Temple info -10 Tiruchendur Murugan temple. திருச்செந்தூர் முருகன் கோயில்



 Temple info -10

கோயில் தகவல் -10

Subramaniya Swamy Temple, Tiruchendur

Arulmigu Subramaniya Swamy Temple, Tiruchendur is an ancient Hindu temple dedicated to Lord Murugan. It is second among six abodes of lord Murugan (Arupadaiveedugal) situated in Tamil Nadu, India. The puranic name or historical name for this temple is Jayanthipuram. This temple is the fourth Hindu temple in Tamil Nadu to get ISO certification. It is located in the eastern end of the town Tiruchendur in the district of Thoothukudi, Tamil Nadu, India. It is 40 km from Thoothukudi, 60 km south-east of Tirunelveli and 75 km north-east of Kanniyakumari. The temple complex is on the shores of Bay of Bengal. Temple is open from 5 AM to 9 PM


Arulmigu Subramaniya Swamy Temple


Religion

Affiliation

Hinduism


District

Thoothukudi


Deity

Subramaniya Swamy


Festivals

Vaikasi Visagam, Avani Festival, Skanda Sasti Festival and Masi Festival

Governing body

Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department


Location

Tiruchendur


State

Tamil Nadu

India


Geographic coordinates

8°29′45″N 78°7′45″E


Architecture

Type

Tamil architecture


Website

tiruchendurmurugantemple.tnhrce.in


Arulmigu Subramaniya Swamy Temple, Tiruchendur is one of the six major abodes, or sacred temples, of the Kaumaram religion. Soorasamharam, a reenactment of the victory over Soorapadman, and Kanda Shasti, a devotional song in praise of Lord Murugan are performed at the temple.


Legend


Tiruchendur means sacred and beautiful town in Tamil. The temple is dedicated to Murugan, the warrior deity and second son of Shiva and parvati. When Murugan came here for the conquest along with his army, he found it to be very small and ordered the celestial architect Viswakarma to expand it. The town came to be know with several names like Tiruchendil, Jayanthipuram, Thiruchilavay and Srisandhinagaram. It is believed to be the place where Muruga conquered the demon Surapadma. After which he was named as Jayanthinathar(n) (meaning nathan - leader, jayanthi - victory, the victorious leader).It is believed that the demigods of Muruga wanted to worship him in a place where there was a mountainous tract, sea and river and hence Tiruchendur was chosen.There are 2 Utsava Murthis :- Jayanthi Nathar(He comes out almost everyday). Shanmukhar


(Comes out only during Maasi and Aavani Festival. Abhishekham for this lord happens only during this time


Vaippu Sthalam


It is one of the shrines of the Vaippu Sthalams sung by Tamil Saivite Nayanar Appar.


Architecture


The temple, which is built near the seashore, measures 91 m (299 ft) north to south, 65 m (213 ft) east to west, and has a nine-tier gopuram, or tower gate, that is 157 feet (47 meter) high. The principal entrance faces south, and opens into the first of two prakarams, the first of which is lined with rows of Yalis. The inner sanctum of the temple is in a cave and the main deity, or moolavar, is Murugan as a saintly child, portrayed in a granite carving. Naazhi Kinaru, a sacred well fed by a freshwater spring, is located 100 m (330 ft) south of the temple. Devotees undergo a ritual cleansing by bathing in water from the well after bathing in the ocean.


History


Dutch occupation of the Tiruchendur Temple


The Murugan temple at Tiruchendur was occupied by the Dutch East India company from 1646 to 1648, during the course of their war with the Portuguese. The local people tried to free their temple, with no success. The Dutch finally vacated the temple on orders from the Naik ruler. However, while leaving, they removed the sculpture depicting the 2 utsava murthis (this representation of the deities comes out only during Maasi and Aavani tirunal) which is made of an alloy named Shanmukhar, and took it with them. During their sea voyage, they encountered a strong storm and realised their mistake of stealing the murti. They dropped it in the middle of the sea and saw the storm stop immediately. Later, Lord Senthil Aandavan appeared in a dream to Vadamaliyappa Pillai, an ardent devotee of Murugan, and revealed the place in the sea where the idol had been abandoned. Vadamlaiyappa Pillai in the Tiruchendur temple, went to the spot in a fishing boat and retrieved the murti in 1653. The story is shown in paintings inside the temple.


Administration


The temple is maintained and administered by the Hindu Religious and Charitable Endowments Department of the Government of Tamil Nadu.


Sweating Murugan idol.

