Kabaleeswarar temple,Mayilapoor,Chennai. கபாலீஸ்வர்ர் கோயில், மயிலாப்பூர்,சென்னை. Padal Petra Sthalam No.24
#Mystictemplesseenbyme#
26. Kapaleeswarar Temple, Chennai
Kapaleeshwarar Temple is a Hindu temple dedicated to lord Shiva located in Mylapore, Chennai in the Indian state of Tamil Nadu. The form of Shiva's consort Parvati worshipped at this temple is called Karpagambal is from Tamil ("Goddess of the Wish-Yielding Tree"). The temple is the most ancient one that has been built around the 7th century CE in Dravidian architecture.
Religion
Affiliation
Hinduism
District
Chennai
Deity
Kapaleeswarar (Shiva) Karpagambal
Location
Mylapore
State
Tamil Nadu
Country
India
Architecture
Type
Dravidian architecture
According to the Puranas, Shakti worshipped Shiva in the form of a peacock, giving the vernacular name Mylai (Mayilāi) to the area that developed around the temple - mayil is Tamil for "peacock". Shiva is worshiped as Kapaleeswarar, and is represented by the lingam. His consort Parvati is depicted as Karpagambal. The presiding deity is revered in the 7th century Tamil Saiva canonical work, the Tevaram, written by Tamil saint poets known as the Nayanars and classified as Paadal Petra Sthalam.
The temple has numerous shrines, with those of Kapaleeswarar and Karpagambal being the most prominent. The temple complex houses many halls. The temple has six daily rituals at various times from 5:30 a.m. to 10 p.m., and four yearly festivals on its calendar. The Arubathimooval festival celebrated during the Tamil month of Panguni as part of the ப்ரஹ்மோத்சவம் is the most prominent festival in the temple.
The present masonry structure was built during the Vijayanagar rulers of the Tuluva Dynasty (1491–1570 CE)[citation needed]. The temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.
Legend
Image of Karpagambal and Kapaleeswarar
The temple's name is derived from the words kapāla (head) and Īśvara an alias of lord Shiva. According to the Puranas, during the meeting of Brahma and Shiva at top of Mount Kailash Brahma failed to show the due respect to Shiva. Due to this, Shiva plucked of one of Brahma's heads (kapalams). In an act of penance, Brahma came down to the site of Mylapore and installed a Lingam to please Shiva. This place is known as Sukra Puri, Veda Puri, among many other names including "Kailaye Mayilai and Mayilaye Kayilai "which means this place is equal to kailash. Goddess Karpagambal, a form of Shiva's consort Parvati, due to a curse became a pea-hen and did penance here to get back her original personality. Shiva's son Murugan received the spear (Sakthi Vel) for the destruction of a demon from Parvati here. Brahma had worshipped here to get rid of his ego and get back his power to create. The four Vedas have worshipped here. Sukracharya worshipped the Lord here and got back his lost eye. Rama has worshipped here and won the war against Ravana and brought back Sita from Lanka. The daughter of Sivanesa Chettiar Angam Poompavai got her lost life due to snake bite was later resurrected here by the powers of Thirugnana Sambandar. Vayilar Nayanar, a saiva saint, attained salvation here and Mylapore is also the birth place of Thiruvalluvar who wrote Thirukkural. In Thevaram special mention is made about the beautiful Madaveedhi as "Malgun Mathri Thavazhum Maada Veedhi Mylappil Ullar". Thiruganana Sambandar, Arunagirinathar have sung the glory of Karpagambal, Singara Velar. The 10-day festival during March / April is a treat to watch and Arubathu Moovar festival is attended by lakhs of devotees every year.
History
The commonly held view is that the temple was built in the 7th century CE by the ruling Pallavas. This view is based on references to the temple in the hymns of the Nayanars (which, however, place it by a sea shore). Thirugnanasambandar's 6th song in Poompavaipathikam and Arunagirinathar's 697th song in Thirumylai Thirupugazh, make clear reference to the Kapaleeswarar temple being located by a seashore. There are inscriptions dating back to 12th century inside the temple. The temple's 120 ft gopuram (gateway tower) was built during 1906 with stucco figures adorning it. The temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.
