Temple info-136 Kayaroganeswarar temple, Nagapattinam காயாரோகணேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம். Padal Petra Sthalam No.199

 Temple info -136

கோயில் தகவல் -136










SRI. KAYAROGANESWARAR  TEMPLE, NAGAPATTINAM.


This temple of Lord Shiva is situated in Nagapattinam, once an important Port of the Chola Empire. The presiding deity is Sri.Kayaroganeswarar with his spouse Sri. Neelayadhakshi. Urchavar is Sri.Chandrasekarar. Sthala Vriksham is Mango and Theertham,Pundarikaksham.


This temple is said to be 2000 years old, historical name being Nagai Karonam. The temple is praised in the Thevaram hymns of Saint Gnanasambandar. This is the 82nd Shiva temple on the southern bank of Cauvery praised in Thevaram hymns. Emperor Mushukunda got seven Lingas from Indira for the helps he had rendered him. The Emperor installed the Lingas  in Seven Places called Saptha Vidanga sthalas.  This is one such Sthalas with a Linga so beautiful made of Ruby.  Hence, the Lord is named Sundara (beautiful) Vidangar.  Lord Thyagaraja is in a separate shrine right of the sanctum sanctorum.

 The eyes of Mother Ambica is blue in colour as sea showing Her mercy as vast and deep as sea.  Hence, named Neelayadakshi-blue eyed.  She is also Karundhadanganni.  She has Her own shrine with a flag post-Kodi Maram.  Ambica graces as a virgin.As Ambica is a virgin, Lord sent Nandhi Deva to be Her guard.  But Nandhi expressed his wish to be with Lord for ever seeing Him.  Lord said that he can have His darshan though with Ambica.  Nandhi in the temple is seen with its neck turned towards Lord with one eye on Ambica and other on the Lord.  Hence, the Nandhi is known as Twin View Nandhi (Irattai Parvai in Tamil).  Those having vision problems pray to this Nandhi.


 Generally, temples are closed if a death occurs in a nearby place.  In this place, the garlands and the clothes – vastras used for the Lord is placed on corpse.  A fisherman, Adhipathar attained salvation with the grace of Lord Shiva in this place. Remembering this event, as a mark of respect to the community, this practice is followed in this temple. The body is placed before the temple without closing the doors.  The garland and the vastras used for the Lord are placed on the body.

 Against the practice of Lord coming in the Vrushab vahan on Pradosham days, Lord Vishnu too accompanies Lord Shiva in the guise of Mohini. This Vishnu darshan is available to the devotees on Pradosham day only.  All the planets (Navagrahas) in the temple are facing west-the Lord.

 Fisherman Athipathar was a staunch Shiva devotee.  When he went for fishing, he would offer the first to Lord Shiva.  At a stage, he was getting only one fish each day but did not break away from his commitment.  He offered them to Lord and returned without any catch.  He got a golden fish one day.  Though everyone prevented him from throwing it into the sea, Athipathar resolutely stood by his commitment and threw it into the sea.  He was awarded with salvation and a place among the 63 Nayanmars. The event is celebrated on the Ayilyam star day in Aavani month (August-September).

 As a child adamantly demanding the mother to get its wish, there was a Siddha in the place called Azhuguni Chithar – crying adamantly for a wish.  He used to cry in the shrine of Mother Neelayadakshi demanding salvation. Lord granted salvation to Azhuguni Chithar.   His Jeeva Samadhi is in this temple.

 Lord Vinayaka graces His darshan wearing a serpent around His body with another one above His head as an umbrella.  He is worshipped as Nagabarana Vinayaka. Lord Bhairava, usually appearing with His dog vehicle, has Lion – Simha as his vahan. There is a shrine for Mother Ashta Bhuja (eight hands) Kali in the temple. The idol of Lord Muruga is made with 12 hands with weapons.   He is praised in the Tirupugazh hymns of saint Arunagirinathar. 

 Sage Pundarika as advised by Sage Kanwa performed penance on Lord Shiva seeking salvation.  Granting His darshan, Lord embraced the sage and granted salvation.  As a rule, the soul merges with the Lord attaining salvation.  But in this case Lord embraced with the body (Kayam in Tamil) with that of Sage (Aaroganam).  Hence Lord is named Kaya (body) Aarogana (embracing) Easwarar-Lord – Kayaroganeswarar.

