, அமானுசியம் என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவற்றில் இருந்து ஒரு சில மனமாறுபாடுதல்கள், உலவியல் ரீதியாக வெளியேறிவிடாம். ஆனால் நமக்கு ஏற்படும் மரண பயத்தை எளிதில் போக்க முடியாது. குறிப்பாக, எமதர்மன் தொடர்வதைப் போலவும், கனவில் அழைத்துச் செல்வதைப் போலவும் தொடர்ந்து ஏதேனும் அறிகுறிகள் நம் கண் முன் தோன்றிக் கொண்டே இருக்கும். இது பலசமயங்களில் நம் ஆழ்மனதில் தேங்கி அவ்வப்போது நம்மை வேதனையடையச் செய்யும். அவ்வாறான எம பயத்தில் இருந்து விலக வேண்டுமா..? உடனே இந்த பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்.


எங்கே உள்ளது ?


விழுப்புரத்தில் இருந்து சுமார் 46 கிலோ மீட்டர் தொலைவில்செஞ்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சிங்கவரம் பெருமாள் திருக்கோவில். விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 38யில் பயணித்தால் தும்பூர், சிட்டம்பூண்டி, செஞ்சிக் கோட்டை உள்ளிட்டவற்கைக் கடந்து மேலச்சேரிக்கு முன்னதாக இக்கோவிலை அடையலாம். பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதிகளும், தனியார் வாடகைக் கார் வசதிகளும் அதிகளவில் உள்ளன.


சிறப்பு


குடைவரைக் கோவிலான சிங்கவரம் பெருமாள் கோவிலில் சுமார் 14 அடி நீளத்தில் பெருமாள் வீற்றுள்ளார். கருவறையில் பெருமாள் சயன கோலத்திலும், முகப்பில் ஸ்ரீதேவி, பூதேவியுடனும் பெருமாள் அருள்பாலிக்கிறார்.


திருவிழா


பெருமாளுக்கு உகந்த நாட்களான மாசி மகம், தை, அமாவாசை, ஆடி மாதங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று மூலவர் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மங்கல மேலம் முழங்க பூஜைகள் நடைபெறுகின்றன. இதனை தரிசிக்கவே விழாக்காலங்களில் கோவிலில் பக்தர்கள் கூடுவர்.


நடைதிறப்பு


அருள்மிகு சிங்கவரம் பெருமாள் கோவில் நடை காலை 8 மணி முதுல் 10 மணி வரைவிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையில் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். பிற கோவில்களை ஒப்பிடுகையில் இது குறைவானநேரம் என்பதால் முறையாக திட்டமிட்டு செல்ல வேண்டும்.


வழிபாடு


சுமார் 14 அடி நீளமுள்ள சிங்கவரம் பெருமாளை தரிசனம் செய்தால் நீண்ட நாட்களாக மனதை உலுக்கிவந்த எமபயம் நீங்கும் என்பது தொன்நம்ப்பிக்கை. பெருமாளின் பாதம் தொட்டு வணங்கிவர வறுமை நீங்கி செல்வம் பெருகும். திருத்தலம் அமைந்துள்ள மலைக்கு மேலே செல்லும் வழியில் லட்சுமி துர்த்தம் என்னும் சுனையும், அதனருகே லட்சுமிக் கோவிலும் அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தில் நீராடி, லட்சுமி அம்மையாரை வழிபட்டால் தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கி இலாபம் பெருகும். பில்லி, சூனியம், கண் திருஷ்டி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இங்கே தீர்வுகள் கிடைக்கும.

எமபயம் போக்கும் பெருமாள்


இத்திருத்தலத்தில் உள்ள பெருமாளை தரிசனம் செய்பவர்களுக்கு எமனின் மீது இருந்த பயம் விலகும். தொடர்ந்து, வாரந்தோறும் புதன் கிழமைகளில் இக்கோவிலில் விளக்கேற்றி வழிபட்டால் மரண பயம் நீங்கும் என்பதால் ஏராளமான பக்தர்கள் புதன் கிழமையன்று வருவர்.


நேர்த்திக்கடன்


வேண்டிய காரியம் நிறைவேறியதும் மூலவருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்படுகிறது. குறிப்பாக, ஆபிஷேக அலங்காரம் செய்து அன்னதானம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.


புராணக்கதை


செங்கிப் பகுதியை ஆட்சிசெய்து வந்த தேசிங்கு ராஜாவின் குலதெய்வமாக இந்த சிங்கவரம் பெருமாள் இருந்தார். தேசிங்கு ஆர்க்காடு நவாப்புடன் போருக்குச் செல்லுகையில் இத்தலத்திற்கு வந்து பெருமாளை வழிபட்டார். தேசிங்கு ராஜா போருக்கு செல்வதை விரும்பாத பெருமாள் தனது முகத்தை திருப்பிக் கொண்டார். இன்றளவும் இக்கோவிலில் உள்ள பெருமாளின் திருவுருவ சிலையின் தலை திரும்பியே இருப்பதைக் காணமுடியும்.


தலசிறப்புகள்


செஞ்சி மலையில் குடைவரைக் கோவிலான இதன் கீழே பாறையை ஒட்டி ரங்கநாயகி அம்மையாரும், பாறையின் புடைப்பில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். கோவிலுக்குச் செல்லும் வழியில் படிக்கட்டின் துவக்கத்தில் உள்ள மண்டபத்தில் திருமாளுக்கு உகந்த சங்கு, சக்கரம், நாமம், திருப்பாதம் மற்றும் பஞ்சமுக அனுமனின் உருவம் சிற்பங்களாக உள்ளன. மலைக்கு மேலே செல்லும் வழியில் லட்சுமி தீர்த்த சுனையும், லட்சுமி அம்மையார்க்கு சன்னதியும் அமைந்துள்ளது.


எப்படிச் செல்வது ?


சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு தூத்துக்குடி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ் என ஏராளமான ரயில் சேவைகள் உள்ளது. திருச்சி, ஈரோடு, சேலம், வேலூர் உள்ளிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விழுப்புரத்திற்கு செல்ல சிறந்த முறையில் பேருந்த வசதிகள் உள்ளன. விழுப்புரம் பேருந்து, ரயில் நிலையத்தில் இருந்து மாநகர பேருந்துகள் அல்லது தனியார் வாகனங்கள் மூலம் சிங்கவரத்தில் அமைந்துள்ள இத்திருத்தலத்தை அடையலாம். மேலும், கோவில் அமைந்துள்ள செஞ்சி மலை இப்பகுதீயில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும். நேரம் இருப்பின் செஞ்சிக் கோட்டை, செஞ்சிக் காடு, அடர் வனப்பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்று வரலாம்.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்