Temple info -99 Pachottu Audayar temple, Madavilagam பச்சோட்டு ஆவுடையார் கோவில்,மடவிளாகம்
Amazing temple info- 99
அதிசய கோயில் தகவல் -99
Kangeyam, Madavilagam, Pachottu Avudayar temple
Kangeyam, Madavilagam, Pachottu Avudayar temple is a Sivan temple and is located in Kangeyam, Madavilagam, Erode district, Tamil Nadu state, India.
Kangeyam, Madavilagam, Pachottu Avudayar temple
Address: Kangeyam, Madavilagam, Pachottu Avudayar temple, Sri Pachottu Avudayar Temple, Kangeyam, Madavilagam, Erode district
The main God here is Pachottu Avudayar and Amman (Thayar) is Pachainayaki (Periyanayaki).
This temple is a Sivan Koil.
Kangeyam, Madavilagam, Pachottu Avudayar temple Dharshan Time: The temple is open from 6.00 a.m. to 11.00 a.m. and 4.00 p.m. and 8.00 p.m..
Location
City: Kangeyam, Madavilagam
District: Erode
State: Tamil Nadu
Built in year: 500-1000 years old
Historical Name:
Kangeyam, Madavilagam, Pachottu Avudayar temple
Information
Moolavar: Pachottu Avudayar
Urchavar:
Amman / Thayar: Pachainayaki (Periyanayaki)
Sthala Virutcham (Tree):
Theertham(Holy water)
An amazing fact about this temple is every twelve years a mud pot containing Holy ash ( Vibhuti) comes floating in the river. As Lord Shiva has green tiles in the temple, he is called Pachottu Audayar
Nigapushkarani theertham
Behind this temple there is a spring which was formed by Lord Siva called Nika Pushkarni theertham.
As Parvathi was in penance in this place it is also called Parvathupuram
மண் பானை நிறைய விபூதி தோன்றும் அதிசயம்.
ஈரோடு மாவட்டம், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது. அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில், காங்கேயத்தில் உள்ளது. இரண்டு சுயம்பு மூர்த்திகள் உள்ள மிகப்பெரிய சிவஸ்தலம் இதுவாகும். 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த பகுதியிலேயே மிகப்பெரிய தீபஸ்தம்பம் உள்ள திருத்தலம் இது. பச்சை ஓட்டுடன் சிவன் எழுந்தருளியதால் இத்தல இறைவன் "பச்சோட்டு ஆவுடையார்' என அழைக்கப்படுகிறார். ஆனால், கல்வெட்டுக்களில் "பச்சோட்டு ஆளுடையார்' என காணப்படுகிறது.
தலத்தின் நாயகி "பச்சை நாயகி', "பெரியநாயகி' என்ற திருப்பெயர் தாங்கியுள்ளாள். கோயிலின் பின்புறம் சிவன் தனது நகத்தால் கீரிய அற்புத சுனை உள்ளது. "நிகபுஷ்கரணி' என்ற பெயர் பெற்ற இத்தலம் கங்கையை போன்று பெருமை பெற்றது. 12 ஆண்டுக்கொரு முறை இங்குள்ள சுனையில், விபூதி நிரம்பிய மண் கலயம் மிதந்து வரும் அற்புத நிகழ்ச்சி நடந்து வருகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் "குடம்' அளவுக்கு இருந்த மண் கலயம் நாளடைவில் சுருங்கி தற்போது "சிறிய செம்பு' அளவில் மிதந்து வருகிறது. இந்த மண் கலய விபூதி கிடைப்பதற்கரிய மாபெரும் மருந்தாகும். இதை உடலில் பூசினாலும், சிறிதளவு சாப்பிட்டாலும் தீராத நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். பார்வதி இங்கு தவமிருந்ததால், இப்பகுதி பார்வதிபுரம் என வழங்கப்படுகிறது.
Comments
Post a Comment