 King of serpents prayed to Lord and got a girl child.  It had three breasts in birth itself.  The king was sad to see this abnormality.  Lord Shiva assured the king that one breast will disappear when a king of Surya dynasty visited his place.  When king Shalisuhan came there, one breast of the girl disappeared.  Happy Naga king gave his daughter to Shalisuhan in marriage.  As Naga king worshipped here, the place came to be known as Nagai Karonam.  Now it is Nagapattinam.


Contact no.04365-242844


நாகபட்டினம் காயாரோகணேசுவரர் கோயில் (திருநாகைக்காரோணம்) பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 82வது சிவதலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. அதிபத்த நாயனார் அவதரித்த தலம் எனப்படுகிறது. ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). நாகப்பட்டிணம் அதிபத்த நாயனார் அவதார தலம்


தேவாரம் பாடல் பெற்ற

திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) திருக்கோயில்


பெயர்

புராண பெயர்(கள்):

காயாரோகணம், ஆதிபுராணம், சிவராசதானி, பார்ப்பதீச்சரம், அரவநகரம்


பெயர்:

திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) திருக்கோயில்


அமைவிடம்

ஊர்:

நாகப்பட்டிணம்


மாவட்டம்:

நாகப்பட்டினம்


மாநிலம்:

தமிழ்நாடு


நாடு:

இந்தியா


கோயில் தகவல்கள்

மூலவர்:

காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்


தாயார்:

நீலாயதாட்சி, கருந்தடங்கண்ணி


தல விருட்சம்:

மாமரம்


தீர்த்தம்:

தேவ தீர்த்தம், புண்டரீக தீர்த்தம்


பாடல்

பாடல் வகை:

தேவாரம்


பாடியவர்கள்:

அப்பர், சம்பந்தர், சுந்தரர்


கட்டிடக்கலையும் பண்பாடும்

கல்வெட்டுகள்:

உண்டு


வரலாறு

அமைத்தவர்:

சோழர்கள்


தல வரலாறு


புண்ணியத் தலங்களும் தீர்த்தங்களும் நிறைந்த சோழ வளநாட்டில் தெய்வப்பொன்னி நதியின் தென்கரையில் உள்ள தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலங்களுள் 82 வது தலமாக விளங்குவது திருநாகைக் காரோணம் எனும் இத்தலம். இது, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்புடையதாய் விளங்குகிறது.

பல ஊழிக்காலங்களுக்கும் அப்பாற்பட்டதால் இதனை ஆதி புராணம் என்றும் சுவாமியை ஆதி புராணேச்வரர் என்றும் தல புராணம் குறிப்பிடுகிறது.

ஆதி சேஷனால் பூஜிக்கப் பெற்றதால், நாகை என்றும், புண்டரீக முனிவரை இறைவன் தனது தேகத்தில் ஆரோகணம் செய்து கொண்டதால், காயாரோகணம் என்றும் பெயர். இது மருவி, காரோணம் என்றாயிற்று.

(காரோணம் என்று பெயருடைய திருக்கோயில்கள் தமிழ்நாட்டில் மூன்று உள்ளது; 1. நாகைக் காரோணம், 2. குடந்தைக் காரோணம், 3. கச்சிக்காரோணம் [காயாரோகணம்] - லிங்கபேசம் [காயாரோகணம்]ஆகும்.)

கிழக்கு நோக்கிய இச்சிவாலயத்தின் முகப்பிலுள்ள முற்றுப்பெறாத கோபுர வாசலைக் கடந்தால், நாகாபரண விநாயகர், சுதையாலான நந்தி, முக்தி மண்டபம்,ஆகியவை இத்தலத்தின் சிறப்பு.

ஐந்து நிலை கோபுர வாசலைக் கடந்து, உள்ளே சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னதியும், அருகில் கொடிமரம் ஆகியனவும் அமைந்துள்ளன. சுவாமி பிரகாரத்தில், அருகாமையில் தியாகராஜமூர்த்தி சன்னதியும், எதிரில் சுந்தரரும் உள்ளனர். இத்தலத்தில், அறுபத்து மூவர், புண்டரீக முனிவர், சாலீசுக மன்னன், முருகன், கஜலக்ஷ்மி, தசரதன் ஸ்தாபித்த சநீச்வரன், காட்சி கொடுத்தவர், நடராஜர், பிக்ஷாடனர், அதிபத்தர் ஆகிய மூர்த்திகளையும் தரிசிக்கலாம். தியாகராஜர் சன்னதியில் சுந்தரவிடங்கரையும் தரிசிக்கலாம். மூலவரான காயாரோகண சுவாமிக்குப் பின்னால் சப்த ரிஷிகளுக்கும் காட்சி தந்த சோமாஸ்கந்தரையும் தரிசிக்கலாம். ஸ்தல விருக்ஷமான மாமரத்தின் அருகில் மாவடிப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

மூலவர் கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், அர்த்தநாரீசுவர், துர்க்கை, பிட்சாடனர் ஆகியோர் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.