The Temple
Bulls depicted in the decorated gopuram of the Kapaleeshwarar Temple.
The Kapaleeshwarar temple is of typical Dravidian architectural style, with the gopuram overpowering the street on which the temple sits. This temple is also a testimonial for the vishwakarmas sthapathis. There are two entrances to the temple marked by the gopuram on either side. The east gopuram is about 40 m high, while the smaller western gopuram faces the sacred tank.
The vahanas (Sanskrit for "vehicles") at the temple include the bull, Adhikaranandi, elephant, bandicoot, peacock, goat and parrot, while a golden chariot is a recent addition. Statues of the god and the goddess are seated on a vahana or chariot which is brought in a procession around the temple while the temple band plays music. Devotees gather around the vahanas and consider it a privilege to pull / lift the God and the Goddess on the vahana. There is also a peacock and a peahen caged inside the temple, to symbolize the tradition that Karpagambal had come in the form of peahen to plead to Kapaleeshwarar.
Religious practises
The temple priests perform the pooja (rituals) during festivals and on a daily basis. Like other Shiva temples of Tamil Nadu, the priests belong to the Shaivaite community, a Brahmin sub-caste. The temple rituals are performed six times a day; Ushathkalam at 6:00 a.m., Kalasanthi at 9:00 a.m., Uchikalam at 1:00 p.m., Sayarakshai at 5:00 p.m., Irandamkalam at 7:00 p.m. and Ardha Jamam at 9:00 p.m. There is a separate calendar for the Rahu Abhishekam (sacred ablution): it is performed twice in a day at 11:30 a.m and 5:30 p.m. and additionally twice at various times in the day. Each ritual comprises four steps: abhisheka (sacred bath), alangaram (decoration), neivethanam (food offering) and deepa aradanai (waving of lamps) for both Kapaleeswarar and Karpagambal. The worship is held amidst music with nagaswaram (pipe instrument) and tavil (percussion instrument), religious instructions in the Vedas (sacred text) read by priests and prostration by worshippers in front of the temple mast. There are weekly rituals like somavaram and sukravaram, fortnightly rituals like pradosham and monthly festivals like amavasai (new moon day), kiruthigai, pournami (full moon day) and sathurthi. During Friday worship, the statue of the goddess Karpagambal is decorated with a kaasu maala, a garland made of gold coins.
Festivals
Goddess Karpagambal with Lord Kapaleeshwarar
During the Tamil month of Panguni, the traditional brahmotsavam (annual festival) takes place when the entire neighborhood comes alive with a mela (carnival)-like atmosphere. Since this month corresponds to the mid-March to mid-April duration, the Kapaleeshwarar temple celebrates the nine day-long as Panguni Peruvizha (Spring festival). The festival starts with Dwajarohanam (flag hoisting), includes the therotsavam, (Tamil, ther, "car/chariot"; utsavam, "festival"), Arupathimoovar festival and concludes with the Tirukkalyanam (Marriage of Kapaleeswarar & Karpagambal). In Brahmotsavam, the idols of Kapaleeshwarar and Karpagambal are decorated with clothes and jewels, are mounted on a vahana, and then taken around the temple and its water tank in a pradakshinam (a clockwise path when seen from above). This is repeated with different vahanas over the next nine days. The more important of the individual pradakshinams are the Athigara Nandhi on the third day, the Rishaba Vahanam on the midnight of the fifth day, the ther (about 13 meters in height and pulled by people) on the seventh morning, and the Arupathimoovar festival on the eighth day.