Thiruchendur Murugan idol is always very hot. The priests covers the idol with sandal paste. When the paste is removed in the evening there will be a lot of water. When the British ruled India the collector of Tirunelveli Lucington visited the temple in 1803 and watched the rituals. When he saw the priest fanned the idol,he asked "Are you fanning because  the god sweats". Then the priest removed the garland and silver kavacham and showed how the lord sweats. Lucington prayed to Lord Muruga and donated silver vessels to the temple with the mark lucington 1803. The silver pitcher with the name Lucington 1803 is still being used in the temple.


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.


திருச்செந்தூர் முருகன்


பெயர்:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில்


அமைவிடம்


நாடு:

இந்தியா


மாநிலம்:

தமிழ்நாடு


மாவட்டம்:

தூத்துக்குடி மாவட்டம்


அமைவு:

திருச்செந்தூர்

ஆள்கூறுகள்:

8°29′45″N 78°7′45″E


கோயில் தகவல்கள்

கட்டிடக்கலையும் பண்பாடும்

கட்டடக்கலை வடிவமைப்பு:

திராவிடக் கட்டிடக்கலை


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி

பழமையான கோயில்

தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.


தல வரலாறு

தேவர்கள், தங்களைத் தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழபகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்குக் காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழபகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்குக் கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.


கோயில் அமைப்பு


முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோயிலாக அமைந்துள்ளது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஓர் இலிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்குத் தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்குப் பின்புறம் இலிங்கம் இருக்கிறது. இவ்விரு இலிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.


பஞ்சலிங்க தரிசனம்

இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.


வெளியிலிருந்தபடி முருகரைத் தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடப்புறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலப்புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும்.இதற்குக் கோயில் சார்பில் ஐந்து ரூபாய் கட்டண நுழைவுச்சீட்டு உண்டு. கூட்டநெரிசல் அதிகம் உள்ள சமயம் இந்த நுழைவுச்சீட்டு வழங்கப்படுவதில்லை.


ராஜகோபுரம்

திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் இராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.


திறக்கும் நேரம்

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.


திருவிழா

பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.


தமிழ் இலக்கியங்களில்...

தமிழ் இலக்கியங்களில் திருச்செந்தூர் அலைவாய், சீரலைவாய் என்கிற பெயர்களில் போற்றப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள்


தொல்காப்பியம்


முருகன் தீம்புனல் அலைவாய் - தொல்காப்பியம் (களவு சூத்23)


புறநானூறு


வெண்டலைப் புனரி யலைக்குஞ் செந்தில்

நெடுவேல் நிலைஇய காமர் வியன்துறை (பாடல் 55)

அகநானூறு


திருமணி விளக்கினலை வாய்ச்செரு மிகுசேஎய் (பாடல் 266)

திருமுருகாற்றுப்படை


உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்

சிலப்பதிகாரம்


சீர் கெழு செந்திலும் செங்கோடும் வெண்குன்றும்

அருணகிரிநாதர் பாடல்

இக்கோயில் குறித்தும், முருகப்பெருமான் குறித்தும் அருணகிரிநாதரின் பாடல் இது.


அந்தண்மறை வேள்வி காவற் கார செந்தமிழ் சொல் பாவின் மாலைக் கார அண்டரூப கார சேவற் கார முடிமேலே -

அஞ்சலிசெய் வோர்கள் நேயக் காரகுன்றுருவ ஏவும் வேலைக் காரஅந்தம்வெகு வான ரூபக் கார எழிலான;

சிந்துரமின் மேவு போகக் காரவிந்தைகுற மாது வேளைக் காரசெஞ்சொலடி யார்கள் வாரக் கார எதிரான -

செஞ்சமரை மாயு மாயக் காரதுங்கரண சூர சூறைக் கார செந்திநகர் வாழு மாண்மைக் கார பெருமாளே.

சிவத்தல மூர்த்தங்கள்

சிவத்தலத்திற்குரிய அனைத்து மூர்த்தங்களும் இக்கோயிலில் உள்ளன. கருவறைக்குள் முருகன் பூசித்த சிவலிங்கமும், அதன் பின்புறத்தில் பஞ்சலிங்கங்களும் உள்ளன.


தேவாரப் பதிகம்/அப்பர் பாடல்

கள்ளிமுதுகாட்டில் ஆடிகண்டாய்

காலனையும் மகாலாற் கடந்தான் கண்டாய்

புள்ளியுழை மானின் தோலான் கண்டாய்

புலியுரிசேர் ஆடைப்புனிதன் கண்டாய்

வெள்ளி மிளிர் பிறைமுடிமேற் சூடி கண்டாய்

வெணீற்றான் கண்டாய் நம் செந்தில்மேய

வள்ளிமணாளற்குத் தாதை கண்டாய்

மறைக்காட்டுறையும் மணாளன்தானே.”