சர்வ தீர்த்தம் என்னும் புண்டரீக தீர்த்தம் கோவிலின் மேற்கிலும், சிவகங்கை என்னும் தேவ தீர்த்தம் முக்தி மண்டபத்தருகிலும், தேவநதியாகிய உப்பாறு ஊருக்கு மேற்கிலும் உள்ளன. கடலும் சிறந்த தீர்த்தமாவதால், விசேஷ நாட்களில் இதில் நீராடுவது சிறப்புடையதாகக் கருதப்படுகிறது.

அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி நல்கிய தலம்; சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்தத் தலம்.

சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது.

சுந்தரருக்கு இறைவன் குதிரை, முத்துமாலை, நவமணிகள், பட்டு, சாந்தம், சுரிகை முதலானவைn வழங்கிய தலம்; இறைவன் தனது குதிரை வாகனத்தை சுந்தரருக்கு அளித்ததால், அன்றுமுதல் இக்கோவிலில் குதிரைவாகன விழா, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கே நடைபெறுவதாகப் புராணம் கூறும்.


தல சிறப்புகள்


நாகப்பட்டினம் - அதிபத்த நாயனார் அவதரித்து, வழிபட்டு முத்தி அடைந்தத் திருப்பதியாகும்.அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோயில் நுளைபாடியில் (நம்பியார் நகர்) உள்ளது. அதிபத்த நாயனாரின் திருவுருவச் சிலை, நாகைக்காரோணம் திருக்கோயிலில் உள்ளது.

சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் நாகப்பட்டினத் திருநகர "நுளைபாடி" என்பது தற்போது "நம்பியார்நகர்" என்று வழங்கப்படுகின்றது. இது நாகப்பட்டின நகரின் ஒரு பகுதியாகும்.

ஏழு விடங்கத் தலங்களுள் ஒன்று. (தியாகராஜர் - சுந்தர விடங்கர், நடனம் - பாராவாரதரங்க நடனம்).

கயிலையையும், காசியையும் போல இத்தலம் முத்தி மண்டபத்தைக் கொண்டுள்ளது.

மூவர் பெருமக்களால் பாடல் பெற்றத் திருத்தலம்.

அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல்களும் பெற்றத் தலம்.

இத்தல ரதம் கண்ணாடித் தேராகும்.

ஏழு கல்வெட்டுகள் படியெடுக்கப் பட்டுள்ளன; முதல் இராசராசன், குலோத்துங்கன் முதலியோர் காலத்துக் கல்வெட்டுக்கள் அவை.

சோழ மன்னர்களின் தலைநகரங்களுள் ஒன்றாகவும் இவ்வூர் விளங்கியுள்ளது.

நாகப்பட்டினத்துச் சோழன் பிலத்துவாரத்தால் நாகலோகம் சென்று நாககன்னியைக் கூடிப்பெற்ற புதல்வனே தொண்டை நாட்டை அரசாண்ட இளந்திரையன் எனப் பத்துப்பாட்டால் அறிகிறோம்.

குறுந்தொகைப் புலவர் ஒருவரின் பெயர் நன்நாகையார் எனக் கூறப்படுகிறது.

நகரின் மத்தியில் இக்கோயில் 180 மீட்டர் நீலம், 75 மீட்டர் அகலம் நிலப்பரப்பு கொண்டு, இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

வைகாசியில் பிரமோற்சவமும், ஆனி ஆயில்யத்தில் புண்டரீக மகரிஷி ஐக்கியமும், ஆனி கிருஷ்ண பக்ஷ அஷ்டமியில் பஞ்சக் குரோச உற்சவமும் நடைபெறும். அப்போது, சாலீசுகனுக்குத் திருமணக்காட்சி அளித்த பின், பல்லக்கில் புறப்பட்டு, பஞ்சகுரோச யாத்திரையாக, பொய்யூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய தலங்களுக்குச் சென்று, மறுநாள் காலை, நாகை அடைந்து, கோபுர வாசல் தரிசனம் நடைபெறுகிறது. ஆவணியில் அதிபத்த நாயனார் விழாவும், ஆடி - தை அமாவாசை மற்றும் மாசி மக நாட்களில் சமுத்திர தீர்த்த வாரியும், தியாகராஜப் பெருமானுக்குப் பங்குனி உத்திர விழாவும் சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை சோமவாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

நாகைக்காரோணப் புராணம் 61 - படலங்களையும், 2506 பாடல்களையும் கொண்ட இந்நூல் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப் பெற்று 1860 அரங்கேற்றம் பெற்றது.