The Arupathimoovar festival is the most important procession. It is named after the sixty-three Nayanmars who have attained salvation by their love & devotion to the all-compassionate Lord Shiva. All sixty-three Nayanmar idols follow the Kapaleeshwarar idol on this procession. During the car festival, Kapaleeshwarar is depicted holding a bow while seated on a throne, with his wife Karpagambal alongside. Brahma is depicted riding the ther. The chariot is decorated with flowers and statues, and there are huge gatherings of devotees to pull the ther. The car festival of 1968 is documented in the documentary film Phantom India by Louis Malle.[citation needed]
Religious work and saints
There is a reference to the temple in Sangam literature of the 1st to 5th centuries and the earliest mention is found in the 6th century Tamil literature. The temple and the deity were immortalized in Tamil poetry in the works of Tevaram by poet saint belonging to the 7th century - Thirugnana Sambanthar has composed te 6th Poompavai pathigam in praise of the temple. Arunagirinathar, the 15th-century poet, sings praise of the temple in Tirumayilai Tirupugazh. The 12th-century poet, Gunaveera Pandithar sings about Neminathan under Theerthangar neminathar pugazh. Tirumayilai Prabanthangal is a compilation of four works on the temple and the deity.
Contact No.044-24641670
இத்தலம் திருமயிலாப்பு என்றும், திருமயிலை என்றும் வழங்கப்படுகிறது.
உமாதேவி, இறைவனை, மயில் வடிவங்கொண்டு பூஜித்த தலம்; எனவே இப்பெயர் பெற்றது. இத்திருக்கோலம் கோயிலினுள் வெளிச்சுற்றில் புன்னை மரத்தடியில் தனிக்கோயிலாக அமைக்கப்பெற்று வழிபடப்பெறுகிறது.
- கோவில் பெயர் - கபாலீச்சுரம்
சிவநேசச் செட்டியார் என்ற அன்பரின் மகளாகிய பூம்பாவை, அரவு தீண்டி இறந்துபட, அவள் உடலை எரித்து, எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் அவரது தந்தையார் வைத்திருந்தார். அதை, அங்கெழுந்தருளிய சம்பந்தர் முன்வைக்க, அவர் "மட்டிட்ட புன்னை" என்ற பதிகம் பாடிப் பெண்ணுருவாக்கியருளினார்
- இராமபிரான், வழிபட்டு, ஐப்பசி ஓணநாளில், பிரமோற்சவம் நடத்துவித்தார்.
திருமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தல புராணம்
இறைவர் திருப்பெயர்: | கபாலீஸ்வரர். |
---|---|
இறைவியார் திருப்பெயர்: | கற்பகவல்லியம்மை. |
தல மரம்: | |
தீர்த்தம் : | கபாலி தீர்த்தம். திருக்குளம் |
வழிபட்டோர்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார்,நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அம்பிகை,இராமர். |
Sthala Puranam
தேவாரப் பாடல்கள் :
பதிகங்கள் : சம்பந்தர் - 1. மட்டிட்ட புன்னை (2.47), பாடல்கள் : சுந்தரர் - கறைக்கண்டன் கழலடியே (7.39.8) திருத்தொண்டத்தொகை; ஐயடிகள் காடவர்கோன் நாயனார் - குயிலொத் திருள்குஞ்சி (11.006.12) க்ஷேத்திரத் திருவெண்பா; நம்பியாண்டார் நம்பி - மாறா அருளரன் (11.33.62) திருத்தொண்டர் திருவந்தாதி; சேக்கிழார் - வரை வளர் மா மயில் (12.21.332) திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம், மாடம் ஓங்கிய மயிலை (12.28.1084 & 1119) திருஞானசம்பந்தர் நாயனார் புராணம், மன்னு சீர் மயிலைத் (12.51.6) வாயிலார் நாயனார் புராணம்.
Specialities
இது, வாயிலார் நாயனார் அவதாரஞ்செய்தத் திருப்பதி; "துறைக்கொண்ட செம்பவள இருளகற்றுஞ் சோதித் தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்" என்று பணிவார் சுந்தரமூர்த்தி நாயனார்.
அவதாரத் தலம் : திருமயிலாப்பூர். வழிபாடு : இலிங்க வழிபாடு. முத்தித் தலம் : மயிலாப்பூர். குருபூசை நாள் : மார்கழி - ரேவதி.
- வாயிலார் சந்நிதி கற்பகம்பாள் சந்நிதிக்கு எதிரில் வடக்குப் பார்த்த தனி ஆலயமாக உள்ளது.
