Temple info -444 Brajeshwari temple வஜ்ரேஸ்வரி கோயில்
Temple info -444
கோயில் தகவல் -444
The Shree Vajreshwari Mata Mandir also known as Kangra Devi Mandir is a Hindu temple dedicated to the goddess Vajreshvari, a form of Durga located in the town Kangra, in Himachal Pradesh, India.
Kangra Devi / Maa Vajreshwari
माँ वज्रेश्वरी शक्ति पीठ
Vajreshwari Devi Shaktipeeth Kangra
Religion
Affiliation
Hinduism
District
Kangra district
Deity
Goddess Durga
Festivals
Navratri
Location
Kangra, Kangra Devi, 176001
State
Himachal Pradesh
Country
India
Bajreshwari Mata Temple, Kangra
Location in Himachal Pradesh
Geographic coordinates
32.10183°N 76.26987°E
Architecture
Type
Hindu temple
Architecture
Elevation
738.33 m (2,422 ft)
Location
Vajreshwari Devi ShaktiPeeth Kangra
The Vajreshwari temple is located in the town of Kangra, Kangra district, Himachal Pradesh, India and is 3 km away from both the railway stations of Kangra Mandir and Kangra of Kangra City . Kangra Airport is just 9 kilometers from the temple . The Kangra Fort is situated nearby. Its location on a mountain near Shri Chamunda Devi Mandir, is 16 km from Nagarkot ( Kangra ) .
Legends
A legend says that after Goddess Sati sacrificed herself in the honor of Lord Shiva in her father's Yagya. Shiva took her body on his shoulder and started Tandav. In order to stop him from destroying the world Lord Vishnu divided the body of Sati into 51 parts with his Chakra. The left breast of Sati fell at this spot, thus making it a Shakti Peetha.
History
The original temple is said to have been built by the Pandavas at the time of Mahabharatha. Legend says that one day Pandavas saw Goddess Durga in their dream in which she told them that she is situated in the Nagarkot village and if they want themselves to be secure they should make a temple for her in that area otherwise they will be destroyed. That same night they made a magnificent temple for her in the Nagarkot village. In 1905 the temple was destroyed by a powerful earthquake and was subsequently rebuilt by the government.
Temple structure
The main gate entrance has a Nagarkhana or drum house and is built similar to the Bassein fort entrance. The temple is also surrounded by a stone wall like a fort.
Inside the main area Goddess Vajreshvari is present in the form of Pindi. The temple also have a small temple of Bhairav. In front of the main temple an idol of Dhayanu Bhagat is also present. He had offered his head to the Goddess at the time of Akbar. The present structure has three tombs in it, which is unique in itself.
Temple festivals
Makar Sankranti, which comes in second week of January, is also celebrated in the temple. Legend says that after killing Mahishasura in the battle, Devi had got some injuries. To heel those injuries Goddess had applied butter on her body, in Nagarkot. Thus to mark this day, the Pindi of Goddess is covered with butter and the festival is celebrated for a week in the temple.
Administration
The temple is taken care of by the government of India.
GURU JI
அருள் மிகு வஜ்ரேஸ்வரி கோவில்
December 25, 2020
அருள் மிகு வஜ்ரேஸ்வரி கோவில்
மூலவர்:வஜ்ரேஸ்வரி
பழமை:2000 வருடங்களுக்கு முன்
ஊர்:நாகர்காட்
மாவட்டம்:காங்ரா
மாநிலம்:ஹிமாச்சல பிரதேசம்
திருவிழா:நவராத்திரி, ராமநவமி, மகர சங்கராந்தி
சிறப்பு:அம்மனின் 51 சக்திபீடங்களில் இதுவும் ஒன்று.
திறக்கும் நேரம்:காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:அருள்மிகு காங்க்ரா ஸ்ரீ வஜ்ரேஸ்வரி திருக்கோயில், நாகர்காட், காங்க்ரா மாவட்டம், இமாசலப் பிரதேசம்.போன்:+91 01892-265073
பொது தகவல்:கஜினி முகம்மது இத்திருக்கோயில் மீது 5 முறை படையெடுத்ததாக வரலாறு கூறுகிறது. 1905 ஆம் ஆண்டு பெரிய பூகம்பத்தால் இக்கோயில் தாக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
பிரார்த்தனை:பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேற இங்கு வழிபாடு செய்கின்றனர்.
நேர்த்திக்கடன்:மகர சங்கராந்தி அன்று அம்மனுக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவது சிறப்பு.
தலபெருமை:இங்கு அருள்பாலிக்கும் வஜ்ரேஸ்வரி அம்மனை, வஜ்ராபாய், வஜ்ரயோகினி என்றும் அழைக்கின்றனர். அம்பாள் பார்வதி தேவியாகக் காட்சி அளிக்கிறாள். முகத்தில் தைரியம், ஒரு தீர்மானம் பிரகாசிக்கிறது. அதைப் பார்த்தவுடன், அதன் தைரியம் வஜ்ரம் போன்று காணப்படுகிறதால் வஜ்ரேஸ்வரி என்று பெயர்.
நவராத்திரி விழா, ஸ்ரீராம நவமி போன்றவை இங்கு மிகவும் விசேஷம். மற்றும் மகர சங்கராந்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மஹிஷாசுரனுடன் போரிடும் போது, தேவிக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டன. அதற்கு வெண்ணெய் தடவி அம்பாள் இந்த நாகர்காடில் இருந்தாராம். பிறகு நலமாயிற்று. அன்று முதல் அம்பாளுக்கு மகரசங்கராந்தி அன்று வெண்ணெய் அபிஷேகம். ஒரு வாரம் இந்த விழாவினைக் கொண்டாடுகிறார்கள்.