🙏🏼🌷🙏🏼கோபத்தில் வியர்க்கும் முருகர் சிலை !

திருச்செந்தூர் முருகன் விக்ரகம் மிக சூடாக இருக்கும். சந்தனம் அரைத்து சிறிதும் தண்ணீர் இல்லாதவாறு நன்கு வடிகட்டி அதை விக்ரகம் மீது முழுதாக தடவி பூசி மூடி விடுவர். மாலை சந்தனம் வழிக்கும்போது நிறைய தண்ணீர் இருக்கும்…சந்தனம் சொத சொதவென சிலை முழுக்க வழிந்தோடும்.

வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டபோது நடைபெற்ற நிகழ்ச்சி இது. சர்வ அலங்காரங்களுடன் எம்பருமான் கந்தவேல் திருசெந்தூரில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்போது (1803 ஆம் ஆண்டு) திருநெல்வேலி மாவட்டட கலக்டராக இருந்த லூசிங்டன் பிரபு என்பவர் திருச்செந்தூர் வந்திருந்தார். முருகனுக்கு நடைபெறும் வழிபாடுகளை கண்டார்.


இறைவனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களுள் விசிறி வீசுதலும் ஒன்று. சுப்ரமணிய சுவாமிக்கு அர்ச்சகர் வெள்ளியிலான விசிறியை வீசுவதை கண்டார் லூசிங்டன்.


அங்கிருந்த பக்தர்களிடம், “உங்கள் கடவுளுக்கு வியர்க்குமோ? விசிறியை வைத்து வீசுகிறீர்கள்..?” என்று கேலி செய்தார்.

அர்ச்சகருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. துணிவை வரவழைத்துக்கொண்டு, “ஆம்… எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்..” என்று கூறி, முருகன் அணிந்திருந்த மாலையையும் கவசத்தையும் அகற்றி காண்பித்தார். முருகன் திருமேனியில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருந்ததை கண்டு வியந்தார் லூசிங்டன்.


வீடு திரும்பிய கலக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவியின் வடிவில். ஆம்… அவர் மனைவி திடீரென கடுமையான வாயிற்று வலியினால் துடித்தார். சூலை நோய் என்பார்கள். இந்நோய் கண்டவர்களுக்கு நெருப்பு கங்குகளை விழுங்கியதை போல வயிறு வலிக்கும். முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததே இதற்கு காரணம் என்பதை லூசிங்டன் உணர்ந்துகொண்டார்.


உடனே என்ன செய்வதென்று தெரியவில்லை. தனக்கு கீழே பணியாற்றிக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கை மிகுந்த முருக பக்தர் ஒருவரிடம் நடந்ததை கூறி, என்ன செய்தால் உங்கள் முருகனின் கோபம் தணியும் ? என்று கேட்டார்.


அவர் கூறிய உபாயத்தின்படி, உடனே திருச்செந்தூர் ஓடோடிச் சென்று “முருகப் பெருமானே, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அவள் படும் துயரைக் கண்டு என்னால் சகிக்கமுடியவில்லை. உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை நான் என் சொந்த செலவில் வாங்கித் தருகிறேன்” என்று மனமுருக வேண்டிக்கொள்ள, எங்கும் நிறைந்திருக்கும் பரப்பிரம்மம் முருகப் பெருமானின் தனிபெருங்கருணையினால் லூசிங்டன் பிரபுவின் மனைவிக்கு இருந்த வயிற்று வலி அதிசயிக்கத்தக்க வகையில் உடனடியாக நீங்கியது.


முருகப் பெருமானின் கருணையை எண்ணி வியந்த லூசிங்டன் பிரபு, சொன்னபடியே வெள்ளிப்பாத்திரங்களை கோவிலுக்கு காணிக்கை கொடுத்தார். அவற்றில் ‘லூசிங்க்டன் 1803′ என்று முத்திரை பொறித்துள்ளார். அவர் கொடுத்த வெள்ளிக்குடம் இன்றளவும் உபயோகத்தில் உள்ளது. அதில் ‘லூசிங்க்டன் 1803′ என்ற முத்திரையை இப்போதும் நீங்கள் காணலாம்.

Comments

Popular posts from this blog

Temple info -976 Sarva Siddhi Vinayakar Temple, Regal Palm Garden, Velachery, Chennai சர்வ சித்தி வினாயகர் கோயில், ரீகல் பால்ம் கார்டன், வேளச்சேரி, சென்னை

Temple info -150 Thirupparaithurai Tharugavaneswarar temple திருப்பராய்துறை தாருகவனேஸ்வரர் கோயில். Padal Petra Sthalam No.120

Temple info -2066 Sastha Preethi சாஸ்தா ப்ரீத்தி