பூம்பாவை குடத்தினின்றும் தோன்றும் திருவுருவமும் பிள்ளையார் பதிகம் பாடும் திருவுருவமும் உடனாகத் தனிக்கோயிலாக வெளிச் சுற்றினுள் மேற்குக் கோபுர வாயிலை அடுத்து வடபுறம் அமைத்து வழிபடப்பட்டு வருவது தரிசிக்க தக்கது.
- பங்குனி மாதத்தில், அறுபத்து மூவரின், திருவிழா, சிறப்பாக நடைபெறுகிறது.
- இத்தல இறைவனை திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், அருணகிரிநாதர் ஆகியோர் பாடி மகிந்துள்ளனர்
இத்தலத்தின் புராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் கலி 5023-ல் அச்சிடப்பட்டுள்ளது. குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய தலபுராணம் கலி 4995-ல் வெளிடப்பட்டது. சமீப காலத்தில் "திருமயிலைத் தலபுராணம்" என்ற பெயரால் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டுள்ளது. இஃது மொத்தம் 806 செய்யுட்களைக் கொண்டுள்ளது. (இதில் கபாலீச்சுவரம் மட்டுமின்றி, சுற்றிலுமுள்ள வெள்ளீசர், வாலீசர், முண்டகக்கன்னியம்மை, மல்லீசர், காரணீசர், விருபாட்சீசர், தீர்த்தபாலீசர் முதலிய சன்னிதிகளும் கூறப்பட்டுள்ளன.)
மயிலாப்பூர் (பழமையான) கபாலீச்சுவரர் கோயில் பற்றிய குறிப்பு :
பழைய கோயில் இப்போது உள்ள Santhome Catherdral Church உள்ள இடத்திலுருந்தது. அருணகிரிநாதர் காலம் வரையில் (கி.பி.1450) கடற்கரையிலுருந்தது. "கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே" என்ற திருப்புகழ்ப் பகுதியால் துலங்கும்.
கி.பி.1516-ல் மயிலாப்பூர் போர்த்துகீசியர் கையில் சிக்கியது. சில ஆண்டுகளுக்குள் ஆவர்கள் ஆலயத்தைத் தகர்த்துக், கோட்டையும், தங்கள் தொழுகைக்கு இடமும் கட்டிக்கொண்டார்கள். கி.பி.1672-க்கு முன்பு இப்போதுள்ள இடத்தில் இப்போதுள்ள ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது. இவ்வாண்டில் பிரெஞ்சுக்காரருக்கும் மூர் துருக்கருக்கும் நடந்த போரில் பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி இப்போதுள்ள ஆலயத்தில் பதுங்கியிருந்த செய்தி, Vestiges of Old Madras என்ற நூலில் Vol.-I, Chap.24, பக்கம் 321, 322-ல் காணப்படுகிறது.
Santhome Cathedral சுமார் 1910ல் பழுது பார்க்க நிலத்தை அகழ்ந்தபோது பழைய சிவாலயத்தின் கற்களும் கல்வெட்டுக்களும் கிடைத்துள்ளன. அவை அரசாங்கத்தினரால் 215 - 223/1923 என்று குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள், "Found on stone excavated below the Cathedral at Santhome" என்பன போன்ற குறிப்புக்கள் காணப்படுகின்றன.
இப்போதுள்ள ஆலயம் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது. இதற்கு முன்னிருந்த திருக்கோயில் கடற்கரையில் அமைந்திருந்தது.("ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை", "மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்" - சம்பந்தர், "கடலக்கரை திரையருகே சூழ் மயிலைப் பதி உறைவோனே" - திருப்புகழ்). பழைய திருக்கோயில் ஐரோப்பியர்களால் இடிக்கப்பட்டு, பள்ளிகளும், சர்ச்ம், கோட்டைகளும் அமைத்துக் கொண்டார்கள். அவ்விடத்தில் தற்போது சாந்தோம் சர்ச் உள்ளது.