மகாவித்துவான் பிள்ளை அவர்களின் மாணாக்கரான டாக்டர் உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள், இப்புராணத்தின் அருமை பெருமைகளைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள்:

“இந்நூலில் பல நயங்கள் மிகுந்துவிளங்கும். சொல்லணி, பொருளணி, தொடைநயம், பொருட்சிறப்பு, சுவைநயம், நீதி, சிவபக்தி, சிவத்தலச்சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் நிரம்பியுள்ளன. சுவைப் பிழம்பாக விளங்கும் இக்காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருக்க வேண்டும். பல புலவர்களின் வாக்குகளை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தால் போதும்.”

ஞானசம்பந்தர் அருளிய திருமுகப் பாசுரத்தின் ஒவ்வோரு பாடலுக்கும் சேக்கிழார் விரிவுரை செய்ததைப் போலப் பிள்ளை அவர்களும், சுந்தரர் இத்தலத்தின் மீது அருளிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் இப்புராணத்தில் விளக்கம் அளித்துள்ளது அறிந்து மகிழத் தக்கது.

2506 பாடல்களைக் கொண்ட இப்புராணத்தைத் திருவாவடுதுறை ஆதீனம், 1970 ம் ஆண்டு, குறிப்புரையுடன் வெளியிட்டுத் தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்து பேருபகாரம் செய்தது, நன்றியுடன் இங்கு நினைவுகூரத் தக்கது.

கற்றார் பயில் கடல் நாகைக்காரோணம் என்பது திருஞானசம்பந்தர் திருவாக்கு. காளமேகப் புலவர் இவ்வூருக்கு வந்தபோது பசியால், வீதியில் பாக்கு விளையாடும் பாலகர்களை நோக்கிப் "சோறு எங்கு விக்கும்?" என்று கேட்டார். அச்சிறுவர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினர். (விற்கும் என்பது பேச்சு வழக்கில் விக்கும் என வழங்குதலும் உண்டு.) புலவர் சிறுவர்கள் மீது கோபங்கொண்டு, அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு வரைசுவரொன்றில் "பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்கு..." என்று எழுதி நிறுத்தி விட்டு, பசிதீர்ந்து எஞ்சிய பகுதியைப் பாடி முடிப்போம் என்று சென்று, பசியாறி வந்து பார்க்கும்போது, அப்பாடலின் இரண்டாமடி "நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை" என்று எழுதி இருப்பதைக் கண்டு, சிறுவர்களின் கல்வியறிவை மெச்சிச் சென்றார் என்பது தனிப்பாடல் திரட்டில் காணப்படும் வரலாறு.


அமைவிடம்


நாகப்பட்டிணம் இரயில் நிலையதிலிருந்து, இக்கோவில் 2-கி.மீ. தூரத்தில் உள்ளது. சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதி உள்ளது.


திருத்தலப் பாடல்கள்

விழாக்கள்


வைகாசி விசாகத்தில் பெருந்திருவிழா நடைபெறுகிறது. வருடா வருடம் ஆனி மாதம் நடைபெறும் பஞ்சகுரோச விழாவில் பெருமான் சாலிசுக மன்னனுக்கு திருமணக் கோலத்துடன் காட்சி கொடுத்து முக்தி மண்டபத்திலிருந்து அதிகாலை புறப்பட்டு பஞ்சகுரோச யாத்திரைத்தலங்களாகிய பொய்கைநல்லூர், பாப்பாகோவில், சிக்கல், பாலூர், வடகுடி, தெத்தி, நாகூர் ஆகிய சப்த ஸ்தலங்களுக்கும் சென்று தீர்த்தம் கொடுத்து மறுநாள் காலையில் வந்து காரோணப் பெருமான் கோபுர வாசலில் சாலிசுக மன்னனுக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுப்பதை பஞ்ச குரோச விழாவாகக் கொண்டாடுகின்றனர். நீலாயதாட்சி அம்மனுக்கு ஆடி மாதம் பரணி நட்சத்திரம் கூடிய நாளில் தொடங்கி 10 நாள் விழா சிறப்பாக நடைபெறும்.


