Temple info -178 Tirupur Sugreeswarar temple திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோயில்

 Temple info -178

கோயில் தகவல் -178








Sukreesvarar Temple is a Hindu temple dedicated to the deity Shiva, located at Sarkkar Periyapalayam in Tiruppur district in Tamil Nadu, India.


Vaippu Sthalam

It is one of the shrines of the Vaippu Sthalams sung by Tamil Saivite Nayanar Sundarar.


Presiding deity

The presiding deity is represented by the lingam known as Sukreesvarar. The Goddess is known as Avudainayaki.


Specialities

As Sugriva of Ramayana was worshipped here, this place was known as Kurakkuthali. Sundarar in hymns refers to this place which belonged to Kurumbar Nadu. Inscriptions of Cholas, Pandyas and Udayars are found in this temple. During the time of meeting of Dakshinayana and Uttarayana the rays of the Sun fall on the deity. In inscriptions the deity is known as Aludaya Pillai. He is also known as Milakeesan. This place was called as Mukundapuri and Mukundaipuri.


Structure


On the northern banks of Noyyal River facing east, this temple is situated. The presiding deity is facing east. The Goddess is facing south. On the southern wall of the temple a sculpture of a monkey worshipping lingam is found. In front of the presiding deity two nandhis are found. Of them one is found without two ears. There is a story connected with this temple. When Nandi was going through the field, a farmer cut off its ears. The devotees saw blood coming out of the Nandhi. Due to this one from his family members became dumb. In order to find a remedy to this place the devotees made another Nandhi and put in front of the earlier one which was without ears. When the devotees came, the Nandhis were found in old position. As per the divine voice of the Lord the old Nandhi was kept in front of the deity. Thus the farmer got the remedy.

There is a saying that there is a mine in the temple which leads to Perur temple, Coimbatore


Location


This temple is located in (Sarkar) Periyapalayam, at a distance of 8 km from Tiruppur in Tiruppur-Uthukuli road.


சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீசுவரர் கோயில்

சுக்ரீசுவரர் கோயில் (Sukreeswarar temple) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். இக்கோயில் தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.


அமைவிடம்

இவ்வூர் சர்க்கார் பெரிய பாளையம் என்றும் பெரிய பாளையம் என்றும் வழங்கப்படுகிறது. சுருக்கமாக எஸ். பெரியபாளையம் என்றும் அழைக்கப்படுகிறது. இ்வூர் திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் திருப்பூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது.


கோயில் பற்றிய தொன்மங்கள்


சுக்ரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள லிங்கமானது, இராமாயண காலத்தில் இராமபிரானுக்கு உதவி புரிந்த சுக்ரீவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டவர் என்றும், இதன் காரணமாகவே மூலவர் சுக்ரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் எனப்படுகிறது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் சுக்ரீவன், சிவலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது. கருவறையில் உள்ள மூலவர் சுக்ரீசுவரர் என்ற பெயரிலும் இறைவி ஆவுடைநாயகி என்றும் அழைக்கப்படுகிறார். 


கோயில் குறித்து நிலவும் இன்னொரு கதையின்படி, முன்னொரு காலத்தில் ஒரு வணிகர், இந்த கோயிலிலின் வழியாக மாடுகள் மீது மிளகு மூட்டைகளை ஏற்றி சென்றார். அங்கு வந்த ஒருவர், ‘மூட்டையில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டுள்ளார். மிளகுக்கு இருந்த விலைமதிப்பு காரணமாக, வணிகர் பாசிப்பயிறு இருப்பதாக பொய்யுரைத்தார். பின்னர் அங்கிருந்து சந்தைக்குச் சென்று, மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அதில் பாசிப்பயிறுதான் இருந்துள்ளன. கோயிலின் முன்பாக வைத்து பொய்யுரைத்ததற்கு இறைவன் அளித்த தண்டனையை எண்ணி, வருந்திய அந்த வணிகர், இறைவனை மனமுருக வேண்டினார். அப்போது அவருக்கு ஒரு அசரீரி ஒலி கேட்டது. ‘உன் மாடுகள் எங்கு வந்து நிற்கிறதோ, அங்கு வந்து என்னை வணங்கு, உன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்’ என்றது குரல்.