இடித்த பழைய கோயிலின் கற்களைக்கொண்டு புதுக்கோயில் தற்போது இருக்கும் இடத்தில் கட்டப்பட்டது. அப்போது கல்வெட்டுக்களின் அருமையை உணராது அவைகளைத் தாறுமாறாக இணைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட கல்வெட்டுக்கள் அம்மன் கோயிலில் ஐம்பது வரை இருக்கின்றன. சுவாமி கோயிலில் கல்வெட்டுக்கள் எதுவும் இல்லை.
அலங்கார மண்டபத்து முன்வாசல் தளத்தில் டச்சு எழுத்துக்கள் கொண்ட சில கற்கள் உள்ளன. பழுது பார்த்தபோது எடுத்த கற்களில் சில கல்வெட்டுக்கள் இருக்கின்றன. அவைகள் 1923-ம் ஆண்டு 215 முதல் 223 வரை எண்களாக அரசியார் பிரதி எடுத்திருக்கிறார்கள். அவைகளில் தமிழ் கல்வெட்டுக்களில் ஒன்றில் கூத்தாடு தேவர் (நடராஜர்) சன்னிதியில் தீபம் வைப்பதற்குச் செய்த தானமும், மற்றொன்றில் முதல் இராஜராஜன் மெய்க்கீர்த்தியாகிய "திருமகள்போல" என்ற தொடக்கமும், மூன்றாவதில் பூம்பாவை என்ற திருப்பெயரும் குறிக்கப்பட்டுள்ளன.
- இக்கல்வெட்டுக்கள் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முந்தியவை என அறியலாம்.
சிவநேசர் திருமயிலை கடற்கரையில் இருந்ததுமன்றி, கடலில் தோணியிலிருந்தே சரக்கு எடுக்கும் வண்ணமாக சரக்கறை கட்டியிருக்க வேண்டும் என்றும், அதற்குப் பின்புறம் அவர் குடியிருக்க வசதி இருந்திருக்க வேண்டும் என்றும் அறியக் கிடக்கின்றது.
ஈழ நாட்டுத் திருக்கோணமலை, துளுவ நாட்டுக் கோவை (Gova) முதலிய இடங்களில் பரங்கியர்கள் 400 ஆண்டுகளுக்கு முன் செய்த வண்ணமே இம்மயிலையிலும் பரங்கியர்கள் கோயிலையும், மனைகளையும் இடித்துப் பள்ளியும் கோட்டையும் கட்டியிருக்கக் கூடும் என்பது திண்ணம்.
மயிலாப்பூர் பற்றிய சரித்திரக் குறிப்புகள் :
H.D. Love என்பவர் எழுதிய சென்னைச் சரித்திரத்தில் 1516 முதல் போர்த்துக்கீசியர், துருக்க மூர்கள் பிரெஞ்சுக்காரர், டச்சுக்காரர் முதலியவர்கள் அடிக்கடி மாறிமாறி இவ்வூரைப் பிடித்துத் தம் வசப்படுத்திக் கொண்டு இருந்தார்கள் என அறியலாம். அந்நூலின்படி (Volume - I பக்கம் 321 - 322) பிரெஞ்சுக்காரருக்கும் துருக்கருக்கும் 1672-ல் ஒரு போர் நடந்தது. அப்போது பிரெஞ்சு சேனையின் ஒரு பகுதி கபாலீஸுவரர் சன்னிதியில் ஒளிந்து கொண்டதாம். ஆகவே, தற்கால கபாலீசுவரம் 1672லேயே இருந்தது எனலாம்.
- 1798-ல் எழுதப்பட்ட சென்னை நகரப் (Map of Chennai) படத்தில் மயிலைத் திருக்குளம் காட்டப்பட்டிருக்கிறது.
"துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் தொல்மயிலை...." என்று ஆரூரர் திருவாய் மலர்வதுபோல், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் டாலமி (Ptolemy) என்ற கிரேக்க ஆசிரியர் இயற்றிய பூகோள நூலில் Malliarpha எனப்படுவதே மயிலாப்பூர் என்று Vestiges of Old Madras Vol. - I chapter 23-ல் ஆசிரியர் H.D. Love கூறுகிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் வாழ்ந்தது மயிலையிலே. அவர் நண்பர் ஏலேல சிங்கர் கப்பல் வர்த்தகம் செய்ததும் இவ்விடத்தில்தான்.