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தான தத்த தத்த தந்த தான தத்த தத்த தந்த
     தான தத்த தத்த தந்த ...... தனதான

ஓலமிட்டிரைத்தெழுந்த வேலை வட்டமிட்டஇந்த
     ஊர்முகில் தருக்களொன்றும் அவர்!ஆரென்

றூமரை ப்ரசித்தரென்று மூடரைச் சமர்த்தரென்றும்
     ஊனரை ப்ரபுக்களென்றும் அறியாமல் 

கோல முத்தமிழ் ப்ரபந்த மாலருக்குரைத்தநந்த
     கோடியிச்சை செப்பி வம்பில் உழல்நாயேன்

கோபமற்று மற்றுமந்த மோகமற்றுனைப் பணிந்து
     கூடுதற்கு முத்தியென்று ...... தருவாயே

வாலை துர்க்கை சக்திஅம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெடுத்துகந்த ...... சிறியோனே

வாரி பொட்டெழ க்ரவுஞ்சம் வீழ நெட்டயில் துரந்த
     வாகை மற்புய ப்ரசண்ட ...... மயில்வீரா

ஞால வட்ட முற்ற உண்டு நாக மெத்தையில் துயின்ற
     நாரணற்கருள் சுரந்த ...... மருகோனே

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூரபத்மனைக் களைந்த
     நாகபட்டினத்தமர்ந்த ...... பெருமாளே

திருப்பாடல் 2:
தான தந்ததன தந்ததன தந்ததன
     தான தந்ததன தந்ததன தந்ததன
          தான தந்ததன தந்ததன தந்ததன ...... தந்ததான

மார்புரம்பின் நளினம் கிரியெனும் !தனமொ
     டாரமும் படி தரம்பொறியுடன் பணிகள்
          மாலையொண் பவளமும் பரிமளம் கலவை ...... தொங்கலாட

வாள்சரம்கண் இயலும் குழை தளம்பளக
     பார தொங்கலணி பெண்கள் வதனங்கள்மதி
          வாகையென்ப இதழும் சலசம்என்பகள ...... சங்குமோக

சாரமஞ்சள் புயமும் கிளி முகங்கள்உகிர்
     பாளிதம் புனை துவண்டிடையொடின்பரச
          தாழியென்ப அல்குலும்துளிர் அரம்பைதொடை ...... ரம்பைமாதர்

தாள்சதங்கை கொலுசும் குலசிலம்பும்!அணி
     யாடல் கொண்டமட மங்கையருடன் கலவி
          தாகமுண்டுழல்கினும் கழலுறும் கழல் மறந்திடேனே

வீர வெண்டையம் முழங்கவரி சங்கு!முர
     சோடு பொன்பறை ததும்ப விதியும் சுரரும்
          வேத விஞ்சையருடன் குமுற வெந்துக அடர்ந்தசூரன்

வீறடங்க முகிலும்கமற நஞ்சுடைய
     ஆயிரம்பகடு கொண்ட உரகன்!குவடு
          மே கொளுந்தபல் சிரந்தனை எறிந்து நடனம்கொள்வேலா

நாரசிங்க வடிவம்கொடு !ப்ரசண்டிரணி
     யோன் நடுங்க நடனம்செய்து இலங்கைவலி
          ராவணன்குலம் அடங்கசிலை கொண்ட கரர் ...... தந்தமூல

ஞானமங்கை அமுதம்சொருபி என்றனொரு
     தாய்அணங்கு குறமங்கையை மணந்தபுய
          நாகையம்பதி அமர்ந்துவளர் நம்பர்புகழ் ...... தம்பிரானே.

திருப்பாடல் 3:
தனனா தனனா தனனா தனனா
     தனனா தனனா ...... தனதான

விழுதாதெனவே கருதாதுடலை
     வினை சேர்வதுவே ...... புரிதாக

விருதா வினிலே உலகாயத!மே
     லிடவே மடவார் ...... மயலாலே

அழுதா கெடவே அவமா !கிடநா
     ளடைவே கழியாதுனை ஓதி

அலர் தாளடியேன் உறவாய் மருவோர் 
     அழியா வரமே ...... தருவாயே

தொழுதார் வினைவேர் அடியோடறவே
     துகள்தீர் பரமே ...... தருதேவா

சுரர்பூபதியே கருணாலயனே
     சுகிர்தா அடியார் ...... பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவேல் 
     இறைவா எனை ஆளுடையோனே

இறைவா எதுதா அதுதா தனையே
     இணை நாகையில்வாழ் ...... பெருமாளே


Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்