வியாபாரியும் மாட்டை ஓட்டி வந்து மாடு நின்ற இடத்தில் சுக்ரீஸ்வரரை வணங்கினார். இதையடுத்து பாசிப்பயிராக இருந்த மூட்டைகள், மிளகு மூட்டைகளாக மாறின. இப்பகுதி மக்கள், இத்தல இறைவனை ‘மிளகு ஈஸ்வரர்’ என்றே அழைக்கிறார்கள். அதனால் இங்கு வந்து மிளகு பூஜை செய்தால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை நிலவுகிறது.


கோயில் அமைப்பு


இத்தல மூலவர் சுக்ரீஸ்வரர் என்னும், குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவனின் கருவறைக்கு வலது புறம் ஆவுடைநாயகி என்ற பெயரில் அம்மன், தனிச் சன்னிதியில் உள்ளார். கோயிலில் மூலவரின் கருவறைக்கு நேர் எதிரில் பத்ரகாளி அம்மன் சன்னிதி இடம்பெற்றுள்ளது. திருச்சுற்றில் விநாயகர், மயில்வாகனம், மூன்று லிங்கத்திருமேனிகள், பைரவர், துர்க்கை, சூரியன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. மேலும் கோயிலில் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதங்களைக் குறிக்கும், பஞ்ச லிங்கங்கள் இருக்கின்றன. மூலவரே அக்னி லிங்கமாக பார்க்கப்படுகிறார். வில்வ மரத்தின் கீழ், ஆகாச லிங்கம் அமைந்துள்ளது. மற்ற மூன்று லிங்கங்களும்(குபேர லிங்கம், வாயு லிங்கம், நைருதி லிங்கம்) கோவிலைச் சுற்றி அமைந்திருக்கின்றன. வழக்கமாக சிவன் கோவில்களில் இருக்கும் தீப ஸ்தம்பம் அல்லது கொடிமரம் இந்த கோயிலில் கிடையாது.


மூலவருக்கு எதிாில் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு நந்திகள் வீற்றிருப்பது தனிச் சிறப்பு, முதலில் உள்ள நந்திக்கு ஒரு பக்கம் காது அறுபட்டு உள்ளது. பசுமாடு ஒன்று தினமும் ஒரு விவசாயின் தோட்டத்திற்கு சென்று உணவுப் பயிா்களை மேய்ந்து வந்துள்ளது, இதனை கவனித்த விவசாயியோ ஒருநாள் கதிா்அறுக்கும் அறுவாள் ஒன்றினை எடுத்து வீசியதில் பசுவின் காது அறுபட்டுவிட்டது, சிவபக்தரான விவசாயி சுக்ரீஸ்வரா் கோயிலில் வழிபாடு செய்ய வந்த போது, கோவில் நந்தி சிலையின் காது அறுபட்டு ரத்தம் வருவதை கண்டு திகைத்தாா். பின்னா் தனது தவறினை உணா்ந்து அதே போல் வேறு ஒரு நந்தி சிலையை வடிவமைத்து ஏற்கனவே இருந்த நந்தி சிலையை அகற்றி விட்டு புதிய சிலையை நிறுவினாா், ஆனால் மறுநாள் வந்து பாா்த்த போது அகற்றிய நந்தி சிலை மீண்டும் அதே இடத்தில் இருந்தது.


இதன் சிறப்பு:

1. இரண்டு நந்தி கொண்ட கோவில் இது.


2. ஐந்து லிங்கம் வெவ்வேறு திசையில் இருந்தாலும் சூரியனின் கதிர்கள் சரியாக இந்த லிங்கங்களில் ஒன்றன்பின் பின் ஒன்றாக விழும்.


3. இங்கு சுரங்கப்பாதை ஒன்று உள்ளது. அந்த பாதையில் குதிரையில் சென்றால் கோவை பேரூரை அடையலாம் என்று கூறப்படுகிறது.


4. இந்த கோவிலின் அடியில் மிகப்பெரிய கோவில் புதையுண்டுள்ளது என்றும்  கூறப்படுகிறது.


5. இக்கோவிலின் வரலாறு: சுக்ரீவர் ராவணனை அழிக்கச் செல்லும் முன் இக்கோவிலை எழுப்பி ஈசனிடம் ஆசி பெற்ற பின் ராமர் அணியில் சேர்ந்தார் என்பது வரலாறு.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்