11-வது நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்றில் (256 / 1912) மயிலார்ப்பில் பல நானாதேசிகள் கூடிச் சில தீர்மானங்கள் செய்தனர் என்று காணப்படுகிறது.
துறைமுகப் பட்டினமாகிய ஒரு வியாபாரத் தலத்தில்தான், பல தேசத்து மக்கள் கூடுவர். எனவே, டாலமி காலம் முதல் கல்வெட்டுக் காலம் வரையில் மயிலாப்பூர் ஒரு துறைமுகமாக இருந்திருக்கிறது. போர்த்துக்கீசியர் காலத்திலும் இத்துறைமுகம் சிறந்து விளங்கியுள்ளது. இத்துறைமுகத்திற்கும், ஆங்கிலேயர் துறைமுகமாகிய சென்னையின் வடபாதிக்கும் ஓயாமல் வியாபாரப் போட்டியும், கடும்போரும் இருந்து வந்த செய்தி Vestiges of Old Madras Vol. - I என்ற நூலில் நன்கு விளங்கும்.
சங்க பல்லவன் கம்பவர்மன் காலத்திய கல்வெட்டொன்று (189/1912) மயிலாப்பூரில் அரச குடும்பத்தினர் வசித்ததைக் குறிக்கின்றது.
மயிலை வாசிகளாயிருந்த பல வியாபாரிகள் வேறு பல தலங்களைத் தரிசித்தபோது சந்தி விளக்கு, நந்தா விளக்குகட்குத் தானம் செய்த வரலாறுகள், பல கல்வெட்டுக்களால் அறியப்படுவதிலிருந்து, அவர்கள் சென்ற இடங்களிலெல்லம் தானம் செய்யக்கூடிய செல்வமும், புண்ணியமும் பெற்றிருந்தனர் என்பது புலனாகும்.
திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது. திருவொற்றியூர் திருத்தாண்டகத்து ஆறாவது திருப்பாடலில் "வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர்கண்டோம் மயில்லப் புள்ளே" என்ற தொடர் சுவாமிகள் மயிலையிலிருந்தே ஒற்றியூர் சென்றார் என்று சேக்கிழார் கூறுவதற்கு அகச்சான்றாகின்றது. "மங்குன் மதி மாடவீதிமயிலாப்பிலுள்ளார்" (6-2-1) என்று அப்பர் பெருமான் மயிலையின் மாடவீதி அழகைப் புகழ்ந்துப்பாடுகிறார். "மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும்" (6-7-12) என்ற இடத்தில் மயிலையைக் காப்புத் தலங்களுள் வைத்துப் பாடுகிறார். மேற்சொன்ன மூன்றிடங்களிலும் அப்பர் பெருமான் மயில்லாப்பூரை மயிலாப்பு என்றே கூறுகிறார். சில கல்வெட்டுக்களிலும் (261/1910, 189/1912) மயிலாப்பில் என்றே காணப்படுகிறது. வேறு சில கல்வெட்டுக்களில் மயிலார்ப்பில் என்று "ரகர" ஒற்றுடன் காணப்படுகிறது(256/1912). டாலமியும்மல்லிஆர்பா என்பதில் "ரகர" ஒற்றுடன் க
தாண்டவராய கவிராயர் | |
திருமயிலைத் தலபுராணம் | நாதமுனி முதலியார் |
மயிலை மும்மணி மாலை | க. மயில்வாகனம் |
அமைவிடம் அ/மி. கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 600 004. தொடர்பு : 044 - 24641670 மாநிலம் : தமிழ் நாடு இது, சென்னையிலேயே அமைந்த தலம். சென்னையின் அனைத்து இடங்களிலிருந்தும், நகரப் பேருந்து வசதி உள்ளது.
Comments
Post a Comment