Temple info -38 Prasanna Venkateswara temple, Thondamannadu பிரஸன்ன வெங்கடேஸ்வரர் கோயில்




 Temple info -38

கோயில் தகவல் -38

Lord Venkateshwara in sitting posture and in Abhaya Hasta mudra.

 Prasana Venkateswara Swamy temple, Thondamanadu 35 kms from Tirupathi on the way to Srikalasthi, It is 9 kms before Sri Kalasthi.


 The Temple is under the control of TTD:

 Temple timings: 6:30 am to 12:30 pm and 4 - 7 pm

Lord here can be seen in Abhaya Hastha posture, indicating that the Lord will come to the rescue of the devotees.

 No where we can find Lord in seating posting with Sri Devi and Bhu Devi and in Abhaya Hastha Posture

..“The hidden meaning is to convey to the devotees that the Lord Sri Venkateswara will come to the rescue of only those who fall at his feet, i.e., total surrender

.Tondaman constructed big tank near the Temple which accumulates the water from Akasaganga of Tirumala.

Photo & information

Mrs Rithika Iyengar

Hyderabad.


உட்கார்ந்த நிலையில் அபயஹஸ்தத்துடன் அருள் புரியும் தொண்டமாநாடு வெங்கடாசலபதி கோயில்

தொண்டமாநாடு (தொண்டமான் நாடு - தொண்டமான் எனும் அரசன் ஆட்சி செய்த நாடு), பொக்கசம்பாளையம் (பொக்கிஷம் பாளையம் அதாவது கருவூல பாளையம்) ...

 வெங்கடேசப் பெருமான் அமர்ந்த நிலையில் உள்ள பெருமாள் கோவில், (வெங்கடேசப் பெருமான் அமர்ந்த நிலையில் உள்ள ஒரே கோவில் இது மட்டுமே).

இந்த வெங்கடேசப் பெருமான் கோவில் அமைந்துள்ள இடம் ஒரு அரண்மனை வளாகம். (இப்போது அரண்மனை இல்லை, கோவில் மட்டுமே உள்ளது).

அந்த அரண்மனை தொண்டமான் அரசருக்குச் சொந்தமானது. அந்தத் தொண்டமான் அரசன் வேறு யாருமல்ல, திருப்பதி வெங்கடேசப் பெருமானுக்கு முதலில் கோவில் கட்டியவர்.

கோவில் கட்டுவதற்கு முன்னும், பின்னும் தன் அரண்மனையில் இருந்து ஒவ்வொரு நாளும் தவறாமல் திருப்பதி திருமலைக்குச் சென்று வழிபட்டு வந்த தொண்டமானுக்கு வயதாகிய நிலையில் இனி நாளும் பயணித்துத் திருமலைக்கு வர இயலவில்லை என வருத்தம் கொண்டபோது, உன் வீட்டிலேயே  எனக்குக் கோவில் கட்டு. நான் வந்து உன் பூசைகளை ஏற்றுக் கொள்கிறேன் என பெருமான் கூறியதாகக் கருதி வீட்டில் (அரண்மனையில்) கட்டப்பட்ட கோவிலே இந்த வெங்கடேசப் பெருமான் கோவில்.

இக்கோவில் திருச் சிலைகளுக்கு நீராடல் செய்ய, திருமலையில் உற்பத்தியாகும் ஆகாய கங்கை அருவியில் இருந்து  சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாய்க்கால் அமைத்து அதனைத் தேக்கி வைக்க ஒரு பெரிய குளமும் வெட்டினார் தொண்டமான் அரசர்.

இந்தப் பெருமானுக்குப் பெயர் " வீட்டில் உறைந்த பெருமாள்".

திருப்பதி திருமலையின் கோபுரம் எப்படி இருக்கிறதோ அதே வடிவிலேயே இக்கோவிலின் கோபுரமும் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் உள்ள ஊரின் தற்போதைய பெயரும் "தொண்ட மாநாடு".


பொக்கசம் பாளையம். 


சோழப் பேரரசைப் பிற்காலத்தில் மீண்டும் நிறுவியவர் ஆதித்த சோழன். அந்த ஆதித்த சோழன் கருவூலம்தான் இந்த ஊர்.


காளஹஸ்தி,  காளாஸ்திரி என்றழைக்கப்படும் திருக்காளத்தியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில்தான் அமைந்துள்ளன.

Comments

Popular posts from this blog

Temple info -45 Karnimatha, temple Deshnoke கார்ணிமாதா கோயில்

5. Naganathaswami temple, Thirunageswaram திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில். Padal Petra Sthalam No.146

Temple info -2051 Girijabandh Temple,Ratanpur,Bilaspur கிரிஜாபந்த் கோயில்,ரத்தன்பூர்,பிலாஸ்பூர்