தல வரலாறு:பல ஆண்டுகளுக்கு முன் கலிகாலா அல்லது கலிகுட் என்ற பெயருடைய அரசன், ரிஷிகள், முனிவர்கள் உட்பட எல்லோரையும் துன்புறுத்தி வந்தான். அவன் தொல்லை எல்லை மீறவே,வசிஷ்ட மாமுனிவரின் தலைமையில் சண்டியாகம் செய்து அம்பாளை வேண்டினர். இந்த யாகத்துக்கு இந்திரலோக அதிபதியான இந்திரனுக்கு அழைப்பு இல்லை. மிகவும் கோபப்பட்ட இந்திரன், வஜ்ராயுதத்தை ஆக்ரோஷத்துடன் யாக குண்டம் மீது விட்டெறிந்தான். வஜ்ராயுதம் பல சுக்கல்களாக உடைந்தது. தேவர்களும் ரிஷிகளும் அம்பாளே எங்களைக் காப்பாற்றுங்கள் என ஓலமிட்டனர். அப்போழுது பிரமிப்பூட்டும் மின்னல்-ஒளி, அங்கு அம்சத்துடன் அம்பாள் தோன்றினாள். உடனே அந்த வஜ்ராயுத துண்டுகள் எல்லாவற்றையும் அம்பாள் விழுங்கிவிட்டாள். அசுரர்களையும் கொன்றாள். அப்பொழுது இந்த இடத்திலேயே வஜ்ரேஸ்வரி என்ற திருநாமத்துடன் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டினர் என்றொரு வரலாறு.
மற்றுமொரு கதையும் உண்டு.
தடைபடாமல் இந்த சண்டியாகம் நடக்க, இந்திரன் மற்றும் தேவர்கள் யாவரும் பார்வதி தேவியை மனமுருக வேண்டினர். தேவி, தாங்கள் அந்த கலிகால அசுரனைக் கொன்று எங்களைக் காப்பாற்றுங்கள் என வேண்டினர். அதற்கு மனம் இசைந்த அம்பாள், தக்க தருணம் நோக்கி கலிகாலனுடன் போரிட, அவனது ஆயுதங்கள் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டாள். கடைசியில் இந்திரன் அந்த அசுரன் மீது, தனது வஜ்ராயுதத்தை கோபத்துடன் வீசினான். அது பல துண்டுகளாகப் போக, அதிலிருந்து வந்த அம்மன் அந்த அசுரனைக் கொன்றாள். தேவர்கள் மிகவும் ஆனந்தமடைந்து வஜ்ரேஸ்வரி என பெயரிட்டு, இங்குள்ள கோவிலை கட்டினர் என்றும் கூறுகின்றனர்.
மற்றுமொரு புராணக்கதை.
தனது தந்தை தட்சன் நடத்தும் யாகத்துக்குச் சென்றாள் பார்வதி. அந்த யாகத்தில் தன்னை அர்பணம் செய்துகொள்ள, முக்கண்ணன் அங்கு மிகவும் கோபமடைந்து ருத்ரதாண்டவமாடினார். திருமால் தனது சக்ர ஆயுதத்தால் அன்னையின் தேகத்தை ஒவ்வொரு பாகமாக வெட்டி வீசினார். அன்னையின் வலது மார்பகம் இந்த இடத்தில் விழுந்ததால் இது சக்தி பீடமாக விளங்குகிறது. மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் கனவில் துர்காதேவியாக தோன்றி தனக்கு ஒரு கோயிலை கட்டித் தருமாறு சொன்னாள் அன்னை. அதன்படியே இத்திருக்கோயில் கட்டப்பட்டது என்கிறார்கள்.
Comments
Post a Comment
Popular Posts
திருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள் தெரியுமா? வேணி என்றால் நதி என்பது பொருள். மூன்று நதிகள் (கங்கை, யமுனை, சரஸ்வதி) சங்கமத்தில் சென்று நீராடுகிறோம். அதன் மூலம் நமக்கும் நமது முன்னோர்களுக்கும் புண்ணியம் கிடைக்கச் செய்கிறோம். கங்கா நதி நீர், வெண்மையாகவும், யமுனை நதி நீர், கருணையாகவும், சரஸ்வதி அந்தர்வாகினியாக கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஒடிக்கலப்பதாக ஐதீகம். இத்தகைய திரிவேணி சங்கமத்தில், ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி நீராடிய புண்ணிய பூமி. இங்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளாகவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அர்த்கும்பமேளா திருவிழாவும், சிறப்பாக நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் இங்கே வந்து முன்னோர்களை வணங்கி நீராடுவர். பிரயாகையில் முண்டம், காசியில் தண்டம், கயையில் பிண்டம் என்ற ஒரு வழக்கு உண்டு. இவற்றின் முக்கிய நோக்கம்,பாவம் களைவது. பாவம் அண்டாமல் தடுப்பது, பாவம் நீங்கி இறையோடு ஒன்றாவது ஆகும். முண்டம் என்பது முடி எடுத்தல். உடலில் வளரும் கேசங்கள் தாமாகவே அகலக்கூடியவை. அகற்றினாலும், உபத்திரவம் தாராதவை.
Comments
Post a Comment